விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு88

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்பு தமிழ் ஆவண மாநாடு 2013 ஐ ஒட்டியதாக விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை மேற்கொள்ளல்[தொகு]

தமிழ் ஆவண மாநாடு 2013இல் தமிழ் விக்கிப்பீடியர் பலர் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகின்றது. இந்த சந்தர்ப்பத்தை விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடிப் பேசுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். குறித்த நேரத்தை இதற்காக ஒதுக்குதல், கலந்துரையாடும் விடயங்கள் மற்றும் ஏனைய விபரங்களை இவ்விடத்தில் கருத்தாடி முடிவெடுக்கலாம்...நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:54, 8 மார்ச் 2013 (UTC)

நல்ல எண்ணம் சஞ்சீவி. செய்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 05:38, 9 மார்ச் 2013 (UTC)
உண்மைதான் சஞ்சீவி, இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதுவரை கொழும்பில் இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். பயன்படுத்திக்கொள்ள வேண்டும். --மயூரநாதன் (பேச்சு) 15:57, 9 மார்ச் 2013 (UTC)

நன்றி நற்கீரன் மற்றும் மயூரநாதன். ஆவண மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் தமது விபரத்தைக் கூறினால் ஏனைய ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கலாம். மயூரநாதன் தன் ஆய்வுக்கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டமை பற்றி அறிவித்திருந்தார். நானும் ஒரு கட்டுரை படிக்கவுள்ளேன். நற்கீரன், பார்வதி சிறி ஆர்வம் காட்டியிருந்தனர். மற்றும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதியிலும் உள்ள விக்கிப்பீடியர்கள் தம் வசதி பற்றிக் குறிப்பிடவும். சந்திப்பு இடம் குறித்து தமிழ்ச் சங்கத்துடன் பேசுகின்றேன். அல்லது கொழும்பு தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புள்ளவர்கள் யாரும் இடஒழுங்கு குறித்து பேசமுடியுமாயின் தெரிவிக்கவும். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:11, 9 மார்ச் 2013 (UTC)

சஞ்சீவி, நினைவூட்டலுக்கு நன்றி. ஏப்ரல் 21 முதல் 28 அல்லது ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை இலங்கைக்கு வரலாம் என்றிருக்கிறேன். விரைவில் உறுதிப்படுத்துகிறேன். விக்கிப்பீடியா தொடர்பான எந்த முயற்சி, பட்டறை, சந்திப்பு என்றாலும் எந்த ஊரிலேனும் கலந்து கொள்ள முயல்வேன். இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்போர் இலங்கை சென்றபிறகு விமான நிலையத்திலேயே விசா பெறலாம். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:20, 10 மார்ச் 2013 (UTC)
வருக! வருக.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:57, 11 மார்ச் 2013 (UTC)

இதுகுறித்து இலங்கையிலுள்ள தமிழ் தகவற் தொழிநுட்ப அமையமான "நுட்பம்" அமைப்புடன் பேசினேன். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் விக்கிபீடியா கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்த அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பங்குபற்றுபவர்களுக்கு கணினிகள் வழங்கி பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்குபடுத்துவது எவ்வளவுதூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், திரைக்காட்சிகளுடன் கூடிய விக்கிபீடியா அறிமுகக்கருத்தரங்கு ஒன்றினை ஒழுங்குபடுத்துவதில் சிரமங்கள் இருக்காது. போதுமான கால அவகாசம் இருக்குமானால் மன்னாரிலும் சிறிய அளவில் ஒரு கருத்தரங்கினை ஒழுங்குபடுத்தலாம். --மு.மயூரன் (பேச்சு) 08:00, 13 மார்ச் 2013 (UTC)

வணக்கம் மயூரன். நல்லசெய்தி. ஒழுங்குகள் தீக்கமானால் திட்டப்பக்கமொன்றை தயாரிக்கலாம். கல்முனையிலும் ஏற்பாடு செய்ய முடியுமாயின் முயற்சிக்கலாம். நீங்கள் குறிப்பிட்டது போல் கால அவகாசத்தையும் கவனிக்க வேண்டும். நன்றி.--192.248.66.3 08:20, 13 மார்ச் 2013 (UTC) இது--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:21, 13 மார்ச் 2013 (UTC)

ஏப்ரல் 24 முதல் 29 இரவு வரை இலங்கையில் இருக்க பயணச் சீட்டு பதிவு செய்து விட்டேன். விக்கிப்பீடியா அல்லது இணையத் தமிழ் தொடர்பாக எந்த ஊரிலேனும் நண்பர்கள் மூலம் சிறிய சந்திப்புகள் ஏற்பாடு செய்ய இயலுமாயின் கலந்து கொள்வேன். விக்கிப்பீடியா, தமிழ் இணையம் குறித்த சந்திப்புகளில் பங்கு கொள்வதே இப்பயணத்தின் ஒற்றை நோக்கம். எனவே, இது குறித்து தக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு இலங்கையில் உள்ள நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:46, 17 மார்ச் 2013 (UTC)

வணக்கம் இரவி. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்/வவுனியாவில் விக்கி அறிமுகம் குறித்த ஏற்பாடுகளை மயூரனும் நானும் செய்கின்றோம். கொழும்பு பட்டறை ஏப்ரல் 26 ஆகவும் யாழ்ப்பாணப் பட்டறை ஏப்ரல் 29ஆகவும் கூடுமென எதிர்பார்க்கின்றோம். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:24, 19 மார்ச் 2013 (UTC)

வணக்கம். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் திருகோணமலையிலும் ஒரு அறிமுகப் பட்டறையைச் செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். விக்கிபீடியர் சந்திப்பு ஒன்று மிகக் கட்டாயம் தேவை. ஆனால் சந்திப்பு தினம் பற்றி சற்று ஏலவாகவே அறிவித்தால் நன்றியாய் இருக்கும்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 07:56, 20 மார்ச் 2013 (UTC)

வணக்கம் கோபிநாத். இந்த சந்தர்ப்பத்தில் இல்லாவிட்டாலும் வேறொருநாளில் திருகோணமலையில் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறையை தங்களுக்கு ஒழுங்குபடுத்த முடியுமாயின் இது குறித்து உதவ முடியும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:03, 20 மார்ச் 2013 (UTC)

கொழும்பில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கு வரும் எண்ணம் உள்ளது. விக்கிபீடியர் சந்திப்புக்கு அங்கு ஒழுங்கு செய்வதும் நல்ல யோசனைதான். உங்கள் முயற்சிகளை வரவேற்கின்றேன். --S.kuneswaran 15:34, 24 மார்ச் 2013 (UTC)

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் விக்கிப்பீடியர் சந்திப்பு குறித்து நினைவூட்டலுக்கு நன்றி சிவகுமார். விக்கிப்பீடியர் சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமிருப்பினும் இத்திகதிகளில் கொழும்புக்கு வருவது சற்று சிரமமாக இருக்கும் என எண்ணுகின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 09:40, 25 மார்ச் 2013 (UTC)

தொடர்புக்கு நன்றி சிவகோசரன். யாழ்ப்பாணத்தில்/வவுனியாவில் மற்றொரு அறிமுகப்பட்டறையை நடாத்தும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம். கொழும்பு பட்டறையை 26ந் திகதி மாலையில் ஒழுங்கு படுத்துவதும் யாழ் பட்டறையை ஏப்ரல் 29ந் திகதி நடத்துவதும் குறித்தும் (27,28ந் திகதிகலில் நூலக நிறுவனத்தின் ஆவண மாநாடு இருப்பதால்) சிந்தித்து வருகின்றோம். வசதிப்படும் இடத்தில் பங்குபெறுவதும் உங்களால் ஏற்பாடுகளில் உதவமுடியுமெனினும் எதிர்பார்க்கின்றோம். ஆர்வத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 25 மார்ச் 2013 (UTC)
நன்றி சிவகுமார். யாழ்ப்பாணம்/வவுனியா ஒழுங்குபடுத்தல்கள் பற்றி கூடிய தகவல்கள் தர முடியுமா? --Natkeeran (பேச்சு) 00:45, 26 மார்ச் 2013 (UTC)

கொழும்பு பட்டறையை 26 ஏப்ரல் பிற்பகல் நடாத்துவதாகவும் வவுனியாவில் 29 ஏப்ரல் காலையிலும் நடாத்துவதாக எண்ணியுள்ளோம். வவுனியா வளாக முதல்வருக்கு அனுமதி கோரிக் கடிதம் எழுதியுள்ளேன். பயனர் உமாபதியிடமும் ஏற்பாடுகளை கவனிக்க கேட்டுள்ளேன். ஆவண மாநாட்டில் பங்குபற்றும் விக்கிப் பயனர்கள் இரவு தொடருந்தில் போய்சேர முடியும். நண்பகலுக்கும் பின் உடனே திரும்பி கொழும்பு வந்துவிடவும் இது வசதியானது என நினைக்கின்றேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:44, 1 ஏப்ரல் 2013 (UTC)
யாழ்பாண பட்டறை பற்றி கூறினால் நானும் இணைந்து கொள்வேன்.--Aathavan jaffna (பேச்சு) 04:37, 6 ஏப்ரல் 2013 (UTC)

ஆதவன், தங்கள் ஆர்வத்துக்கு நன்றிகள். கொழும்புப் பட்டறையை ஏப்ரல் 26ந் திகதி பிற்பகல் நடத்துவதாகவும் வவனியாவில் 29ந் திகதி காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை வவுனியா வளாகத்தில் நடாத்துவதாகவும் உள்ளோம். வவுனியா பட்டறையில் இரவி, மயூரன் மற்றும் உமாபதி ஆகியோரும் கலந்து கொள்வார்கள். தங்களுக்கு கொழும்பு அல்லது வவுனியா சந்திப்பில் கலக்க முடியுமாயின் முயற்சிக்கவும். நன்றிகள் .--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:50, 10 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி, நான் வெளி மாவட்டங்களில் நடக்கும் பட்டறைகளில் பங்குகொள்வது கடினம்.யாழ்பாணத்தில் நடத்தினால் நிச்சயம் பங்குகொள்வேன்.நன்றி

ஒரு வார இலங்கைப் பயணம் முடித்து இந்தியா திரும்பி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் :) இலங்கையில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் விவரங்களை பின்வரும் பக்கங்களில் காணலாம்:

மயூரநாதனுக்கு அன்புப் பரிசு

இலங்கையில் இது வரை பல்வேறு விக்கிப்பீடியா அறிமுகங்கள் நிகழ்ந்திருந்தாலும், ஏப்பிரல் 26 அன்று கொழும்பில் நிகழ்ந்த அறிமுகம் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன்பு உள்ளவை பெரும்பாலும் கல்லூரி / பாடசாலை / நிறுவனங்களில் பிறருக்கு விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்தச் சந்திப்பில் பல விக்கிப்பீடியர்களும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, மயூரநாதனைப் பலரும் கண்டு மகிழ்ந்தது இந்த முறை தான். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு அவருக்கு ஒரு நினைவுப் பரிசும் வழங்கினோம். இது போக, தமிழ் ஆவண மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு அறிஞர்களிடமும் தனிப்பட்ட உரையாடல்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்பு, முக்கியத்துவம் பற்றிய செய்தியைக் கொண்ட சேர்க்க முடிந்தது. இலங்கையில் நூலகம் அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்றுவதற்கான பல்வேறு வழிவகைகளும் ஆராயப்பட்டன. நிச்சயம், இலங்கையில் தமிழ் விக்கிமீடியா இயக்கம் பரவவும் வேரூன்றவும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டைப் போலன்றி அங்கு 99% பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியிலேயே கல்வி கற்கிறார்கள். என்ன, தமிழ்த் தட்டச்சு மட்டுமே அங்கும் ஒரு பெருந்தடையாக உள்ளது. கொழும்பு தாண்டி வட கிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் போது இணைய, கணினி வசதிகளும் குறைவாக இருக்கலாம்.

தனிப்பட்ட முறையில், இலங்கை, அங்குள்ள மக்கள், தற்போதைய நிலைமை என்று பல்வேறு விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து முக்கால் மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து போய் வரும் செலவே 6500 இந்திய ரூபாய் அளவு தான். விசா கெடுபிடிகள் இல்லை. என்ன, இந்தியாவை விட அங்கு விலைவாசி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடுதலாக உள்ளது. இயன்றவர்கள், நண்பர்களின் உதவியுடன் ஒரு முறை இலங்கைக்குப் போய் பார்த்து விட்டு வருவது பயனுள்ளதாக இருக்கும். --இரவி ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:43, 7 மே 2013 (UTC)[பதிலளி]

கொழும்பு சந்திப்பு விக்கிப்பீடியர்கள் சந்திப்புக்கு வாய்ப்பாக அமைந்தது. அதில் உரையாடலின் ஊடு பேசிக்கொண்ட இரு விடயங்களைப் பதிவுசெய்வது முக்கியம் என நினைக்கின்றேன்.
  1. . விக்கிப்பீடியர்கள் ஏதோ வகையில் தமக்கிடையிலான தனிப்பட்ட தொடர்புகளை மேம்படுத்துதல்.

அதாவது ஒரு விக்கிப்பீடியர் மரணமானால் கூட அதை மற்றவர் அறிவதற்கான வாய்ப்புக்கு தொடர்புகள் இல்லை. இதில் நாடு ரீதியிலான விக்கிப்பீடியர் சந்திப்புகள் உதவும்.

  1. . தமிழ் விக்கிப்பீடியர்கள் த.வி பற்றியதான ஒரு மாநாட்டை அல்லது சந்திப்பை நடாத்துவது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:06, 9 மே 2013 (UTC)[பதிலளி]
பகிர்வுகளுக்கு நன்றி. நல்ல எண்ணக்கரு சஞ்சீவி. தமிழில் ஒரு விக்கிமேனியா : ) --Natkeeran (பேச்சு) 00:03, 10 மே 2013 (UTC)[பதிலளி]
இம்முறை எனது இலங்கைப் பயணம் பயனுள்ளதாக இருந்தது. இலங்கை எனது சொந்த நாடு ஆனாலும் எந்த ஒரு தமிழ் விக்கிப்பீடியரையும் நான் அங்கே நேரில் சந்தித்தது இல்லை. தமிழ்நாட்டுக்கும் கடந்த 8 ஆண்டுகளில் 20 தடவைக்கு மேல் சென்று வந்திருக்கிறேன் அங்கும் இரவியை மட்டுமே சந்தித்துள்ளேன். அமீரகத்தில் அரபாத்தை ஒரு முறை சந்தித்தேன். இம்முறை பல தமிழ் விக்கியரை ஒன்றாகச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தவியின் 10 ஆண்டு நிறைவை ஒட்டி இன்னும் கூடுதலானோர் கலந்துகொள்ளக்கூடிய வகையில் தமிழ் நாட்டிலும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்ய முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 20:07, 16 மே 2013 (UTC)[பதிலளி]
சஞ்சீவி, ஒருவர் விக்கி பக்கமாக வராவிட்டாலும் நலமாக இருக்கிறார் என்று அறிந்து கொள்வது முக்கியம். இப்போதும் பல தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு இடையே ஒரு பரவலான நட்பு வட்டம் இருக்கிறது. பெரும்பாலும் பலரும் தமிழார்வலர்கள் என்பதால் வேறு சில களங்களிலும் இணைந்து பணியாற்றுவதுண்டு. பேசுபுக்கு, துவிட்டர், கூகுள் பிளசு போன்ற சமூக உறவாடல் தளங்களில் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம். விரும்புபவர்கள் தொலைப்பேசி விவரங்களை அறியத்தரலாம். இது ஒரு வகையில் மையப்படுத்தப்படாமல் பரவலான வலைப்பின்னலாக இருப்பதே நல்லது. அதுவே, அமைதியாக முகம் காட்டாமல் விக்கிப்பணி ஆற்றுவோருக்கான நம்பிக்கையையும் தரும்.
தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு சிறப்பு நிகழ்வைச் செய்ய வேண்டும் என்பது நல்ல ஒரு பரிந்துரை. மலையாள விக்கிப்பீடியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூட கூடுகிறார்கள். நமது பத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு பெரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வோம். அதற்கான முன்னோட்டமாக பல்வேறு நகரங்களில் சிறு சிறு நிகழ்ச்சிகள் செய்வோம். விக்கிப்பீடியர்களுக்கு இடையேயான அறிமுகத்தை வளர்க்க இதுவே கூட ஒரு வாய்ப்பாக அமையும். --இரவி (பேச்சு) 05:49, 28 மே 2013 (UTC)[பதிலளி]
பத்தாண்டு நிறைவிற்கு யாழ்பாணத்திலும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்யலாமே?.யாழ்பாணத்திலிருந்து நிறைய விக்கிப்பயனர்கள் விக்கிக்கு உள்ளனர். இது மேலும் ஊக்குவிக்கும்.எதிலும் யாழ்பாணம் முதலிடம் என்பதில் சந்தேகமில்லை.:)--ஆதவன் (பேச்சு) 11:41, 28 மே 2013 (UTC)[பதிலளி]
ஆதவன், எப்படி தமிழ் விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரையைத் துவங்கலாமோ அது போல் விக்கிப்பீடியா குறித்த நிகழ்வுகளையும் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஒழுங்குபடுத்தலாம். யாழ்ப்பாணம் / இலங்கையில் உள்ள உங்கள் நண்பர்கள், மற்ற விக்கிப்பீடியர்கள் துணையுடன் நீங்களே கூட ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தலாம். உங்கள் வீடு / பள்ளி / ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக் கூடத்தில் என்று சிறிய அளவில் கூட ஒழுங்குபடுத்தலாம். இது தொடர்பாக உதவி, வழிகாட்டல் தேவையென்றால் குறிப்பிடுங்கள். --இரவி (பேச்சு) 05:49, 29 மே 2013 (UTC)[பதிலளி]

(Please consider translating this message for the benefit of your fellow Wikimedians. Please also consider translating the proposal.)

Read this message in English / Lleer esti mensaxe n'asturianu / বাংলায় এই বার্তাটি পড়ুন / Llegiu aquest missatge en català / Læs denne besked på dansk / Lies diese Nachricht auf Deutsch / Leś cal mesag' chè in Emiliàn / Leer este mensaje en español / Lue tämä viesti suomeksi / Lire ce message en français / Ler esta mensaxe en galego / हिन्दी / Pročitajte ovu poruku na hrvatskom / Baca pesan ini dalam Bahasa Indonesia / Leggi questo messaggio in italiano / ಈ ಸಂದೇಶವನ್ನು ಕನ್ನಡದಲ್ಲಿ ಓದಿ / Aqra dan il-messaġġ bil-Malti / norsk (bokmål) / Lees dit bericht in het Nederlands / Przeczytaj tę wiadomość po polsku / Citiți acest mesaj în română / Прочитать это сообщение на русском / Farriintaan ku aqri Af-Soomaali / Pročitaj ovu poruku na srpskom (Прочитај ову поруку на српском) / อ่านข้อความนี้ในภาษาไทย / Прочитати це повідомлення українською мовою / Đọc thông báo bằng tiếng Việt / 使用中文阅读本信息。

Hello!

There is a new request for comment on Meta-Wiki concerning the removal of administrative rights from long-term inactive Wikimedians. Generally, this proposal from stewards would apply to wikis without an administrators' review process.

We are also compiling a list of projects with procedures for removing inactive administrators on the talk page of the request for comment. Feel free to add your project(s) to the list if you have a policy on administrator inactivity.

All input is appreciated. The discussion may close as soon as 21 May 2013 (2013-05-21), but this will be extended if needed.

Thanks, Billinghurst (thanks to all the translators!) 05:22, 24 ஏப்ரல் 2013 (UTC)

Distributed via Global message delivery (Wrong page? You can fix it.)

Wikidata phase 2 (infoboxes) is here[தொகு]

Sorry for writing in English. I hope someone can translate this. If you understand German better than English you can have a look at the announcement on de:Wikipedia:Kurier.

A while ago the first phase of Wikidata was enabled on this Wikipedia. This means you are getting the language links in each article from Wikidata. We have now enabled the second phase of Wikidata (infoboxes) here. We have already done this on the [first 11 Wikipedias] (it, he, hu, ru, tr, uk, uz, hr, bs, sr, sh) a month ago and two days ago on the English Wikipedia. Today all the remaining Wikipedias followed.

