விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்குத் தெரியுமா ஒரு முதற்பக்க பகுதி.
பொருளடக்கம் |
[தொகு] விதிமுறைகள்
- ஒவ்வொரு கிழமையும் (இப்பொழுது புதன் தோறும் இற்றைப்படுத்தப்படுகிறது) முதற் பக்கத்தில் உள்ள இப்பகுதி இற்றைப்படுத்தப்படும். தகவல் முழுமை பெற்ற ஐந்து வசனங்கள் புதிதாக சேர்க்கப்படும்.
- தகவல்கள் உண்மைக் கூறுகளாக அமைய வேண்டும்.
- தகவல்கள் இரண்டு வரிகள் அல்லது 20 சொற்களுக்கு மிகாத வண்ணம் இருக்க வேண்டும்
- தகவல்கள் பல்துறை சார்ந்தவையாக அமைய வேண்டும்.
- ஒவ்வொரு கிழமையும் தமிழ்/தமிழர் சார் தகவல் ஒன்றாவது இடம்பெற வேண்டும்.
- ஒவ்வொரு கிழமையும் படத்துடன் கூடிய தகவல் ஒன்று இடம் பெற வேண்டும்
- முடிந்த வரை அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை கீழே பரிந்துரைகள் பகுதியில் இடலாம்.
[தொகு] அடுத்து வருவன
[தொகு] முந்தைய பக்கங்கள்
[தொகு] பரிந்துரைகள்
- ரேக்ளா வண்டிப் பந்தயத்திற்குத் தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.
- தென்னாட்டுப் போர்க்களங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்ற போர் வரலாறுகளை விளக்கும் புத்தகம்.
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூல் தமிழ்நாட்டின் இருண்டகால அரசர்கள் என்றழைக்கப்படும் களப்பிரர்களை பற்றிய நூல்.
- சென்னையில் இருந்து தென்காசி வரை சென்று கொண்டிருந்த பொதிகை விரைவு வண்டி 2008-ஆம் ஆண்டு முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.
- இப்போது மறைந்துவிட்ட ஏரம்பம் என்ற நூல் மிகப்பழைய தமிழ் கணக்கியல் நூலென கருதப்படுகிறது.
- ஃபாக்சு பீ2 என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.
- தென்காசி பெரிய லாலா கடை 1904ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- தமிழக முத்திரைக் காசுகள் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
- பண்டைய தமிழகத்தைப் போலவே, இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தென்காசி, பாண்டியர்களின் கடைசி தலைநகரம் ஆகும்.
- மகாவதார பாபாவின் இயற்பெயர் நாகராசன் ஆகும். இவர் போகரின் சீடராவார். இவர் பிறந்தது தமிழ்நாட்டின் பரங்கிப்பேட்டை ஆகும்.
- குமார் மகாதேவா என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.
- வெள்ளணி விழா என்பது சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும்.
- கணியர் என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.
- சங்ககாலத்து சிறுநில மன்னர்களான சீறூர் மன்னர்கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.
- கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.
- திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி மூலம் 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்க முடியும்.
- தமிழகத்தில் வேங்கைப்புலி(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.
- சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும். இவற்றில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பசிபிக் தீவுகள் வரையில் சோழர்களால் பயனங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கூறுகிறார்.
- துர்தேவதை என்பது வானியலாலர்களால் தேடப்படும் சூரியனின் துணை விண்மீனாகும். தமிழர்கள் இதனை தூமம் என்று புறநானூறு இலக்கியத்தில் பதிந்துள்ளனர்.
- சோழர் சீனத்துடன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்தனர்.
- அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ள சுள்ளிய சாம்பல் மந்தி(படம்) என்ற குரங்கு, தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கூந்தன்குளம் என்னும் ஊர் இந்நாளில் பன்னாட்டுப் பறவைகள் வந்து கூடும் பறவையடியாக (பறவைச் சரணாலயமாக) விளங்குகிறது. இது சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில்-பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.
- மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ குணம் கொண்ட, 'ஈட்டி' மரத்தால் செய்யப்பட்டன.
- மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி ஆலயத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா அன்று பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
- கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.
- சப்பானிய சிலந்தி நண்டுடைய(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்துக்கு(3.8 metres (12 ft)) சமம்.
- இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட மந்திகளிலேயே 26.5 கிலோகிராம் எடை பெற்று உலகிலேயே அதிக எடையுள்ள மந்தியாக ஒரு ஆண் நேபாள் சாம்பல் மந்தி இடம்பெற்றிருக்கிறது.
- ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள ரேடான் என்னும் வேதித்தனிமம் ஆகும்.
- கனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- உலகிலேயே மிகச்சிறிய முதுகெலும்பி, பப்புவா நியூகினியில் கண்டுபிடித்த தவளை. அதன் நீளம் 7.7 மில்லி மீட்டர் (முதல் அறிவியல் விளக்கம் பெற்றது சனவரி 2012).
- பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.
- ஆர்மடில்லோ விலங்குகளில் ஒவ்வொரு முறை கருக்கட்டும்போதும் இயல்பாகவே ஒரே கருவணுவில் இருந்து பிரிந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான நான்கு குட்டிகள் ஈனப்படுகின்றன.
- கடைசல் இயந்திரம் என்பது மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது.
- இந்தியும் ஆங்கிலமும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
- ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.
- தாய்லாந்து திரைப்பட நடிகர்களான டோனி ஜா மற்றும் டான் சுபொங், இருவரும் பன்னா ரிட்டிக்ரையின் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவின் மாணவர்கள்.
- ஜானி ட்ரை ஙுயென் இசுபைடர் மேன் திரைப்படத்தில் வந்த கிரீன் காப்லின் கதாப்பாத்திரத்தின் மாற்று நடிகர்.
- 1931ஆம் ஆண்டு வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.
- நாராயணனின் பனிரெண்டு நாமங்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் (வைணவர்கள்) சம்பிரதாயம்.
- நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகின்றன என்று சித்தர்கள் நம்பினார்கள்.
- தலாய் லாமா என்பது திபெத்திய புத்த மத தலைவர்களுக்குள் உள்ள உயர்ந்த பிரிவாகும்.
- பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள். இதை திருமண சடங்குகளின்போது பெண்களின் கால்களில் அணிவிப்பார்கள்.
- பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம். மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம்.
- இந்து நம்பிக்கையின் படி, அரைஞாண் அணிந்தோர் ஆடை அணியாவிடிலும் அவர்களை நிர்வாணிகளாய்க் (அம்மணமாய்) கருதுவதில்லை.
- யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருப்பொருளைச் சுருக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுருக்கம் என அழைக்கப்படுகின்றது.
- கினிசாசௌ, சாக்சு, மெட்னசு, குல் குல் கான் போன்றவை மாயர்களின் சமயக் கடவுள்களாகும்.
- சூரிய மண்டலம் பால்வழி பேரடையில் உள்ள ஓரியன் கை என்ற பகுதியில் உள்ளது.
- துர்தேவதை என்பது வானியலாளர்களால் தேடப்படும் சூரியனின் இரட்டை விண்மீன் ஆகும்.
- இரட்டை விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதனால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை ]நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.
- நொதுமி விண்மீன்கள் வெளியிடும் துடிப்பலைகளை(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் சமிக்ஞைகள் (செய்திகள்) எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.
- மர்மக் கிரகம் என்பது சூரியக் குடும்பத்தில் வானியலாளர்களால் தேடப்படும் உள்ள ஒரு கிரகமாகும்.
- அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகளே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.
- மெகல்லானிய மேகங்கள்(படம்), பால்வழியின் துணைப் பேரடைகளாகும்.
- இந்திய விடுதலைப் போராளி சந்திரசேகர ஆசாத் கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.
- மது கோடா உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.
- சில நாடுகளின் சுதந்திர தினம், தேசிய தினம், விடுதலை தினம் போன்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
- லட்சியா(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.
- தென்னமெரிக்காவில் 433 ஆண்டுகள் நிலவிய இன்கா நாகரிகம் பிசாரோ என்ற எசுப்பானிய தளபதியால் அழிந்தது.
- வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.
- கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீசுவின் மரணத்தை அவரது சீடர்கள் ‘சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அறிவித்தனர்.
- எம்.பீ.வீ. - I என்பது இந்திய இராணுவத்தினரால் உபயோகிக்கப்படும் கன்னி வெடி துளைக்காத கவச வாகனமாகும்.
- பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகிலேயே மிகப் பழைமையானது மொரோக்கோவின் அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் என கின்னசு நிறுவனம் சான்றுபடுத்தியுள்ளது.
[தொகு] வார்ப்புருக்கள்
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{உதெ அறிவிப்பு}}
| இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் {{{1}}} அன்று வெளியானது. |
(அளபுருக்கள்: தேதி மாதம், ஆண்டு)
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{உதெ பயனர் அறிவிப்பு}}
| நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் {{{2}}} அன்று வெளியானது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர்; தேதி மாதம், ஆண்டு)