பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கமை வகையில் சேராது. இந்நூலின் குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:36, 31 சனவரி 2017 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

  • பொதுவகத்தில் மின்னூலாக (பி.டி.எவ் = pdf) இருக்கும் மூலஆவணமானது, உருபட வடிவில் உள்ளது. மொழியியல் துறையின் கணினி வழி ஆராய்ச்சிக்கும், அலைப்பேசி(mobile phone) கிண்டில்(kindle) போன்ற கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தக் கூடிய ஆவணமாக மாற்றவும், இப்பட ஆவணத்தை, எழுத்து ஆவணமாக மாற்றவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்நூலுக்கும், அத்தகைய எழுத்தாவண முயற்சியானது, விக்கிமூலத்திட்டத்திலும் செய்யப்படுகிறது. அத்தகையை எழுத்தாவண முயற்சியின், விக்கிமூல வடிவத்தினையும், வழிமுறைகளையும் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.--உழவன் (உரை) 01:11, 3 பெப்ரவரி 2017 (UTC)

நீக்கல் வேண்டுகோள்[தொகு]

நீக்கலாம்[தொகு]

  1. இந்த நூலைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை பண்டிதரைப் பற்றிய கட்டுரையிலேயே தரலாம். தனியான பக்கம் தேவையற்றது.--Kanags \உரையாடுக 06:48, 3 பெப்ரவரி 2017 (UTC)
    ஆம். விரிவாக்கம் செய்யவில்லை எனில், நீக்கி விடலாம். விரிவாக்கத்தை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்?--உழவன் (உரை) 09:06, 3 பெப்ரவரி 2017 (UTC)
  2. நீக்கலாம். உசாத்துணையும் இல்லை. குறிப்பிடத்தக்கமையும் நிறுவப்படவில்லை. --~AntanO4task (பேச்சு) 03:04, 4 பெப்ரவரி 2017 (UTC)
    உசாத்துணையாக குறித்த நூலே கொடுக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற உசாத்துணை. காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) --~AntanO4task (பேச்சு) 03:26, 4 பெப்ரவரி 2017 (UTC)
    வழிகாட்டுதலுக்கு நன்றி. நீக்கியுள்ளேன். மேலும், சுட்டுக.--உழவன் (உரை) 03:37, 4 பெப்ரவரி 2017 (UTC)
  3. .

நீக்கல் வேண்டாம்[தொகு]