What does having phase 2 enabled here mean? You are now able to make use of the structured data that is available on Wikidata in your articles/infoboxes. It includes things like the symbol for a chemical element, the ISBN for a book or the top level domain of a country. (None of this will happen automatically. Someone will have to change the article or infobox template for this to happen!) The current state is just the beginning though. It will be extended based on feedback we get from you now.

How will this work? There are two ways to access the data:

  • Use a parser function like {{#property:p159}} in the wiki text of the article on Wikimedia Foundation. This will return “San Francisco” as that is the headquarter location of the non-profit.
  • For more complicated things you can use Lua. The documentation for this is here.

We are working on expanding the parser function so you can for example use {{#property:headquarter location}} instead of {{#property:p159}}. The complete plan for this is here.

Where can I test this? You can test it on test2 if you don't want to do it in an article here.

Where can I find more information and ask questions? We have collected the main questions in an FAQ for this deployment. Please ask questions you might have on the FAQ’s discussion page.

I want to be kept up to date about Wikidata To stay up-to-date on everything happening around Wikidata please subscribe to the newsletter that is delivered weekly to subscribed user’s talk pages.


We are excited about taking yet another step towards allowing all Wikipedias share structured data and collect and curate it together. --Lydia Pintscher 19:22, 24 ஏப்ரல் 2013 (UTC)

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

Its a good news for tamil wikipedia. --இராஜ்குமார் (பேச்சு) 06:58, 30 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை[தொகு]

இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை நடப்பதை இட்டு பெருமிதம் கொள்கிறேன். தொடர்து இன்னுமொரு அறிமுகப் பட்டறையை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்தால் இங்குள்ள தமிழ் சமுகத்திற்கு பயனுள்ளதாக அமையும். நன்றி!--thaya (பேச்சு) 13:09, 25 ஏப்ரல் 2013 (UTC)

நல்லது தயா. மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரு பட்டறைகள் நடாத்தியுள்ளோம். ஆயினும் எழுத்தார்வம் உள்ள வெளி சமூகத்தை கவரும் வகையில் வேறு இடங்களில் அறிமுகப் பட்டறை நடாத்துவது நல்லது. உங்களால் ஒழுங்குகள் செய்யமுடியுமாயின் கொம்மாதுறையிலோ அல்லது மட்டக்களப்பிலோ ஒரு பட்டறை செய்யமுடியும். இணைய வசதிகொண்ட கணினி கொண்டதான வசதி காணப்படுமாயின் நல்லது. விடுமுறை தினமாயின் பெருவசதியாயிருக்கும். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:27, 30 ஏப்ரல் 2013 (UTC)

[en] Change to wiki account system and account renaming[தொகு]

Some accounts will soon be renamed due to a technical change that the developer team at Wikimedia are making. More details on Meta.

(Distributed via global message delivery 04:12, 30 ஏப்ரல் 2013 (UTC). Wrong page? Correct it here.)

வார்ப்புருக்களில் பகுப்புகள் சேர்த்தல்[தொகு]

ஒரு கட்டுரையில் வார்ப்புருவை பயன்படுத்துகிறோமே, அதைக் கொண்டே உள்ளமைப்பாக பகுப்புகளைச் சேர்க்கலாம் அல்லவா?? எடுத்துக்காட்டாக, ஒரு எழுத்தாளருக்கு, தகவற்சட்டம் எழுத்தாளர் என்று எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இந்த வார்ப்புருவின் நிரலில், |language=தமிழ் என்று வந்தால் பகுப்பு:{.{valueoflanguage}} என்பது போலத் தந்தால், எங்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ, அங்கெல்லாம் தானாகவே சேர்ந்துவிடுமல்லவா. இதைப் போலவே, நபரின் பிறப்பைக் குறிப்பிடும்போது {.{birth|09|04|1993}} என்று தந்தால், அவரது பிறந்த ஆண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பகுப்பு: ””ஆண்டு”” பிறப்புகள் என்று வருமாறு செய்யலாம். சில வேளைகளில் மட்டும் புணர்ச்சி விதி காரணமாக குழப்பம் ஏற்படலாம். அதையும் முடிந்தவரை திருத்தி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக |நாடு= இந்திய என்பது போல் தந்து விட்டு கீழே, பகுப்பு:”நாட்டின்மதிப்பு” எழுத்தாளர்கள் என்று வைக்கலாம். இறப்பே குறிப்பிடவில்லை என்றால் வாழும் நபர்கள் என்ற பகுப்பைச் சேர்க்குமாறு செய்யலாம். இதை பல்வேறு வார்ப்புருக்களில் செய்தால் பகுப்பு சேர்க்கும் சுமை குறையும். இயல்பாகவே, ஒரே வார்ப்புருவைப் பயன்படுத்தும் கட்டுரைகள் ஒரே பகுப்பிலோ, அதன் உட்பகுப்புகளிலே சேர்ந்துவிடுகின்றன. எப்படி என் யோசனை?? :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:14, 30 ஏப்ரல் 2013 (UTC)

ஏ டன்டனக்கா! எ டனக்குடக்கா! இதை ஏற்கனவே விவரம் அறிந்தவர்கள் பயன்படுத்தியே வருகிறார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:22, 30 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம், இத மொதல்லயே சொல்லிருக்கலாமே! மொக்கை வாங்கிட்டேனே, விடுறா தென்காசி இதெல்லாம் சகஜம்டா! ஹி.. ஹி... பரவலாக பயன்படுத்தினால் சுமை குறையும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:35, 30 ஏப்ரல் 2013 (UTC)
Birth date போன்ற வார்ப்புருக்களை நபர்கள் பக்கங்களில் மட்டுமல்லாமல் பல பயனர்கள் தங்கள் பயனர் பக்கங்களிலும் இணைத்து வைத்துள்ளார்கள். இதனால் இது போன்ற வார்ப்புருக்களுக்குப் பகுப்புகள் இடுவது வரவேற்கத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 10:43, 1 மே 2013 (UTC)[பதிலளி]

நோ இன்குளுயுட் சேர்த்தால் பகுப்பு மறைந்துவிடும்ஜல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:01, 1 மே 2013 (UTC)[பதிலளி]

பயனர்களுக்கென தனியான வார்ப்புருவை உருவாக்கிப் பயன்படுத்தச் சொல்லலாம். நாம் தேவைப்படும் வார்ப்புருக்களில் மட்டும்தானே இவற்றை செயற்படுத்தப் போகிறோம், அனைத்திலும் இல்லையே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:15, 1 மே 2013 (UTC)[பதிலளி]
சொல்வது எளிது, ஆனால் செயல்படுத்துவது யார்? ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள பயனர் பக்கங்களில் இருந்து அவற்றை நீக்க வேண்டும். இனிமேலும் பயனர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க அவற்றைக் கண்காணிக்க வேண்டும். முடியுமா? ஆங்கில விக்கியிலேயே இவ்வாறு பகுப்பு சேர்க்கப்படவில்லை.--Kanags \உரையாடுக 13:34, 1 மே 2013 (UTC)[பதிலளி]

[en] Change to section edit links[தொகு]

The default position of the "edit" link in page section headers is going to change soon. The "edit" link will be positioned adjacent to the page header text rather than floating opposite it.

Section edit links will be to the immediate right of section titles, instead of on the far right. If you're an editor of one of the wikis which already implemented this change, nothing will substantially change for you; however, scripts and gadgets depending on the previous implementation of section edit links will have to be adjusted to continue working; however, nothing else should break even if they are not updated in time.

Detailed information and a timeline is available on meta.

Ideas to do this all the way to 2009 at least. It is often difficult to track which of several potential section edit links on the far right is associated with the correct section, and many readers and anonymous or new editors may even be failing to notice section edit links at all, since they read section titles, which are far away from the links.

(Distributed via global message delivery 19:01, 30 ஏப்ரல் 2013 (UTC). Wrong page? Correct it here.)

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமா? தகவற்களஞ்சியமா?[தொகு]

encyclopedia என்பதை குறிக்க கலைக்களஞ்சியம் என்ற பெயர் ஏன் உருவானது? இதை தகவற்களஞ்சியம் என்று தானே கூற வேண்டும். கலைக்களஞ்சியம் (கலை+களஞ்சியம்) இப்பெயர் கலை பற்றிய தகவல்களை மட்டும் தொகுத்து தருவது என்பது போல் அர்த்தம் அளிக்கிறதே? இல்லை எனில் கலைக்களஞ்சியம் என்பதற்கு இரு வேறு அர்த்தங்கள் உண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:38, 7 மே 2013 (UTC)[பதிலளி]

64 கலைகள் உள்ளன என்று ஒரு குறிப்பு உண்டு. இது பல்வேறு துறைகளைக் குறிக்கும். இங்கு கலை என்பது art என்பதனை மட்டும் குறிக்காமல் பல்வேறு அறிவுப் புலங்களைக் குறிக்கும். எனவே, இது பொருத்தமான பெயர் தான். அப்படியே இது கலையை மட்டும் குறிப்பதாகக் கொண்டாலும், நன்கு பயன்பாட்டில் உள்ள சொல் என்ற அடிப்படையில் இதையே தொடர்ந்து பயன்படுத்தலாம். காலப்போக்கில் சில சொற்கள் விரிவான பொருள் கொள்வதுண்டு. ஆனால், அதற்காக காலத்துக்குக் காலம் சொல்லை மாற்றுவதில்லை. பார்க்க: கலைச்சொல்லாக்க விதிகள்--இரவி (பேச்சு) 16:25, 7 மே 2013 (UTC)[பதிலளி]
கலை என்றால் பிரிவு என்று பொருள். மதியின் 16 பிறைகளுக்கும் கலை என்று பொருள். எல்லா அறிவுப்புலங்களும் கலைகள்தாம். கட்டிடக்கலை (கட்டடக்கலை), தோட்டக்கலை போன்றவை பலரும் கேள்விப்பட்டவை. தகவல்கள் என்பன விளக்கங்கள், கருத்தோட்டங்கள் கொண்ட உரைகள் அடங்கியவை அல்ல. கலைக்களஞ்சியத்தில், கணித தேற்றங்களுக்கு சுருகக்மான நிறுவல்கள்கூடத் தருவதுண்டு. கலைக்களஞ்சியம் என்பது எல்லாவற்றையும் பற்றிய சுருக்கமான, செறிவான, அதே நேரத்தில் எளிமையான விளக்கம் கொண்ட ஓர் தொகுப்புநூல் (பல தொகுதிகளாகவோ, ஒரே தொகுதியாகவோ அச்சுப் பதிப்புகள் வருவதுண்டு, ஆனால் இங்கே உள்ளிணைப்புகள் கொண்ட மிந்தொகுப்பு). கலைக்கள்ஞ்சியம் என்பது நன்றாக வழக்கூன்றிய பொருத்தமான சொல். --செல்வா (பேச்சு) 01:05, 17 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைகளில் தன் பெயரைச் சேர்த்தல்[தொகு]

