உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெட் ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெட் ஏர்வேஸ்
IATA ICAO அழைப்புக் குறியீடு
9W[1] JAI[1] JET AIRWAYS[2]
நிறுவல்1 ஏப்ரல் 1992 (1992-04-01)
செயற்பாடு துவக்கம்5 மே 1993 (1993-05-05)
செயற்பாடு நிறுத்தம்17 ஏப்ரல் 2019 (2019-04-17) (Until December 2024)
மையங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Intermiles[3][4]
வானூர்தி எண்ணிக்கை5
வர்த்தகம் செய்யப்பட்டதுமுபச532617
தேபசJETTAIRWAYS
ISININE802G01018
தலைமையிடம்தில்லி, இந்தியா
முக்கிய நபர்கள்முரளி லால் ஜெயின்)
RevenueIncrease 252 பில்லியன் (US$3.2 பில்லியன்) (FY 2017–18)[5]
பயனடை −6.3 பில்லியன் (US$−79 மில்லியன்) (FY 2017–18)[5]
பணியாளர்கள்16,015 (2017)[6]
வலைத்தளம்www.jetairways.com

ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) நிறுவனம் (Jet Airways (India) Limited),ஜெட் ஏர்வேஸ் என்ற பெயரில் வர்த்தகம் செய்யப்படும் இது தில்லியைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய விமான நிறுவனமாகும். இது மும்பையில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல் 1992 இல் ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமமாக இணைக்கப்பட்ட இந்த விமான நிறுவனம் 1993 இல் ஒரு வாடகை விமானச் சேவையைத் தொடங்கியது. இது 1995 ஆம் ஆண்டில் சர்வதேச விமானங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் முழு அளவிலான செயல்பாடுகளைத் தொடங்கியது. இந்த விமான நிறுவனம் 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டிலும் ஏர் சஹாராவை ஜெட்கனெக்ட்) கையகப்படுத்தியபோது பொதுமக்களுக்கான சேவையில் இறங்கியது. சிறுது காலம் சேவையில் ஈட்படாமல் இருக்கும் இந்த விமான நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செயல்பாடுகளை நிறுத்திய பின்னர் புத்துயிர் பெற்ற முதல் இந்திய விமான நிறுவனமாக இது மாறும்.[7]

விமான நிலையங்கள்

[தொகு]

இது பிப்ரவரி 2016 இல் 21.2% பயணிகள் சந்தைப் பங்கைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. மும்பையிலுள்ள சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இடங்களிலிருந்து உலகெங்கிலும் உள்ள 74 இடங்களுக்கு தினசரி 300 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது.

நிதி நிலைமை

[தொகு]

அதன் போட்டியாளர்களான, முக்கியமாக ஸ்பைஸ் ஜெட் மற்றும் இன்டிகோ ஆகியவை, அடுத்த ஆண்டுகளில் பயணக் கட்டணங்களை குறைத்ததால், அதையே இந்நிறுவனமும் இதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதானால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனும் பாதிப்படைந்தது. இதன் விளைவாக கடுமையான நிதி இழப்புகள் ஏற்பட்டன. நிறுவனம் அக்டோபர் 2017 இல் இண்டிகோவுக்கு பின்னால் இரண்டாவது இடத்திற்கு சரிந்து, பயணிகள் சந்தைப் பங்கை 17.8% கொண்டிருந்தது. கீழ்நோக்கிய சரிவு தொடர்ந்தது. இதன் விளைவாக 2019 இல் திவாலா நிலை ஏற்பட்டது.[8] ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல் 2019 இல் தனது செயல்பாடுகளை நிறுத்தியது.

2020 ஆம் ஆண்டில், ஜெட் ஏர்வேஸ் 2022 ஆம் ஆண்டில் நடவடிக்கைகளை மீண்டும் மறுதொடக்கம் செய்யும் நோக்கில் ஒரு முதலீட்டு நிறுவனமான கல்ராக் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது, இருப்பினும் நிதி சிக்கல்கள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துடன் நடந்து வரும் நடவடிக்கைகள் காரணமாக இது நடக்கவில்லை.[9] இந்த விமான நிறுவனம் இப்போது 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஜாலான்-கல்ராக்கின் உரிமை தக்கவைக்கப்பட்டுள்ளது.[10][11]

ஜெட் ஏர்வேஸின் போயிங் 737 விமானத்தின் தோற்றம்.

