விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு
|
அனைத்து முக்கிய தலைப்புக்களிலும் சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவது தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று ஆகும். சிறப்புக் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஆக்க முறைக்கும் தரத்திற்கும் நல்ல எடுத்து காட்டாக அமைகின்றன. சிறப்புக் கட்டுரைகள் என்றால் என்ன என்பதையும், முழுப் பட்டியலையும் Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் பக்கம் சென்று பார்க்கலாம்.
|
சிறப்புக் கட்டுரைகள் சுட்டிகள்:
|
|
கட்டுரைப் பரிந்துரை செயல்முறை
கட்டுரையைப் பற்றி முடிவுகளைத் தெரிவிப்பதற்குத் தயவுசெய்து கட்டுரையை முழுமையாக வாசியுங்கள். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களிலும் கட்டுரையைப் பற்றிய, கட்டுரையின் பொருள் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.
Consensus must be reached in order to be promoted to featured article status. If enough time passes without objections being resolved, nominations will be removed from the candidates list and archived. |
|
பொருளடக்கம் |
[தொகு] முன்மொழிவுகள்
[தொகு] சங்ககாலத் தமிழக நாணயவியல்
சங்ககாலத் தமிழக நாணயவியல் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)
[தொகு] ஆதரவு
[தொகு] நடுநிலைமை
[தொகு] எதிர்ப்பு
[தொகு] கருத்துக்கள்
மூலக் கட்டுரையை (பெரும்பாலும்) எழுதியவன் என்பதால் கருத்துகளை மட்டும் இடுகிறேன். வாக்களிக்கவில்லை. :-)
- சிலர் வட இந்திய மன்னர்களை பின்பற்றியே தமிழக மன்னர்கள் காசுகலை அச்சடித்து வந்தனர் என்று கூறி வந்த பொழுது சில தமிழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் விடாமுயற்சி மூலம் பல ஆராய்ச்சிகளை செய்து வெளியிட்ட சில திருப்புமுனை ஆய்வுகளை கொண்டுள்ள கட்டுரை. அதிலும் முக்கியமாக சங்ககால வரலாற்றை உண்மையாக்கிய பெருவழுதி நாணயம், தமிழக முத்திரைக் காசுகள் போன்றவை இவற்றில் அடங்கியுள்ளமையும் முக்கிய அம்சங்கள். முதற்ப்பக்க கட்டுரையாகவும் கூட்டுமுயற்சி கட்டுரையாகவும் ஆகியுள்ளதால் இதில் சர்ச்சைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)
[தொகு] ஜிமெயில்
தொடர்ந்து கணினி சார் கட்டுரைகள் எழுதி வரும் உமாபதியின் முயற்சியில் comprehensive ஆக அமைந்த நல்ல கட்டுரை. சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். இன்னும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தரலாம்.--Ravidreams 11:25, 18 நவம்பர் 2006 (UTC)
- ஆதரவு நல்ல முற்காட்டுக் கட்டுரை. நிறைய வெளி மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பல பரிமானங்களில் ஜிமெயில் பற்றி அலசியுள்ளார். (எனது பேச்சுப் பக்க வேண்டுகோளையும் நிறைவேற்றியுள்ளார்.) பாராட்டுக்கள் உமாபதி. -- Sundar \பேச்சு 06:42, 15 மே 2007 (UTC)
[தொகு] ருக்மிணி தேவி அருண்டேல்
ருக்மினி அவர்களின் வாழ்க்கையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இக்கட்டுரை. கட்டுரையின் நீளத்தை கருதாவிட்டால், சிறப்புக்கட்டுரை ஆக்கப் பரிந்துரைக்கிறேன்--Ravidreams 11:28, 18 நவம்பர் 2006 (UTC)
[தொகு] தமிழ்
அதிகம் பார்க்கப்படும் தகவல் செறிவுள்ள கட்டுரை. சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம்--Ravidreams 19:05, 16 நவம்பர் 2006 (UTC)
- நல்ல கட்டுரை, ஆனால் தமிழ் என்ற தலைப்பில் சேர்க்கப்படவேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஆகையால் முழுமை பெறவில்லை என்று நினைக்கின்றேன். கட்டமைப்பும் மேம்படுத்தப்படலாம். --Natkeeran 17:44, 18 நவம்பர் 2006 (UTC)
