ஜெகதேவராயர்கள்
ஜெகதேவராயர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டின் பாராமகால் பகுதியையும், மைசூர் இராச்சியத்துக்கு உட்பட்ட பெரும் நிலப்பரப்பையும் கி.பி.1578 முதல் 1669 வரை நான்கைந்து தலைமுறையாக சுமார் 91 ஆண்டுகள் ஆட்சி செய்த தெலுங்கு மரபினர் ஆவர்.
இராணா ஜெகதேவராயன் வருகை
[தொகு]இராணா ஜெகதேவராயன், ஐதராபாத்தில் உள்ள நன்னல் சர்கார் என்ற இடத்தில் வாழ்ந்தவனாவான். இவன் பலிஜா சாதியில் விஷ்ணுவர்தன கோத்திரத்தில் பிறந்தவன்.[1] அப்பகுதியின் நவாப் இவன் மகளின் அழகால் ஈர்கப்பட்டான். இதனால் தன் மகளுக்கு நவாப்பினால் தொல்லை ஏற்படும் என்று கருதி ஜெகதேவராயன் தன்னோடு 64 குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு பெனுகொண்டாவை அடைந்தான். இவனோடு குடிபெயர்ந்த குடும்பத்தினரின் சந்ததியினர் இன்றும் கிருட்டிணகிரி, மகராசாகடை, திருப்பத்தூர், காவேரிப்பட்டணம் பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர்.
பாராமகாலை பரிசாக பெறல்
[தொகு]இராணா ஜெகதேவராயன் விசய நகர அரசப் பிரதிநிதியாக சந்திரகிரியை ஆண்டுவந்தவனின் உறவினனாவான். சந்திரகிரி மீது படையெடுத்து வந்த பீசாபூர் சுல்தான் அலி அதில் ஷாவின் படைகளுடன் தீவிரமாக போரிட்டு நாட்டைக்காத்தான். இதன் காரணமாக ஸ்ரீரங்க தேவ ராயன், பாராமகால் என்றழைக்கப்படும் பெரும் நிலப்பரப்பை ராணா ஜெகதேவராயனுக்கு கி.பி.1578இல் பரிசாக அளித்து, தன் மகளையும் மணமுடித்து தந்தார். இதன் பின்னர் ஜெகதேவராயன் தற்போது அவன் பெயராலே அழைக்கப்படும் ஜெகதேவியில் குடியேறினான். அவனை தொடர்ந்துவந்த குடும்பத்தினருக்கு காட்டை அழித்து நிறைய நிலங்களை அளித்தான். பின்னர் இவன் தனது தலைநகரை ஜெகதேவியில் இருந்து இராயக்கோட்டைக்கு மாற்றினார்.
பாராமகால்
[தொகு]பாராமகால் என்பது கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர் வட்டம் ஆகிய வட்டங்களோடு கந்திகுத்தி சமீந்தாரின் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பாகும்.[2][3] பாராமகால் பகுதியின் ஆட்சியாளராக பொறுப்பேற்ற ஜெகதேவராயர் பன்னிரெண்டு கோட்டைகளை உருவாக்கி தன் பன்னிரெண்டு மகன்களின் பொறுப்பில் விடுத்தான் என்று கூறப்படுகிறது.[4]
பாராமகால் என்றழைக்கப்படும் 12 கோட்டைகள்[5]
- ஜெகதேவி
- நாகமலைத் துர்க்கம்
- மல்லப்பாடி துர்க்கம்
- மத்தூர்
- ககனகிரி
- தட்டக்கல் கோட்டை
- கிருட்ணகிரிக் கோட்டை
- மகராசாகடை
- காவேரிப்பட்டணம்
- வீரபத்ர துர்க்கம்
- போளுதிம்மராயன் துர்க்கம்
- இராயக்கோட்டை
இம்மடி ஜெகதேவராயன்
[தொகு]இராணா ஜெகதேவராயனுக்குப் பிறகு அவன் மகன் இம்மடி ஜெகதேவராயன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். ஏறக்குறைய கி.பி.1589இல் கோல்கொண்டாவின் முகமது குத்ஷா பெனுகொண்டாவின் மீது போர்த் தொடுத்தான். இப்போரில் இவன் வீரப்போர் புரிந்து முற்றுகையை முறியடித்தான். இதற்குப் பரிசாக விஜயநகர மன்னன் வெங்கடபதி ராயன் இவனுக்கு சென்னபட்டனம் ஜாகீரை வழங்கினார்.[6] இவரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் பெங்களூர், மைசூர், இராமநகரம், மண்டியா, ஹாசன், தும்கூர், கோலார் மற்றும் தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பாராமகால் பகுதியையும் சேர்த்து கருநாடகத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்.
