இந்தியாவில் மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரி (Medical college in India) என்பது இந்தியாவில் இன்றைய சூழலில் மருத்துவக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களைக் குறிப்பதாகும். இந்த நிறுவனங்கள், தனி கல்லூரிகளிலிருந்து மருத்துவர்களைப் பயிற்றுவிக்கும் கூட்டமைப்புகள் வரை மாறுபடலாம். இவை மருத்துவம் குறித்து அனைத்து அம்சங்களிலும் பயிற்சி அளிக்கின்றன. ”மருத்துவ பள்ளி” எனும் சொல் அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் பயன்படுத்தப்படுவது போல் இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ் என்பது இந்திய மருத்துவ குழுமத்தின் சட்டம் 1956ஆல் அங்கீகரிக்கப்பட்ட நவீன அறிவியல் மருத்துவத்தின் பட்டம் ஆகும். இது தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019இல் தொடர்கிறது. எம்.பி.பி.எஸ். படிப்பிற்குப்பின் மருத்துவர்கள் அவர்களது மாநில மருத்துவ குழுமத்தில் பதிவு செய்கிறார்கள்.

அங்கீகாரம்[தொகு]

மருத்துவ கல்வி நிறுவனங்கள் இந்திய மருத்துவக் கழகத்தின் அங்கீகாரம் பெறவேண்டும் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது.[1] இந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை இந்திய அரசு வைத்திருக்கிறது.[2] எம்.பி.பி.எஸ் பட்டம் பெறாத பலர் இந்தியாவில் மருத்துவர்களைப் போலவே பயிற்சி செய்கிறார்கள். இவர்கள் போலி மருத்துவர்கள் “குவாக்ஸ்” என்று அழைக்கப்படுகின்றனர். தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019இன் படி, இத்தகைய போலி மருத்துவர்களுக்குத் தண்டனையாக 1 ஆண்டு சிறையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.[3]

சேர்க்கை[தொகு]

இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்புகளுக்கான சேர்க்கை அண்மையில் ஆண்டுகளில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, விண்ணப்பதாரர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இளங்கலை பட்டதாரிகளாக இருக்க வேண்டும்; ஆனால் சீனா மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது இளங்கலை பட்டம் பெறுகிறார்கள்.[சான்று தேவை] முழு சேர்க்கை செயல்முறையும் ஒரு சீர்திருத்தத்தின் கீழ் உள்ளது. இதற்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, சேர்க்கை பின்வருவனவற்றில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது:

  1. தேசிய அளவில் (நீட்) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள்
  2. மெல்நிலைத் பொதுத் தேர்வில் பெற்ற குறைந்தபட்சம் 50 % (பொது வகைக்கு) பி.சி.பி-யில் பெறப்பட்ட மதிப்பெண்கள் (பி என்பது இயற்பியலைக் குறிக்கிறது, சி என்பது வேதியியலைக் குறிக்கிறது மற்றும் பி உயிரியலைக் குறிக்கிறது).
  3. நன்கொடை / மேலாண்மை சார்ந்த இடங்கள்.

இதேபோல் முதுநிலைப் பட்டங்கள் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (வதிவிடங்கள்) தேசிய அளவில் (நீட்) நடத்தப்படும் போட்டித் தேர்வுகள், சேர்க்கை அல்லது நன்கொடை அடிப்படையிலான இடங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. குறிப்பிட்ட நிறுவனங்கள் நேர்முகத்தேர்வினையும் மேற்கொள்கின்றன. ஆனால் இது துணை சிறப்புப் படிப்புகளில் அதிக அளவில் உள்ளது.

