விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் திட்டம் தொடர்பான துவக்க உரையாடல் இங்கு உள்ளது

கல்லூரி மற்றும் மாணவர்கள் கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுவிட்டால் நாம் நாட்களை இறுதி செய்யலாம். ஸ்ரீ (✉) 14:15, 18 மே 2021 (UTC)[பதிலளி]

திறன்பேசி தொகுப்புகள்[தொகு]

திறன்பேசியின் மூலம் செய்யக்கூடிய தொகுப்புகள் என்பதற்கும் முக்கியத்துவம் தரலாம். உதாரணமாக விக்கிப்பீடியாவில் திறன்பேசியின் மூலம் Article descriptions, Image captions, image tags, image algorithm ஆகியவற்றை மிக எளிதாக சேர்க்கலாம். இதன்மூலம் அவர்களது பங்களிப்புகளை எளிதாக்குவதுடனும் தொடர்ச்சியாக பங்களிக்கவும் உதவும் என்பது எனது நம்பிக்கை. ஸ்ரீ (✉) 05:03, 19 மே 2021 (UTC)[பதிலளி]

  1. இரா.மணிப்பிரியா இரா.மணிப்பிரியா (பேச்சு) 18:37, 2 சூன் 2021 (UTC)[பதிலளி]

இற்றை[தொகு]

அறுபது மாணவர்கள் உள்ளகப்பயிற்சிக்கு உறுதி செய்துள்ளனர். மே 27 முதல் ஜூன் 26 வரை திட்டமிடலாம் என நினைக்கிறேன். முறையே விக்கிமூலம், பொதுவகம், விக்கித்தரவு, விக்சனரி, விக்கிப்பீடியா என்று பயற்சிகளை அளிப்போம். பலரும் பயிற்சியளிக்கும் வகையில் அலுவல்பூர்வ நிகழ்ச்சி நிரலை உருவாக்கிவிட்டு, பின்னர் தேவைக்கு ஏற்பக் கூடுதல் பயிற்சி வகுப்புகளை இடையிடையில் அமைக்கலாம். மாணவர்களை ஒருங்கிணைக்க, கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் உதவுவார்கள். தற்போது விக்கிக்குள் துப்புரவு செய்யவும், பக்கங்களை மேற்பார்வையிடவும் ஆர்வமுள்ள பயனர்களை இணைக்க வேண்டும். இம்முறை outreachdashboard உருவாக்குவோம். அங்கிருந்து கண்காணிப்பது இலகு. விக்கிப் பயிற்சியாளர்களுக்கு யாருக்கேனும் இணையச் செலவு அல்லது வேறு உதவிகள் வேண்டினால் தொடர்பு கொள்ளலாம், சிஐஎஸ் உதவக் காத்திருக்கிறார்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 16:38, 23 மே 2021 (UTC)[பதிலளி]

இக்கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைக்கும் குழுவினர் அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை சார்பாகப் பாராட்டுச் சான்றிதழ் அளிப்பதாகச் சொல்லியுள்ளனர். நமது சான்றிதழ் முந்தைய பயிற்சித் திட்டம் போல சிஐஎஸ் வழியாக தமிழ் விக்கிக்குழுவின் சார்பாக மட்டுமே இருக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 15:44, 24 மே 2021 (UTC)[பதிலளி]
பயிற்சி நிகழ்வினை பதிவு செய்ய cis உதவுவார்களா? ஸ்ரீ (✉) 04:30, 25 மே 2021 (UTC)[பதிலளி]
தேவையெனில் நாமே அந்த ஜூம் செயலியில் ஒளிப்பதிவு செய்யலாம். அணுக்கம் கிடைத்தால், அனைத்து அமர்வுகளையும் நீங்கள் பதிவு செய்து பொதுவகத்தில் ஏற்ற இயலுமா? விக்கி சார்பாக உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழும் இதர மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும், பயிற்சியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்குவோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவையும் அவர்கள் சார்பாக ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். -நீச்சல்காரன் (பேச்சு) 10:39, 25 மே 2021 (UTC)[பதிலளி]
திறன்பேசி வழியே கலந்துகொள்வதால் இதனை முழுமையாக பதிவு செய்ய இயலுமா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. எனவே என்னால் பதிவு செய்ய இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி ஸ்ரீ (✉) 02:49, 27 மே 2021 (UTC)[பதிலளி]
நிகழ்வின் பதிவுகளை இதே பக்கத்தில் இணைத்திட வேண்டுகிறேன். த.சீனிவாசன் (பேச்சு) 10:39, 28 மே 2021 (UTC)[பதிலளி]