ஆட்சிப் பகுதிகள்
[தொகு]இம்மடி ஜெகதேவராயன் ஆட்சி காலத்தில் இராயக்கோட்டையில் இருந்து தலைநகரை சென்னபட்டணத்திற்குக்கு மாற்றினார்.
ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.
[தொகு]ஜெகதேவிராயர் மரபுவழி
[தொகு]- இராணா பெத்த ஜெகதேவராயன்
- இராணா அங்குசராயன்
- இராணா குமார ஜெகதேவராயன்
- இம்மடி அங்குசராயன்
மரபின் முடிவு
[தொகு]இம்மரபின் இறுதி அரசன் கி.பி. 1669இல் பீசாபூர் சுல்தானின் தளபதியான முஸ்தபா கானுடன் போரிட்டு மாண்டான் இத்துடன் இம்மரபு அழிந்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑
- Benjamin Lewis Rice, ed. (1909). Mysore and Coorg from the Inscriptions. A. Constable & Company, Limited. p. 164.
The Channapatna chiefs generally bore the name Rana . Jagadēva - Rāya , after the founder of the family in Mysore. He was of the Telugu Banajiga caste and had possessions in Bāramahāl . His daughter was married to the Vijayanagar king
- Noboru Karashima, ed. (1999). Kingship in Indian History. Manohar Publishers & Distributors. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173043260.
To understand the historical process of the reducing of the Nayakas as an open status group into a mere shell of what they had formerly been and the growth of respective caste identities, the Telugu Balija caste and its history may give an important clue. Many Nayakas, including the three major Nayakas in the Tamil area and the Nayakas of Cannapattana, Beluru, and Rayadurga in the Kannada area, are said to have been Telugu Balijas.
- Ranjit Kumar Bhattacharya, S. B. Chakrabarti, ed. (2002). Indian Artisans: Social Institutions and Cultural Values. Ministry of Culture, Youth Affairs and Sports, Department of Culture, Government of India. p. 36.
- Benjamin Lewis Rice, ed. (1909). Mysore and Coorg from the Inscriptions. A. Constable & Company, Limited. p. 164.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-19. பார்க்கப்பட்ட நாள் 2015-02-22.
- ↑ http://krishnagiri.nic.in/history.htm
- ↑ செ. கோவிந்தராசு, வீரபத்திர துர்க்கம், கல்வெட்டு (தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் காலாண்டு இதழ்), இதழ் 18
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-22.
- ↑
- Niḍudavōlu Vēṅkaṭarāvu, ed. (1978). The Southern School in Telugu Literature. Vol. 1. University of Madras. p. 131.
- Sanjay Subrahmanyam, ed. (2012). Courtly Encounters: Translating Courtliness and Violence in Early Modern Eurasia. Vol. 1. Harvard University Press. p. 75.
- ↑ F.J.Richards,Madras District Gazetteers,Salem,Vol,1 part 2 pp.166-170
வெளி இணைப்புகள்
[தொகு]- காலப்போக்கில் மறைந்து வரும் ராயக்கோட்டை ரகசியம்; வரலாற்று ஆர்வலர்கள் கவலை, தினமலர், நாள்: ஆகஸ்டு 9, 2014