விக்கிப்பீடியாவில் ஒருவர் தான் எழுதும் கட்டுரைகளில் தன் பெயரைச் சேர்ப்பது அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தன் பெயரை ஆய்வாளர் என்று தனித் தலைப்பிட்டுச் சேர்த்து வருகிறார். பார்க்க: கிளாந்தான், பேராக், கடாரம், பெர்லிஸ், ... இது தகுமா?--பாஹிம் (பேச்சு) 09:37, 8 மே 2013 (UTC)[பதிலளி]

மேற்கோள் அல்லது வெளியிணைப்பில் அவரது ஆய்வுப்பக்கத்தை குறிப்பிடலாம். தமிழ் வலைபக்கங்கள் மேற்கோள்களாகவும், வெளியிணைப்பாகவும் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இவர் ஆய்வாளர் என்பதற்கு வேறு ஆதாரங்கள் உள்ளனவா? என்பதை பார்க்க வேண்டும். வலைதளத்தின் முகப்பு பக்கத்தை சேர்த்துள்ளது அவ்வளவு சரியல்ல. மேலும் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் ஆய்வுகள் என்று வேண்டுமானால் வெளியிணைப்பு இடலாம். எதற்கும் இவரது ஆய்வுகள் பிறரால் ஏற்கப்பட்டனவா என்பதையும் பார்ப்பது நல்லது. அத்துடன் அவ்வலைப்பக்கத்தில் இருந்து இக்கட்டுரைகளில் எந்த உள்ளடக்கமும் சேர்க்கப்படவில்லையெனில் வெளியிணைப்பிட தேவையில்லை என்பது என் கருத்து. --இராஜ்குமார் (பேச்சு) 09:59, 8 மே 2013 (UTC)[பதிலளி]

அவ்வாறு காணப்படும் இடங்களில் அந்தக் குறிப்புகளை நீக்கி விடுங்கள். தனிப்பட்ட ஆய்வுகள் விக்கியில் ஏற்கப்படுவதில்லை. கட்டுரை நடுநிலையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். தனது வலைப்பக்கத்துக்கு மேற்கோள் தருவதும் வரவேற்கத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 10:29, 8 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையாளன் படர்க்கையாக நின்று தன் பெயரைக் குறிக்கத்தேவையாயின் மட்டுமே அத்தகைய இடங்களில் பெயர் சுட்டலாம். எ.கா: எனது படைப்புபற்றிய கட்டுரை ஒன்றில் ஆதாரங்கள் உள்ள போது அதைக் குறிப்பிடுவது. தவிர வேறு இடங்களில்தன் பெயர் குறிப்பிடுவது தவிர்க்கப் படவேண்டும்.--192.248.66.3 10:52, 8 மே 2013 (UTC)---சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:23, 8 மே 2013 (UTC)[பதிலளி]

குக்கிராமங்களை பற்றிய தகவல்களுக்கு வலைபூக்களை சுட்டலாமா? நான் முதலில் சன்யாசிப்புடவுக் கல்வெட்டு கட்டுரையில் என் வலைப்பக்கத்தை மூலம் என்ற அதலைப்பின் கீழ் சுட்டியிருந்தேன். ஏனெனில் எனக்கு தெரிந்து நான் அப்போது தேடிப்பார்க்கையில் இணையத்தில் அது தொடர்பான தகவல்கள் இல்லை. நான் அருங்காட்சியகத்தில் சென்று கேட்டதிலேயே என் வலைப்பூவில் எழுதி அதை இங்கு மூலமாக சுட்டியிருந்தேன். பிற்பாடு அது கல்வெட்டு அறிக்கையில் ஏற்கனவே பதியப்பட்டது என தெரிந்தவுடன் அதை நீக்கி விட்டேன். ஒருவேளை கல்வெட்டு அறிக்கை பற்றிய தகவல் கிடைக்காமல் போயிருந்தால் வலைபூவை மூலம் என்ற தலைப்பின் கீழ் சுட்டலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:51, 8 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழக கிராமங்கள் குறித்த தகவல்களுக்கு மேற்கோள்களாக அல்லாமல் வெளியிணைப்பாக வலைப்பூக்களை (முகப்பை அல்ல) தரலாம். --68.100.81.64 18:11, 8 மே 2013 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்பாளர் எண்ணிக்கை[தொகு]

பல காலமாக தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர் பங்களிப்பாளர் (30 நாட்களில் ஒரு தொகுப்பாவது செய்தவர்கள்) எண்ணிக்கை 250ஐ ஒட்டி இருந்தது. கடந்து இரு மாதங்களாக 300ஐத் தொட்டு இப்போது 240க்கு வந்து விட்டது. ஒரு வேளை, wikidata வரவுக்குப் பின் தானியங்கிகளின் நடமாட்டம் குறைந்துள்ளதால் இந்த வீழ்ச்சியா இல்லை வேறு காரணமா என்று ஊகிக்க இயலவில்லை. எப்படி இருப்பினும், தொடர் பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நாம் இந்தத் தரவைக் கண்காணிக்கத் தொடங்கி இரண்டே மாதத்தில் மீடியாவிக்கியில் அந்த வசதியைத் தூக்கி விட்டார்கள் :( https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=41078 பக்கத்தில் உங்கள் வாக்கை அளியுங்கள். வாக்களித்தால் மட்டும் வழுக்கள் சீராகாது என்றாலும், முயன்று பார்ப்போம். நன்றி--இரவி (பேச்சு) 07:30, 9 மே 2013 (UTC)[பதிலளி]

முகநூலில் பரப்புரை செய்தால் நன்றாக இருக்கும். கணினி அறிவுள்ள பலரிற்கு தமிழ் விக்கி பற்றி அறிய வாய்ப்புக் கிடைக்கும், நாம் ஒருமுகநூல் பக்கம் தொடங்கி அதில் பல்லாயிரக் கணக்கானோரை சேர்த்து அறிமுகம் செய்வது எளிதான விடயமல்ல, அதற்குப்பதிலாக தமிழ் விக்கியைபற்றி, தேவை பற்றி ஒரு குட்டிக்கட்டுரை எழுதி அதைப்பகிருமாறு பல்லாயிரக்கணக்கானோரை கொண்ட தமிழ் சார் முகநூல் பக்கங்களிற்கு வேண்டுகோள் விடுக்கலாம், பல பக்கங்கள் பழைய பதிவுகளை தான் திரும்பத்திரும்ப பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், எனவே நாம் வேண்டுகோள் விடுத்தால் அவர்களும் ஆர்வத்துடன் பகிர முன்வருவார்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 17:38, 10 மே 2013 (UTC)[பதிலளி]
தொடர் பங்களிப்பாளர்கள் பக்கம் மீண்டும் தெரிகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:22, 26 மே 2013 (UTC)[பதிலளி]
அறியத்தந்ததற்கு நன்றிங்க. விக்கியாண்டவர் கைவிடுவதில்லை :)--இரவி (பேச்சு) 20:37, 27 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழீழம் விவரம் அறிந்தவர் பதிலளிக்கவும்[தொகு]

en:Talk:Tamil Eelam#Puttalam is not part of Tamil Eelam. தேவைபட்டால் மாற்றங்களை செய்ய்வும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:02, 13 மே 2013 (UTC)[பதிலளி]

சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு[தொகு]

மே 26 அன்று சென்னையில் விக்கிப்பீடியர் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள புதியவர்களும் பழையவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:26, 21 மே 2013 (UTC)[பதிலளி]

சந்திப்பு இனிதே நடைபெற்றது. குறிப்புகளும் படங்களும் மேலுள்ள இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 03:30, 27 மே 2013 (UTC)[பதிலளி]

சங்க கால அரசர்கள் காலக்கணிப்புகள்[தொகு]

சங்க கால அரசர்களின் ஆட்சியாண்டுகள் தெளிவாக எங்கும் அனைத்து தரப்பு ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ள பட்டதில்லை. அதனால் யார் இந்த பகுப்பிலுள்ள கட்டுரைகளில் ஆட்சி ஆண்டுகள் குறிக்கப்பட்டிஉக்குமாயின் அதை நீக்கி விடுவது சிறந்தது. பாண்டியர் வரலாறு பற்றி எழுதியவர்களில் விக்கிப்பீடியாவின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவரான நிரோஜன் சக்திவேல் ஆட்சிக்காலங்களை ஒரே ஒரு ஆசிரியர் எழுதிய நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளார் எனத்தெரிகிறது. வரலாற்றாசிரியர்கள் கொடுக்கும் கால அட்டவணை களப்பிரர் காலத்துக்கு பிறகு வந்த அரசர்களுக்கே பொருந்திவரும். சங்க கால அரச்ர்களுக்கு 600 ஆண்டுகள் கூட வேறுபடலாம். அதனால் சங்க கால அரசர்களின் ஆட்சியாண்டுகளை ஏதோ முடிந்த முடிவு போல் எழுதுவதை அனைவரும் தவிர்க்கவும். இதைப்போல தகவல்களை பார்த்தால் நீக்கியும் விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:54, 23 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா 2013 பற்றி[தொகு]

விக்கிமேனியா பற்றி இந்து நாளிதழில் வெளியான செய்தி.

http://www.thehindu.com/news/national/indian-wikipedians-look-forward-to-hong-kong-meet/article4750808.ece

👍 விருப்பம்--சோடாபாட்டில்உரையாடுக 03:29, 27 மே 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தில் மொழிவாரி பட்டியலில் தமிழ்[தொகு]

ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தில் 50,000+ வரிசையில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது --ஸ்ரீதர் (பேச்சு) 13:40, 27 மே 2013 (UTC)[பதிலளி]