மே 29 இற்றை[தொகு]

திட்டமிட்டபடி மே 27 அன்று கல்லூரிகளின் பொறுப்பாளர்களும், அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவையின் பொறுப்பாளர்களும் சிறப்பித்துத் தொடக்க விழா நடைந்தேறியது. அடிப்படையான அறிமுகமும், பயிற்சி அமைப்பும் பற்றி விளக்கினேன். மே 29 சிறப்பான தொடக்க அமர்வாக விக்கிமூலம் பற்றி பயனர் பார்வதிஸ்ரீ விளக்கினார். 60 இல் சுமார் 45 மாணவர்கள் பயனர் பெயர் உருவாக்கியுள்ளனர். சிஐஎஸ் வழங்கிவரும் ஜூம் கூட்ட அழைப்பில் அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே இணையமுடிகிறது. அதனால் மாற்று வழியில் நிகழ்வை நேரலை செய்ய இதுவரை சிஐஎஸுடன் முயன்றுவருகிறேன். இந்த ஒளிப்பதிவைப் புதிய ஒரு யூட்யூப் அலைவரிசையில் ப.பொ உரிமையில் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம். இந்த அலைவரிசை இப்பயிற்சிக்கானதாகத் தலைப்பிட்டுள்ளோம். அலுவல்பூர்வமான ஒரு அலைவரிசையைத் தொடங்க விக்கிச் சமூகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் ஒரு வரையறை உருவாக்கிய பின்னர் இதனையே அறிவிக்கலாம். இடையில் இந்த அலைவரிசைக்கு அணுக்கம் விரும்புபவர்கள் அறியத் தரலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 18:13, 29 மே 2021 (UTC)[பதிலளி]

பதிவு செய்யப்பட்ட காணொளிகள்[தொகு]

ஜூன் 4 இற்றை[தொகு]

முன்பதிவு செய்த மாணவர்களுள் சுமார் 52 மாணவர்கள் பயனர் பெயர் உருவாக்கியுள்ளனர். உள்ளகப் பயிற்சிக்கு முன்பதியாத மாணவர்களும் சிலரும் பயிற்சியில் ஒப்பமிட்டுள்ளனர். மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இன்னும் பயனர் பெயர்களை உறுதி செய்யவில்லை. எதுவாகவிருந்தாலும் பெயர்களை இறுதி செய்யும் பணி அவர்களிடமே உள்ளது. அதன் பின்னர் கீழ்க்கண்ட இணைப்பின் வழியே ஒருங்கிணைக்கலாம் எனத் திட்டமிடுகிறேன். outreachdashboard கூடுதலாக wscontest.tool மூலம் விக்கிமூலத்தை மட்டும் கண்காணிக்க ஸ்ரீதர் முயல்கிறார்.-நீச்சல்காரன் (பேச்சு) 03:58, 4 சூன் 2021 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா கட்டுரைகள் இலக்கு குறித்து[தொகு]

பயிற்சியில் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை 2 அல்லது மூன்று கட்டுரைகயாக இலக்கினை குறைக்கலாம்.ஸ்ரீ (✉) 12:24, 5 சூன் 2021 (UTC)[பதிலளி]