நற்கீரன், கட்டுரை ஏற்கனவே நீளமாக உள்ளது. மேற்படி தகவல்களை துணைத்தலைப்புகளில் சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை தாருங்கள். எந்த விதத்தில் தற்போதைய உள்ளடக்கம், கட்டமைப்பை மாற்றலாம் என்றும் தெரியப்படுத்துங்கள்--Ravidreams 10:57, 19 நவம்பர் 2006 (UTC)
- சிறந்த முயற்சியின் அடிப்படையிலுள்ள கட்டுரை. ஆய்த எழுத்து என்ற துணைத்தலைப்பிலுள்ள கேடயப்படம் இருப்பது பொருத்தமாகப் படவில்லை. கேடயத் தோற்றத்திலிருந்தா, முப்பாற்புள்ளிகள் தோன்றியது? இம்முற்பாற் புள்ளி , ஆரம்பத்தில் இ என்பதனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.கி.பி.5க்கு பிறகே தற்போதுள்ள இ என்ற குறியீடு தோன்றியது எனலாம்.த* உழவன் 06:13, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
[தொகு] அய்யாவழி
அய்யாவழி கட்டுரை நல்ல கட்டுரைதான். எனினும் அதில் சில குறைபாடுகள் உண்டு. அவற்றை விரைவில் முன்வைக்கின்றேன். அக்கட்டுரையை சிறப்பு கட்டுரை ஆக்க முன்மொழிவதன் மூலம் பிறருடைய கவனத்தையும் இக்கட்டுரை மீது வரவழைத்து, மேம்படுத்தி சிறப்பு கட்டுரையாக்கலாம் என்று நம்புகின்றேன். --Natkeeran 05:41, 9 ஜூன் 2006 (UTC)
- சிறப்புக் கட்டுரையாக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்புள்ள கட்டுரை. தகுதிகளில் இனி, வெளிமேற்கோள்களைக் கட்டாயமாக்கலாம் என்று கருதுகிறேன். வைகுண்ட ராஜா இங்கே தந்துள்ள மேற்கோள்களை இங்கே தேவையான இடங்களில் தந்தோமானால் நன்று. -- Sundar \பேச்சு 07:11, 9 ஜூன் 2006 (UTC)
- இக்கட்டுரை முழுக்க ஒரே பயனரால் எழுதப்பட்டிருப்பதாலும். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்ய நடுநிலையான வெளியிணைப்புகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாததாலும், கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வாய்ப்பில்லை. தவிர, கட்டுரையில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், கருத்து முரண்பாடுகள் உள்ளன. மேற்கண்ட குறைகளை போக்க வைகுண்ட ராஜா முயலலாம். அதுவரை, இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. --ரவி 08:39, 9 ஜூன் 2006 (UTC)
-
- பயனர் ரவி எடுத்துரைத்த குறைபாடுகள் இக்கட்டுரையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், நிவிர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
-
- மேலும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்களானால் ஒன்றைக் கூற முயல்கிறேன். சிறப்புக் கட்டுரைகளாக தேர்ந்தெடுக்கப்படுபவைகளுக்கு மேலும் ஒரு விதிமுறையை அமலாக்கினால் நன்று என்று நினைக்கிறேன். அதாவது, சிறப்பு கட்டுரையாக்க கோரப்படுபவை, சிவப்பு இணைப்புகள் (Red Links) அற்றவைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கட்டுரையை முழுமையாக ஒருவருக்கு புரியவைப்பதில் அக்கட்டிரையின் உள்ளிணைப்புகளுக்கு பெரும்பாலும் முக்கிய பங்கு உண்டு. அவ்வகையில் சிறப்புக் கட்டுரை இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் தமிழ் விக்கிபீடியாவின் 2,901 (தற்போதய நிலவரம்)கட்டுரைகளில் சிறந்த கட்டுரை ஒரு நபருக்கு அது தொடர்புடைய விடயங்களை சிறந்த முறையில் கற்பிக்க (Should be best informative)வேண்டும் - வைகுண்ட ராஜா 22:40, 11 ஜூன் 2006 (UTC)
வைகுண்ட ராஜா, சிறப்புக் கட்டுரையில் சிகப்பு இணைப்புகள் இல்லாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று தான். அய்யாவழி போன்ற, பல பயனர்களுக்கு புதிதாக இருக்கும் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளில், இது மிகவும் இன்றியமையாததாகும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பளர்கள் மிகவும் குறைவாக இருப்பதனால், இத்தேவையை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளில் ஒன்றாக கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில், உங்கள் ஆலோசனை முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், எல்லா கட்டுரைகளிலும், குறிப்பாக சிறப்புக் கட்டுரைகளிலாவது சிகப்பு இணைப்புகளை நீக்க பங்களிப்பாளர்களை வேண்டிக்கொள்வோம்--ரவி 08:35, 16 ஜூன் 2006 (UTC)
