சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை சென்ட்ரல்
ChennaiCentral2.JPG
நிலையத்தின் பிரதான நுழைவாயில்
Location
ஆள்கூறு 13.09°N 80.27°E
நகரம் சென்னை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
ஏற்றம் MSL + 20 அடி
Station Info & Facilities
Station type முனையம்
Structure Standard (on ground station)
Station status செயல்படுகிறது
வேறு பெயர்(கள்) மதராஸ் சென்ட்ரல்
Parking இருகின்றது
Connections டாக்சி நிறுத்தும், மாநகரப் போக்குவரத்துக் கழகம்
Operation
Code MAS
Division(s) சென்னை (மதராஸ்)
Zone(s) தென்னக இரயில்வே
Line(s)

சென்னை-ஈரோடு சந்திப்பு

சென்னை-விஜயவாடா சந்திப்பு
Track(s) 15
Platform(s) 15
History
Opened 1853[1]
Former Owner(s) Madras and Southern Mahratta Railway
Electrified 1931 [2]
Location on Map
Chennai Central Station is located in Chennai
Chennai Central Station
Chennai Central Station
Chennai Central Station (Chennai)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

வரலாறு[தொகு]

1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905

இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.

சிறப்பம்சம்[தொகு]

வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து செயல்படுகின்றன. கேரளா மற்றும் புதுவையைத் தவிர சென்னை நகரிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கிருந்துதான் செல்கின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் செயல்படுகின்றன‌. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோனம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான எண்ணூர், பெரம்பூர், வியாசர்பாடி ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.

அமைப்பு[தொகு]

சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில் நிலையமும் வெளியூர் ரயில் நிலையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும் வெவ்வேறு கட்டிடங்களாக உள்ளன. மேலும், புறநகர் ரயில் நிலையக் கட்டிடத்தில் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு மையமும் இருக்கின்றது.

வசதிகள்[தொகு]

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து, 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.

சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]