முதலாண்டு விவாதத்தில் இது குறித்து விவாதிக்கையில் முதுகலை மாணவர்கள் என்பதால் இந்த இலக்கே குறைவு என்ற கருத்தும் வந்தது. 2020 இல் மாணவர்கள் திட்டமிட்டபடி முடித்தனரே. இப்போதைய மாணவர்களின் பங்கேற்பினைப் பார்த்தவரை இந்த இலக்கினை அடையக் கூடியவர்களாக உள்ளனர். இருந்தாலும் இலக்கை குறைப்பதில் மற்றவர்களிடம் மாற்றுக் கருத்தில்லாவிட்டால் உடன்படுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 20:54, 5 சூன் 2021 (UTC)[பதிலளி]

புதிய கல்லூரியை இணைத்தல்[தொகு]

கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தெரியாமல் முன்பதியாத ஒரு கல்லூரியின் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தில் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு பயனர் பெயர் உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து பங்களிக்கவும் ஆர்வமாக உள்ளதாக இன்றைய அமர்வில் சொன்னார்கள். அவர்களை இணைத்துக் கொண்டால் 67+ மாணவர்களாகும். நம்தரப்பில் முன்னர் வரையறுத்த எண்ணிக்கையைவிட சற்று அதிகம். நாம் அவர்களையும் இணைத்துக் கொள்ள முடியுமா? சான்றிதழ் வழங்கும் சிஐஎஸ் தரப்பிலும் சிக்கலில்லை. முன்பதியாததால் கல்லூரித் தரப்பிலும் நம்மால் ஏமாற்றமடைய மாட்டார்கள். நம்மால் முடியுமென்றால் இணைக்கலாம் இல்லாவிட்டால் தவிர்க்கலாம். மற்றவர்கள் கருத்தறிய ஆவல். -நீச்சல்காரன் (பேச்சு) 14:18, 7 சூன் 2021 (UTC)[பதிலளி]

இதனால் ஏதும் பிரச்சனை வராவிட்டால் அவர்களையும் சேர்க்கலாம்.--Balu1967 (பேச்சு) 10:11, 8 சூன் 2021 (UTC)[பதிலளி]

நேரடியாக மற்ற பயிற்சியாளர்களிடம் பேசியவரை மாற்றுக் கருத்தில்லை. தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் பயனர் பெயர் உருவாக்கி ஆர்வம் காட்டியதாலும் ஐந்து மாணவர்களைப் பயிற்சியில் இணைத்துக் கொண்டுள்ளோம். மற்ற மாணவர்களை பார்வையாளராகத் தொடர அறிவுறுத்தியுள்ளோம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:07, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

ஜூன் 11 இற்றை[தொகு]

இன்றுடன் விக்சனரி அமர்வு நிறைவுற்றது. இதுவரை மிகச் சிறப்பாக பார்வதிஸ்ரீ, ஸ்ரீதர், பாலாஜி, புவனா மீனாட்சி, ஆர்லின் ராஜ், தகவலுழவன், மகாலிங்கம் ஆகியோரின் பயிற்சிகளும் வழிகாட்டல்களும் அமைந்ததால் இத்திட்டம் நன்முறையில் சென்று கொண்டிருக்கிறது. மாணவர்கள் பங்களிப்புகளைத் திட்டப்பக்கத்திலும் காணலாம், பயிற்சிகளின் ஒளிப்பதிவு யூடியூப்பிலும் காணலாம். ஆர்வமுள்ள வேறு பயனர்கள் பயிற்சியளிக்க விரும்பினாலும் அறியத் தரலாம்.

இப்பயிற்சியில் இரு பயனர் சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்கள். ஒரு பயனருக்கு எழுத்தாவணங்கள் உதவும், இன்னொருவருக்கு ஒலிக்கோப்புகள் உதவும். பொதுவாகவே அதற்கான வளங்களை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. சில மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் பேசி வருகிறேன் வேறு மொழி பயனர்களிடமும் கேட்டுள்ளேன். யாரேனும் பயிற்சியளிக்க முன்வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாணவர்கள் போலப் பங்களிக்க இயாலாத நிலையில் இலக்குகளிலிருந்து இவ்விருவருக்கும் விலக்குகளை அளிக்கலாமா? அடையாளப் பங்களிப்பிற்கு வேறு எளிய இலக்குகளை அளிக்கலாமா? மற்றவர்கள் கருத்திடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:07, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