நன்கொடை அடிப்படையிலான நிர்வாக இடங்களில் மாணவர் சேர்க்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ஏனெனில் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மருத்துவ இடங்களை விற்பனை செய்கின்றனர். பணம் செலுத்தும் திறன், தகுதி அல்ல என்பது மறைமுகமாக ஏற்றுக்கொள்வது. இந்த சட்டவிரோத கட்டணம் ஒரு எம்.பி.பி.எஸ். இடத்திற்கு ரூ .50 லட்சம் முதல் ரூ .1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. எந்தவொரு மருத்துவ இருக்கைக்கும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவர் யு.ஜி படிப்புகளில் இடம் பெற குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.[4] ஆனால் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, நிர்வாக இடங்களுக்குக் கூட அந்தந்த போட்டி நுழைவுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள்/தரவரிசை தேவைப்படுகிறது.

பல தேர்வுகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், குறைந்தபட்சத் திறனை உறுதி செய்வதற்கும், முக்கியமாக நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் ஊழலைக் களைவதற்கான நோக்கத்துடன் தேசிய தேர்வு முகமை-நீட்-யுஜி மற்றும் நீட்-பீஜி ஆகியவை இந்திய மருத்துவ குழுமம் கலைக்கப்படப் பின்னர் ஆளுகை குழுவின் பார்வை 2015 அறிக்கையில் முன்வைக்கப்பட்டது. நீட் தேர்வு என்பது ஒரு மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான ஒற்றைச் சாளரம் தேர்வாகும்.[5] யுஜி மற்றும் பிஜி படிப்புகளுக்கான செயல்படுத்தப்பட்ட நீட் குறிப்புகள் விஷன் 2015 ஆவணத்தில் முன்மொழியப்பட்டவற்றிலிருந்து வேறுபட்டிருந்தாலும், அடிப்படையில் இத்தேர்வின் முக்கிய நோக்கத்தைப் பராமரித்து வருகிறது.

இளங்கலை[தொகு]

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான என்.டி.ஏ-நீட் (இளங்கலை), மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ) 2013இல் நடத்தப்பட்டது. நீட்-யுஜி அகில இந்திய முன் மருத்துவ சோதனை (ஏஐபிஎம்டி) மற்றும் மாநிலங்கள் அல்லது கல்லூரிகளால் நடத்தப்பட்ட அனைத்து தனிப்பட்ட எம்.பி.பி.எஸ் தேர்வுகளையும் மாற்றியது. இருப்பினும், பல கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான தேர்வுகளைத் தனித்தனியாக நடத்தியது. இருப்பினும், இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்கள் நீட்-யுஜி அடிப்படையில் மாணவர்களை அனுமதிக்க முன்வந்துள்ளன. முதல் தேர்வு 5 மே 2013 அன்று நடைபெற்றது.[6] தேர்வு முடிவுகள் 5 ஜூன் 2013 அன்று அறிவிக்கப்பட்டன.[7] இந்தியாவில், எம்பிபிஎஸ் இடத்திற்குத் தகுதி பெற மிகப்பெரிய போட்டி உள்ளது. நீட்-யுஜி 2013இல், பதிவு செய்த மாணவர்கள் மொத்தம் 7,17,127  வேட்பாளர்கள் பேர். தேர்வு எழுதியவர்கள் 6,58,040  ஆவார். 31000 எம். பி. பி. எஸ் இடங்களுக்கு 3,66,317 தகுதி பெற்றனர். இதில் தேர்வு எழுதிய 4.71% பேர் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றனர்.[8][9]

18 ஜூலை 2013 அன்று, இந்திய உச்சநீதிமன்றம் 2:1 தீர்ப்புடன் நீட் தேர்வை நிறுத்தியது. இந்திய மருத்துவ குழுமம் ஆகஸ்ட் 2013இல் மறு ஆய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2016மே மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் அனைத்து மருத்துவ தேர்வுகளை ரத்துசெய்தது. நீட் (யுஜி) மற்றும் நீட் (பிஜி) ஆகியவை இந்தியாவின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்க்கை பெறுவதற்கான ஒரே தேர்வாக அறிவித்தது. 2019 முதல் நீட் தேர்வினை தேசியத் தேர்வு முகமை(என்.டி.ஏ) நடத்துகிறது.

