பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்/2014 2015 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]



Re: "Pandian" meaning in Chinese[தொகு]

Hi, I am a user on the Chinese Wikipedia and you asked this question in zh:Wikipedia_talk:Guestbook_for_non-Chinese_speakers, which I also left a message in your talk page on the Chinese Wikipedia. However, you are advised to ask this question in en:Wikipedia:Reference desk in the English Wikipedia since you understand English as your question requires linguistic research. Cheers, HYH.124 (பேச்சு) 06:55, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரை : விளக்கம்[தொகு]

உங்களுடைய ஆதரவான பதிலுக்கு நன்றி , திரு தென்காசி சுப்பிரமணியன் அவர்களே, நீங்கள் கூறிய நடையில் எழுத முயற்சிக்கிறேன். −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Librarystc (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. 16:22, 16 சனவரி 2014‎ (UTC)[பதிலளி]

Notifying user[தொகு]

Hi, can you help to inform User:Librarystc to remember to sign off in discussion pages? He did not sign off after leaving you a message. I do not understand Tamil and there wasn't any template that I know to inform users to sign. Thanks. Also, please check your Chinese Wikipedia talk page. --HYH.124 (பேச்சு) 10:23, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]

I informed him. I think there is no separate template is there as you like. But there is a guide page விக்கிப்பீடியா:கையெழுத்து. It's a good idea to create a separate template to inform users to sign. We'll create for Tamil ASAP. Thanks for your Notice.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:09, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர்கள் பற்றி சரியான விவரம்[தொகு]

https://tools.wmflabs.org/xtools/pages/index.php?name=Hibayathullah&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1--ஹிபாயத்துல்லா (பேச்சு) 15:42, 22 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Unable to load the webpage because the server sent no data. :( --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:00, 22 சனவரி 2014 (UTC)[பதிலளி]

totally 261 aricles are created by hibayaththulla --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:48, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Yes you're right Aathavan but I don't know why Thenkasi's talk page is full of English. I have heard that Thenkaasi is a pure Pandian Tamil man...!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:02, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும். நாங்களும் தமிழர் தான். அப்போது தமிழில் எழுத முடிய வில்லை. மன்னிக்கவும். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:23, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இதில் மன்னிக்க என்ன இருக்கின்றது ஆதவா! நானும் தமிழில் எழுத முடிந்த பின்னும் ஆங்கிலத்தில் தானே தட்டச்சு செய்தேன். தென்காசி வெளியால பிசி-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:28, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இப்பபாருங்க, எங்கயாவது இருந்துட்டு வந்து பல்ப்பு கொடுப்பார். :)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:29, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நான் ஆங்கிலத்தில் மேலே எழுதியது இபாயத்துல்லா கொடுத்த உரலியை சொடுக்கிப் பார்த்த போது வந்த மெசேஜ். அதுக்குள்ள என்னத்தயாவது கிளப்பி விட்டுரூவீங்களே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:31, 4 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரைப்போட்டி[தொகு]

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:56, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:59, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஈ அடிச்சான் காப்பி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:35, 9 பெப்ரவரி 2014 (UTC)

மன்னிக்க்வும், தாங்கள் பிழையான தமிழ் நடையில் செய்திகளையோ தகவல்களையோ தட்டச்சு செய்கிறீர்கள், இது விக்கிப்பீடியனுக்கு அழகல்ல, ஈ அடிச்சான் காப்பி என்பதை ஈ அடித்தவன் நகல் என்வே குறிப்பிட வேண்டும், மேலும் அறிய் இங்கு செல்க. இப்படிக்கு இளவல்..... --யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:25, 10 பெப்ரவரி 2014 (UTC)

தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சனவரி, 2014[தொகு]

தென்காசியார் அவர்களே! விரிவான கட்டுரைக்கு ஏன் ஒரு கட்டுரையும் தெரிவுசெய்யப்படவில்லை? ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 76800 பைட்டை அடையாத கட்டுரையும் பரிசுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. சரிபாருங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:25, 3 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரைப்போட்டிக்கான பட்டியலில் அகரமுதலி என்ற கட்டுரையும் இருந்ததாலேயே விரிவாக்கினேன். சரிபாருங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:25, 3 பெப்ரவரி 2014 (UTC)

அந்த இரண்டு கட்டுஅரைஅயையும் நீக்கியாச்சு. அகரமுதலி அகரவாரிசை இஅரண்டுமே 15360 பைட்ட தாண்டலேயே. அதனால் அதையும் நீக்குகிறேன். அதை பெப்ரவரிக்கு வைக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:30, 3 பெப்ரவரி 2014 (UTC)

தமிழ் அகராதிகள் பட்டியல் என்ற கட்டுரைக்கு அகரமுதலி முன்னர் வழிமாற்றாக இருந்தது. அகரமுதலி கட்டுரை இன்றே உருவாக்கப்பட்டுள்ளது. சரிபாருங்கள். இங்கு பாருங்கள்.

