ஜென்சி அந்தோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 188: வரிசை 188:
|}
|}


== வெளியிணைப்புகள் ==
== External links ==
* [http://www.vanijairam.com/Pages/Vani1978.html Jency], list of songs
* [http://www.vanijairam.com/Pages/Vani1978.html Jency], list of songs
* [http://www.hinduonnet.com/thehindu/mp/2006/04/29/stories/2006042900430100.htm The Hindu] Coming out of recluse
* [http://www.hinduonnet.com/thehindu/mp/2006/04/29/stories/2006042900430100.htm The Hindu] Coming out of recluse

07:18, 1 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

ஜென்சி அந்தோனி
பிறப்பு23 அக்டோபர் 1961 (1961-10-23) (அகவை 62)
கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)பாடகர், பின்னணிப் பாடகி
இசைத்துறையில்1966 – நடப்பு

ஜென்சி அந்தோனி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவான சில பாடல்களைப் பாடியுள்ளார்.

தொழில் வாழ்க்கை

ஜென்சி ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவர் வாழ்வில் இசை மிக இளம் வயதிலேயே கைகூடியது. தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய பெண் குரலை அறிமுகப் படுத்த எண்ணியிருந்த இசையமைப்பாளர் இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவரைப் பற்றிக் கேள்விப்படவே, இவரைத் தாம் இசையமைத்துக் கொண்டிருந்த "திரிபுரசுந்தரி" என்ற படத்தில் "வானத்துப் பூங்கிளி" என்ற பாடலைப் பாட அறிமுகப் படுத்தினார். அதைத் தொடர்ந்து "முள்ளும் மலரும்", "பிரியா போன்ற வெற்றிப்படங்களில் பாடினார். 1978 முதல் 1982 வரை பல வெற்றிப்படங்களில் பாடிக் கொண்டிருந்த இவர், திருமணத்துக்குப் பிறகு திரைப்படத் தொழிலைக் கைவிட்டுவிட்டுக் கிறித்தவச் சமயப் பாடல்களை மட்டும் பாடத் தொடங்கினார்.

இல்வாழ்க்கை

ஜென்சி 1983 இல் கிரெகரி தாமஸ் என்ற மலையாளத் தொழிலதிபரை மணந்தார். அவருக்கு நித்தின் என்ற மூத்த மகனும், நூபியா என்ற இளைய மகளும் இருக்கிறார்கள்.

பாடிய சில பாடல்கள்

ஆண்டு திரைப்படம் பாடல் இசை பாடகர்கள்
1978 திரிபுரசுந்தரி வானத்துப் பூங்கிளி இளையராஜா ௭ஸ். ஜானகி, ஜென்சி
முள்ளும் மலரும் அடி பெண்ணே இளையராஜா ஜென்சி
வட்டத்துக்குள் சதுரம் ஆடச் சொன்னாரே இளையராஜா ஜென்சி
சொன்னது நீதானா அலங்கார பொன் ஊஞ்சலே இளையராஜா ஜென்சி
பிரியா ௭ன் உயிர் நீதானே இளையராஜா கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி
1979 புதிய வார்ப்புகள் தம்தன நம்தன இளையராஜா ஜென்சி, பி. வசந்தா, குழுவினர்
புதிய வார்ப்புகள் இதியம் போகுதே இளையராஜா ஜென்சி
நிறம் மாறாத பூக்கள் ஆயிரம் மலர்களே இளையராஜா ஜென்சி, மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா
நிறம் மாறாத பூக்கள் இரு பறவைகள் இளையராஜா ஜென்சி
அன்பே சங்கீதா கீதா சங்கீதா இளையராஜா ஜெயச்சந்திரன், ஜென்சி
கடவுள் அமைத்த மேடை மயிலே மயிலே இளையராஜா எஸ். பி. பாலசுப்ரமணியம், ஜென்சி
பகலில் ஒரு இரவு தோட்டம் கொண்ட ராசாவே இளையராஜா இளையராஜா, ஜென்சி, குழுவினர்
அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஹேய் மஸ்தானா இளையராஜா எஸ். பி. பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், ஜென்சி
முகத்தில் முகம் பார்க்கலாம் அக்கா ஒரு ராஜாத்தி இளையராஜா ஜென்சி
பூந்தளிர் ஞான் ஞான் பாடும் இளையராஜா ஜென்சி
1980 எல்லாம் உன் கைராசி நான் உன்னைத் திரும்பத் திரும்ப இளையராஜா ஜென்சி
ஜானி என் வானிலே இளையராஜா ஜென்சி
கரும்பு வில் மீன்கொடி தேரில் இளையராஜா ஜென்சி, குழுவினர்
உல்லாசப்பறவைகள் தெய்வீக ராகம் இளையராஜா வாணி ஜெயராம், ஜென்சி
1981 டிக் டிக் டிக் பூ மலர்ந்திட நடமிடும் இளையராஜா ஜென்சி, கே. ஜே. யேசுதாஸ்
அலைகள் ஓய்வதில்லை காதல் ஓவியம் இளையராஜா இளையராஜா, ஜென்சி
அலைகள் ஓய்வதில்லை வாடி என் கப்பைக்கிழங்கே இளையராஜா பாஸ்கர், கங்கை அமரன், இளையராஜா, ஜென்சி
அலைகள் ஓய்வதில்லை விழியில் விழுந்து இளையராஜா இளையராஜா, ஜென்சி, எஸ். பி. சைலஜா
பனிமலர் பனியும் நானே மலரும் நீயே இளையராஜா எஸ். பி. பாலசுப்ரமணியம், ஜென்சி
1982 ஈர விழி காவியங்கள் என் கானம் எங்கு அரங்கேறும் இளையராஜா இளையராஜா, ஜென்சி
எங்கேயோ கேட்ட குரல் ஆத்தோர காத்தாட இளையராஜா ஜென்சி
மெட்டி கல்யாணம் என்னை முடிக்க இளையராஜா ஜென்சி, ராதிகா, ராஜேஷ், குழுவினர்
பூத்து நிக்குது காடு எச்சில் இரவுகள் இளையராஜா மலேசியா வாசுதேவன், ஜென்சி
ஆத்தோரம் காத்தாட எங்கேயோ கேட்ட குரல் இளையராஜா ஜென்சி
பூச்சூடிப் பொட்டும் வெச்சு பொன்னி இளையராஜா ஜென்சி

வெளியிணைப்புகள்

  • Jency, list of songs
  • The Hindu Coming out of recluse
  • Tamizh Cinema, Back with a Bang
  • [1], தேனிசைக்குரல் ஜென்சி ஸ்பெஷல்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்சி_அந்தோனி&oldid=3067529" இலிருந்து மீள்விக்கப்பட்டது