முதுகலை[தொகு]

இதேபோல் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு (வதிவிடங்கள்), நீட் (பி.ஜி) என்பது எம்.டி / எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கான ஒற்றை தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். இது முதுகலை படிப்புகளில் நுழைவதற்கு தற்போதுள்ள அகில இந்திய அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு மற்றும் மாநில அளவிலான தேர்வுகளின் மாற்றாக உள்ளது. முதல் நீட் (பிஜி) தேசிய தேர்வு வாரியத்தால் 23 நவம்பர் - 6 டிசம்பர் 2012 வரை நடத்தப்பட்டது. இது சோதனை தேர்வு எனக் குறிப்பிடப்பட்டது (24, 25, 28 நவம்பர் மற்றும் டிசம்பர் 2 உடன் சோதனை அல்லாத நாட்கள்). இந்த சோதனை கணினி அடிப்படையிலான சோதனையாகும். இது பாரம்பரிய காகிதம் மற்றும் பேனா அடிப்படையிலான சோதனை போலல்லாமல், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் பல ஆண்டுகளாக நாட்டில் 50% அகில இந்திய ஒதுக்கீடு முதுகலை படிப்புகளில் சேருவதற்காக நடத்திய தேர்வின் அடிப்படையிலானது. இதில் மொத்தம் 90,377 பேர் தேர்வு எழுதினர்.[10]

வெளிநாட்டினர்[தொகு]

பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (என்.ஆர்.ஐ) ஒதுக்கீட்டைத் தவிர, வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவக் கல்விக்கான வசதிகள் போதுமானதாக இல்லாத நாடுகளைச் சார்ந்தவர்களுக்கும் பல இடங்களையும் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்களின் சரியான எண்ணிக்கை மற்றும் நாடுகள் சார்ந்த ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாறுபடலாம்.

ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பணிகள் மூலமாகவோ அல்லது இந்தியாவில் உள்ள அந்தந்த நாடுகளின் இராஜதந்திர பணிகள் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகராலயம் கோரிக்கை குறித்த கூடுதல் தகவல்களை வழங்க முடியும். அத்தகைய விளம்பரதாரர்களுக்கு நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.[11][12]

என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டின் மூலம் இடங்களைப் பெற விரும்பும் வெளிநாட்டினர் நீட் (குறைந்தபட்சம் அனைத்து அரசு கல்லூரிகளுக்கும்) மூலம் தகுதி பெற வேண்டும் என்பதையும், அந்த ஒதுக்கீட்டில் தகுதியுள்ள அனைத்து என்.ஆர்.ஐ விண்ணப்பதாரர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.[13] என்.ஆர்.ஐ விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் வேறுபட்டது.

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

எம்.பி.பி.எஸ் இளநிலை படிப்பு[தொகு]

இளநிலையில் மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (எம்பிபிஎஸ்) படிப்பினை வழங்குகிறது. இதன் பாடத்திட்டத்தில் எம்பிபிஎஸ் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.[14] இக்கல்லூரிகள் முதுநிலை மற்றும் துணை மருத்துவ படிப்புகளைக் கற்பிக்கலாம். அரசாங்க எம்பிபிஎஸ் படிப்பிற்கான சேர்க்கையில் போட்டி மிக அதிகமாக உள்ளது.