[தொகு] கம்போடியா
நாடுகள் திட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை. நல்ல நடையில், செறிவான கருத்துக்களுடன், அழகான படங்களுடன் உள்ளது. முன் எடுத்துக்காட்டாக இருக்கத் தகுதி பெற்றுள்ளது இக்கட்டுரை.. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிகிறேன்.--செல்வா 16:16, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். மயூரநாதன் 16:34, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- வழிமொழிகிறேன். நல்ல முழுமையான கட்டுரை. மேற்கோள்களும் தரப்பட்டுள்ளன. சில புணர்ச்சிப்பிழைகள் உள்ளன, திருத்த வேண்டும். (எ.கா. பருவகாற்று)-- சுந்தர் \பேச்சு 16:50, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- ஆதரவு. உரை திருத்திய பிறகு சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். செல்வா, சிறப்புக்கட்டுரை முன்மொழிவுகளை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி. சிறப்புக் கட்டுரைகள் குறித்துப் பேசி ஓராண்டுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் :( இனி, நாம் கூடுதல் சிறப்புக் கட்டுரைகள் உருவாக்குவது, அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்--ரவி 17:09, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
[தொகு] பொனொபோ
இக் கட்டுரை சிறப்பான செய்துகளுடன், சிறந்த நடையில், நல்ல படங்களுடன் அமைந்துள்ள, சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்த்க்காட்டாக அமைந்துள்ளது. எனவே இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 17:05, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- மொழிநடைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இக்கட்டுரை. கட்டாயம் வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:12, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- ஆதரவு--ரவி 17:39, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- நானே முன்மொழிந்திருந்தாலும், சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன என்பதனை அறிவேன். சில சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இன்னும் ஒரு சில சிவப்பு இணைப்புகளையாவது நீல (நீளும்) இணைப்புகளாக்க மாற்ற வேண்டும். விரைவில் நிறைவேற்றி சிறப்புக்கட்டுரையாக்குவோம். --செல்வா 17:49, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
[தொகு] நீலான்
வலுவான மேற்கோள்கள், அழகு தமிழ் நடை, தமிழ் அறிவுலகில் அதிகம் எழுதப்படாத தலைப்பு, தன்னளவில் முழுமை வாய்ந்த கட்டுரை என்று பல சிறப்புகள் கூற இயலும். இதனைச் சிறப்புக் கட்டுரையாக்கப் பரிந்துரைக்கிறேன்.--ரவி 06:52, 31 ஜூலை 2009 (UTC)
ஆதரவு
- ரவி 06:52, 31 ஜூலை 2009 (UTC)
- சுந்தர் \பேச்சு 11:06, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
- கார்த்திக் 12:56, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- செல்வா 13:06, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- சிவக்குமார் \பேச்சு 18:35, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- அராபத்* عرفات 15:16, 27 மே 2010 (UTC)
- --உமாபதி \பேச்சு 16:27, 27 மே 2010 (UTC)
- சுந்தர் \பேச்சு 04:35, 28 மே 2010 (UTC)
- மாஹிர் 06:08, 28 மே 2010 (UTC)
- --தகவலுழவன் 01:19, 25 பெப்ரவரி 2011 (UTC)(மற்ற விக்கிமொழிக் கட்டுரைகளை விட, உயர்வாக எழுதப்பட்டுள்ளது.)