இங்கும் பாருஙகள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:48, 3 பெப்ரவரி 2014 (UTC)

வானியல்[தொகு]

வானியல் கட்டுரையில் சான்றுகள் சேர்த்ததோடு மட்டுமன்றி சீரமைத்தும் உள்ளேன். இது முதற்பக்கத்தில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டது, என நினைக்கிறேன உங்கள் கருத்து என்ன?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:50, 4 பெப்ரவரி 2014 (UTC)

யாழ் தளபதியே அண்டவியல் பற்றியதையும் வானியல் வகைகளில் சேர்க்கவும். நான் சில நாட்கள் கழித்து வருகிறேன். இப்போது தொடர்ந்து என்னால் விக்கியில் இயங்குவது கொஞ்சம் கடினம் தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:33, 9 பெப்ரவரி 2014 (UTC)

ஏன்? முந்திரி ஏன்?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:16, 10 பெப்ரவரி 2014 (UTC)

யாருப்பா அந்த முந்திரி? தளபதியும் கூப்டுறார். சாதாரண புலவனான நானும் கூப்பிடுகிறேன். வாங்கப்பா சீக்கிரம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:53, 11 பெப்ரவரி 2014 (UTC)

முந்திரி பார்க்கவும்!..--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:07, 12 பெப்ரவரி 2014 (UTC)

முந்திரி பார்க்கவும் என்பதை முந்திரி முந்திரி பக்கத்தில் சொல்லாமல் ஏன் முந்திரி மாதிரி என்பக்கத்தில் சொகிறாய்? அதுசரி. விக்கிப்பீடியா மூன்றாம் நிலை மூலம் தானே நான் தமிழர் தொடர்பாக முதல் நிலைச் சான்றுகளைத் தேடிப் போகிறேன். அதனால் விக்கிப்பீடியாவில் எப்போ இருப்பேன்னு எனக்கே தெரியாது. அதனால் நேரம் குறைவே.

:) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:23, 12 பெப்ரவரி 2014 (UTC)

சொல்லவேயில்லை--aho;- பேச்சு 03:15, 13 பெப்ரவரி 2014 (UTC)

முகநூல் பக்கத்தை அதுக்காகத்தான் தரணும்னு சொல்றது. கேட்டா முகநூலே எனக்கும் என் அண்ணனுக்கும் கிடையாது ஆயா சுட்ட பாயாக்கதையச் சொன்னா எப்படித் தெரியும்? முகநூலில் தான் ஆல்பம் ஆல்பமா போடுறேனே. எங்கே போறேன். எதப்பாக்குறேன் என்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:41, 14 பெப்ரவரி 2014 (UTC)

அப்படியா பேஸ் பேஸ்...--aho;- பேச்சு 06:12, 15 பெப்ரவரி 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]





பதில் வேண்டும்[தொகு]

இங்கு உங்கள் பதில் வேண்டும்.--Kanags \உரையாடுக 13:58, 28 பெப்ரவரி 2014 (UTC)

இங்கு Ctrl+F கோழி செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:19, 28 பெப்ரவரி 2014 (UTC)

நீங்கள் அவ்வாறு கோழி செய்து பார்த்தீர்களா? எனது பயனர் பக்கத்தில் பதில் தாருங்கள். தப்பியோடப் பார்க்காதீர்கள்.--Kanags \உரையாடுக 01:06, 1 மார்ச் 2014 (UTC)

11 மணி நேரம் தப்பி ஓடி ஒளிந்துவிட்டு இப்போ வந்து பதில் கேட்கும் உங்கள் துணிச்சல் யாருக்கும் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 1 மார்ச் 2014 (UTC)

என்னுடைய பேச்சுப் பக்கத்தில் தான் மறுமொழி தரச் சொல்லிச் சொன்னேன். நீங்கள் உங்கள் பக்கத்தில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டீர்கள். அப்படித்தானே. சரி எப்படியோ, நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. நீங்கள் நக்கல், பகிடிகளை விட்டுத் தப்பிக்கலாம் எனப் பார்க்கிறீர்கள். பகிரங்கமாக எனது பயனர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இது நான் பகிடிக்குச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இரு வகைக்கும் (தப்பியோடல்) நீங்களே பொருத்தம் என்பதை இப்போது ஒப்புக் கொண்டுவிட்டீர்கள். உங்கள் நக்கல்களுக்கும் பகிடிகளுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறவாதீர்கள். கோழி செய்து பார்த்ததில் நீங்கள் கண்டது என்ன? பகிரங்கமாகக் கூறுங்கள். ஒரு பொதுப்பக்கத்தில் இவ்வாறு நக்கல் அடிப்பது குறித்து நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இது முதல் முறையல்ல. இங்கு எல்லோரும் தன்னார்வப் பயனர்களே.--Kanags \உரையாடுக 20:33, 1 மார்ச் 2014 (UTC)

ஓடி ஒழியும் அளவுக்கு தப்பு செய்யும் ஆள் நானில்லை. தப்பியோடப் பார்க்காதீர்கள் என்று நீங்கள் என்னைக் கூறியது இதே பக்கத்தில் தான் இருக்கிறது என்பதை நினைவில் வைக்கவும். நீங்கள் என் பக்கத்தில் உரையாடலை தொடரும்வரை நான் மறுமொழி தருவேன்.