இந்த பாடநெறியில், உயிர் வேதியியல், உடலியல், உடற்கூறியல், நுண்ணுயிரியல், நோயியல் மற்றும் மருந்தியல் போன்ற அடிப்படை முன் மற்றும் பாரா மருத்துவ பாடங்களுடன் தொடங்குகிறது. மாணவர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனை வார்டுகள் மற்றும் வெளி நோயாளிகள் துறைகளில் பயிற்சி பெறுகிறார்கள். இவர்கள் ஐந்து நீண்ட ஆண்டுகளாக நோயாளிகளுடன் தொடர்பு கொள்கிறார்கள். பாடத்திட்டத்தில், வரலாறு, பரிசோதனை, வேறுபட்ட நோயறிதல் மற்றும் முழுமையான நோயாளி மேலாண்மை ஆகியவற்றின் நிலையான நெறிமுறைகளைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு நோயாளிக்கு என்ன விசாரணைகள் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சிறந்த சிகிச்சை விருப்பங்கள் என்ன என்பதைத் தீர்மானிக்க, மாணவருக்குக் கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தில் முழுமையான நடைமுறை அறிவு மற்றும் நிலையான மருத்துவ நடைமுறைகளைச் செய்வதற்கான நடைமுறை ஆகியவை உள்ளன. பாடநெறியில் 12 மாத கால வேலைவாய்ப்பு உள்ளது. நிலையான மருத்துவ கவனிப்பைத் தவிர, வார்டு மேலாண்மை, பணியாளர்கள் மேலாண்மை மற்றும் முழுமையான ஆலோசனைத் திறன் பற்றிய முழுமையான அனுபவத்தையும் பயிற்சி மருத்துவர் பெறுகிறார்.

முதுநிலை படிப்புகள்[தொகு]

இளநிலை மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் மருத்துவக் கல்லூரிகள், முதுநிலைப் பட்டம் அல்லது பட்டய படிப்புகளை மருத்துவத்துறையில் வழங்குகின்றன. டாக்டர் ஆஃப் மெடிசின் (எம்.டி), முனைவர் பட்டம் (பி.எச்.டி மருத்துவம்), மாஸ்டர் ஆஃப் சர்ஜரி (எம்.எஸ்) மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (எம்.எஸ்சி மருத்துவம்) அல்லது தேசிய வாரியத்தின் டிப்ளமோட் (டி.என்.பி) படிப்புகளை வழங்குகின்றன. எம்.டி / எம்.எஸ் பட்டங்களை இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. மேலும் டி.என்.பி பட்டம் இந்தியச் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஒரு சுயாதீனமான தன்னாட்சி அமைப்பான தேசிய தேர்வு வாரியத்தால் வழங்கப்படுகிறது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், கதிரியக்க நோய் கண்டறிதல், கதிரியக்க சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், கண் மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், சமூக மருத்துவம், நோயியல், நுண்ணுயிரியல், தடயவியல் மருத்துவம், மருந்தியல், உடற்கூறியல், உடலியல் போன்ற மருத்துவ அறிவியலின் பல்வேறு சிறப்புப் பாடங்களில் முதுநிலைப் படிப்புகள் உள்ளன. இப்பட்டப் படிப்புகள் 3 வருட காலமும், பட்டயப் படிப்புகள் 2 வருட காலமும் ஆகும். முதுகலைப் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, மாணவர்கள் டி.எம் அல்லது டி.என்.பி (மருத்துவ முனைவர்), அல்லது எம்.சி.எச் அல்லது டி.என்.பி (மாஸ்டர் ஆஃப் சிரர்ஜரி / அறுவைசிகிச்சை) எனப்படும் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் ஆர்வமுள்ள துறைகளில் மேலும் சிறப்புத் தகுதியினை பெறலாம்.

ஒரு எம்.டி அல்லது டி.என்.பி (பொது மருத்துவம் அல்லது குழந்தை மருத்துவம்) என்பது இதயவியல், சிறுநீரவியல், நியோனாட்டாலஜி, காஸ்ட்ரோ-என்டாலஜி, நரம்பியல் (மருத்துவ குருதியியல்-நோயியல் அல்லது பொது மருத்துவம் தவிர்த்து) நிபுணத்துவம் பெறுவதற்கான அடிப்படைத் தேவையாகும், அதே நேரத்தில் ஒரு எம்.எஸ் அல்லது டி.என்.பி ( பொது அறுவை சிகிச்சை, ஈ.என்.டி அல்லது எலும்பியல் அறுவை சிகிச்சை) என்பது நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகம், இதய-மார்பு மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, குழந்தை அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான அடிப்படைத் தேவை.