மிக முக்கியமான நிகழ்வினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, ஸ்ரீதரன். இந்த உரையாடல் பக்கத்தை நாம் அனைவரும் படித்து நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹிந்தி மொழி விக்கிப்பீடியா மீது கேள்வி எழுப்பி தமிழ் விக்கிப்பீடியாவையும் ஆராய்ந்திருக்கின்றனர். பயனர்கள் தங்களின் கருத்துகளை நமது ஆலமரத்தடியில் தெரிவிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:07, 27 மே 2013 (UTC)[பதிலளி]
முன்கதைச் சுருக்கம்: ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இருந்து பிற விக்கிகளுக்கு இணைப்பு தர சில வழிமுறைகளை வைத்துள்ளார்கள். வெறுமனே எண்ணிக்கை அடிப்படையில் தருவதில்லை. தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளைத் தாண்டிய பொழுது சுந்தர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இணைப்பு தந்துள்ளார். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இணைப்பு அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு ஒப்ப தரப்படவில்லை என்று கூறி இப்போது இணைப்பை நீக்கியுள்ளார்கள். இந்த இணைப்பு நீக்கத்துக்கு முன்பு, தமிழைப் பட்டியலிட்டுள்ளதால், அதனை ஒப்பிடும் போது இந்தி விக்கிப்பீடியாவின் தரமும் பரவாயில்லையே..அதனையும் இணைக்கலாமே என்று சிலர் கேட்டுள்ளதால் இரண்டு விக்கிகளின் தரத்தையும் சில நோக்குகளில் அளந்து பார்த்துள்ளார்கள். அதாவது, "ஏதாவது ஒரு கட்டுரை" பொத்தானை அழுத்தி 50 கட்டுரைகளைப் பார்வையிடுவது. அதில் எத்தனை குறுங்கட்டுரைகள், படங்கள் உள்ளவை எத்தனை, இடங்களுக்கான குறுங்கட்டுரைகள் எவை என்று பல்வேறு விதமாகப் பார்க்கிறார்கள். இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் அகப்பட்டே ஒரே ஒரு நெடுங்கட்டுரையும் கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரையாக இருந்திருக்கிறது. நிறைய கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய குறுங்கட்டுரைகள் தென்பட்டுள்ளன. எனவே, தமிழ் விக்கிப்பீடியா அவ்வளவு தரமாக இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், வேறு சிலரோ இந்த 50 கட்டுரை சோதனையில் பல குறைபாடுகள் உள்ளன என்றும் வேறு வகைகளில் தரத்தை அளவிட வேண்டும் என்றும் விவாதித்திக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன செய்யலாம்?: ஆங்கில விக்கிப்பீடியா வழிமுறைகளும் உரையாடல்களும் கிமீ நீளத்தில் இருக்கின்றன என்பதால் இப்போதைக்கு இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர்கள் சோதித்துப் பார்த்துள்ள விக்கிகளில் தமிழில் மட்டுமே இடங்கள் சார்ந்த குறுங்கட்டுரைகள் நிறைய இல்லை. இது நல்ல விசயம். ஆனால், நாம் ஏதோ எண்ணிக்கையைக் கூட்டும் பொருட்டு கிரிக்கெட் வீரர்கள் கட்டுரையை இட்டுள்ளதாக ஒரு தொனியில் எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு பயனரும் தத்தம் விருப்பத் துறையில் எத்தனைக் கட்டுரைகள் வேண்டுமானாலும் எழுதலாம். எனவே, இதற்கான மறுப்பைத் தெரிவிக்கலாம். கூடவே, அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய ஆயிரம் கட்டுரைகள், பத்தாயிரம் கட்டுரைகள் பட்டியலின் அடிப்படையில் தரத்தை அளவிடுமாறு கோரலாம். மற்றபடி, தரத்தைப் பற்றிய உணர்வுடன் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது, பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதுவது போன்ற நமது வழக்கமான பணிகளில் ஈடுபடலாம். அவர்கள் இணைப்பு தந்தாலும் சரி. தராவிட்டாலும் சரி.--இரவி (பேச்சு) 17:12, 27 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 01:07, 28 மே 2013 (UTC)[பதிலளி]

தேவைப்படும் முக்கியக் கட்டுரைகளை உருவாக்கத் தூண்டும் அறிவிப்பினை மீண்டும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் ரவி கொண்டுவந்தது, எதிர்பார்க்கும் பலனைத் தரும் என்றே நம்புகிறேன். இதனை எப்போதும் தொடருதலே நலம் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 28 மே 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப் பக்கத்தின் மொழிவாரிப் பட்டியலில் தமிழுக்கு இணைப்பு இல்லை என்பதற்காக அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனாலும், இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இருந்து நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பிற இந்திய மொழிகளோடு ஒப்பிட்டுத் தமிழ் விக்கியின் தரம் குறித்து நாம் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொண்டாலும், தமிழ் விக்கியின் தரத்தை ஒரு நியாயமான மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு நிறைய வேலை செய்யவேண்டி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம். குறிப்பாக ஓரிரு வரிக் கட்டுரைகளை மேம்படுத்துதல், கட்டுரைகளை முழுமைப்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ----மயூரநாதன் (பேச்சு) 18:50, 29 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:25, 30 மே 2013 (UTC)[பதிலளி]

//இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இருந்து நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பிற இந்திய மொழிகளோடு ஒப்பிட்டுத் தமிழ் விக்கியின் தரம் குறித்து நாம் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொண்டாலும், தமிழ் விக்கியின் தரத்தை ஒரு நியாயமான மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு நிறைய வேலை செய்யவேண்டி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம். // +1. விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி பல முக்கிய குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவும். கிட்டத்தட்ட ஆயிரம் கூகுள் கட்டுரைகள் நான்கு ஆண்டுகளாக தேங்கி உள்ளன. அவையும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பற்றிய சரியான தோற்றத்தைத் தரவில்லை. இதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டி உள்ளது.--இரவி (பேச்சு) 19:07, 29 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கிமீடியாவின் இந்தியக் கிளையில் உறுப்பினராகச் சேர்வதற்கான அழைப்பு[தொகு]

விக்கிமீடியாவின் இந்தியக் கிளை கடந்த இருஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதன் உருவாக்கத்தில் சுந்தர் கணிசமான பங்கு வகித்ததோடு நிருவாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். இந்த ஆண்டு சோடாபாட்டில் நிருவாகக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவற்றைத் தவிர்த்து, பொதுவாக தமிழ் விக்கிப்பீடியர்களின் ஈடுபாடு இந்த அமைப்பில் குறைவாகவே இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்த அமைப்பு இன்னும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விக்கிமீடியா இயக்கத்தின் நோக்கங்களைச் சரியாக எடுத்துச் செல்லவும், தமிழ் விக்கிப்பீடியாவுக்கான திட்டங்களைத் தீட்டி உரிய வளங்களைப் பெற்றுக் கொள்ளவும் தமிழ் விக்கிப்பீடியர்களின் கூடுதல் ஈடுபாடு இன்றியமையாதது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டு இந்திய குடியுரிமை உள்ள அனைவரையும் விக்கிமீடியா இந்தியக் கிளையில் சேர வேண்டுகோள் விடுக்கிறேன். ஆண்டு உறுப்பினர் தொகை இந்திய ரூபாய் - 100/- விண்ணப்பப் படிவத்தை இங்கு பதிவிறக்கலாம்.--இரவி (பேச்சு) 05:40, 28 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வரும் ஈராண்டுகளில் விக்கிமீடியா இந்தியா பன்மடங்கு வளரத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியர்கள் இதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமது உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடினால் நகரம் வாரியாகவும் தமிழுக்கெனவும் தனியாக சிறப்புக் குழுக்கள் (special interest group) தொடங்கி விக்கிமீடியா இந்தியாவின் ஆதரவினைப் பெற்று பயன்பட இயலும். இதன் மூலம் நல்கைகள், அரசு மற்றும் பிற அமைப்புகளோடு சென்று உரையாடத் தேவைப்படும் சார்பு அங்கீகாரம் போன்றவை நமக்குக் கிட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:25, 29 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்கான உதவித் தொகை[தொகு]

தொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் எவரேனும் உதவித் தொகை பெறும் வாய்ப்பு இருந்தால் கூடுதலாக பங்களிக்க இயலும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் வேண்டுகோளை விக்கிப்பீடியா:உதவித்தொகை பக்கத்தில் இடுங்கள். இது முதல் முயற்சி என்பதால் முதல் சில வேண்டுகோள்களை நிறைவேற்ற கூடுதல் உழைப்பு, காலம் தேவைப்படலாம். ஆனால், அதற்குப் பிறகு இதற்கு ஒரு முறையான நிதி ஆதாரத்தை உருவாக்கலாம் என்று நம்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:09, 29 மே 2013 (UTC)[பதிலளி]

2013 தொடர் கட்டுரைப் போட்டி[தொகு]

நாளை மறுநாள், சூன் 1, 2013 முதல் 2013 தொடர் கட்டுரைப் போட்டி தொடங்குகிறது. போட்டியல் பங்கேற்று பரிசுகளை வென்றெடுக்க வாரீர் ! வாரீர் :)--இரவி (பேச்சு) 07:56, 30 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்[தொகு]

வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ஏதேனும் நிகழ்ச்சிகள் / போட்டிகள் / வேறு எதையாவது :) செய்ய முடிந்தால் நல்ல பரப்புரை வாய்ப்பாக இருக்கும். பரிந்துரைகள் தேவை. பொறுப்பேற்பவர்களும் தேவை :)--இரவி (பேச்சு) 07:32, 9 மே 2013 (UTC)[பதிலளி]