//ஒளிந்து கொண்டீர்கள்//

உங்களின் உரையாடலை பார்த்தும் உங்களைப் பார்த்தும் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு உங்களிடம் ஒன்றுமில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:01, 2 மார்ச் 2014 (UTC)

நன்றி ஐயா, உங்களைப் போன்ற அறிவாளிகளுடன் உரையாடி உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்தமைக்கு அருள் கூர்ந்து மன்னிக்கவும். நீங்கள் வழக்கம் போல மற்றவர்கள் பேச்சுப் பக்கத்தில் வந்து சம்பந்தா சம்பந்தம் இன்றி அரட்டை அடியுங்கள். அல்லது நக்கல் அடியுங்கள். அல்லது பகிடிகள் விடுங்கள். உங்களுக்கில்லாத உரிமையா? என்னிடம் ஒன்றும் இல்லாவிட்டாலும் விக்கிப்பீடியாவில் இருந்து கற்றது ஏராளம். அது இப்போதில்லாவிட்டாலும் பிற்காலத்திலாவது வீண் போகாது.--Kanags \உரையாடுக 20:24, 2 மார்ச் 2014 (UTC)

நான் விக்கியில் உரையாடுவதை நேரவிரயமாக நினைத்ததில்லை. எனக்கு இருக்கும் நேரக்குறைவில் நான் கிடைத்த இடங்களில் தான் பதிலிட முடியும் என்பதை தான் சொன்னேன். நான்கு திரைகளுக்கு நான் மாறிக்கொண்டிருக்க வேண்டிய வேலைச் சூழல் எனக்கு. சமீபத்தில் என் பனக்களிப்புகள் குறைந்ததை நீங்கள் பார்க்கலாம்.

//என்னிடம் ஒன்றும் இல்லாவிட்டாலும் //

நான் உங்களிடம் பயப்படுவதற்கு தான் ஒன்றும் இல்லை என்றேன். உங்களிடம் ஒன்றுமே இல்லை என்று சொல்லவே இல்லையே. சம்பந்தா சம்பந்தம் இன்றி நான் எங்கும் நக்கல் அடிக்கவில்லையே. நீங்கள் முதலில் எழுதியதாக நினைத்து உங்கள் பக்கத்தில் வந்து உரையிட்டேன். இது முதலே தெரிந்திருந்தால் நான் அங்கு வந்திருக்க மாட்டேன். அது தவறு என்றதும் திரும்பிப் பெற்றுவிட்டேன்.

//மற்றவர்கள் பேச்சுப் பக்கத்தில் வந்து சம்பந்தா சம்பந்தம் இன்றி அரட்டை அடியுங்கள். //

நான் தவறாக நினைத்து உங்கள் ஒருவர் பக்கத்தில் உரையிட்டதற்காக அதைப் பொதுப்படுத்த வேண்டாம்.

//விக்கிப்பீடியாவில் இருந்து கற்றது ஏராளம். அது இப்போதில்லாவிட்டாலும் பிற்காலத்திலாவது வீண் போகாது.//

எல்லாருக்கும் அப்படித்தான்.

//அருள் கூர்ந்து மன்னிக்கவும்//

மற்றபடி என் நேரத்தை நீங்கள் வீணடித்ததாக நான் கருதவில்லை என்பதால் உங்கள் மன்னிப்பு செல்லாது. அப்படியே என் நேரத்தை நீங்கள் வருங்காலத்தில் வீணடித்ததாக நான் கருதினாலும் உங்களிடம் பேச விரும்பவில்லை என்று சொல்வேனே தவிர வேறு எதையும் சீரியசாக பேச மாட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:43, 2 மார்ச் 2014 (UTC)

இலங்கை மௌரிய மன்னர்கள்[தொகு]

  • Kittisena -கீத்திசேனன்
  • Dathappabhuti-தட்டா பூபதி
  • Kittisri Meghavanna- குட்டகீர்த்தி மேகன்
  • Jettha Tissa - செக்தா திச்சன்
  • Kassapa- கச்சியபன்
  • Unhanagara Hathadatha - இரண்டாம் அத்தபாதன்
  • இவ்வாறு கட்டுரைகளில் மன்னர்களின் பெயர்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. இவை சரியானவை இல்லை எனத் தோன்றுகிறது.

