உலகப் புத்தகத் தலைநகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகப் புத்தகத் தலைநகரம் (World Book Capital) என்பது, நூல்கள் மற்றும் வாசித்தல் துறைகளில் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் (யுனெஸ்கோ) அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.
இது ஓர் ஆண்டின் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான ஏப்ரல் 23 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22 வரையான காலப்பகுதியைக் கொண்டதாகும்.
உலகப் புத்தகத் தலைநகரங்கள் [தொகு]
பின்வரும் நகரங்கள் உலகப் புத்தகத் தலைநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:
மாட்ரிட் (2001)
அலெக்சாந்திரியா (2002)
புது தில்லி (2003)
ஆண்ட்வெர்ப் (2004)
மொன்ட்ரியால் (2005)
டூரின் (2006)
பொகோட்டா (2007)
ஆம்ஸ்டர்டாம் (2008)
பெய்ரூட் (2009)
லியுப்லியானா (2010)
புவெனஸ் ஐரிஸ் (2011)
யெரெவான் (2012)
பேங்காக் (2013)
Port Harcourt (2014)