அறிவுத் திருக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1: வரிசை 1:
'''அறிவுத் திருக்கோவில்''' என்பது [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள [[ஆழியாறு]] எனுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தினை [[வேதாத்திரி மகரிசி]] 1984 இல் அமைத்தார். இவ்விடத்தில் வேதாத்திரி மகரிசி சமாதி, அவர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், உண்டு உறைவிட பயிற்சி கட்டிடங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவ்விடம் ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா இடமாகவும் உள்ளது.
'''அறிவுத் திருக்கோவில்''' என்பது [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள [[ஆழியாறு]] எனுமிடத்தில் அமைந்துள்ளது.
{{Infobox person
|horsename = Vethathiri Maharishi
|image =Vethathiri Maharishi 2010 stamp of India.jpg
|image size = 250px
|caption = 2010 இல் இந்தியா வெளியிட்ட வேதாத்திரி மகரிஷி தபால் தலை
}}


இவ்விடத்தினை [[வேதாத்திரி மகரிசி]] 1984 இல் அமைத்தார். இவ்விடத்தில் வேதாத்திரி மகரிசி சமாதி, அவர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், உண்டு உறைவிட பயிற்சி கட்டிடங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவ்விடம் ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா இடமாகவும் உள்ளது.
இவ்விடம் [[உலக சமுதாய சேவா சங்கம்|உலக சமுதாய சேவா சங்கத்தால்]] (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.

இவ்விடம் [[உலக சமுதாய சேவா சங்கம்|உலக சமுதாய சேவா சங்கத்தால்]] (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.


==அமைவிடம்==
==அமைவிடம்==

14:10, 10 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

அறிவுத் திருக்கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு எனுமிடத்தில் அமைந்துள்ளது.

அறிவுத் திருக்கோவில்
2010 இல் இந்தியா வெளியிட்ட வேதாத்திரி மகரிஷி தபால் தலை

இவ்விடத்தினை வேதாத்திரி மகரிசி 1984 இல் அமைத்தார். இவ்விடத்தில் வேதாத்திரி மகரிசி சமாதி, அவர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், உண்டு உறைவிட பயிற்சி கட்டிடங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவ்விடம் ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா இடமாகவும் உள்ளது.

இவ்விடம் உலக சமுதாய சேவா சங்கத்தால் (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

அறிவுத் திருக்கோவில் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடிக்கு அருகில் அமைந்துள்ளது. [1]

அமைப்பு[தொகு]

அறிவுத் திருக்கோவிலினுள் வேதாத்திரி மகரிசியின் நினைவு மண்டபம், அவர் பயன்படுத்திய பொருட்களின் அருங்காட்சியகம், மகரிசி பயன்படுத்திய மகிழுந்து, மகரிசியின் புத்தகங்கள் விற்பனை கூடம் ஆகியவை அமைந்துள்ளன.[2] மகரிசியின் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய வசதியுள்ளது. இங்கு பல மனவளக்கலை மன்றத்திலிருந்து தியான பயிற்சிக்கு மாணவர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகள் அமைந்திருக்கிறது.[3]

பயிற்சிகள்[தொகு]

அறிவுத் திருக்கோவிலில் வேதாத்திரிய கல்வி நிறுவனத்தின் மூலம் ஆன்மீக யோகக்கல்வி வழங்கப்படுகிறது. இங்கு குண்டலினி யோகம், எளியமுறை உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் காயகல்ப பயிற்சிகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

பட்டபடிப்புகள்[தொகு]

வேதாத்திரி மகரிசி ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் இதுவரை 29 பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்று சான்றிதழ், பட்டயம், இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், முதுகலை ஆராய்ச்சி, முனைவர் பட்டம் ஆகியவற்றை பயிற்றுவித்து வருகிறது.இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.[4]

வரலாறு[தொகு]

முதல் அறிவுத்திருக்கோவிலானது கோயம்புத்தூரில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகரில் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது.

கிளைகள்[தொகு]

அறிவுத் திருக்கோவிலின் கிளைகள் சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அமெரிக்கா என உலகம் முழுவதும் அமைக்கப்படுகின்றன. இவைகளை உலக சமுதாய சேவா சங்கம் (WCSC) நிர்வகிக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை திருப்பூர், வேதபுரம், உடுமலை,நாமக்கல், சென்னை ஆவடி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், குடியாத்தம்,புதுச்சேரி ஆகிய இடங்களில் அறிவுத் திருக்கோவில் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.[5]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுத்_திருக்கோவில்&oldid=3296416" இலிருந்து மீள்விக்கப்பட்டது