ஒப்பந்தங்கள்

[தொகு]

ஜெட் ஏர்வேஸ் தனது செயல்பாடுகளை நிறுத்துவதற்கு முன் பின்வரும் விமான நிறுவனங்களுடன் குறியீட்டு பகிர்வு ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தது

சேவைகள்

[தொகு]
போயிங் 777-300 இஆர் விமானத்தில் முதன்மை சிறப்பு வகுப்பு
ஜெட் ஏர்வேஸ் போயிங் 737 விமானத்தின் உட்புறத் தோற்றம்

விமானத்தின் உட்புறம்

[தொகு]

ஜெட் ஏர்வேஸ் முதல் வகுப்பு, முதன்மை சிறப்பு வகுப்பு (வணிகம்) மற்றும் சிக்கன வகுப்பு என மூன்று வகையான சேவைகளைக் கொண்டுள்ளது.[12]

  • தட்டையான படுக்கை வசதி கொண்ட முதல் வகுப்பு வசதி போயிங் 777-300 இஆர் விமானங்களில் வழங்கப்பட்டது. [13] மேலும் இதில் தனிப்பட்ட எல்சிடி தொலைக்காட்சிகள் மற்றும் இருக்கையில் மின்சாரம் வழங்குதல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.[14]
  • முதன்மை சிறப்பு வகுப்பு ஏர்பஸ் ஏ 330-200 மற்றும் போயிங் 777-300 இஆர் விமானங்களால் இயக்கப்படும் நீண்ட தூர சர்வதேச விமானங்களில் சாய்வு இருக்கைகள், தனிப்பட்ட எல்சிடி டிவிகளுடன் முழுமையாக தட்டையான படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றன.[15]
  • நீண்ட தூர விமானத்தில் சிக்கன வகுப்பு இருக்கையில் தனிப்பட்ட 10,6 அங்குலங்கள் (270 மிமீ) தொடுதிரை எல்சிடி தொலைக்காட்சி வதியைக் கொண்டிருந்தன.[16] போயிங் 737 விமானங்களால் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் முதன்மை மற்றும் சிக்கன வகுப்புகளைக் கொண்டிருந்தன. இதில் 10.6-அங்குல தொடுதிரை எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.[13] [16] சமீப காலம் வரை சிக்கன வகுப்பில் உணவு பரிமாறப்பட்டது. அவர்கள் ஜெட் பிஸ்ட்ரோ என்று பெயரில் இந்த உணவுச் சேவையை அறிமுகப்படுத்தினர். [14][15][16]

ஒய்-ஃபை வசதி

[தொகு]

பிப்ரவரி 1,2016 அன்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களின் பயணிகளின் வசதிக்காக ஒய்-ஃபை சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.[17]

விமான நிலையத்தில் ஓய்விடங்கள்

[தொகு]

முதல் மற்றும் முதன்மை வகுப்பு பயணிகளுக்கும் ஜெட் சலுகை பிளாட்டினம், கோல்ட் அல்லது சில்வர் அட்டை உறுப்பினர்களுக்கும் ஜெட் ஏர்வேஸின் விமான நிலைய ஓய்விடம் அளிக்கப்படுகிறது. பிரசெல்சில் உள்ள சர்வதேச விமான நிலைய ஓய்விடம் குளியலறைகள், வணிக வளாகம், கேளிக்கை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.<

