சீரியம் மோனோசெலீனைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12014-83-4 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CeSe | |
தோற்றம் | ஊதா நிறத் திண்மம்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | NaCl-வகை (கனசதுரம்) |
புறவெளித் தொகுதி | Fm3m (எண். 225) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீரியம் மோனோசல்பைடு சீரியம் மோனோ தெலூரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீரியம் மோனோசெலீனைடு (Cerium monoselenide) என்பது CeSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Ce3+Se2−(e−) என்ற வடிவத்தில் இது காணப்படுகிறது.[2]
தயாரிப்பு
[தொகு]சீரியம் செலீனைடுடன் சோடியம் உலோகத்தைச் சேர்த்து 600° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஒடுக்க வினை நிகழ்ந்து சீரியம் மோனோசெலீனைடு உருவாகிறது. சீரியம் செலீனைடுடன் கால்சியம் உலோகத்தைச் சேர்த்து 1000° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் ஒடுக்க வினை நிகழ்ந்து சீரியம் மோனோசெலீனைடு உருவாகிறது.[2]
- Ce2Se3 + 2Na → 2CeSe + Na2Se
சீரியம் செலீனைடுடன் சீரியம் ஈரைதரைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் சீரியம் மோனோசெலீனைடு உருவாகும்:[1]
- Ce2Se3 + CeH2 → 3 CeSe + H2↑
பண்புகள்
[தொகு]பல அரியமண் மோனோசால்கோசெனைடுகளைப் போலவே, சீரியம் மோனோசெலீனைடும் உலோக-வகை மின் கடத்துத்திறன் மற்றும் NaCl-வகை படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Obolonchik, V. A.; Mikhlina, T. M. Synthesis of rare earth metal monoselenides(in உருசிய மொழி). Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1968. 4(2): 287-8. ISSN:0002-337X
- ↑ 2.0 2.1 洪广言. 现代化学基础丛书 第36卷 稀土化学导论. 北京: 科学出版社, 2014. pp. 62-63. 2. 稀土硒化物 ISBN 978-7-03-040581-4
- ↑ Smolensky, G. A.; Adamjan, V. E.; Loginov, G. M. (1968-02-01). "Antiferromagnetic Properties of Light Rare Earth Monochalcogenides". Journal of Applied Physics (AIP Publishing) 39 (2): 786–790. doi:10.1063/1.2163619. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979.