அவர்கள் எவ்வாறு திறன்பேசிகளை பயன்படுத்துகிறார்கள் என அறிய முடிந்தால் அதற்கேற்றவாறு எளிய இலக்குகளை அமைக்கலாம். அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்புத் திறன் வாய்ந்த மாணவர்களுக்கு என தனியாக நாம் பயிற்சி அளிக்க இது உதவும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் கேட்டுப் பார்க்கிறேன். இலக்கில் இந்த மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதில் எனக்கு மனப்பூர்வமான சம்மதம். ஸ்ரீ (✉) 14:02, 15 சூன் 2021 (UTC)[பதிலளி]
மற்ற மாணவர்கள் முடிக்கின்ற நாள் வரை அவர்களால் எவ்வளவு முடிகிறதோ அவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். வரையறுக்கப்பட்ட இலக்குகள் ஏதுமில்லை என்பதை முன்வைக்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 10:34, 3 சூலை 2021 (UTC)[பதிலளி]

இலக்கு அறிவிப்பு[தொகு]

கட்டுரைகள் தொடர்பாக[தொகு]

@Balu1967: கருத்துப்படி விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/தலைப்புகள் என்பதனை இந்த மாணவர்களுக்கும் கொடுக்கலாம். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். ஸ்ரீ (✉) 14:07, 15 சூன் 2021 (UTC)[பதிலளி]

ஜூன் 19 இற்றை[தொகு]

விக்கிப்பீடியா பயிற்சி முழுமையாக முடிக்கும் முன்னரே சில மாணவர்கள் ஐந்து திட்டங்களிலும் இலக்குகளை முடித்துள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது. சிவகோசரன், மகாலிங்கம், பாஹிம், செல்வா ஆகியோரின் அமர்வுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. கல்லூரிகளை ஒருங்கிணைக்கும் அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை சார்பில் நிறைவு விழாவினைக் கல்லூரி மற்றும் அவர்கள் அமைப்பு சார்ந்த சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து நடத்த ஆர்வம் தெரிவித்தனர். தேதியினை அவர்கள் இறுதி செய்தவுடன் தெரிவிக்கிறேன். இடையில் வேறு யாரேனும் அல்லது கட்டுரைகளைக் கண்காணிக்கும் பயனர்கள் மாணவர்களுக்கு பயிற்சி/ஆலோசனை வழங்க ஆர்வமிருந்தால் அறியத் தரலாம். கவனிக்க:@AntanO and Kanags: -நீச்சல்காரன் (பேச்சு) 17:03, 19 சூன் 2021 (UTC)[பதிலளி]

நிறைவு நாள் நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் 26 அன்றே அதே 4:30 மணியளவில் நடைபெறுகிறது. தொடக்க நாள் நிகழ்வு போல விருந்தினர்களைக் கல்லூரி சார்பாக அழைப்பதால், மாணவர்கள் ஐயங்களைப் போக்கும் கலந்துரையாடல் போல அல்லாமல் பொது நிகழ்வாக அமையும். சிறப்பு விருந்தினராக, கல்லூரிகளை ஒருங்கிணைக்கும் அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவையின் கௌரவத்தலைவர், தலைவர், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக முனைவா் இரா.குணசீலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விக்கித் தரப்பில் பார்வதிஸ்ரீ மற்றும் பாலாஜி ஆகியோர் பேசுகின்றனர். மேலும் அனைத்து பயிற்சியாளர்களும் அனைத்துப் பயனர்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:50, 23 சூன் 2021 (UTC)[பதிலளி]
சிறு மாற்றம். முனைவா் இரா.குணசீலனுக்கு மாற்றாகச் சிறப்பு அழைப்பாளராக அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை சார்பாக அழைக்கப்பட்டு முனைவர் த.சத்தியராஜ் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தார். -நீச்சல்காரன் (பேச்சு) 23:39, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

இலக்கு நிறைவு - நாட்களை இறுதி செய்வது குறித்து[தொகு]