இந்த மன்னர்களின் பெயர்களின் சரியான தமிழ்ப் பெயர்களைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • 608 இல் ஆண்ட அரசன் சங்க திச்சன் என்றுதான் [lakdiva.org/codrington/sovereigns.html] இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளது. ஆனால் தவி மற்றும் ஆவி இரண்டிலும் இரண்டாம் சங்க திச்சன் என்று உள்ளது. எது சரியானது என்று எப்படி அறிவது?--Booradleyp1 (பேச்சு) 15:15, 2 மார்ச் 2014 (UTC)

பயனர்:Booradleyp1

சங்க திச்சனின் முன்னோர் ஒருவனின் இன்னொரு பெயர் சங்கதிச்சன் என படித்ததாக நினைவு. அதனால் அப்படி இருக்கலாம். பாண்டியர் வார்ப்புருவில் பார்த்தீர்கள் என்றால் அதில் முதலாம் இராசசிம்மன் இருக்காது. அதாவது அது இர்ண்டாம் இராசசிம்மன் முன்னோன் பராங்குசனின் இன்னொரு பெயர். முதலாம் இராசசிம்மனின் மற்றொரு பெயரான பராங்குசன் பிரபலம் என்பதால் அவன் அப்படியே நூல்களில் பதியப்படுகிறான்.

இந்த மாதிரி சிக்கலின் போது நாம் முதலில் இருந்து வரிசையாக கடைசிக்கு பின் தள்ளலாம். ஆனால் பின்னால் இருந்து முன்னால் தள்ளும் போது அதே பெயர் அவர்களின் முன்னோருக்கு மற்றொரு பெயராக உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். சில சமயம் இளவரசர்கள் (அரசனின் தம்பி, மச்சான் மகன் அல்லது மருமகன்,) இரண்டாம் வரிசையில் வருவார்கள். அவர்களையும் சில அட்டவணைகள் உள் வாங்குவதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:55, 2 மார்ச் 2014 (UTC)

சங்க திச்சன் குறித்த சந்தேகத்திற்கு அளித்த விளக்கத்திற்கு நன்றி. அரசர்களின் பெயர்களின் சரியான தமிழாக்கத்தையும் தந்தீர்கள் என்றால் அக்கட்டுரையில் சரிசெய்து விடலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:28, 3 மார்ச் 2014 (UTC)

நான் இந்த பெயர்களை மயிலையார் நூல்களில் இருந்து தான் எடுத்தேன். ஏன் அவர் அப்படிக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. முறையே கீர்த்திசேனனன், தத்தாபபூதி, சேட்ட திச்சன் என வைக்கலாம். மற்ற பெயர்களை நான் தேடிப்பார்த்து உறுதிப்படுத்துகிறேன். ஒருவேளை அவை வேறு பெயர்களாக இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:15, 3 மார்ச் 2014 (UTC)

முடிவு[தொகு]

நாரதரே...., முடிவுகள் எங்கே? கருத்துக்களும் இல்லை, முடிவில்லை எண்டு முடிவு எடுத்திட்டிங்களோ? (ந.ம), சீக்கிரம், மூன்றாம் திகதி எண்டு போட்டிப் பக்கத்தில் உள்ளது.:(--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:54, 7 மார்ச் 2014 (UTC)

தற்போதைக்கு நேரமில்லையே இளவேந்தரே. நாராயண நாராயண.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:56, 7 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்ஆகா அற்புதம் நாராயண நாராயண-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:59, 7 மார்ச் 2014 (UTC)

பார்க்கவும்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Arbitration_Committee --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:09, 18 மார்ச் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

ஐயா, சிறிய ஐயப்பாடு, விலங்கியல் கட்டுரை போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய மேற்கோள் (*விலங்கியல் இப்பதிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது) இடப்பட்டது. நான் புதிய பயனர் ஆகையால் தயை கூர்ந்து விளக்கவும், தங்களின் விளக்கம், தவறுகளைத் திருத்தி இனிவரும் மாதங்களில் சிறப்பாகத் தொகுக்க ஊக்குவிக்கும்.

மற்ற தளங்களில் இருந்து உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டக்கூடாது. நீங்கள் அப்படிச் செய்ததால் அது போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.

//நான் புதிய பயனர் ஆகையால் தயை கூர்ந்து விளக்கவும்//

இங்கு எல்லோருமே அப்படித்தான் ஏதாவது ஆரம்பத்தில் தவறு செய்வார்கள். அது வழக்கமானதே. மேலும் விக்கியின் பேச்சுப்பக்கங்களில் மட்டும் உங்கள் கையெழுத்திடுதல் விக்கியின் அடிப்படை முறைமை.

மேலும் தகலவ்லுக்கு விக்கிப்பீடியா:கையெழுத்து பக்கம் பார்க்கவும். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:44, 1 ஏப்ரல் 2014 (UTC)

கோட்பாடுகள் / கொள்கைகள் எக்காரணம் கொண்டும் அதன் அர்த்தங்களில் மாற்றம் பெறுதல் கூடாது (உலக விதி). என்பதால் தான் படிவளர்ச்சிக் கொள்கை என்ற விக்கி பக்கத்தில் உள்ள முதன்மைப் பத்தியின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளேன், நீங்கள் கொடுத்த வலைத்தளத்தை இப்பொது தான் முதன் முறையாக அறிகின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள புறக்கணிப்புக் காரணம் வருத்தமளிக்கிறது.