[தொகு] மாந்தவுருபியம்
இக்கட்டுரை பல துறைகளைச் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளது. இத்துறைகளைச் சேர்ந்த பிற தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு இணைப்பு உள்ளதால் படிப்பவர்களை ஈர்க்கக்கூடும். தேவையான அளவுக்குப் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிற விக்கிப்பீடியாக்களில் இல்லாத தகவல்களும், தமிழ் இலக்கிய எடுத்துக் காட்டுகளும் உள்ளன. ஓரளவு சான்றுகளும் தரப்பட்டுள்ளன. பொதுவாக மெய்யியல், இலக்கியம் போன்றவற்றில் ஆழமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இடாயிச்சு மொழி விக்கியிலும் இல்லாத அளவு தகவல்களை இக்கட்டுரை பெற்றிருப்பது சிறப்பு. இக்கட்டுரையை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரையாக்கச் செய்ய வேண்டிய மாற்றங்களை எதிர்நோக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:16, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
[தொகு] மாந்தவுருவகம்
அடிப்படை உளவியல், மெய்யியல் கருத்தான மாந்தவுருவகத்தைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு முன்னதாக வேறு எங்கும் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க வேண்டுவதற்கான காரணங்கள்:
- அடிப்படைக் கருப்பொருள்
- விக்கிக்கு வெளியே தமிழில் எழுதப்படாத தலைப்பு
- பிற மொழி விக்கிக்கள் பலவற்றைக் காட்டிலும் தமிழ் விக்கியில் இக்கட்டுரை நன்கு வளர்ந்துள்ளது
- போதிய அளவு சான்றுகள் தரப்பட்டுள்ளன
- இது போன்ற கருத்துக்களில் வழக்கமாக எழுதும் கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கில விக்கியைத் தழுவியிருக்கும் நிலை உள்ளது. ஆனால் இக்கட்டுரையில் வேறெந்த விக்கியிலும் இல்லாத எடுத்துக்காட்டுகளும் (குறிப்பாகத் தமிழ்ச்சூழலில் இலக்கியத்தில் இருந்து பெற்றவை) விவரங்களும் உள்ளன.
- பொருத்தமான, படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும், பல தரப்பட்ட படங்கள் உள்ளன.
en:Template:FAOL என்ற வார்ப்புருவை ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடுவதன் மூலம் பலரது கவனத்தை ஈர்க்க முடியும். நம் தளத்தைப் பற்றிய மதிப்பும் உயரும். அதே போல en:Template:Link_FA வார்ப்புருவை கட்டுரையில் இடுவதன் மூலம் அனைத்து மொழி விக்கிக் கட்டுரையிலும் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்புக்கருகே விண்மீன் குறியும் காட்டப்படும்.- இலக்கியம், வரலாறு, உளவியல், மொழி எனப் பல துறைகளில் இருந்தும் தகவல்கள் காட்டப்பட்டுள்ளதால் படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டவும் மேலும் பல கட்டுரைகளைப் படிக்கத் தூண்டவும் கூடும்.
இருந்தும் இக்கட்டுரையில் வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அவற்றையும் செய்வோம். நாம் இணைந்து உரையை எளிமைப்படுத்தினால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 11:48, 27 மே 2010 (UTC)
[தொகு] ஆதரவு
- ஆதரவு--அராபத்* عرفات 15:18, 27 மே 2010 (UTC)
- ஆதரவு --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 16:56, 18 ஏப்ரல் 2011 (UTC)
[தொகு] கருத்துக்கள்
- ஏழாம் எண்ணிட்ட கருத்து அனைத்து சிறப்புக் கட்டுரைகளுக்குமே பொருந்தும் என்பதால் அடித்துள்ளேன். தவிர, கட்டுரையை எளிமைப்படுத்துவதோடு சில சொந்த ஆய்வுகளைக் களைய வேண்டும். ஆகு பெயர்கள் அனைத்தும் மாந்தவுருவகங்களா என்பதைச் சரி பார்க்க வேண்டும். நான் கட்டுரையில் தந்துள்ள எடுத்துக்காட்டு தவறு போலத் தோன்றுகிறது. கடைசி உட்தலைப்பை மாற்ற வேண்டும், எதிரான கருத்துகளோடு பயன்களும் தரப்பட்டுள்ளன. வேறு மாற்றங்கள் தேவை என்றாலும் பரிந்துரைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:41, 28 மே 2010 (UTC)