வணக்கம், இலக்கினை நிறைவு செய்ய ஏதேனும் ஒரு நாளை இறுதி செய்வது நல்லது. ஜூலை 10 என்பதனை இறுதி ஆக்கலாம் என்பது என் கருத்து. மற்றவர்கள் கருத்தினை இட்டால் நாம் மாணவர்களுக்குத் தெரிவிக்கலாம். நன்றி ஸ்ரீ (✉) 13:53, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

கடந்த முறை ஒரு மாணவர் சொந்தக் காரணங்களால் உடனே முடிக்க இயலாமல் ஒரு மாதம் சென்று முடித்தார். இப்பயிற்சிக்கான மாணவர்கள் பெயர்களையே பயிற்சி தொடங்கி இரு வாரம் சென்றே நாம் இறுதி செய்தோம். விக்கியில் கல்வி அமைப்புகள் போல காலவரையறை கொடுக்க வேண்டுமா எனப் பார்க்கிறேன். அனைத்து மாணவர்களும்(கல்லூரி வேற்பாடின்றி) முடிக்கும் போதே சான்றிதழ் வழங்கப்படும் என்ற புரிதல் இருப்பதால் கல்லூரி தரப்பில் இதை முடிவு செய்து கொள்ளலாம். எப்படி பாத்திமா கல்லூரி மதிப்பெண்களை இதன் மூலம் இறுதி செய்து கொள்கிறார்களோ அது போல கல்லூரி தரப்பில் விட்டுவிடலாம் என்று பரிந்துரைக்கிறேன். மற்றவர்கள் கருத்திற்கேற்ப முடிவெடிப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 00:52, 28 சூன் 2021 (UTC)[பதிலளி]
25.07.2021 இற்குள் இலக்குகளை முடிப்பவர்களுக்கு மட்டுமே உள்ளகப் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்பதை கல்லூரித் தரப்புக்கு அறிவித்து விடலாம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 14:26, 17 சூலை 2021 (UTC)[பதிலளி]
மாற்றுக் கருத்தில்லை என்றே நினைக்கிறேன். அப்படியே செய்வோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:22, 18 சூலை 2021 (UTC)[பதிலளி]
மற்ற கல்லூரிகளில் முடித்தவர்களுக்குக் கொடுங்கள் மற்றவர்களை விட்டுவிடலாம் என்று சொல்லிவிட்டனர். ஆனால் பாத்திமா கல்லூரியில் மட்டும் அந்த இரு மாணவர்களுக்காக நாள் நீட்டிப்பு கோரியுள்ளனர். ஜூலை 31 வரை நீட்டிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:20, 25 சூலை 2021 (UTC)[பதிலளி]
வேலூர் கல்லூரியில் ஹேமாவதி என்ற மாணவியும், மெடோனா கல்லூரியில் கண்மணி, ஜனனி, முத்துபாரதி ஆகியோரும் இந்த கால நீட்டிப்பு காலத்தில் முடிக்க வாய்ப்புள்ளது. எம். வித்யாஸ்ரீ என்ற மாணவர் மற்றெந்த திட்டங்களிலும் பங்களிக்கவில்லை. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திச் செய்கிறாரா? என்று பார்க்கலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:37, 25 சூலை 2021 (UTC)[பதிலளி]

பயிற்சிக்கு பின்னான ஒரு உரையாடல்[தொகு]

விக்கிப்பீடியர்களிடையே[தொகு]

