நாள அழற்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாள அழற்சி வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| நாள அழற்சியினைக் காண்பிக்கும் நுண்வரைவி | |
| ICD-10 | I77.6, I80., L95., M30.-M31. |
| ICD-9 | 446, 447.6 |
| DiseasesDB | 13750 |
| பாடத் தலைப்பு | D014657 |
நாள அழற்சி (Vasculitis) என்பது அழற்சியினால் குருதிக்குழல்கள் சிதைக்கப்படும் பலவகைப்பட்ட சீர்குலைவுகளின் தொகுப்பைக் குறிக்கும்[1]. தமனிகளும், சிரைகளும் இந்நோயால் பாதிப்படைகின்றன. சிலநேரங்களில், நிணநீர் குழாயழற்சி நாள அழற்சியின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது[2]. வெள்ளையணுக்கள் இடம்பெயர்ந்து அழிவினை ஏற்படுத்துவதை முதன்மையாகக் கொண்டதே நாள அழற்சியாகும். நாள அழற்சியில் சிரைகளும், தமனிகளும் அழற்சியால் பாதிக்கப்பட்டாலும், சிரையழற்சி (phlebitis), தமனியழற்சி (arteritis) ஆகியவைத் தனித்தனியான நோய்களாகும்.
சான்றுகள் [தொகு]
- ↑ "Glossary of dermatopathological terms. DermNet NZ". பார்த்த நாள் 2009-01-08.
- ↑ Vasculitis at Dorland's Medical Dictionary