முதன்மையான தமிழ் இதழ்களில் கட்டுரை வடிவில் இதனை குறிப்பிடலாம். தேனியார் செய்வது போல. பயனர் சந்திப்புகளை ஆங்காங்கே நிகழ்த்தலாம். நிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்கு பெற முடியாதவர்கள், ஒவ்வொருவரும் தமிழ் விக்கிப்பீடியாவை பத்து பேருக்கு அறிமுகப்படுத்தி அவர்களை விக்கிப்பீடியா படிப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும், பங்களிப்பாளர்களாகவும் ஆக்க கூடியமட்டில் உதவலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 10 மே 2013 (UTC)[பதிலளி]
கூடிய மட்டிலும் இதனை சிறிய அளவிலாவது உலகின் பல நாடுகளிலும் விழாவாக எடுக்க வேண்டும். அதிக ஆடம்பரம் இல்லாமல், ஆனால் தமிழ் விக்கிப்பீடியா எட்டிய நிலைகளை எடுத்து இயம்புவதும், சிறு அறிமுகங்கள் செய்வதும் தகும். கிழமை, மாத இதழ்களிலும் நாளிதழ்களிலும் கூட சிறு கட்டுரைகள் எழுத வேண்டும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு தனிச்சிறப்பானது. இது வெறும் புகழ்ச்சி இல்லை உண்மை. ஒரே ஓர் எழுத்தைத் திருத்தி இருந்தாலும் அவர் இந்த கூட்டாக்கத்துக்கு உதவி செய்து சிறப்பு செய்தவர் என்று போற்றத்தக்கவர். சூன், சூலை ஆகத்து ஆகிய மூன்று மாதங்கள் உள்ளதால், ஓரளவுக்குத் திட்டமிட்டு இந்த பத்தாண்டு விழாவை அழகாகக் கொண்டாடலாம். சிம்மி வேல்சு போன்ற விக்கிப்பீடியா நிறுவன முன்னோடிகளிடம் இருந்தும் வாழ்த்துரை மடல்கள் பெறலாம். நம் குறிக்கோள், இதுகாறும் எட்டிய நிலைகளை எடுத்துக்கூறி பதிவு செய்வதும், மேலும் பலருக்கும் உந்துதல் தந்து ஈடுபாடு கொள்ளச் செய்வதும் ஆகும். --செல்வா (பேச்சு) 01:28, 17 மே 2013 (UTC)[பதிலளி]
பத்தாண்டுகளில் த.வி இன் அடைவுகளை முன்வைக்கும் விழா, தமிழ் விக்கிப்பீடியர் ஒன்றுகூடவும், விக்கி அறிமுகத்தைச் செய்யவும், விக்கியை மேலும் வளர்க்கவும் உதவும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். தனிப்பட்ட வகையில் அறிமுகப்படுத்துதல், பொது அறிமுகப் பட்டறைகள், மற்றும் சந்திப்புகள், வேறு கலை இலக்கிய நிகழ்வுகளில் அறிமுகப்படுத்துதல், மற்றும் இதழ்களில் கட்டுரை வரைதல் எனப் பல்வேறுவகையிலும் பயனர்கள் பங்களிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:58, 17 மே 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா கடந்த 10 ஆண்டுகளில் தொய்வுகள் எதுவும் இல்லாமல் ஏறுமுகமாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்பது நம்மெல்லோரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விடயம். இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் இவ்வாறான வளர்ச்சியைப் பேணிவருவன மிகச் சிலவே. இதற்காக உழைத்த ஏறத்தாழ 900 தமிழ் விக்கிப்பீடியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போதைய வளர்ச்சிவிகித அடிப்படையில் பத்தாண்டு நிறைவுக்கு முன் இது 1000ஐத் தாண்டிவிடும். புதிதாக வருபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சியை மேலும் முனைப்பாக முன்னெடுத்துச் செல்வது தமிழ் விக்கியைப் பொறுத்தவரை மிகவும் வரவேற்கத் தக்க விடயமாக உள்ளது. இந்த நம்பிக்கையூட்டும் சூழலில், இந்தப் பத்தாண்டு நிறைவை, இதுவரை நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்து மதிப்பீடு செய்துகொள்ளவும், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்துச் சிந்திப்பதற்குமான ஒரு வேளையாகப் பயன்படுத்திக்கொள்வது பயன் தரும். கூடிய அளவு விக்கிப்பீடியர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்து பேசி அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வது நல்லது. தமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 08:23, 24 மே 2013 (UTC)[பதிலளி]

செப்ரம்பர் - தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள்[தொகு]

தாய்வீடு, தமிழ் கம்பியூட்டர், கணியம் போன்ற இதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள் கொண்டு வருவது பற்றி உரையாடலாம். --Natkeeran (பேச்சு) 15:19, 24 மே 2013 (UTC)[பதிலளி]

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு பலரும் பங்களிப்பினை அளித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைத் தந்துள்ள 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘பாராட்டுப் பத்திரம்’ வழங்கலாம். இது குறித்த சில பரிந்துரைகள்:

  1. ஜிம்மி வேல்ஸ் அவர்களின் கையெழுத்தினை அதில் பெற முயற்சிக்கலாம்.
  2. மூத்த பயனரான செங்கைப் பொதுவன் அவர்களின் கையெழுத்தை அதில் கொண்டுவரலாம்; அவருக்குரிய பாராட்டுப் பத்திரத்தில், நாம் அனைவரும் கையெழுத்தினை இடலாம்.
  3. பாராட்டுப் பத்திரம் ‘lamination’ செய்யப்படல் வேண்டும்.
  4. சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் சிறுசிறு விழாக்களின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டப் பயனர்களுக்கு இப்பத்திரத்தினை வழங்கலாம்.
  5. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய, மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள பயனர்களுக்கு இந்தப் பத்திரத்தினை கூரியர் தபாலில் அனுப்பலாம்.
  6. பாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் என்பது மறுப்பதற்கில்லை. படித்து முடிக்கும் ஒருவருக்கு பல்கலைக்கழகம் பட்டம் தரும்போது அவர் எவ்வளவு மகிழ்வார்?! எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் சிலரைத் தேர்ந்தெடுத்து பாராட்டுப் பத்திரம் வழங்குவர். பெரும் உவகையுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம். இதற்கு பணமதிப்பு இல்லை; உங்கள் பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்!
  7. பங்களிப்பு என்பது பலவாறாக இருக்கலாம். சிலர் நிறைய கட்டுரைகள் எழுதியிருப்பர். சிலர் மென்பொருள் நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பணி செய்திருப்பர். சிலர் நிறைய பயனர்களைக் கொணர்ந்து வழிகாட்டியிருப்பர். ஆக அந்த 100 நபர்களை தேர்ந்தெடுப்பது கடினமான காரியமே. விக்கிப்பீடியாவில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மயூரநாதன், ரவி, கனகரத்தினம் சிறீதரன், செல்வா, நற்கீரன், மாஹிர், மணியன், தேனி சுப்பிரமணி, அராபத் ரியாத், கலையரசி, கார்த்திக், குறும்பன் ஆகியோரைக் கொண்ட அணிக்கு இந்தப் பொறுப்பினைத் தந்துவிடலாம்!
  8. அந்த 100 நபர்கள் தற்போதும் தங்களின் பங்களிப்பினைத் தருபவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
  9. பத்திரங்களை உருவாக்கும் செலவு மற்றும் அனுப்பிவைக்கும் செலவு இவைகளை எப்படி திரட்டுவது என்பது குறித்தும் பார்க்கவேண்டும்!
  10. 100 என்பது ஒரு சிறப்பு எண். 10 என்றால் குறைவான நபர்களையே பெருமைப்படுத்த முடியும். எனவேதான் 100 ஐத் தேர்ந்தெடுத்தேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 25 மே 2013 (UTC)[பதிலளி]
பத்தாண்டு நிறைவை ஒட்டி பெண்களுக்கான தமிழ் விக்கி பங்களிப்பை ஈர்க்கும் நோக்கத்தோடு 'இந்திய உணவு வகைகள்' பற்றிய கட்டுரைப்போட்டி ஒன்றை வைத்தால் என்ன? தக்கபடி ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதில் பங்கேற்க வாய்ப்புண்டு இதன் மூலம் பங்களிக்கும் பெண்களை அப்படியே ஊக்குவித்து தக்கவைத்தும் கொள்ளலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:05, 26 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 27 மே 2013 (UTC)[பதிலளி]
தொடர்ந்து விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் பக்கத்தில் உரையாடுவோமே.--இரவி (பேச்சு) 20:37, 27 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் கம்ப்யூட்டர் அட்டையில்[தொகு]

தமிழ் கம்ப்யூட்டர் இதழ் அட்டை

தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் ஜனவரி 1 - 15, 2013 இதழ் முதல் நான் எழுதி வரும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தொடரின் 11 வது பகுதி ஜூன் 1 - 15, 2013 இதழில் “நாம் விரும்புவதை எளிதாகத் தேடிப் படிக்கலாம்!” எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெறும் பகுப்புகள் குறித்த தகவல்களைக் கொண்ட இந்தப் பகுதி குறித்து, “விக்கிப்பீடியாவில் தகவல்களை எளிதில் தேடுவது எப்படி?” எனும் தலைப்பில் விக்கிப்பீடியாவின் இலச்சினை (Logo) உடன் தமிழ் கம்ப்யூட்டர் இதழின் அட்டைப் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:30, 1 சூன் 2013 (UTC)[பதிலளி]

இங்க தான் தேனியார் நிக்குறார். (ச்ச..ச்ச.... எழுதுறார்).--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:40, 1 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சோடாபாட்டில்உரையாடுக 03:56, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 04:57, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

கோவையில் திடீர் விக்கிப்பீடியர் சந்திப்பு[தொகு]

(இடமிருந்து) சிவா, பூங்கோதை, தென்காசி சுப்பிரமணியன், இரவி
(இடமிருந்து) சிவா, பூங்கோதை, தென்காசி சுப்பிரமணியன், இரவி

இன்று மாலை கோயமுத்தூரில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்று கூடிப் பேசினோம். பூங்கோதை, தென்காசி சுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை :) பொதுவாக ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். கோயமுத்தூர் மாவட்டம் பற்றிய தகவலை விக்கிப்பீடியாவில் சேர்ப்பது, கோயமுத்தூரில் எப்படி விக்கிப்பீடியா அறிமுகங்கள் நடத்தலாம் என்பதாக பேச்சு அமைந்தது. --இரவி (பேச்சு) 17:56, 1 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 20:22, 1 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 03:19, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

Trademark discussion[தொகு]

Hi, apologies for posting this in English, but I wanted to alert your community to a discussion on Meta about potential changes to the Wikimedia Trademark Policy. Please translate this statement if you can. We hope that you will all participate in the discussion; we also welcome translations of the legal team’s statement into as many languages as possible and encourage you to voice your thoughts there. Please see the Trademark practices discussion (on Meta-Wiki) for more information. Thank you! --Mdennis (WMF) (talk)

Universal Language Selector to replace Narayam and WebFonts extensions[தொகு]

On June 11, 2013, the Universal Language Selector (ULS) will replace the features of Mediawiki extensions Narayam and WebFonts. The ULS provides a flexible way of configuring and delivering language settings like interface language, fonts, and input methods (keyboard mappings).