- அண்மையில் மேலும் சில சான்றுகளைச் சேர்த்துள்ளேன். இதைச் சிறப்புக்கட்டுரை நிலைக்கு வளர்த்தெடுக்க வேறு என்னென்ன செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்தால் நன்று. -- சுந்தர் \பேச்சு 09:02, 7 மே 2011 (UTC)
[தொகு] ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா நாடு பற்றிய கட்டுரை இப்போது முழுமை பெற்றுள்ளது. அந்நாடு பற்றிய ஓரளவு முழுமையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன். இல்லாவிடில் மேலும் எப்பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எஅத் தெரிவித்தால் மேம்படுத்தலாம்.--Kanags \பேச்சு 12:22, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
இக்கட்டுரையில் உள்ள சிகப்பு இணைப்புகள் சரிசெய்த பின் இதை சிறப்பு கட்டுரையாக அறிவிக்க என் முழு ஆதரவு --கார்த்திக் 12:58, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஆதரவு கட்டாயம் இதனைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். மிக நன்றாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இன்னும் எங்கெங்கு மேம்படுத்தலாம் என்பதை இன்று இரவு (கனடா நேரம்) நாளைக்குள் தெரிவிக்கின்றேன். தலைப்பை ஆசுத்திரேலியா என்றோ ஆத்திரேலியா என்றோ மாற்றினால் நல்லது என்று நினைக்கிறேன் (உள்ளே ஆஸ்திரேலியா என்றும் முதல் வரியில் குறிக்கலாம்). பிற கருத்துகளைப் பின்னர் எழுதுகிறேன். ஆனால் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்க இவை தடையாக இருக்க வேண்டாம். --செல்வா 13:12, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஆதரவு - ஆத்திரேலியா எனது பரிந்துரை. --சிவக்குமார் \பேச்சு 18:52, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
[தொகு] இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--அராபத்* عرفات 14:36, 21 அக்டோபர் 2010 (UTC)
[தொகு] ஆதரவு
[தொகு] நடுநிலைமை
[தொகு] எதிர்ப்பு
[தொகு] கருத்துக்கள்
மூலக் கட்டுரையை (பெரும்பாலும்) எழுதியவன் என்பதாலும், தமிழிலும் பல மாற்றங்கள் செய்துள்ளேன் என்பதாலும், கருத்துகளை மட்டும் இடுகிறேன். வாக்களிக்கவில்லை. :-)
- நான் ஒரு முறை உ.தி செய்துள்ளேன். மீண்டும் ஓரிரு முறை வேறு யாரேனும் செய்தால் நல்லது
- தேதிகள் அனைத்தும் Month, DD, YYYY என்று வடிவத்துக்குப் மாற்றப்பட வேண்டும். தற்சமயம் DD Month YYYY என்ற பிரிட்டானிய வடிவத்தில் உள்ளன (ஆ. விக்கியில் உள்ள கட்டுரையில் உள்ளது போல). த. விக்கியில் முந்தைய வடிவத்தைப் பயன்படுத்துகிறோம். எனவே பொதுவாக இருக்க மாற்ற வேண்டும்.
- கட்டுரையைப் பிரிப்பது பற்றி ஆராய வேண்டும். ஜனவரி 2010ல் ஆ. விக்கியில் இருந்து மணியன் மொழிபெயர்த்துள்ளார். அதன் பின் நான் அங்கு பலவற்றை சேர்த்து அந்தக் கட்டுரை மேலும் பெரிதாகி, நல்ல கட்டுரை பரிந்துரையின் போது மூன்றாகப் பிரிக்கச் சொல்லி விட்டார்கள். இங்கும் அது போல செய்யலாமா? (இப்போது 160 kb உள்ளது)--சோடாபாட்டில் 05:31, 26 அக்டோபர் 2010 (UTC)
[தொகு] நீதிக்கட்சி
இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் முதன்மையான கட்சியாக விளங்கி திராவிடக் கொள்கைகள் உறுதிபெற அடித்தளமாக அமைந்திருந்த நீதிக்கட்சி குறித்த கட்டுரை முழுமையாகவும் தகுந்த புறச்சான்றுகளுடன் நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது. அங்கங்கே சில எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் உள்ளன. இதனை சிறப்புக் கட்டுரையாக நியமனம் செய்கிறேன். குறைகள் இருப்பின் அவற்றை களைய முயலலாம்.--மணியன் 08:44, 23 செப்டெம்பர் 2011 (UTC)