பயனர் பேச்சு:Yokishivam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 186: வரிசை 186:


:{{விருப்பம்}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 17:19, 7 அக்டோபர் 2013 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 17:19, 7 அக்டோபர் 2013 (UTC)

== வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் - பக்கம் ==

மேற்குறிப்பிட்ட பக்கம் சிறப்பாக வருகின்றது. மெருகூட்டவும். --[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 18:29, 14 அக்டோபர் 2013 (UTC)

18:29, 14 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!
வணக்கம்!!
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3
எனது பேச்சுப் பக்கத்திற்கு வந்த
அன்பினும் இனியவரே! வணக்கம்!!. என் பேச்சுப் பக்கத்திற்கு வந்த உங்களை வரவேற்கிறேன். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இது உதவும்.

மறுமொழி

ஐயா, வணக்கம்!

  1. அசுவமேத யாகம் கட்டுரையை முழுமையாக மாற்ற நேரிடும் என தெரிவித்திருந்தீர்கள். தாராளமாக செய்யுங்கள். தாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளபடி, ஆதாரத்துடன் விக்கியில் தகவல்கள் சேர்த்தலே மிகவும் முக்கியம். இக்கட்டுரை ஒரு முக்கிய கட்டுரை என்பதாலும், இத்துறையில் தாங்கள் ஆர்வமுள்ளவர் என்பதாலுமே தங்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.
  2. தாங்கள் அரசுத் துறையில் பணியாற்றியபோதும் 'சிறந்த உழைப்பாளர் விருது' களைப் பெற்றுள்ளீர்கள் என்ற தகவல் மனதிற்கு மிகுந்த மகிழ்வினைத் தருகிறது. உழைப்பிற்கு என்றும் மரியாதை உண்டு என்பது நன்றாகவே புலனாகிறது.
  3. தாங்கள் இங்கு சிறப்பாகப் பங்களிக்கும் அதே தருணத்தில்... தங்களின் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:01, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம் ஐயா!
உங்களின் கட்டுரைகளில் அடுத்தடுத்த 2 வாக்கியங்களுக்கு இடையே 'ஒரு இடைவெளி' (space) விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு 'ஒரு இடைவெளி' விட்டு எழுதினால்... கணினித் திரையில் அந்த வாக்கியங்களைப் படிக்கும் கண்களுக்கு உறுத்தல் ஏற்படாது.

உதாரணம்:

இடைவெளி இல்லாத வாக்கியங்களைக் கொண்ட பத்தி:

  • பதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், துரோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான்.பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது.இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.

ஒரு இடைவெளி விட்டு எழுதப்படும் வாக்கியங்களைக் கொண்ட அதே பத்தி:

  • பதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், துரோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான். பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது. இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.

அதாவது தலைமை ஏற்றான் என்பதற்கும் பதினெட்டு நாட்கள் என்பதற்கும் இடையே, முற்றுப் புள்ளிக்கு (full stop) அடுத்து ஒரு இடைவெளி விடுதல் வேண்டும்.

தங்களின் உழைப்பு, குமுகாயத்திற்கு முழுமையான பயனைத் தரவேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே நான் தங்களிடம் வேண்டுகோள்களை வைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

அன்பு செல்வ தங்களின் வேண்டுகோள் அல்ல வழிகாட்டல் பின்பற்றப் படும்.நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 03:44, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

உதவி

அன்பு செல்வா!துரோணர் கட்டுரையை உரை திருத்தம் செய்தால் நான் எழுதுவது குறித்து கொஞ்சம் புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தயவு செய்து செய்வீர்களா? நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 03:50, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

இந்த சனி, ஞாயிறுகளில் உரைத்திருத்தம் செய்துவிட்டு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:21, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:32, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

தங்களின் உடல்நலம் தற்போது மேம்பட்டிருக்கும் என நம்புகிறேன். உரிய ஓய்வு எடுத்துக் கொள்ளவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 19 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இராமாயணம்