Please read the announcement on Meta-Wiki for more information. Runab 14:11, 5 சூன் 2013 (UTC) (posted via Global message delivery)[பதிலளி]

ஊர் கூடித் தமிழ் வளர்ப்போம்[தொகு]

பார்வதிஸ்ரீ நேர்காணல்

தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான கொண்டாட்டம் வார இதழில் (09-06-2013) தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி பார்வதி ஸ்ரீ அவர்களது நேர்காணல் “ஊர்கூடித் தமிழ் வளர்ப்போம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. வாழ்த்துகள். (இணையப் பதிப்பில் இந்த நேர்காணல் தற்போது இல்லை. இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இடம் பெறலாம்) - --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:16, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:19, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஊர் கூடித் தமிழ் வளர்ப்போம் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான கொண்டாட்டம் வார இதழ் (09-06-2013)--ஸ்ரீதர் (பேச்சு) 03:44, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]
சிறந்த ஓர் அறிமுகம். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 03:55, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் இதோ இணைப்பு--சோடாபாட்டில்உரையாடுக 05:06, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

தொலைபேசியிலும் இங்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். இது ஊர் கூடி இழுக்கும் தேர்தான். விக்கி குறித்த செய்திகள் எப்படியாவது பொது மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும் என்பது என் அவா. தினத்தந்தி நிறுவனத்தாரின் 'தந்தி டிவியில்' நாளை 10/6/2013 மாலை 6:30 மணிக்கு 'நம்ம ஊரு செய்தி' என்ற நிகழ்ச்சியில் விக்கிப்பீடியா குறித்த எனது நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்ப உள்ளார்கள். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:17, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

பார்வதிஸ்ரீ, இனிய அறிமுகம். சிறப்பான பங்களிப்புகளுடன் நிறுத்தாது பொதுமக்கள் மத்தியிலும் கொண்டுசேர்க்க விரும்பும் உங்கள் நோக்கம் உயரியது. வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 08:02, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

எனது நன்றிகளோடு கலந்த வாழ்த்துகள் உங்களுக்கு உரித்தாகட்டும் பார்வதிஸ்ரீ.--அராபத் (பேச்சு) 08:20, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

செய்தியைக் கண்டு மிக மகிழ்ந்தேன். செய்தித் தாள் வாங்கி வந்து வீட்டில் உள்ளோருக்கும் காட்டினேன். ஏற்கனவே தொலைப்பேசியில் வாழ்த்தி இருந்தாலும், ஆலமரத்தடியிலும் பதிகிறேன். அடுத்து நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் :) இன்று வரும் தொலைக்காட்சிச் செய்தியை யாராவது பதிவு செய்து பதிவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 09:44, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:03, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

அருமையான செய்தி! பயனுடைய கருத்துகளை நல்லூக்கம் தருமாறு பகிர்ந்துள்ளீர்கள் பாரவதி! நெஞ்சார்ந்த பாராட்டுகள்! தினமணியிலேயே என் பாராட்டைப் பதிவு செய்திருக்கின்றேன். மேலும் பல நண்பர்கள் அங்கும் தங்கள் பாராட்டுகளைப் பதிவு செய்வது நல்லது, இது தேவை. தமிழ் விக்கிப்பீடியா மெய்யான பயன்பெருக்கவல்ல நற்பணி. --செல்வா (பேச்சு) 13:47, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
  • விக்கிப்பீடியாவைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் உயரிய பணியைச் சிறப்பாக ஆற்றிவருகின்ற பார்வதிஸ்ரீக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.--பவுல்-Paul (பேச்சு) 14:01, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
பார்வதிஸ்ரீ, உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். எளிமையான முறையில் வித்தியாசமாக அமைந்திருப்பதால் பலரையும் இது கவரும் என எதிர்பார்க்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 17:13, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அறிமுகம் அருமை; உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்! --சிவகோசரன் (பேச்சு) 06:25, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:25, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
தமிழ்ப்பணிக்கு மகளையும் அழைத்துவந்தமைக்கு வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:25, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
  • அனைவருக்கும் வணக்கம், நான் செங்கோலரசு -பல ஆண்டுகளாக இத்தளத்தினை பயன்படுத்தி வந்தாலும் தற்போது தான் இத்தளத்தில் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு பயனராக பதிவு செய்துள்ளேன். நானும் விக்கிப்பீடியர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்வடைகிறேன். இதற்கு காரணம் தமிழகத்தில் வெளிவரும் தினமணி நாளிதழில் சூன் 9,2013 நாளிட்ட இதழில் விக்கிப்பீடியாவின் மூலம் தமிழ்ப்பணி ஆற்றிவரும் எஸ்.பார்வதி அவர்களின் நேர்க்காணல் செய்திதான். இனி கரூரிலிருந்தும் ஒரு விக்கீப்பீடியர் உங்களுடன் பயணிப்பார்.-செங்கோலரசு,கரூர்.👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 05:53, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்திய அணைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் பார்வதிக்கு வாழ்த்துகள்! :) மிக்க மகிழ்ச்சி, மேற்கூறியவர்களின் கருத்தே எனதும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:12, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துகள்...! அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:21, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

இன்றைய இந்துவில் வெளிவந்த செய்தி- Tamil teacher to participate in Wikimania - --இரவி (பேச்சு) 06:49, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:25, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 15:28, 14 சூன் 2013 (UTC)[பதிலளி]

வானொலியில் விக்கிப்பீடியா[தொகு]

திருச்சி வானவில் பண்பலை வானொலியில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பார்வதியின் நேர்காணல்

இன்று காலை திருச்சி வானவில் பண்பலை 102.1 வானொலியில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நேர்காணல் ஒன்று ஒலிபரப்பானது. நேர்காணல் அளித்த பார்வதிக்கு, "சிறந்த கொள்கை பரப்புச் செயலாளர்" என்ற பதக்கத்தை உருவாக்கி அளிக்க வேண்டும் :) --இரவி (பேச்சு) 15:32, 20 சூன் 2013 (UTC) 👍 விருப்பம்--ஆதவன் (பேச்சு) 15:41, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

இந்நிகழ்ச்சியில் எனது நாப்பிறழ்ச்சியின் காரணமாக எனது பங்களிப்பாக 500 கட்டுரைகள் என்பதற்கு மாற்றாக 5000 கட்டுரைகள் எனக் கூறியதற்காகவும் நிறைய பங்களிப்பாளர்களுடைய பெயர்கள் நேரம் மற்றும் வாய்ப்பின்மையால் விடுபட்டமைக்காகவும் பிழை பொருத்தருள்க. (சொக்கா! சொக்கா!....எவ்வளவு பிழை இருக்கோ அவ்வளவு குறைச்சிட்டு பொற்காசுகள் வழங்கலாமே)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:00, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில்
👍 விருப்பம் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 16:34, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
கேட்டேன். மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:11, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
பொதுமக்களுக்கும் புதுப்பயனர்களுக்கும் மிக அருமையான அறிமுகம், பார்வதி. அதுமட்டுமல்ல, இத்தனை ஆண்டுகளாகத் தொகுத்துக் கொண்டிருந்தாலும் ஒரு பயனர் எதிர்கொள்ளும் அனுபவத்தைப் பற்றி பல செய்திகளை உங்கள் நேர்காணல் வழியாக அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் உங்களை நேரில் கண்டு பேசியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. :) -- சுந்தர் \பேச்சு 17:10, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் முழுவதும் கேட்டேன். நன்றாக அமைந்திருந்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். நீங்கள் விரைவில் 5000 கட்டுரைகள் எழுதி முடிக்க நல்வாழ்த்துகள். உங்களால் எழுத முடியும் என்றும் நம்புகின்றேன். ஒரேயொரு கருத்து (உங்களுக்காக என்று சொல்லவில்லை. பொதுவாக. ஊடகங்களுக்குத் தகவல் தரும்பொழுது). ஆங்கிலம், இந்தி, மராட்டி போன்ற மொழிகளில் உள்ள கட்டுரை எண்ணிக்கையை வலியுறுத்தாதீர்கள். சராசரி பைட்டு அளவில் தமிழ் உலக மொழிகளில் 10-ஆவதாக உள்ளது (கடைசியாக கிடைக்கும் ஏப்பிரல் 2010 -இன் தரவுப்படி). இதைவிளக்குவது கடினம், ஆனால் தமிழில் ஓருவரிக் கட்டுரைகள் எழுதுவதை தவிர்க்க முயல்கின்றோம், சராசரி கட்டுரை அளவில் உலக மொழிகளில் 10-ஆவதாக இருக்கின்றோம். மொத்த பைட்டு அளவில் உலகத்தில் 32-ஆவதாக இருக்கின்றோம் என்பனவற்றைக் கூற வேண்டும். அதே போல பதிவு செய்த பயனர்கள் என்பது வேறு பங்களிப்பாளர்கள் என்பது வேறு. இதனையும் தெளிவாகக் கூறுதல் வேண்டும். ஆங்கிலத்தில்ம் கூட பதிவு செய்தவர்கள் 19,174,242 பேர் ஆனால் பங்களிப்பவர்கள் 124,793 பேர் (153 பேரில் ஒருவரே பங்களிக்கின்றார்கள்). தமிழிலும் 52,450 பேர் பதிவு செய்திருந்தாலும், 290 பேர் பங்களிக்கின்றார்கள். இது 180 இல் ஒருவர். இவை எல்லாம் இக்குபிக்கான நுணுக்கமான குறிப்புகள்தான், ஆனால் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கூறி நாம் 59 ஆவது இடத்தில் இருக்கின்றோம் என்பது சரியான கருத்தை எடுத்துச் செல்லாது. அதே போல 52,000 பேர் பதிவு செய்திருக்கின்றார்கள் என்பதும் சரியான கருத்தை வெளிப்படுத்தாது. 290 இதுவரை ஆர்வமாகப் பங்களிக்கின்றார்கள் என்பது பயனுடைய கருத்து. பல புகழ் பெற்ற நாளிதழ்களும் கூட இந்த வெறும் "கட்டுரை" எண்ணிக்கையை மட்டுமே வலியுறுத்துகின்றர். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்த நாமாவது சராசரி கட்டுரையின் அளவு, சிறிதேனும் விளக்கம் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை (0.5 கி.பை, 2 கி.பை) ஆகியவற்றைக் கூற வேண்டும். இவற்றில் நாம் அவ்வளவு பின் தங்கி இல்லை (0.5 பைட்டில் 23-ஆவதாகவும் 2 கி.பை அளவில் நாம் உலக மொழிகளில் 27 ஆவதாகவும் இருக்கின்றோம்)--செல்வா (பேச்சு) 17:24, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:22, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