முறையான பயிற்சிகள் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் நடந்து முடிந்தன. (தேவைக்கேற்ப ஐயம் களையும் சந்திப்புகள் நடக்கும்) காணொளிகள் அனைத்தும் இங்கே ஏற்றப்பட்டுள்ளன. பொதுவான விக்கிக்கூடல் முடிந்த பின்னர் அது குறித்த ஒரு கலைந்துரையாடல் நடப்பது போல இம்முறை ஜூன் 27 அன்று காலை இணையவழியில் கலந்து பேசினோம். இதில் மகாலிங்கம், பாலாஜி, பார்வதிஸ்ரீ, ஸ்ரீதர், தகவலுழவன், கி.மூர்த்தி, பாலு ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். பொதுவான அனுபவப் பகிர்வுகளுக்கிடையே சில நிறைகுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. கடந்த முறையைவிட இம்முறை அதிக விக்கிப் பயனர்கள் வழிகாட்டியது, புதிய கல்லூரிகள் கலந்து கொண்டது, சில கருவிகள் கொண்டு மாணவர்களைக் கண்காணிக்க முடிந்தது, மாணவர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பு, சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்கள் போன்றவை சிறப்பான அனுபவமாக இருந்தன. வெவ்வேறு கல்லூரிகள் என்பதால் அம்மாணவர்களை ஒருங்கிணைத்தல், வாட்சப் குழுவில் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளை எதிர்கொள்தல், நேர மேலாண்மை போன்றவை சவால்களாக இருந்தன.

அதிகமாகக் கைப்பேசி சார்ந்த பயிற்சிகளை அளிக்க வேண்டும். சின்ன சின்ன வீட்டுப் பாடங்களை ஒவ்வொரு அமர்விலும் உறுதி செய்ய வேண்டும், பயிற்சித் தலைப்புகளுக்கான சிறுசிறு காணொளிகளை உருவாக்குதல், பயிற்சியாளர்களிடையே தலைப்புகளைப் பிரித்து அமர்வுகளின் நேரத்தைக் குறைத்தல், பயிற்சிக்கு முன்னரே காணொளிகளைக் காண அறிவுறுத்தல், பங்களிக்க ஏதுவாக முன்கூட்டியே தலைப்புகள் பரிந்துரைத்தல் போன்றவை பரிந்துரைகளாகக் கலந்து கொண்டவர்கள் முன் வைத்தனர். மாணவர் பங்கேற்பிற்காக அமர்வுகளில் வணக்கப் பாடல், தொகுத்தல், நன்றியுரை போன்றவை நடந்தன அவற்றை நேர மேலாண்மை காரணமாகத் தவிர்த்தல், இதர அமைப்புகள் ஒருங்கிணைப்பில்லாமல் நேரடியாக அனைத்துக் கல்லூரிகளையும் நாமே ஒருங்கிணைத்தல், யூட்டியூப் ஒளிப்பதிவுகளை வெட்டி பொதுவகத்தில் ஏற்றுவதைவிடப் புதியதாக ஒளிப்பதிவு செய்துவிடலாம், சிறந்த பங்களிப்பிற்கு சிஐஎஸ் மூலம் பரிசுத் தொகை பெற்றுத்தருதல் போன்றவை விவாதத்தில் வந்தன.

எளிய பயிற்சியாகவோ ஏதேனும் ஒரு திட்டத்தில் மட்டுமான பயிற்சியாகவோ விக்கிக்குத் தேவையான பயிற்சியாகவோ மட்டும் சுருக்காமல் முழுமையான பயிற்சியாகவும், ஒருங்கிணைந்த அனைத்துத் திட்டப் பயிற்சியும், மாணவர்கள் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தாத பயிற்சியாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். வேவ்வேறு பின்புலத்திலிருந்து வரும் மாணவர்கள் வெவ்வேறு வகையில் ஆர்வம் கொள்ளலாம் இப்பயிற்சி அவர்களை எதிர்காலப் பங்களிப்பாளராகவும் மாற்ற இயலும். மாணவர்கள் முழுமையாக முடிக்கும் வரை தொடர் வழிகாட்டல் வழங்கல், இப்பங்களிப்புகள் குறித்த ஆய்வறிக்கை எழுதல், சான்றிதழ் தயாரிப்புப் பணி ஆகியவை செய்யக்கூடிய பணிகளாக முடிவு செய்தோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 00:43, 28 சூன் 2021 (UTC)[பதிலளி]

கல்லூரிகளிடையே[தொகு]