வணக்கம், இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) என்ற கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுதுகிறீர்களா என்பதைக் கவனியுங்கள். இக்கையேட்டை உதவிக்குப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:14, 14 செப்டம்பர் 2013 (UTC)

அய்யா வணக்கம்! விக்கி நடைக்கு ஏற்ப இல்லாததை தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள் திருத்தலாம்/ மாற்றலாம்/ நீக்கலாம் --யோகிசிவம் (பேச்சு) 13:18, 14 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:07, 18 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:58, 27 செப்டம்பர் 2013 (UTC)

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்)

வணக்கம். ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்) கட்டுரையில்

\\இலக்கியத்தின் முதல் பயனே,வாழ்க்கைப் பிரச்சினைகளை,வாழ்க்கை நிலைகளை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான். இதன் மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நிலைகளைப் புரிந்துகொள்வதும், சமூக பரிணாமத்தின் மாற்றத்தை அறிய உதவும் ஆவணமும்;அறிவுத் தேவையும் கூட. ஆணாதிக்க சிந்தனையும், அதை உயர்த்திப்பிடிக்கிற இலக்கியங்களும்,உரத்துப்பெசுகிற ஊடகங்களும் வலம் வரும் இக்காலச் சூழலில்,பெண்ணியம் குறித்து பேசுகிற, அக்கரைப்படுகிற, தமிழ் பேசும் வாசகர்கள் பிற மொழிகளில் உள்ள மிகச் சிறப்பான பெண்ணிய இலக்கியப் படைப்புகளை அறிய விளைவது வளர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான ஆர்வம்.\\

இப்பகுதி, பொதுவாக இலக்கியத்தைப் பற்றித்தானே சொல்கிறது? இக்கட்டுரைக்குத் தேவையில்லை; அதனால்தான் நான் நீக்கினேன். ஆனால் நீங்கள் மறுபடியும் இணைத்துள்ளீர்கள். இப்பகுதி வேண்டாம். இதற்குப் பதில், நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களை இணைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 17:24, 19 செப்டம்பர் 2013 (UTC)

சகோதரிக்கு

வணக்கம்! Booradleyp1 இப்பகுதி இலக்கியத்தைப் பற்றிய எனது கருத்து. பொதுவாக பிற மொழிகளில் உள்ள மிகச் சிறப்பான பெண்ணிய இலக்கியப் படைப்புகளை அறிய விளைவது வளர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான,அவசியமென்று கருதுகிறேன். இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் இலக்கிய சமூக,சமுதாய பிண்ணனி அக்காலத்திய அரசர்களின் வீரதீர செயல்களும், தனித்த அந்தரங்கமும் ஆக இருப்பதை தாங்கள் அறிவீர்கள்!!!. ஆனால் எனது பணிவான கருத்து அந்த சமூதாயத்தில் அரசர் மட்டுமில்லை,மக்களும், ஏனையோரும். இந்த மக்களும், ஏனையோரும் ஏன் இலக்கிய படைப்புக்களில் இல்லை. பிற மொழியில் குறிப்பாக ராகுல்ஜீ படைப்புக்களில் மேற்ச் சொன்னவாறு மக்களும், ஏனையோரும் பங்கேற்பை காணமுடியும்.

தற்போதைய நமது சமூக சூழல் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் (தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி...) இதுகுறித்து நாம் உரத்து பேச வேண்டியவர்களாக இருக்கிறோம், என்பதை தங்களின் மேலான கவனத்திற்கும், பார்வைக்கும்...... சமர்ப்பிக்கிறேன்.

நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களை இணைக்கலாம்.