இந்திய ஓய்விடங்கள்
சர்வதேச ஓய்விடங்கள்

விபத்தும் சம்பவங்களும்

[தொகு]
  • 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி, போபால்- இந்தூர் வழித்தடத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு ஏடியார் 72-212ஏ ஜெட் ஏர்வேஸ் விமானம் , புயலால் தாக்குண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணித்துக் கொண்டிருந்த 45 பிரயாணிகள் மற்றும் நால்வர் அடங்கிய வினாக் குழுவில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், விமானம் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதம் அடைந்தது.[18]
  • 18 ஆகஸ்ட் 2015: தோகா-கொச்சி வழித்தடத்தில் பறந்து கொண்டிருந்த போயிங் 737-800 ஜெட் ஏர்வேஸ் விமானம் 555, மோசமான வானிலை மற்றும் குறைந்த எரிபொருள் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானம் 349 கிலோ எரிபொருளுடன் ஓடுபாதை 32ல் தரையிறங்கியது. 150 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விமானத்திற்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.[19]
  • 27 டிசம்பர் 2016: ஜெட் ஏர்வேஸ் விமானம் 2374, போயிங் 737-800, 154 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் கோவாவிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்தது. மும்பையில் தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையின் விளிம்பிலிருந்து ஏறக்குறைய செங்குத்தாகச் சென்று நின்றது. இதன் விளைவாக 16 பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.[20]
  • 30 அக்டோபர் 2017: ஜெட் ஏர்வேஸ் விமானம் 339, போயிங் 737-900, மும்பையிலிருந்து தில்லிக்கு பறந்து கொண்டிருந்தது. விமானம் வெடிகுண்டு புரளிக்கு உட்பட்டது. மும்பையைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி பிர்ஜு கிஷோர் சல்லா, சிக்கன வகுப்பின் கழிவறையில் 12 கடத்தல்காரர்கள் விமானத்தில் இருந்ததாகவும், சரக்கு பகுதியில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, விமானத்தை பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குத் திருப்பிவிடுமாறு கோரியிருந்தார். பிறகு, விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறங்குவதற்காக திருப்பி விடப்பட்டது, அதன் பிறகு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் விமானத்தை சோதனை செய்ததில் குறிப்பு ஒரு புரளி என்று கண்டறியப்பட்டது. சல்லா பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்டார். மேலும் இந்திய விமானம் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் நபரும் ஆவார்.[21][22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Jet Airways". ch-aviation. Archived from the original on 5 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2017.
  2. "JO 7340.2G Contractions" (PDF). Federal Aviation Administration. 2 ஆகத்து 2017. pp. 3–1–17. Archived (PDF) from the original on 11 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2017.
  3. Kundu, Rhik (2019-11-14). "Seven month after Jet's grounding, JetPrivilege renamed InterMiles". Livemint (in ஆங்கிலம்). Mint. பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  4. "Jet Airways' frequent flier programme JetPrivilege is now InterMiles. The benefits and riders, explained". cnbctv18.com (in அமெரிக்க ஆங்கிலம்). 15 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  5. 5.0 5.1 "Audited Financial Year Results for the Financial Year ended 31st March 2018" (PDF). JetAirways. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
  6. Jet Airways Annual Report 2017 (PDF) (Report). Jet Airways. Archived from the original (PDF) on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  7. "India's Jet Airways yet to secure aircraft for ops restart". ch-aviation. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
  8. "NCLT admits lenders' move for bankruptcy proceedings against Jet Airways". 20 June 2019.
  9. "Is India's Jet Airways finally dead?". Quartz (in ஆங்கிலம்). 2023-05-22. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  10. "Jet Airways gains 5% after Jalan-Kalrock infuses Rs 100 cr, aims to take off next year" (in en). Moneycontrol. 29 September 2023. https://www.moneycontrol.com/news/business/markets/jet-airways-gains-5-after-jalan-kalrock-infuses-rs-100-cr-aims-to-take-off-next-year-11451261.html. 
  11. Bureau, The Hindu (2024-05-08). "Supreme Court hears SBI consortium's appeal against NCLAT verdict on Jet Airways transfer" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/supreme-court-hears-sbi-consortiums-appeal-against-nclat-verdict-on-jet-airways-transfer/article68154538.ece. 
  12. "Fleet Information". Jet Airways. Archived from the original on 20 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
  13. 13.0 13.1 "Fleet Information". Jet Airways. Archived from the original on 20 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
  14. 14.0 14.1 "First Class". Jet Airways. Archived from the original on 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
  15. 15.0 15.1 "Premiere Class". Jet Airways. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
  16. 16.0 16.1 16.2 "Economoy Class". Jet Airways. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
  17. "Jet airways to start in flight wireless streaming". Money Control. 1 February 2016 இம் மூலத்தில் இருந்து 3 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160403013936/http://www.moneycontrol.com/news/business/jet-airways-to-start-in-flight-wireless-streaming-service_5244161.html. 
  18. Ranter, Harro. "Aviation Safety Network Accident Description". aviation-safety.net. Aviation Safety Network. Archived from the original on 14 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 September 2013.
  19. Largha, Jasbir Singh; Dogra, Sharad; Joseph, A X (29 September 2016). "Final Investigation Report on serious incident to M/s Jet Airways Boeing 737-800W Aircraft VT-JFA at Cochin on 18.08.2015". www.dgca.gov.in. Directorate General of Civil Aviation. Archived from the original on 29 March 2024. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  20. Ranter, Harro. "ASN Aircraft accident Boeing 737-85R (WL) VT-JBG Goa-Dabolim Airport (GOI)". aviation-safety.net. Aviation Safety Network. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
  21. "Mumbai man becomes first to be put on no-fly list". The Times of India. 2018-05-20. https://timesofindia.indiatimes.com/india/mumbai-man-becomes-first-to-be-put-on-no-fly-list/articleshow/64240584.cms. 
  22. "Birju Salla is first person to be booked under Anti-Hijacking Act". The Times of India. 2017-11-01. https://timesofindia.indiatimes.com/city/mumbai/salla-is-first-person-to-be-booked-under-hijacking-act/articleshow/61375620.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெட்_ஏர்வேஸ்&oldid=4162679" இலிருந்து மீள்விக்கப்பட்டது