மேற்கூறிய படிவளர்ச்சிக் கொள்கை, 31 ஆகத்து 2008 ஆம் ஆண்டு விக்கியில் Aashiq 14 என்ற பயனரால் தொகுக்கப் பெற்றது. குறிப்பு: எந்த முறையிடும் நோக்கிலும் குறிப்புகளை வெளியிடவில்லை. இருப்பினும் தங்களிடம் தகுந்த அறிவுரைகளை எதிர்நோக்கியுள்ளேன். சரவணன் பெரியசாமி 17:40, 1 ஏப்ரல் 2014 (UTC)சரவணன் பெ.

//தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் //

இந்த சொற்கள் அனைத்தும் அப்படியே 2 பக்கத்திலும் உள்ளன. அதை பார்த்து நீங்கள் கூறியவாறு 2008ல் இன்னொருவர் எழுதி இருக்கலாம்.

//படிவளர்ச்சிக் கொள்கை என்ற விக்கி பக்கத்தில் உள்ள முதன்மைப் பத்தியின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளேன்//

கட்டுரைப்போட்டிக்கு வேறு விக்கிக் கட்டுரையில் இருந்தும் வெட்டி ஒட்டக்கூடாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:15, 1 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி - சரவணன் பெரியசாமி 13:04, 2 ஏப்ரல் 2014 (UTC)சரவணன் பெ

கட்டுரைப் போட்டி - மார்ச்[தொகு]

விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/போட்டி முடிவுகள்#மார்சு 2014 இற்றைப்படுத்தியுள்ளேன். அதன்படி, 2ம் இடத்திற்கு நால்வர் வர வேண்டியுள்ளது. மேலும், இந்தியப் பிரிவினை கட்டுரை மிக அதிகளவில் சான்றுகளால் நிரப்பப்பட்டுள்ளதால் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசுக்கு தகுதியானதா எனப் பார்க்கவும். வரும் போட்டிகளில் இது பிழையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடலாம். --AntonTalk 03:03, 7 ஏப்ரல் 2014 (UTC)

இதற்கு முன் வரை விரிவான கட்டுரைக்கும் இது போன்ற விதிமுறைகள் என எனக்கு தெரியாது. அண்டன் கூறியவாறு இது வரும் போட்டிகளில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்றாலும் , இம்முறை மறுபரிசீலனை செய்து பார்க்கலாமே!. ஏற்கனவே தெரிந்திருந்தால் இத்தவறு நடந்திருக்காது.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:29, 7 ஏப்ரல் 2014 (UTC)

எண்னிக்கை கட்டுரை, விரிவான கட்டுரை இரண்டுக்குமே ஒரே விதிகள் தான். பைட்டு அளவை தவிர. ஆங்கில விக்கியில் உள்ளதை நீங்கள் வெட்டி ஒட்டியது எப்படி கணக்கில் வரும்? உரைப்பகுதிகள் மட்டும் தான் கணக்கில் வரும் என விதி இருக்கிறது அல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:14, 7 ஏப்ரல் 2014 (UTC)

உரைப்பகுதி முடித்த பிறகு தான் வெட்டி ஒட்ட வேண்டும் என்று போட்டிருக்கிறது. நீங்கள் முதல் தொகுப்பிலேயே [1] வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:18, 7 ஏப்ரல் 2014 (UTC)

Wikimedians Speak[தொகு]

      

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi தென்காசி சுப்பிரமணியன்,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:41, 9 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி மார்ச்[தொகு]

மார்ச் மாதக் கட்டுரைப் போட்டி முடிவுகள் இங்கும், பயனர்களின் பேச்சுப் பக்கங்களிலும் அறிவிக்கப் படாமல் உள்ளது. முதற் பக்கத்திலும் பெப்ரவரி மாத முடிவுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மே மாதமும் ஆரம்பித்து விட்டதால் ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:53, 1 மே 2014 (UTC)[பதிலளி]

முதலாம் வெற்றியாளர்: ஸ்ரீகர்சன், இரண்டாம் வெற்றியாளர்கள்: மாதவன், சரவணன் பெரியசாமி, குறும்பன், நந்தினி கந்தசாமி - இதன்படி பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் அறிவிப்பை வழங்கவா? அல்லது இம்மாத போட்டி அறிவிப்புடன் வழங்கலாமா? --AntonTalk 02:53, 8 மே 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி நிறைவு[தொகு]

வணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பைத் திறம்பட பொறுப்பேற்றுச் செய்தமைக்காக இன்னொரு சிறப்பு நன்றி :) இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:32, 6 மே 2014 (UTC)[பதிலளி]

நான் இனி ஜூன் 2க்கு பிறகுதான் விக்குக்கு வர இயலும். போன மாதக் கட்டுரைகளிலும் இன்னும் சில சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது. இன்னும் ஏப்ரல் மாதப் போட்டி முடிவுகள் அறிவிக்கவில்லை. போட்டியில் பங்களிப்பது கடினம் என்றாலும் இம்மாத முடிவுகளை அறிவிக்க முடியும். பரிசுகள் எப்போ? வேற ஏதாவது குட்டி மீட்டிங்கு வருதா? அண்டனார் தான் சில போட்டிகளில் ஒருங்கிணைப்புப் பணியைச் செய்தது. அதனால் நன்றிகளை அவருக்கு கால் டைவர்டு செய்றேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:29, 6 மே 2014 (UTC)[பதிலளி]