ஜூன் 28 மாலை கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விக்கிப்பீடியா சார்பாக ஓர் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறை சார்பில் அருள் மைக்கல் செல்வி, வரலாற்றுத் துறை சார்பாக விஜயசாந்தி, அன்னை தெரசா கல்லூரி சார்பாக ஹேமலதா, மெடோனா கல்லூரி சார்பாக சலோமீ, த.கி.மு. மகளிர் கல்லூரி சார்பாக சுஜாதா, ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி சார்பாக காமாட்சி ஆகியோரும், விக்கித் தரப்பில் மகாலிங்கம், கி.மூர்த்தி, பார்வதிஸ்ரீ, பாலாஜி, ஆர்லின் ராஜ், தகவலுழவன் மற்றும் நானும் கலந்து கொண்டோம். இரண்டாவது முறையாக பங்கெடுத்த கல்லூரியான பாத்திமா கல்லூரி மாணவர்கள் ஒப்பிட்டளவில் விரைவாகச் செய்துள்ளனர். புதிய கல்லூரிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்ததை பின்னூட்டம் மூலம் அறியமுடிகிறது. விக்கிப் பயிற்சியாளர்கள் அனைவரையும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டினார்கள். தொடர்ந்து கல்லூரிகள் விக்கியுடன் இணைந்து செயல்படவும் பல்வேறு வாய்ப்புகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டனர். முதலில் சான்றிதழுக்கான கலந்து கொண்டேன் பின்னர் இதன் அருமை அறிந்து தொடர்ந்து பங்கெடுப்பதாக ஒரு மாணவர் கூறியதாக அறிந்தபோது இத்திட்டத்திற்காக வெற்றியாகக் கருதமுடிந்தது. இயன்றவரை இலக்குகளை அடைய மாணவர்களுக்கு உதவக் கேட்டுக் கொண்டோம். அனைத்து மாணவர்களும் முடித்தவுடன் அந்தந்தக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் முகவரிக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளோம். -நீச்சல்காரன் (பேச்சு) 20:24, 29 சூன் 2021 (UTC)[பதிலளி]

பயிற்சியாளர் சான்றிதழ்[தொகு]

இன்னும் சில மாணவர்கள் இலக்கினை முடிக்கவில்லை. விரைவில் முடிக்கவைப்பதாக கல்லூரித் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் சான்றிதழ் அச்சுப் பணியினைத் தொடங்குவோம். உள்ளகப்பயிற்சி மற்றும் பங்கேற்புச் சான்றிதழ்களாகக் கடந்த ஆண்டு வடிவமைப்பையே எடுத்துக் கொள்வோம். முன்னர் குறிப்பிட்டவாறு பயிற்சியாளர் சான்றிதழ் இம்முறை கூடுதலாகத் திட்டமிட்டுள்ளோம் அதற்கான உள்ளடக்கத்தை இங்கே இறுதி செய்வோம். பின்னர் வடிவமைப்பை லெனின் செய்து தருவதாகக் கூறியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து பயிற்சியளித்தவர்களுக்கு மின்சான்றிதழ் அனுப்ப இயலும். மற்ற பயிற்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப அஞ்சலில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பிவைப்போம்.

தமிழ் விக்கிமீடியா குழுமம்
Tamil Wikimedia Community

பாராட்டுச் சான்றிதழ்
Certificate of Appreciation

2021 ஆம் ஆண்டு மே-சூன் காலகட்டத்தில் நடந்த தமிழ் விக்கி உள்ளகப் பயிற்சியில் விக்கிமீடியத் திட்டங்களுள் ஒன்றான <project name> குறித்துச் சிறப்பான பயிற்சியினை மாணவர்களுக்கு அளித்தமையைப் பாராட்டி <name> என்பவருக்குச் சான்றளிக்கப்படுகிறது. 

This certificate is awarded to <name> in recognition of his/her workshop conducted in the Tamil Wiki Internship programme 2021 held during May - June on the topic of <project name>, a Wikimedia project.

