குடல்வாலழற்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குடல்வாலழற்சி வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
||
| நோய்த் தொற்றும் அழற்சியும் | ||
| ICD-10 | K35. - K37. | |
| ICD-9 | 540-543 | |
| DiseasesDB | 885 | |
| MedlinePlus | 000256 | |
| eMedicine | med/3430 emerg/41 ped/127 ped/2925 | |
| MeSH | C06.405.205.099 | |
குடல்வாலழற்சி (Appendicitis) அல்லது குடல்வால் அழற்சி என்பது மனித உடலில் பயனற்ற ஒரு உறுப்பான குடல்வாலின் வீக்கமாகும். குடல்வாலானது, பெருங்குடல் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு சிறிய குழாய் போன்ற வடிவில் காணப்படுகிறது. நார்ப்பொருள் குறைவாகவுள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின்ற நிலையிலேயே இந்த குடல்வாய் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இவ்வாறு குடல்வால் அழற்சி ஏற்படுகின்ற பட்சத்தில் குடல்வால் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்படும். ஆனாலும், காலம் தாமதமானால், குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் நோய்த் தொற்றுகள் ஏற்பட வழிகோலும். இவ்வாறு குடல்வாய் வெடித்து, வயிற்றறைக்குள் தொற்றுண்டாகும் பட்சத்தில், அது வயிற்றறையுரை அழற்சி (Peritonitis) என்று வழங்கப்படுகிறது.
புற இணைப்புகள் [தொகு]
- Appendicitis Update குடல்வாலழற்சி - (ஆங்கிலத்தில்)