நா. சந்திரபாபு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாரா சந்திரபாபு நாயுடு


பதவியில்
1 செப்டம்பர் 1995 – 13 மே 2004
முன்னவர் என். டி. ராமராவ்
பின்வந்தவர் ராஜசேகர ரெட்டி
தொகுதி குப்பம், ஆந்திரா
பதவியில்
ஜூன் 8 2014 – நடப்பில்
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி

பிறப்பு ஏப்ரல் 20, 1950 (1950-04-20) (அகவை 64)
நாராவரிப்பள்ளி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
வாழ்க்கைத்
துணை
நாரா புவனேசுவரி
பிள்ளைகள் நாரா லோகேஷ்
இருப்பிடம் ஜுபிலீ மலைகள், ஐதராபாத், இந்தியா
சமயம் இந்து சமயம்
இணையதளம் Telugudesam.org

நாரா சந்திரபாபு நாயுடு (தெலுங்கு: నారా చంద్రబాబు నాయుడు, பி. ஏப்ரல் 20, 1950), ஒரு இந்திய அரசியல்வாதி, தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஆவார்[1] [2]1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.[3] தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராகவும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவும் ஆவார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்படவுள்ள சீமாந்திரா மாநிலத்தின் முதல் முதல்வராக உள்ளார்.

இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் ஆகியோர் இவரை ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.[4][5][6][7]தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். [8][9]

இளமையும் கல்வியும்[தொகு]

சந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தின் நாரவாரிபள்ளி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். [10] பின்னர் திருப்பதியில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும் 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.[10][11][12]

ஆட்சி[தொகு]

1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக என். டி. ராமராவ் அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த பாஸ்கர் ராவ் அரசியல் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்ப்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செயதார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மீண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு மீண்டும் சதிசெய்து அவரைத் தூக்கியெரிந்துவிட்டு இவர் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2014ம் ஆண்டின் சூன் இரண்டாம் நாளில் ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலுங்கானா, சீமாந்திரா என பிரிந்த போது, 175 தொகுதிகளில் 102 தொகுதிகள் செயித்து சீமாந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.பகுதியின் 175 இடங்களில் 102 தொகுதிகளை வென்று மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். [13]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Chandrababu Naidu to Take Oath as New Andhra Pradesh Chief Minister Today". NDTV. பார்த்த நாள் 8 சூன் 2014.
  2. "Live: Chandrababu Naidu swearing-in". The Hindu. பார்த்த நாள் 8 சூன் 2014.
  3. "Chandrababu Naidu (Indian politician)". Britannica Online Encyclopedia. பார்த்த நாள் 16 January 2012.
  4. Ghosh, Aparisim (31 December 1999). "South Asian of the Year: Chandrababu Naidu". TIME Asia. http://articles.cnn.com/1999-12-30/world/9912_30_sd_1_andhra-pradesh-reforms-indias?_s=PM:ASIANOW. பார்த்த நாள்: 16 January 2012. 
  5. This Is What We Paid For. www.outlookindia.com (20 May 2004). Retrieved on 16 January 2012.
  6. Naidu, India's leading reformer. Ia.rediff.com (12 May 2004). Retrieved on 16 January 2012.
  7. With Naidu, Blair and Clinton have also been voted out -DAWN; 19 May 2004. Archives.dawn.com (19 May 2004). Retrieved on 16 January 2012.
  8. IT giant bowled over by Naidu. The Hindu (6 September 2001). Retrieved on 16 January 2012.
  9. Chandrababu Naidu Haunts Bangalore Yet Again The Economic Times. Cscsarchive.org:8081 (26 May 1998). Retrieved on 16 January 2012.
  10. 10.0 10.1 Rediff On The NeT: The Rediff Election Profile/Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu. Rediff.com (23 September 1999). Retrieved on 16 January 2012.
  11. Chandrababu Naidu biography. newsofap.com
  12. Chandra Babu Naidu. Telugudesam. Retrieved on 16 January 2012.
  13. சந்திரபாபு நாயுடு

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
என். டி. ராமராவ்
ஆந்திர முதலமைச்சர்
1995–2004
பின்னர்
ராஜசேகர ரெட்டி
முன்னர்
குடியரசுத் தலைவர் ஆட்சி
2014
"http://ta.wikipedia.org/w/index.php?title=நா._சந்திரபாபு_நாயுடு&oldid=1759527" இருந்து மீள்விக்கப்பட்டது