நான் தற்போது தொகுத்துக் கொண்டிருக்கிற இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களைத் தொகுக்கிற சமயத்தில் நண்பர் கனக்ஸ் விக்கியின் நடைக்கையேட்டை கவனிக்கவும் என்றார்.(எனது பேச்சுப் பக்கத்தை பாருங்கள்) எனக்குப் புரியவில்லை, இராமயணம் குறித்த உண்மையான யதார்த்தம் அது.

மேற்கண்ட கருத்து பரிமாற்றமே! தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் தெரிவியுங்கள். மாற்ற முயற்சி செய்கிறேன்.--யோகிசிவம் ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 12:28, 20 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம், உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் விக்கி ஒரு கலைக்களஞ்சியம். அதில் விவரங்களை மட்டுமே பதிவு செய்யலாம்; நமது சொந்தக் கருத்துக்களுக்கு இது இடமாகாது. ஒரு நூலைப் பற்றி எழுதும்போது அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், காலம், பின்னணி, அதன் உள்ளடக்கங்கள் (மிகவும் சுருக்கமாக, விரிவாகத் தந்தால் அந்த நூலையே படிக்கத் தந்தது போல இருக்கும். விக்கிமூலத்தில்தான் முழுநூலை அப்படியே எழுதலாம்).

ராஜஸ்தானத்து அந்தப்புரம் கட்டுரையைப் பொறுத்தவரை நீங்கள் இலக்கியம் குறித்து எழுதியுள்ளது இந்த நூலைப் பற்றி எழுதும் கட்டுரைக்கு பொருத்தமானது அல்ல; அதனால் அதனை நீக்கிவிடலாம் என்பதே மீண்டும் எனது கருத்து.

பெண்களின் நிலை சமுதாயத்தில் மோசமாக இருக்கிறது என்பது உண்மையே; அதைக் குறித்து நாம் கவனம் கொள்ளவேண்டும் என்ற உங்கள் எண்ணமும் சரியே; ஆனால் அதனை நாம் விக்கியில் பேச முடியாது. நடந்த சம்பவங்களையும் விளைவுகளையும் (உள்ளது உள்ளபடியே) தகுந்த ஆதாரங்களுடன் விக்கியில் கட்டுரையாகத் தரலாம். அவ்வளவுதான் இங்கு நாம் செய்யலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:04, 20 செப்டம்பர் 2013 (UTC)

மறுமொழி

வணக்கம்! Booradleyp1 நாம் எழுதுகிற கட்டுரை என்பதால் இலக்கியம் குறித்து எழுதினேன். இப்போது ராஜஸ்தானத்து அந்தப்புரம் பாருங்கள் நன்றி--யோகிசிவம் (பேச்சு) 16:12, 21 செப்டம்பர் 2013 (UTC)

புரிந்து கொண்டமைக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:45, 21 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:13, 27 செப்டம்பர் 2013 (UTC)

தமிழில் எழுதல்

கட்டுரைகள் எழுதும் போது பின்வருவனவற்றைக் கவனியுங்கள்

சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்(நூல்) - தவறு
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (நூல்) - சரி
சாதிகளையும்,சடங்குகளையும்,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - தவறு
சாதிகளையும் ,சடங்குகளையும் ,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - தவறு
சாதிகளையும், சடங்குகளையும், உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - சரி

--Kanags \உரையாடுக 05:30, 28 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி கனக்ஸ்! கவனமுடன்....பின்பற்றுகிறேன். நன்றியுடன்

பதக்கம்

சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான மகாபலிபுரம் சுற்றுலாவில் காணத்தக்க இடங்களுக்கு எங்களுக்கு வழிகாட்டியும், வரலாறுகளை எடுத்துரைத்தும் எங்களை வழிநடத்தியமைக்காக இந்தப் பதக்கத்தினை தந்து மகிழ்கிறேன். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 30 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:52, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் எனக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:35, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறுமொழி

இனிய சகோதரா! நன்றி!!