ஞா. ஸ்ரீதர்   நா. ரெ. மகாலிங்கம்  ஜெ. பாலாஜி   நீச்சல்காரன்
ஒருங்கிணைப்பாளர்கள்

ஏதேனும் திருத்தங்கள், பிழைகளிலிருந்தால் சுட்டிக் காட்டலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:19, 16 சூலை 2021 (UTC)[பதிலளி]

இந்த உள்ளடக்கத்துடன் சான்றிதழுக்கான இரு மாதிரிகளை லெனின் தயாரித்துள்ளார். மாதிரி1, மாதிரி2 இதுலொன்றை இறுதி செய்ய வேண்டும். மேலும் திருத்தங்கள் மாற்றங்களிருந்தாலும் அறியத் தரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 14:29, 21 சூலை 2021 (UTC)[பதிலளி]

திருத்தம்[தொகு]

  • is awarded to என்றிருக்க வேண்டுமல்லவா? in the topic of என்பதற்குப் பதிலாக 'on the topic of என்றிருக்கலாம். wikimedia project Wikimedia project என்றிருக்கலாம் எனவம் நினைக்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:42, 16 சூலை 2021 (UTC)[பதிலளி]
மாற்றிவிட்டேன்.நன்றி. -நீச்சல்காரன் (பேச்சு) 05:56, 17 சூலை 2021 (UTC)[பதிலளி]

கூடுதல் திருத்தம்[தொகு]

of his/her active participation on the Tamil Wiki (workshop என்பதையும் தவிர்க்கலாம், to give importance to internship)

This certificate is award to <name> in recognition of his/her active participation on the Tamil Wiki Internship programme 2021 held during May - June in the topic of <project name>, a wikimedia project. --சத்திரத்தான் (பேச்சு) 17:17, 16 சூலை 2021 (UTC)[பதிலளி]

participation என்பது கலந்து கொண்ட என்ற பொருளில் வருகிறது. பயிற்சியளித்தல் என்பதை வேறு எப்படிச் சொல்லலாம்?-நீச்சல்காரன் (பேச்சு) 05:54, 17 சூலை 2021 (UTC)[பதிலளி]
மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் என்பதால் participation என்பது சரியாக இருக்கும். அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சியளித்தல் என்பது Resource Personக்கு கொடுக்ககூடிய சான்றிதழில் தானே வரும். --சத்திரத்தான் (பேச்சு) 07:50, 17 சூலை 2021 (UTC)[பதிலளி]
இது மாணவர்களுக்கல்ல. பயிற்சியாளர்களுக்குத் தான். குறிப்பாகப் பயிற்சி கொடுத்தவருள் ஒருவர் மாணவர் அவருக்கு இத்தகைய சான்றிதழ் தேவை உள்ளது. தொடர் உரையாடலைக் கவனித்தால் குழப்பம் நீங்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 09:18, 17 சூலை 2021 (UTC)[பதிலளி]

இறுதி இற்றை[தொகு]

109 மாணவர்கள் சான்றிதழ்களை அவரவர் கல்லூரி முகவரிக்கு அனுப்பிவிட்டோம். பயிற்சியாளர் சான்றிதழும் அனுப்பப்பட்டுவிட்டது. இரண்டாமாண்டு உள்ளகப்பயிற்சியும் சிறப்பாக நிறைவேறியுள்ளது. சக பயனர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. கடந்த முறையைவிட இம்முறை அதிக மாணவர்கள் கலந்து கொண்டு ஒளிப்பதிவுகளுடன் நிகழ்ச்சி நடந்துள்ளது சிறப்பான முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்த உள்ளகப் பயிற்சி குறித்து யாரேனும் கட்டுரை எழுதினால் பிற ஊடகங்களில் செய்தி வெளியிடலாம். பொதுவாக, பல கல்வி நிலையங்களில் விக்கி குறித்த பயிற்சிகள் கொண்டு சேர்ந்துள்ளதால் தொடர்பாடல் எளிதாக இருக்கும். இனி ஒவ்வொரு ஆண்டும் உள்ளகப் பயிற்சியை நடத்தப் பரிந்துரைக்கிறேன். பொது அறிவிப்பைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி ஆர்வமுள்ள மாணவர்களை இணைத்துக் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 14:56, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]