  1. 2013 ஆம் ஆண்டு, இங்கு கூறப்பட்ட பிறரின் எண்ணங்களைக் கொண்டு செயற்படுகிறேன். அதில் நீங்கள் சுட்டியதை, நீங்களே இதுவரை, அங்கு குறிப்பிடவில்லை என்பதே நினைவில் கொள்ளவும். எனினும், மேற்கூறிய இரண்டு காரணங்களையும் சரிசெய்துள்ளேன். மேலும், பிறிரின் எண்ணங்களை அறிந்து மேம்படுத்துவேன்.--உழவன் (உரை)
  2. தலைப்பை ”அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள்” என்ற தலைப்பிற்கு நகர்த்தி விட்டு கட்டுரையில் நூலில் உள்ளது போலவே ’அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் -1’ என்ற நூல் எனச் சுட்டிக் காட்டலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 06:26, 4 பெப்ரவரி 2017 (UTC)
    கட்டுரை இதுவரைக்கும் குறிப்பிடத்தக்கமையை நிலை நாட்டவில்லை. விரிவாக்கம், உசாத்துணை என்பவற்றுக்கு அப்பால் குறிப்பிடத்தக்கமை மிக அவசியம். தயவுசெய்து நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமையை விளங்கிக் கொண்டு கட்டுரையை வளர்த்தெடுங்கள். நன்றி. --~AntanO4task (பேச்சு) 04:31, 7 பெப்ரவரி 2017 (UTC)
    ஏற்கனவே, இதுபற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். திரும்ப திரும்ப எழுத வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். பிறரிடம் சொல்லினால், அவர்களும் எனக்கு வழிகாட்ட ஏதுவாகும். ஒரு திராவிட அறிஞரின் நூல் இது. திராவிடம் என்ற சொல்லே இவர் அறிமுகப்படுத்தியதாக இயம்பும் நூல்கள் பல உள்ளன. தமிழக அரசு போற்றும் ஒரு நூல். குறிப்பிடத்க்கமையில் என்னென்ன வேண்டும் என்று ஏதேனும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா? இல்லையென்றால், அனைவரின் எண்ணங்களை உள்வாங்கி செயற்படுவேன். நான் இங்கு ஆய்வு பணி செய்ய விரும்பவில்லை. என்ன எதிர்பார்க்கிறீர்கள். எவ்வளவு நாட்களுக்குள் செய்ய வேண்டும்? என்று வழிகாட்டினால், வளர்ச்சிக்கு உதவும்.--உழவன் (உரை) 05:01, 7 பெப்ரவரி 2017 (UTC)
    குறிப்பிடத்தக்கமையை நிலை நாட்டவில்லை. இது இடம்பெறாதவரை இதைத்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டியுள்ளது. உங்களுக்கு குறிப்பிடத்தக்கமை பற்றிய புரிதல் ஏற்படாதவரை இப்பேச்சுப்பக்கம் ஏரணச் சுழற்சியில்தான் இருக்கும் என நினைக்கிறேன். --~AntanO4task (பேச்சு) 10:39, 13 பெப்ரவரி 2017 (UTC)
    நீங்கள் முதல் முறை சுட்டிய பிறகு, பல மாற்றங்களைச் செய்துள்ளேன். ஆசிரியரின் எழுத்தாக்கம் தமிழக வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதால் தான் இன்றுவரை, பேசப்படுவதற்கு தொடுப்புகளைத் தந்துள்ளேன். வேறுஎன்ன தரவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. நமது உரையாடல் பலருக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கிலேயே உரையாடுகிறேன். உங்கள் பேச்சுப்பக்கத்தில், உங்களுக்கு பணியடர்வு என்று கூறியிருப்பதால், வேறு நண்பர்களிடம் வினவ விரும்புகிறேன். நீங்களே வழிக்காட்டினாலும், மகிழச்சியே. பிறரின் எண்ணங்களையும், இதுகுறித்து எப்படி இங்கே குவிப்பது? ஒரு கொள்கை அறிமுக அளவில் இருக்கும் போது, அதனை தெளிவு படுத்த வேண்டியது நமது கடமை. நடைமுறைகளை அனைவரும் உள்வாங்கி செயற்பட வழிகாட்டுதல் விளக்கம் தேவை. அதுவே இது குறித்த எனது தேவை. --உழவன் (உரை) 13:21, 13 பெப்ரவரி 2017 (UTC)