குடும்ப மருத்துவம் இப்போது இந்தியாவில் முன்னுரிமையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது, மேலும் பல கற்பித்தல் மருத்துவமனைகள் டி.என்.பி (குடும்ப மருத்துவம்) வழங்குகின்றன.

நியூரோ-கதிரியக்கவியல், நியூரோ அல்லது கார்டியாக் மயக்கவியல் போன்றவற்றில் ஆய்வு நிதியுதவியுடன் கூடிய முதுமுனைவர் பட்டப் படிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

புள்ளிவிவரம்[தொகு]

வருடந்தோறும் மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை[15]

குறிப்பு: மார்ச் 16 2023ன் அடிப்படையில் ஒட்டுமொத்த தகவல்

மருத்துவ படிப்பிற்கான இடங்கள் மாநில வாரியாக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையுடன் (2020)[தொகு]

வரிசை எண் மாநிலம்/

ஒன்றியப்பிரதேசம்

எம்.பி.பி. எஸ். கல்லூரிகளின் எண்ணிக்கை[16] மாநில அரசுக் கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் அரசு இடங்கள் தனியார் இடங்கள் மொத்த இடங்கள்
1 ஆந்திரபிரதேசம் 27 12 15 1900 1900 3800
2 அசாம் 6 6 0 900 0 900
3 பீகார் 11 7 4 540 369 909
4 சண்டிகார் 1 1 0 50 0 50
5 சத்தீசுகர் 9 6 3 500 300 800
6 தில்ல 7 7 2 800 200 1000
7 கோவா 1 1 0 150 0 150
8 குசராத்து 22 9 13 1530 1400 2930
9 அரியானா 6 2 4 600 1400 2000
10 இமாச்சலப் பிரதேசம் 2 2 0 200 0 200
11 ஜம்மு காஷ்மீர் 4 3 1 400
12 சார்க்கண்டு 3 3 0 250 0 250
13 கருநாடகம் 43 11 32 1350 4655 6005
14 கேரளம் 24 6 18 1000 1850 2850
15 மத்தியப் பிரதேசம் 11 5 6 760 900 1560
16 மகாராட்டிரம் 43 19 24 2200 2995 5195
17 மணிப்பூர் 2 2 0 200 0 200
18 மிசோரம் 1 1 0 100 0 100
19 ஒடிசா 11 7 4 1050 350 1400
12 புதுச்சேரி 9 2 7 225 900 1125
21 பஞ்சாப் 7 3 6 350 645 995
22 ராஜஸ்தான் 10 7 3 900 400 1300
23 சிக்கிம் 1 0 1 0 100 100
24 தமிழ்நாடு 42 19 20 2205 2850 5055
25 தெலங்காணா 24 7 17 1050 2500 3050
26 திரிபுரா 2 1 1 125 100 200
27 உத்தரப்பிரதேசம் 27 12 15 1449 1800 3249
28 உத்தராகண்டம் 4 2 2 200 250 450
29 மேற்கு வங்காளம் 23 18 5 3250 750 4000
SI தென் இந்தியா 154 52 102 6830 13705 20535
WI மேற்கு இந்தியா 77 34 43 4540 5295 9835
NI வட இந்தியா 70 37 33 4499 3745 8244
EI கிழக்கு இந்தியா 47 37 10 4116 1010 5026
T மொத்தம் 348 160 188 19985 23755 43640

இந்தியாவில் பிற சுகாதாரப் படிப்புகள்[தொகு]

  1. பார்ம் டி, மருந்தியல் மருத்துவர்
  2. பி.ஏ.எம்.எஸ்., ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை எம்.டி.
  3. பி.எச்.எம்.எஸ்., ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் இளங்கலை எம்.டி.
  4. பி.என்.ஒய்.எஸ், இயற்கை மற்றும் யோக அறிவியல் இளங்கலை தொடர்ந்து எம்.டி [17]
  5. பி.எஸ்.எம்.எஸ்., சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை எம்.டி.
  6. பி.யு.எம்.எஸ், இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையினை தொடர்ந்து எம்.டி.

ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்த ஹோமியோபதி ஆகியவை கூட்டாக ஆயுஷ் - மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகின்றன.

  1. முதுஅறிவியல் மருத்துவம், முனைவர் பட்டம் (மருத்துவம்).[18]
  2. இளம் அறிவியல், முதுஅறிவியல் செவிலியம்
  3. பிஎஸ்சி மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்
  4. பி.பார்ம், எம்.பார்ம்., முனைவர் பட்டம்
  5. பிபிடி, எம்.பி.டி, முனைவர் பட்டம் (உடலியக்க மருத்துவம்)
  6. பி.டி, எம்.டி.எஸ் (பல் அறுவை சிகிச்சை)
  7. தொழில்சார் சிகிச்சை
  8. இளம் அறிவியல் (பேச்சு சிகிச்சை)
  9. இளம் அறிவியல் (நரம்பியல்)

முதுகலை சிறப்பு[தொகு]

பொருள் பட்டம் பட்டயம்
மயக்க மருந்து எம்.டி / டி.என்.பி. டி.ஏ.
உடற்கூற்றியல் எம். எஸ். / டி.என்.பி./ எம்.எஸ்சி (மருத்துவம்) பொருந்தாது
உயிர்வேதியியல் எம்.டி / டி.என்.பி. / எம்.எஸ்சி (மருத்துவம்) பொருந்தாது
சமூகமருத்துவம் எம்.டி / டி.என்.பி. டி.சி.எம்./டி.பி.எச்.
தோல் நோய் எம்.டி / டி.என்.பி. டிடிவிஎல் / டிவிடி
காது, மூக்கு, தொண்டை எம்.எஸ் / டி.என்.பி. டி.எல்.ஓ.
குடும்ப மருத்துவம் எம்.டி / டி.என்.பி. பொருந்தாது
தடயவியல் மருத்துவம் எம்.எஸ் / டி.என்.பி. டி.எஃப்.எம்
பொது மருத்துவம் எம்.டி / டி.என்.பி. பொருந்தாது
பொது அறுவை சிகிச்சை எம்.எஸ் / டி.என்.பி. பொருந்தாது
நுண்ணுயிரியல் எம்.டி / டி.என்.பி. / எம்.எஸ்சி (மருத்துவம்) பொருந்தாது
அணு மருத்துவம் எம்.டி / டி.என்.பி. டி.ஆர்.எம்
எலும்பியல் எம்.எஸ் / டி.என்.பி. டி ஆர்த்தோ
கண் மருத்துவம் எம்.எஸ் / டி.என்.பி. டி.ஒ./ டி.ஓ.எம்.எஸ்.
கண்காணிப்பு மற்றும் மகளிர்நோயியல் எம்.எஸ் / டி.என்.பி. டி.ஜி.ஓ.
நோய்த்தடுப்பு மருந்து எம்.டி. என்.ஏ.
நோயியல் எம்.டி / டி.என்.பி. டி.சி.பி.
மருந்தியல் எம்.டி / டி.என்.பி. / எம்.எஸ்சி (மருத்துவம்) பொருந்தாது
உடலியல் எம்.டி / டி.என்.பி. / எம்.எஸ்சி (மருத்துவம்) பொருந்தாது
குழந்தை மருத்துவம் எம்.டி / டி.என்.பி. டி.சி.எச்
உளவியல் எம்.டி / டி.என்.பி. டி.பி.எம்
நுரையீரல் எம்.டி / டி.என்.பி. டி.டி.சி.டி.
கதிரியக்க நோய் கண்டறிதல் எம்.டி / டி.என்.பி. டி.எம்.ஆர்.டி.
கதிரியக்க சிகிச்சை எம்.டி / டி.என்.பி. டி.எம்.ஆர்.டி.
வெப்பமண்டல நோய் எம்.டி. டி.டி.எம்.எச்

வெளிநாட்டில் வேலை[தொகு]

