புத்தகயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புத்த காயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போத்காயா
—  நகரம்  —
போத்காயா
இருப்பிடம்: போத்காயா
, பீகார் , இந்தியா
அமைவிடம் 24°41′42″N 84°59′29″E / 24.695102°N 84.991275°E / 24.695102; 84.991275ஆள்கூறுகள்: 24°41′42″N 84°59′29″E / 24.695102°N 84.991275°E / 24.695102; 84.991275
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் பீகார்
மாவட்டம் கயா
ஆளுநர் டி.ஒய்.பட்டீல்

[1]

முதலமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சி[2]
மக்கள் தொகை 30 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா (ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனித தலமக இடமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பெரிய துறவிமடக் குடியேற்றம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த காயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். குஷிநகர், லும்பினி, சாரநாத் என்பன ஏனைய மூன்றும் ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=புத்தகயா&oldid=1579769" இருந்து மீள்விக்கப்பட்டது