சுப்பிரமணியன், ஏப்ரல் மாதப் போட்டி முடிவுகளை அறிவிப்பீர்களா? உங்களுக்கு வேலைப்பளுவெனில் என்னால் அறிவிக்க முடியும். குறிப்பு, ஏப்ரல் மாதப் போட்டியில் ஏராளமான கட்டுரைகள் உரைப் பகுதியற்று அட்டவணை போன்றவற்றாலே நிரப்பப்பட்டுள்ளன. போட்டி விதியின்படி அவை தகுதியானவை அல்ல. பலமுறை இது பற்றி போட்டியாளர்களுக்கு தெளிவுபடுத்தியும் அவர்கள் அதுபற்றி கேட்பதாகவில்லை. --AntonTalk 02:47, 8 மே 2014 (UTC)[பதிலளி]

ஆம் நானும் பார்த்தேன். ஆனால் மூவரும் அதைத்தான் செய்திருக்கின்றனர். மற்ற இருவர் ஒரு கட்டுரையே எழுதியிருக்கின்றனர்.

வேலைப்பளு அதிகம்தான். முடிவுகளை நீங்கள் அறிவித்தால் நலம். அடுத்த மாதம் இரவி வருவார். நிராகரிக்கப்படாத 17 கட்டுரைகளில் ஏதோ உள்ளடக்கங்கள் ஓரளவாவது இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே ஆலமரத்தடியிலும் பயனர் பேச்சுப் பக்கங்களிலும் இதை நினைவுறுத்தியும் இப்படிச் செய்வதால் அக்கட்டுரைகளை போட்டியில் இருந்து நீக்கினாலும் நலம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:46, 8 மே 2014 (UTC)[பதிலளி]

தென்காசியாரே, பரிசுகளை வழங்கவென தற்போது ஏதும் நிகழ்ச்சி திட்டமிடப்படவில்லை. இம்மாதத்துடன் போட்டிகள் நிறைவு பெற்ற பிறகு, பெரும்பாலும் அஞ்சல் வழியாகவே பரிசு வழங்கப்படும்.--இரவி (பேச்சு) 13:46, 11 மே 2014 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்[தொகு]

வணக்கம் தென்காசி சுப்பிரமணியன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:27, 17 மே 2014 (UTC)[பதிலளி]

2014 ஜனவரி 11ஆம் தேதி தி இந்து தமிழ் நாளிதழின் துணை பதிப்பில் 4ஆம் பக்கத்தில் ஆச்சரியமும் அதிச்சியும் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியா இந்திய மொழிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் குறைந்த அளவாவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்று செய்யப்படுவதில்லை என்பது ஒரு வருத்தம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் (Disease) என்ற நோய் இதில் ஆங்கிலத்தில் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழில் சொர்ப்ப அளவே தமிழ் படுத்தப்பட்டுள்ளது. இந்த விசயம் பற்றி எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 06:25, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

//நோய் இதில் ஆங்கிலத்தில் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது//

பயனர்:Muthuppandy pandian அப்படி ஏதும் இல்லையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:49, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

தென்காசி சுப்பிரமணியன் அவர்களே நான் கூற வந்ததை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். அதாவது ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு மொழிமாற்றம் செய்யாமல் இருப்பதைச்சொன்னேன்.--Muthuppandy pandian (பேச்சு) 11:05, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

உரையாடலை இங்கு தொடருங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:12, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

மனுநீதிச் சோழனும் எல்லாளனும் ஒருவரா?[தொகு]

மனுநீதிச் சோழனும் எல்லாளனும் ஒருவரா? இங்கு கருத்திட முடியுமா? --AntonTalk 14:41, 17 மே 2014 (UTC)[பதிலளி]

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்[தொகு]

வணக்கம், தென்காசி சுப்பிரமணியன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண் (இலங்கையில் உள்ள கணக்குக்கு இதே போல் என்ன விவரம் வேண்டுமோ பகிருங்கள்)

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 18:41, 30 சூன் 2014 (UTC)[பதிலளி]

பாண்டியப் பேரரசுகள்[தொகு]

வணக்கம்! படிக்க: ‘Not one, but two Pandiya kingdoms in Tamil Nadu’ --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:33, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நன்றி. இச்செய்தி ஏற்கனவே தெரியும். செழியன் காசுகள் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:53, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வியாசர்பாடியில் புத்தர் கோயில்[தொகு]