1960 முதல் முன்னேறிய நாடுகளுக்கான மருத்துவர்களின் தேவையினை பூர்த்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.[19] 2000 வரை குடியேறிய இந்திய மருத்துவர்கள் 20,315 ஆவார் . மேலும் 22,786 இந்தியச் செவிலியர்கள் ஓ.இ.சி.டி நாடுகளில் பணியாற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டில் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய உலகில் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா இணைந்து) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 59,523 மருத்துவர்கள் பணிபுரிந்த நிலையில், இந்நாடுகளில் இந்தியாவிலிருந்து குடியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய மூலமாக மாறியுள்ளது.[20]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Medical Council of India: Home Page". Archived from the original on 2009-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
  2. "STATUS OF MEDICAL COLLEGES FOR ADMISSION FOR THE ACADEMIC SESSION 2007–08". mohfw.nic.in. Archived from the original on 1 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "NMC Act: Punishment for quackery enhanced up to one year imprisonment and fine of Rs. 5 lakh says Harsh Vardhan". Business Standard.
  4. Rao, Sujatha (26 June 2013). "Doctors by merit, not privilege". The Hindu. http://www.thehindu.com/opinion/lead/doctors-by-merit-not-privilege/article4850500.ece. 
  5. . March 2011. 
  6. "National Eligibility cum Entrance Test - NEET UG, 2013". Central Board of Secondary Education. Archived from the original on 2018-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
  7. "National Eligibility cum Entrance Test - NEET UG, 2013 Results". Central Board of Secondary Education.
  8. "CBSE NEET UG 2013 results announced, 3 lakh Students qualified but the irony is that the NEET UG 2013 has been quashed by supreme court bench headed by judje kabir almtas.". One India இம் மூலத்தில் இருந்து 2013-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130609153349/http://education.oneindia.in/news/2013/06/05/cbse-neet-ug-2013-results-announced-005271.html. 
  9. "Medical entrance exam NEET UG 2013 held Smoothly". One India இம் மூலத்தில் இருந்து 2013-07-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130705151911/http://education.oneindia.in/news/2013/05/06/medical-entrance-exam-neet-ug-2013-held-smoothly-004868.html. 
  10. "NEET PG results out, counselling to follow". The Times of India. TNN. 18 May 2013 இம் மூலத்தில் இருந்து 2013-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6I1sFXDBC?url=http://articles.timesofindia.indiatimes.com/2013-05-18/news/39353443_1_state-merit-list-nbe-health-sciences. 
  11. "AIIMS: Admission Guidelines". AIIMS. பார்க்கப்பட்ட நாள் 11 July 2013.
  12. "BHU: ADMISSION PROCEDURES". Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 11 July 2013.
  13. Bhalla, Sanjeev (10 July 2013). "NRI students into Medical Colleges". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 11 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6I1vad7iu?url=http://www.hindustantimes.com/Punjab/Jalandhar/NRI-students-alleges-foul-in-forcing-condition-of-NEET-for-admission-into-Medical-Colleges/SP-Article1-1090374.aspx. 
  14. "MBBS providers are medical colleges" (PDF). Archived from the original (PDF) on 2019-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
  15. https://www.nmc.org.in/information-desk/for-students-to-study-in-india/list-of-college-teaching-mbbs/
  16. "Archived copy". Archived from the original on 13 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
  18. https://medicalmsc.org
  19. Basant Potnuru (2017). "Aggregate availability of doctors in India: 2014–2030". Indian Journal of Public Health 61 (3): 182–187. doi:10.4103/ijph.IJPH_143_16. பப்மெட்:28928301. http://www.ijph.in/article.asp?issn=0019-557X;year=2017;volume=61;issue=3;spage=182;epage=187;aulast=Potnuru#ref8. 
  20. Mullan, Fitzhugh (2005). "The Metrics of the Physician Brain Drain". New England Journal of Medicine 353 (17): 1810–1818. doi:10.1056/NEJMsa050004. பப்மெட்:16251537. https://semanticscholar.org/paper/ce2034847eb95c41d37a770c8bca7e35025131c8. 

வெளி இணைப்புகள்[தொகு]