கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கைப் பொதுவன்
இன்று திங்கள், மே 20 of 2013, விக்கிப்பீடியாவில் 53,504 கட்டுரைகளும்: 51,433 பயனர்களும் உள்ளனர்.
| 76 |
இந்த விக்கிப்பீடியரின் வயது 76 வருடங்கள், 10 மாதங்கள் மற்றும் 5 நாட்கள்.
மே 20, 2013 அன்று |
|
|
 |
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 2 நாட்கள் ஆகின்றன. |
|
| தமிழ்99 |
இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார். |
|
|
|
 |
இந்தப் பயனர் உழவர் ஆவார். |
|
 |
இணைந்து ஏற்றம் பெறுவோம் |
|
|
பொருளடக்கம்
|
விக்கிப்பீடியாவில் என் கட்டுரைகளைப் பதம்பாருங்கள் [தொகு]
பச்சைமலை அடிவாரப் பாட்டாளி
என்னைப்பற்றி [தொகு]
செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.
- தொடர்பு: podhuvan9@gmail.com
- பெற்றோர் இட்டது - துரைசாமி
- மாற்றிப் பதிவாக்கிக்கொண்டது - செங்கைப் பொதுவன் (செங்காட்டுப்பட்டி பொன்னுசாமி மகன் துரைசாமி)
- சான்றோர் பாராட்டி வழங்கிய பெயர் - பொதுவன் அடிகள்
- மாற்றுப்பெயருக்கு அறிஞர் கண்டு உவந்த விளக்கம்
- பொதுவானவன்
- பொது என்னும் அம்பலத்தில் ஆடும் நடராசன் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
- பொதுவன் என்னும் ஆயனாய் இருந்த கண்ணன் - பரமத்தி வேலூர் 'வைணவப்பழம்' 'திருவாய்மொழி ஈடு உரை பெருவிளக்கனார்' கிருஷ்ணசாமி ரெட்டியார்
- பொத்து ஆராயும் பாங்கினன் (நக்கீரர் போன்றவன்) - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தொழில் [தொகு]
- ஓரேர் உழவன்
- பள்ளி ஆசிரியர்
- காசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்
- 'தமிழ்நாட்டு வரலாறு' எழுதும் குழுவில் பதிப்பாசிரியர் (தமிழ்நாடு அரசுப்பணி)
- 'விளையாட்டு' மாத இதழின் ஆசிரியர் (தமிழ்நாடு அரசுப்பணி)
பிறப்பும் குடும்பமும் [தொகு]
- திருச்சி மாவட்டம் பச்சைமலை, பவளமலைப் பகுதியிலுள்ள செங்காட்டுப்பட்டி
- தந்தை பெயர் - பொன்னுசாமி
- தாயார் பெயர் - செல்லம்மாள்
- மனைவி - செங்கைச் செல்வி
- மக்கள் - 1 தமிழ்முல்லை, 2 தமிழ்ச்செல்லம், 3 இன்னிலா, 4 வெண்ணிலா, 5 தண்ணிலா, 6 அன்பன்
பேரன் பேத்திகள் - 9 பேர்
கொள்ளுப்பேரக் குழந்தைகள்
- உள்ளூர்ப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை
- திருச்சியில் தொடக்கநிலை ஆசிரியர் பயிற்சி
- S.S.L.C. - தன்முனைப்பு
- B.A., M.A., B.T., M. Ed. பட்டங்கள், வித்துவான் பட்டயம் - சென்னைப் பல்கலைக் கழகம்
- 'முனைவர்' பட்டம் - திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்
'காலப்பாதையில் தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள்' ஆய்வுப்பொருள்
ஆளாக்கிய அறிஞர் பெருமக்கள் [தொகு]
- முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.
- டாக்டர் மு. வரதராசனார் - ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தவர். தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பெறுப்பினை அளித்தவர்.
- உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, டாக்டர் கே. கே. பிள்ளை ஆகியோர் தலைமையில் - வரலாற்று ஆய்வோடு கூடிய பதிப்புப்பணி.
- கல்வெட்டியல் டாக்டர் ஒய். சுப்பராயலு - ஆய்வுப்பணியில் ஆற்றுப்படுத்தியவர்
ஈடுபாடு [தொகு]
- அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் இவர் பல வரலாற்று நூல்களையும், சிற்றிலக்கிய மரபுக்கவிதை நூல்களையும், சங்கநூல் பத்துப்பாட்டு முழுமைக்கும் ஆய்வுநோக்குச் செய்தியுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்களுக்குப் பல பேரறிஞர்கள் மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
- இப்போது இவர் தம் கருத்துகளை இணையதளத்தில் உலகுக்குப் படைத்துக்கொண்டிருக்கிறார்.
- இவரது அறிவியல் கட்டுரைகள் முன்னணி அறிவியல் இதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.