வணக்கம். அண்மையில் வெளியான Frontline (Chennai at 375, September 5, 2014, p.36) இதழில் வெளியான கட்டுரையில் வியாசர்பாடியில் ஒரு புத்தர் கோயில் இருந்ததாக திரு நாகசாமி கூறியுள்ளார். இதனை தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் கட்டுரையில் சேர்க்கலாமா என்பது குறித்து தங்களின் கருத்தை அறியவேண்டுகிறேன். தற்போதுதான் இவ்வாறான ஒரு குறிப்பை நான் அறிந்தேன். தங்கள் கருத்தறிந்தபின் இணைக்க முயற்சிப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:37, 4 செப்டம்பர் 2014 (UTC)

சேர்க்கலாம். இதற்கு ஏதாவது எதிர்கருத்துவரும்போது தான் அதை எந்த இடத்தில் கட்டுரையில் போடுவது என்று நாம் பார்க்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பௌத்தம் பரவியதாக உள்ள காலக்கட்டதுக்கு மிகவும் முன்னதாக இங்கு பௌத்தர் கோயில் இருந்தது போன்ற கருத்துக்களை நாம் அதிகம் ஏற்கப்பட்ட பின்னரே அதை பௌத்தர் கோயிலாக நாம் அடையாளப்படுத்த முடியும். மற்றபடி அக்கோயில் தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குப் பின் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தால் சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:28, 4 செப்டம்பர் 2014 (UTC)

தங்களின் கருத்தை ஏற்கிறேன். தமிழகத்தில் பூம்புகார், நாகப்பட்டினம் போன்ற குறிப்பிடத்தக்க சில இடங்களைத் தவிர பெரும்பாலும் கி.பி.10-11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரான காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள்தான் தமிழகத்தில் அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன மற்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அச்சூழலில் பெரும்பாலான புத்தர் கோயில்கள் அவ்வாறான நிலையில்தான் அமைந்திருக்க வேண்டும். தவிரவும் ஐயப்பாடு இருக்கும் நிலையில் பட்டியலில் சேர்க்கும்போது பிறர் முன்வந்து ஆதாரங்களைத் தரவும் வாய்ப்புண்டு என்று கருதுகிறேன். தங்களின் மறுமொழி கிடைத்தபின் இணைப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:08, 4 செப்டம்பர் 2014 (UTC)

நீங்கள் சொல்லும் சிலை எந்த நூற்றாண்டுடையதாம்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:00, 4 செப்டம்பர் 2014 (UTC)

வியாசர்பாடியில் புத்தர் சிலை உள்ள விவரம் இல்லை. புத்தர் கோயில் என்ற குறிப்பு மட்டும் Frontline கட்டுரையில் உள்ளது. (தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் பெரும்பாலும் 10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாக உள்ளன.)--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 17:21, 5 செப்டம்பர் 2014 (UTC) வணக்கம். வியாசர்பாடியில் புத்தர் கோயில் இருந்ததற்கான குறிப்பினை தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் கட்டுரையில் தற்போது இணைத்துள்ளேன். மாற்றுக் கருத்து வரும்போது மேம்படுத்தும்/நீக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம் எனக் கருதுகிறேன். தேவையில்லை என பிறர் கருதினால் அவர்களின் முடிவிற்கே விட்டுவிடலாம் என எண்ணுகிறேன். ஐயமிருப்பினும்கூட எந்த ஓர் பௌத்தம் தொடர்பான இடமும் விட்டுவிடக்கூடாது என்றே நான் எண்ணுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:48, 8 செப்டம்பர் 2014 (UTC)

இது வழக்கமாக ஏற்படுவது தான். எதிர்கருத்துகள் துறை வல்லுநர்களால் ஊடகங்களில்/ஆய்விதழ்களில் வைக்கப்படும் போதுதான் எதை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற விசயத்துக்கு போவார்கள். அதனால் எதிர்கருத்து வந்தால் பார்த்துக்கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:02, 8 செப்டம்பர் 2014 (UTC)

பெண்ணியம் வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:21, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமங்கள்[தொகு]

⚠

படிமம்:திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு-.jpg மற்றும் படிமம்:திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு.jpg ஆகியப் படிமங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இவைகளின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாதவை என்றும் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெற்றவை எனவும் குறிக்கின்றது. ஆயினும் இவை எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இவை முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இவை நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இவை பயனுள்ள படிமங்கள் என நீங்கள் கருதினால் இவற்றை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:56, 10 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

சிகரம்:பிலிப்பீன்சு[தொகு]

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:19, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் தென்காசி சுப்பிரமணியன்/2014 2015 2016!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:28, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். --இரவி (பேச்சு) 08:01, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு[தொகு]

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:02, 5 பெப்ரவரி 2015 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - உங்களுக்குத் தெரியுமா[தொகு]

தற்போதைக்கு நேரமில்லை தலைவரே. சில மாதங்கள் கழித்து வருகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:36, 8 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி. காத்திருக்கிறேன். --AntonTalk 04:14, 9 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:35, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:59, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:31, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]



முதலாம் இராஜராஜ சோழன் கால பொன் நாணயம்[தொகு]

