நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி
| நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| ICD-10 | J42. |
|---|---|
| ICD-9 | 491 |
| பாடத் தலைப்பு | D029481 |
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) என்பது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் நெடுங்காலமாக இருக்கக்கூடிய ஒரு அழற்சி நோயாகும். பொதுவாக இது நெடுங்கால சுவாச அடைப்பு நோயில் (COPD) ஒன்றாக இருக்கும். [1] இந்நோயை வரைவிலக்கணப்படுத்தும்போது, அடுத்தடுத்து வரும் இரு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து மூன்று மாத காலமாவது இந்நோய் விடாது இருக்குமாயின் அது நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி என அழைக்கப்படும் .[2] இந்நோயின்போது தொடர்ந்து இருமல் இருப்பதுடன், சளி, சீதச்சவ்வு/சளிச்சவ்வு போன்றன வெளியேறும். இந்நோயில் மூச்சுப் பாதைகள் குறுகலடைந்து அடைப்புகள் ஏற்படும். எம்பைசீமா எனப்படும் நுரையீரல் வீக்கநோயுடன் இந்நோய் இணைந்திருக்கும். இதற்கு முற்றிய நுரையீரல் பாதைத் தடைநோய் (Chronic obstructive lung disease - COLD) என்று பெயர்.
[[புகைத்தல்] இவ்வகை நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.
வெளி இணைப்பு: [தொகு]
http://en.wikipedia.org/wiki/Chronic_bronchitis
References [தொகு]
- ↑ Shaker SB, Dirksen A, Bach KS, Mortensen J (June 2007). "Imaging in chronic obstructive pulmonary disease". COPD 4 (2): 143–61. doi:10.1080/15412550701341277. பப்மெட் 17530508. http://www.informaworld.com/openurl?genre=article&doi=10.1080/15412550701341277&magic=pubmed.
- ↑ chronic bronchitis at Dorland's Medical Dictionary