  3. \\நூலின் ஆசிரியர் மிகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவராக இருப்பின் அவருடைய எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம். நூலின் ஆசிரியர் விக்கிபீடியாவின் தரத்துக்கேற்ப குறிப்பிடத்தகுந்தவர் என எண்ணாமல், நூலின் ஆசிரியர் பொதுவில் மிகச் சிறப்பு பெற்றவர் எனவே அவருடைய வாழ்க்கையும் எழுத்துப்படைப்புகளும் பரவலாக பயிலப்படலாம் என்ற வகையில் கருத்தில் கொள்ளலாம்.\\ (விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்)) -இதன்படி இந்நூலாசிரியரின் நூல்கள் குறிப்பிடத்தக்கமை பெற்றவையாகாவா?--Booradleyp1 (பேச்சு) 17:13, 24 பெப்ரவரி 2017 (UTC) -வழிகாட்டலில் தரப்பட்டுள்ள
    எனக்கு நூலாசிரியரின் வரலாற்றுச் சிறப்புப் பற்றித் தெரியாது. வேறு யாராவது இதனை உறுதிப்படுத்தலாம். நிற்க 5 விதி 100 வீதம் அப்படியே பின்பற்றப்படுவதில்லை. ஆதனால், ஆ.வியில் The book's author is so historically significant that any of the author's written works may be considered notable. என்றும் the book's author is of exceptional significance and the author's life and body of written work would be a common subject of academic study. என்றும் In some situations— for example, if a given book itself does not appear to be notable, but the author is notable— it may be more appropriate to feature material about the book in the author's article rather than creating a separate article for that book. It may sometimes be appropriate to merge an article on a book into an article that is a bibliography or list of books. என்றுள்ளதையும் கவனியுங்கள். ஆ.வியில் வரலாற்றுச் சிறப்பு பெற்றவர்களின் நூல்கள் நீக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். --~AntanO4task (பேச்சு) 06:58, 26 பெப்ரவரி 2017 (UTC)
  4. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரிய அறிஞரின் படைப்பைக் கண்டேன். முனைவர் பட்ட ஆய்விற்காக பௌத்தம் தொடர்பான ஆய்வினை 1993இல் நான் மேற்கொள்ள ஆரம்பித்தபோது இவரைப் பற்றி பல அறிஞர்கள் பேசுவதைக் கேட்டுள்ளேன். அப்போது முதல் இவரைப் பற்றி அறிந்தேன். அவருடைய எழுத்துகளில் மேலோட்டமாகப் பார்த்தால் சாதிய கருத்துக்கள் இருப்பதைப் போலத் தோன்றினாலும், பௌத்தம் சார்ந்த கருத்துக்களை அறிய முடிந்தது. பௌத்தம் தொடர்பான இவரது பங்கு அளப்பரியது என்பதை எனது 25 ஆண்டு கால ஆய்வு உணர்த்தியது. இவரைப் பற்றி தனியாக ஒரு பதிவு இருக்கும்போதும், இவ்வாறான நூல்கள் பற்றிய மதிப்பீடே அவரது எழுத்தை தமிழ்கூர் நல்லுலகில் கொண்டு சேர்க்கும். ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவும் பதிவு. சமுதாயத்திற்கு இவர்களைப் போன்றோரின் எழுத்துகளை எடுத்துச்செல்வது இன்றியமையாதது. அவ்வகையில் இதனை நீக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:55, 2 மார்ச் 2017 (UTC)
  5.  ஆதரவு இக்கட்டுரையை நீக்காமல் இருப்பதற்கு எனது பூரண ஆதரவு. மேலும் பா.ஜம்புலிங்கம் ஐயாவின் கருத்து வியக்க வைக்கின்றது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 2 மார்ச் 2017 (UTC)
    நூல் குறிப்பிடத்தக்கது என்பதை குறிப்பிடுங்கள். நூலாசிரியர் பற்றிய கலந்துரையாடல் தேவையற்றது. அவ்வாறாயின் நூலாசிரியர் கட்டுரை கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் ஒருவாருக்கு இந்நூல் எவ்விதம் சிறப்புடையது என்பதை கட்டுரையில் காட்ட வேண்டும். தயவு செய்து தேவையற்ற உரையாடல்கள் வேண்டாம். சிறிகீரன், வாக்களிப்பதால் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள். ஆகவே கருத்துடன் உரையாடுங்கள். --~AntanO4task (பேச்சு) 07:41, 4 மார்ச் 2017 (UTC)