நல்லதொரு அறிமுகம் உங்கள் பரப்புரை தொடரட்டும்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:51, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

அருமையான ஒரு போட்டி. தமிழ்நாட்டில் இருந்து நல்ல தமிழில் ஒரு நிகழ்ச்சியைக் கேட்ட மகிழ்ச்சி. பார்வதிஸ்ரீ விக்கியைப் பற்றி மிக ஆழமாக புரிந்து அர்ப்பணிப்போடு செயற்படுகிறார். நகர்பேசியில் பங்களிக்க முடியுமா என்று கேட்ட பயனரின் ஆர்வத்தைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். நகர்பேசி தொடர்பாக நாம் கூடுதலாக சிந்திக்க வேண்டும் என்று அவரின் கேள்வி உந்துகிறது. சிறிய திருத்தம். விக்கி நூல்களிலும் நாம் பொதுவாக கவிதை, சிறுகதை, புதினம் போன்றவற்றை சேர்க்க முடியாது. அது பாடநூலின் ஒரு பகுதியாக அமைந்தாலே அவ்வாறு சேர்க்க முடியும். மேலும் நாம் விக்கி முகவரியையும், தொடர்பையும் சற்று தெளிவாக மீண்டும் மீண்டும் கூறனால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தொடர்புக்கு மின்னஞ்சலைத் தருவது புதுப் பயனர்களுக்கு உதவியாக அமையலாம். மின்னஞ்சலை நாம் பார்க்க வேண்டும். நல்ல நிகழ்ச்சி. --Natkeeran (பேச்சு) 04:25, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

பரப்புரையாளர்களுக்கு உதவியான குறிப்புகள் வழங்க வேண்டும்[தொகு]

திருச்சி வானொலியில் தமிழ் விக்கி பற்றி பார்வதி பங்கேற்ற நேர்காணல் உரையாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். உளமார்ந்த பாராட்டுகள்! அந்த நேர்காணல் பற்றி மேலே செல்வா தெரிவிக்கும் கருத்துகளும் பயனுள்ளவையே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற பொது ஊடகங்கள் விக்கிப் பரப்புரைக்கு உதவியாக இருப்பது உண்மையென்றாலும், அன்றாட பரிமாற்றத்தின்போது நண்பர்கள், உடன் உழைப்பாளர்கள் போன்றவர்கள் தமிழ் விக்கி பற்றி அறிய ஆர்வம் காட்டுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, செல்வா போன்றோர் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் அறியவேண்டிய பயனுள்ள, அடிப்படைத் தகவல்கள் என்றொரு தலைப்பில் உரைக்குறிப்புகள் (talking points) உருவாக்கிக் கொடுத்தால் அது பரப்புரையாளர்களுக்கு மிக்க பயன்தரும். நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 04:00, 21 சூன் 2013 (UTC)👍 விருப்பம் ஆம். எனக்கும் என்னைப்போன்ற பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:01, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஆம், சராசரி பைட்டு அளவில் தமிழ் உலக மொழிகளில் 10-ஆவதாக உள்ளது' என்பது அழுத்தமான கருத்து. இதைப் போன்ற முக்கிய தகவல்களைத் திரட்டி வைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:46, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:பரப்புரைக் கையேடு பக்கத்தில் தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 13:24, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
பவுல் உங்கள் கருத்து மிகவும் நல்லது. நன்றி. விக்கி முறைப்படி கூட்டாகவே செய்வோம். இரவி தொடங்கிய பரப்புரைக் கையேட்டில் பதிவு செய்வோம். --செல்வா (பேச்சு) 14:14, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடிக்குக் குழப்பம்[தொகு]

ஃபயர்பொக்சு உலாவில் ஆலமரத்தடியின் பொருளடக்கம் குழம்பிப் போயுள்ளது. குறிப்பாக இந்த மாற்றத்தின் பின்னரே இவ்வாறு நிகழ்ந்துள்ளது. ஏனைய உலாவிகளில் ஒழுங்காக வருகிறது. வேறு யாருக்காவது இவ்வாறுள்ளதா?--Kanags \உரையாடுக 08:50, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

எனக்கு நன்றாகத் தெரிகிறதே. திரைக்காட்சி இட முடியுமா?--இரவி (பேச்சு) 09:44, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று சரி செய்திருக்கின்றேன். இன்னமும் அப்படியே தெரிந்தால் cache நீக்கிவிட்டு முயற்சிக்கவும் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:22, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
என்ன மந்திரம் போட்டீர்கள் மாதரசன்:). ஒழுங்காகி விட்டதே.--Kanags \உரையாடுக 10:59, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:33, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா எழுத்துருமாற்றம் குறித்து[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் எழுத்துரு Lohit Tamil என மாற்றப்பட்டிருக்கின்றது. தயவு செய்து அதனை நீக்க வேண்டுகின்றேன். வின்டோஸ் கணினியின் எந்த உலாவியிலும் அது நன்றாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் தடித்தும், சில இடங்களில் பொடியாகவும் படிக்க மிகவும் சிரமமாக உள்ளது. default எழுத்துரு மிகவும் நன்றாகவும் அழகாகவும் இருந்தது. காண்க:

--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:19, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:27, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
எழுத்துருவை எப்படி மாற்றுவது எனக்கண்டுபிடித்து விட்டேன்:
ஆனால் தயவு செய்து எழுத்துரு மாற்றத்தை கைவிடவும். இது கண்கண்ணாடி அனிபவருக்கும், கண் கோளாறு உடையவருக்கும், வயது முதிர்ந்தவருக்கும் கண்டிப்பாய் உபத்திரவமாய் இருக்கும். குறைந்தது System fontஐஆவது defaultடாக வைக்கவும். மேலும் பலமுறை முயன்றும் ctrl+M எனக்கு வேலை செய்யவில்லை. வேறு யாருக்காவது இச்சிக்கல் உள்ளதா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:47, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 05:26, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]
குரோம் உலாவியிலும் மிகக் கொடுமையாக இருக்கின்றது! எனக்கும் தொகுக்கும் பொழுது தமிழ்-ஆங்கிலம் சிக்கல் இருந்தது, ஆனால் தொகுபட்டையின் வலதுகோடியில் எழுத்துப்பலகைக் குறி தாங்கிய பொத்தான் ஒன்று இருந்தது அதனை அழுத்தி செயற்பட்டேன். ஆனால் இப்பொழுது இயல்புநிலையில் பயன்படுத்த முடிகின்றது (எழுத்துருதான் கொடுமையாக உள்ளது!)--செல்வா (பேச்சு) 15:49, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]
நெருப்புநரியிலும் மோசமாக இருக்கிறது. தயவுசெய்து பழைய எழுத்துருவுக்கு மாற்றவும்.

முதலில் எனது கணினியில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். இப்போதுள்ள எழுத்துரு மிக மோசமாக உள்ளது. உடனடியாக எழுத்துருவை மாற்றி, பழைய எழுத்துருவுக்குக் கொணருமாறு நிர்வாகிகளைப் பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 18:53, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

தொடரும் உரையாடல்களை விக்கிப்பீடியா பேச்சு:Request for Comment/Web fonts implementation for Tamil Wikimedia projects பக்கத்தில் மேற்கொள்ள வேண்டுகிறேன். Please continue the discussion at விக்கிப்பீடியா பேச்சு:Request for Comment/Web fonts implementation for Tamil Wikimedia projects--இரவி (பேச்சு) 14:08, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

எழுத்துரு மாற்ற வாக்கெடுப்பு[தொகு]

எழுத்துரு மாற்ற வாக்கெடுப்பில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுகிறேன். விரிவாகவும், உறுதியாகவும் கருத்துகளை இடுவது நன்று. தமிழில் இட்டாலும் மற்றவர்கள் மொழிபெயர்த்து உதவ முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 05:32, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]

Free Research Accounts from Leading Medical Publisher. Come and Sign up![தொகு]

gets Wikipedia editors free access to reliable sources that are behind paywalls. I want to alert you to our latest donation.

  • Cochrane Collaboration is an independent medical nonprofit organization that conducts systematic reviews of randomized controlled trials of health-care interventions, which it then publishes in the Cochrane Library.
  • Cochrane has generously agreed to give free, full-access accounts to medical editors. Individual access would otherwise cost between $300 and $800 per account.
  • If you are active as a medical editor, come and sign up :)

Cheers, 21:20, 16 சூன் 2013 (UTC)

Cochrane Library Sign-up (correct link)[தொகு]

My apologies for the incorrect link: You can sign up for ' accounts at the. Cheers, 21:54, 16 சூன் 2013 (UTC)

re-correction[தொகு]

My apologies for the incorrect link: You can sign up for Cochrane Collaboration accounts at the COCHRANE sign-up page. Cheers, Ocaasi 21:54, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]

இப்படி நீக்கலாமா?[தொகு]

ராதிகாவின் வாழ்க்கையில் நடந்த, அவரே மறைக்க முயலாத - பலரும் அறிந்த, அவருடைய காதல் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளை இப்பக்கத்தில் பதிந்திருந்தேன். அவை தேவையற்றவை என்னும் குறிப்போடு Vensatry என்னும் பயனர் நீக்கியிருக்கிறார். ஒருவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் அவர் வாழ்க்கையில் நடந்ததைப் பதிவது எப்படித் தேவையற்றதாகும் எனப் புரியவில்லை. மேலும் ஒரு தகவலை நீக்குவதற்கு முன்னர், அதனைப் பற்றிய பொதுவிவாதம் நடத்தாமல் நீக்குவது எப்படி ஜனநாய்கம் ஆகும்?--பொன்னிலவன் (பேச்சு) 17:54, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் மறுமொழி இடுகிறேன். அங்கு உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:28, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]