இராயக்கோட்டை (கோட்டை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயக்கோட்டை
பகுதி: தமிழ்நாடு
இராயக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
இராயக்கோட்டையில் உள்ள மதில் சுவர்
இராயக்கோட்டை is located in தமிழ் நாடு
இராயக்கோட்டை
இராயக்கோட்டை
வகை கோட்டைகள்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தமிழ்நாடு அரசு
நிலைமை நல்ல நிலையில் உள்ளது
இட வரலாறு
கட்டியவர் தெரியவில்லை

இராயக்கோட்டை (Rayakottai) இது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், இராயக்கோட்டை என்ற ஊரில் உள்ள ஓரு மலைக் கோட்டை ஆகும். இது ஒரு பாதுகாக்கபட்ட நினைவுச் சின்னமாகும். பழைய தருமபுரி மாவட்டப் பகுதியில் இருந்த பாராமகால் என அழைக்கபடும் பன்னிரண்டு கோட்டைகளில் இராயக் கோட்டையும் ஒன்று.

கோட்டை[தொகு]

கோட்டை உள்ள இம்மலை கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 3239 அடி உயரமுடையது. இக்கோட்டையை தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பலகுளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன.

மலைக்கோட்டையில் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக தரைக்கோட்டைக் கட்டப்பட்டது. இந்த மலை உச்சியில் இருந்து ஜெகதேவிராயரின் மருமகள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லப்படுகிறது.[1]

கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளின் ஒன்றாகவும், தலைமைக் கோட்டையாகவும் இருந்தது. இந்தியாவிற்கு போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் வந்த சமயத்தில் இந்த ஊரை மிக அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.[2]முதல் மூன்று மைசூர் போர்களிலும் இராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது. ஐதர் அலி, திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றுள்ளன. மூன்றாவது ஆங்கிலேய-மைசூர்ப் போரில் இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20, சூலை, 1791 இல் கைப்பற்றபட்டது. சிறீரங்கம் உடன்படிக்கையின் படி இக்கோட்டை ஆங்கிலேயர் வசமானது. தொடர்ந்து ஆங்கிலேயப்படை அங்கு தங்கியது. அக்காலகட்டத்தில் இறந்த படையினரின் உடல்கள் அங்கேயேப் புதைக்கப்பட்டன. அதில் முக்கியமானவர் ஜான் இன்னிஷ் ஆவார். அவர் இறந்த தேதி 20 மார்ச்சு 1802 என, இராயக்கோட்டைச் சாலையிலுள்ள பள்ளி அருகே இருக்கும் கல்லறை கூறுகிறது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 128. 
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயக்கோட்டை_(கோட்டை)&oldid=3658928" இலிருந்து மீள்விக்கப்பட்டது