நடுநிலை[தொகு]

  1. நூலின் ஆசிரியர் நன்கு அறியப்பட்டரே. ஆனால், நூலின் ஆசிரியர் நன்கு அறியப்பட்டவர் என்ற அடிப்படையில் மட்டும் ஒருவரின் எல்லா நூல்களுக்கும் கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதி விட முடியாது. நாட்டுடைமையானதால் மட்டுமே ஒரு நூல் கலைக்களஞ்சியக் கட்டுரைக்கான குறிப்பிடத்தக்கமை பெறுகிறது என்றும் நான் எண்ணவில்லை. குறிப்பிடத்தக்கமை தாண்டி வேறு சில காரணிகளின் காரணமாகவும் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. ஒரு நல்ல எழுத்தாளர் கூட சுமாரான நூல்களை எழுதியிருக்க முடியும். அவை அனைத்தைப் பற்றியும் கலைக்களஞ்சியக் கட்டுரை இடம் பெற வேண்டிய தேவை இல்லை. அந்நூலும் ஓரளவாவது குறிப்பிடத்தக்கது என்பதைக் கட்டுரையில் நிறுவ வேண்டும். இல்லை, சுமாரான திரைப்படங்களுக்கு எல்லாம் கட்டுரை எழுதும் போது நூல்களுக்குக் கூடாதா என்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமை குறித்து கொள்கை வகுத்து விட்டு அதன் அடிப்படையில் செயற்படலாம். இதில் தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றி தெரியாது என்பதால் கட்டுரையைத் திருத்தக்கூடாது, உரையாட மட்டுமே வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் விக்கிக் கொள்கைக்கு முரணானது மட்டுமன்று, தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் ஒற்றுமைக்கே உலை வைக்கும் எண்ணப்போக்கு ஆகும். தமிழே தெரியாத பிற மொழியாளர்கள் (மொழிபெயர்த்து) படித்தாலும் கட்டுரையின் முக்கியத்துவம் கூடுதல் உரையாடற் பக்க விளக்கங்கள் இன்றி, அதன் உள்ளடக்கத்தாலேயே அறியப்பட வேண்டும். இது தான் குறிப்பிடத்தக்கமைக்கான வரையறை. அதற்கான முயற்சியையாவது நாம் மேற்கொள்ள வேண்டும். இந்நூல் குறிப்பிடத்தக்கதெனில் நிச்சயம் துறை அறிஞர்கள், நூல்களின் மூலம் கூடுதல் உசாத்துணைகள் சிக்கலாம். அவ்வாறு உள்ள தரவுகளை இணையத்துக்கு வெளியே தேடிப் பிடித்துக் கட்டுரையில் தரவுகளைச் சேர்ப்பதால் கட்டுரையின் தரமே கூடும். உண்மையிலேயே குறிப்பிடத்தக்க கட்டுரைக்கு அதுவே நாம் செய்யும் நியாயம் ஆகும். பொதுவாக, ஒரு நூலைப் பற்றிய கட்டுரையில் அதன் அட்டைப்படம், உள்ளடக்கம் பற்றிய தரவுகளை மட்டும் தருவதை கலைக்களஞ்சியக் கட்டுரையாக கருத முடியாது. தரவுத் தள உருப்படியாகவே கருத முடியும். --இரவி (பேச்சு) 14:09, 5 மார்ச் 2017 (UTC)
    இரவி! // கட்டுரையில் தரவுகளைச் சேர்ப்பதால் கட்டுரையின் தரமே கூடும். உண்மையிலேயே குறிப்பிடத்தக்க கட்டுரைக்கு அதுவே நாம் செய்யும் நியாயம் ஆகும். பொதுவாக, ஒரு நூலைப் பற்றிய கட்டுரையில் அதன் அட்டைப்படம், உள்ளடக்கம் பற்றிய தரவுகளை மட்டும் தருவதை // எனவே, கட்டுரை உள்ளடக்கத்தை விரிவாக்குவேன். ,
    //இந்நூல் குறிப்பிடத்தக்கதெனில் நிச்சயம் துறை அறிஞர்கள், நூல்களின் மூலம் கூடுதல் உசாத்துணைகள் சிக்கலாம். // துறைசார் அறிஞர்களை நாடுவேன்.
    இதற்கு கொஞ்சம் கால எல்லைத் தருக. அதுவரை குறிப்பிடதக்கமை வார்ப்புரு மட்டும் இருப்பின், துறைசார் அறிஞர்களுக்கு தயக்கமின்றி எழுதுவர். நீக்கல் வார்ப்புரு அதுவரை நீக்கப்படக்கோருகிறேன்.
    நான் தடிமனாக எழுதிய பொருண்மையை கூறவில்லை.அங்ஙனம் புரிந்து கொள்ளபட்டமைக்கு வருந்துகிறேன். --உழவன் (உரை) 17:40, 8 மார்ச் 2017 (UTC)

ஆசிரியர் குறித்த விளக்கம்[தொகு]

இந்நூலாசிரியர் குறித்த கட்டுரை உள்ளதால் ஆசிரியர் பற்றிய விளக்கம் நூலின் கட்டுரைக்கு அதிகப்படியானது என்பதால் கீழ்க்காணும் பகுதியைக் கட்டுரையிலிருந்து நீக்கியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:53, 24 பெப்ரவரி 2017 (UTC)

\\தமிழில் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல இவரால் புதுவிளக்கமும். கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாசப் பண்டிதர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்த வாதியாக, அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, படைப் பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர். பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சிந்தனையில் நடை முறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதனால் இவருடைய சிந்தனைகள் கவனிக்கத்தக்கதாக உள்ளன.\\

கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி. இப்பத்தி நீக்குதல் எனக்கு வழிகாட்டுதலாக அமைந்தது.--உழவன் (உரை) 01:58, 25 பெப்ரவரி 2017 (UTC)

பொதுவான கருத்துகள்[தொகு]

தகவலுழவன் ஐயா, கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நூல் பற்றிய சிறப்பினை அறிந்துகொண்டேன். நூல் பற்றி இன்னும் உள்ள தகவல்களையும் இட்டு விரிவாக்கலாம். அத்துடன் இக்கட்டுரை குறிப்பிடத்தக்கது என எண்கிறேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:20, 28 பெப்ரவரி 2017 (UTC)