முதலாம் இராஜராஜ சோழன் கால பொன் நாணயம், இலங்கை

முதலாம் இராஜராஜ சோழன் கால பொன் நாணயங்களை இலங்கை தொல்பொருட்காட்சிச்சாலையில் கண்டேன். இன்னும் சில படிமங்களை பதிவேற்றியதும் இங்கு தெரிவிக்கிறேன். --AntanO 14:59, 5 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஓ. அருமை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:48, 5 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பாண்டியனின் நந்தியும் மீன்களும்

ஓலைச்சுவடி ஆழ்வார்[தொகு]

தென்காசி சுப்பிரமணியன் தமிழில் உள்ள ஓலைச்சுவடிகளையும் ஒப்புநோக்கும் திறனாளி என்பதால் இவரை ஓலைச்சுவடி ஆழ்வார் (ஓலைச்சுவடியில் ஆழங்கால் பட்டவர்) எனப் போற்றி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 21:59, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்[தொகு]


படிமம்:Velupillai Prabhakaran.jpg[தொகு]

File:Velupillai Prabhakaran.jpg என்ற படிமம் பயன்படுத்தபடாத நியாயப் பயன்பாட்டுப் படிமம். இது நீக்கப்படலாம். நன்றி. AntanO 17:30, 13 பெப்ரவரி 2016 (UTC)

நாணயம்[தொகு]

Three fishes (vertical) and horse standing before a lamps, found in Sri Lanka

இது யாழ்ப்பாண அரசு காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் என்று நம்பப்படுகின்றது. பொதுவாக மீன் சின்னம் பாண்டியராலும் குதிரைச் சின்னம் சோழராலும் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிந்தேன். இரு சின்னங்களும் ஒரே நாணயத்தில் அமைவது எப்படி? --AntanO 01:06, 19 ஏப்ரல் 2016 (UTC)

  1. குதிரை சங்ககால பாண்டியக்காசுகளிலும் உண்டு.
  2. ராஜராஜன் மற்ற அரசர்களை வென்றபோது மூவேந்தர் சின்னத்தையும் பொறித்துக்கொண்டான். தன் ஆளுகைக்கு உட்பட்டது மூவேந்தரரசு எனக்காட்ட அப்படிச்செய்தது. பாண்டியர்களின் வழிவந்தவர்கள் யாழ்பாண அரசர்கள் என்பதால் பாண்டியரின் ஆளுகைக்கு உட்பட்டதாக காட்டிக்கொள்ள அவ்வாறு பொறித்துள்ளனர். யாழ்பாண அரசர்களின் கொடியிலுள்ள நந்தியும் இரண்டு விளக்குகளும் நாணயத்திலுள்ளது இதை மேலும் உறுதிப்படுத்தும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:07, 19 ஏப்ரல் 2016 (UTC)
👍 விருப்பம்--AntanO 00:54, 20 ஏப்ரல் 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:32, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]

வரலாற்றை மாற்றும் வித்தை!!!![தொகு]

நண்பருக்கு வணக்கம்,

நான் மள்ளர் என்னும் பக்கத்தில் ஆதாரங்களுடன் பதிந்த தரவுகளை நீங்கள் நீக்கியதாக அறிகிறேன். உண்மை உலகுக்கு தெரியவேண்டும் என்ற நோக்கோடுதான் பதிந்தேனே தவிர வேறு நோக்கம் இல்லை. தமிழகத்தில் நாயக்கர் காலத்திற்கு முந்தய அரசின் வழித்தோன்றல்கள் நாங்கள். தக்க ஆதாரங்களுடன் பதியும் தரவுகளை நீக்கியதற்கு விளக்கம் தர முடியுமா. விளக்கம் தரவில்லை என்றால்... உண்மை உலகுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தினாலும், எங்கள் மீதுள்ள காழ்புணர்ச்சியினாலும் நீங்கள் செயல் படுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா??

நாயக்க மன்னர்கள் தான் பாண்டிய நாட்டை 72 பாளயங்களாக பிரித்து அதில் அரச மரபினரை தோற்கடிக்க உதவிய சிலருக்கு 18 பாளையங்களை வரிகளுக்கு உட்பட்டு பரிசாக கொடுத்தனர், என்பது வரலாறு. அரசமரபினரின் நிலங்கள் பறிக்கப்பட்டு அந்த நிலங்களிலே அடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டனன்ர் என்பதும் வரலாறு..

ஆக.. நண்பர், தென்காசி சுப்பிரமணியன் எங்கள் மீதுள்ள பழைய பகையினாலும் காழ்புணர்ச்சியினாலும் நீங்கள் செயல் படுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா??

மற்ற சாதிகள் கட்டுரைகளில் நான் செய்த மாற்றங்களை பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:49, 2 செப்டம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2017[தொகு]

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:06, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

தமிழ்நாடு விடுதலைப்படை.jpg என்ற நியாயப்பயன்பாட்டுப் படிமம் கட்டுரையில் இல்லாது உள்ளது. தேவை இல்லையென்றால் நீக்கிவிடலாம். --AntanO 02:57, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]