  • எனது உடல்நிலை கருதியே ஐந்துரதம், கடல் கோவில் ஆகிய இடங்களுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கடல் கோவிலில் உள்ள சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன் சைவ வலைவாசலுக்கு கூடுதல் தகவல் தங்களுக்கு கிடைத்து இருக்கும். மீண்டும் நான் சென்னை வரும்போது (ஞாயிற்றுக் கிழமையாய் பார்த்து) மீண்டும் மல்லை குறித்து கூடுதல் தகவலுடன் தங்களை சந்திக்கிறேன்.நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 16:39, 30 செப்டம்பர் 2013 (UTC)

அன்புடைய சகோதரி! சகோதரன் ஜெகதீசுவரனுடன் மாமல்லை செல்லும்போது தகவல் தருகிறேன்.

\\சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன்\\ உண்மைதான் அய்யா, தேனியாரிடம் கூட இலிங்க திருமேனியில் எதற்காக பட்டைகள் என்ற கேள்வியிருந்தது. என்னிடம் பதிலில்லை என்பதால் வெறுமையாகவே வந்தேன். தேனியார், சிவகோசரன் ஆகியோருடன் அனந்த சயனம் பற்றிய சிறு தமிழாய்வு கூட நிகழ்ந்தது. சிவகோசரன் முடிவில்லா கிடக்கை என்று தமிழ்படுத்தினார். கோயிலிலுள் திருமால் முழுவதுமாக படுத்திருந்தார். இதெல்லாம் என்னவகையான சிற்ப முறைகள் என்று தெரியவில்லை. அறிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். ஒரே முறையில் மாமல்லபுரத்தினை அறிந்து கொள்ளுதல் இயலாது என்பது அறிந்ததே. வருங்காலத்தில் ஈசன் அனுமதித்தால் நிச்சயம் அனைவரும் செல்வோம் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:54, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிவன்

எண்முகப் பட்டைக்கான சிறு விளக்கம்-( எமது குருநாதர் எமக்கு அருளியது) ஒருவன் தன்னையறிதல் வேண்டும் தான் யார்? தன் நிலை என்னை? என்பதை அறிவது தன்னையறியும் அறிவகும். அஃதில்லாமல், பிற அறிவெல்லாம் பேயறிவாகும். (பேய்போல் பிறப்பு இறப்பு என்று அழைய வேண்டும்)

சிவன் தன்னையறிந்த எங்கும் நிறைந்த ஏகாந்தன்,சித்தன்,அட்டமா சித்திகளோடு இருப்பவன்

அட்டமா சித்திகள்

  1. அனிமா  : மிகச்சிறிய பொருளாவது
  2. மகிமா  : மலைபோல் மிகப் பெரிதாவது
  3. கரிமா  : கனமாவது
  4. இலகிமா  : பஞ்சைப்போல் லேசாவது
  5. பிராப்தி  : எல்லாப் பொருளையும் தன்வசப்படுத்துதல்
  6. பிரகாமியம் :தங்கு தடையின்றி எல்லா இன்பங்களையும் பெறுவது
  7. ஈசத்துவம் :தத்துவங்களில் விருப்பப்படி நடத்தல்
  8. வசித்துவம் :எங்கும் நிறைந்து இறையிடம் கலந்து இருத்தல்

மேற்கண்ட அட்டமாசித்திகளை (எட்டு) சொல்கிற தத்துவமே எண்முகப் பட்டை

மிக விரிவான விளக்கத்திற்கு நன்றி அய்யா! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

டிவிட்டரில் தமிழ்

ஐயா, டிவிட்டரில் தமிழ் இடைமுகமோ, எழுத்துப்பெயர்ப்போ இல்லை. அதனால் வேறு எங்காவது தமிழில் தட்டச்சு இட்டு பயன்படுத்த வேண்டும் --நீச்சல்காரன் (பேச்சு) 17:12, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி! நீச்சல்!!அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 17:23, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பழனி விரைவுத் தொடருந்து

வணக்கம். பழனி விரைவுத் தொடருந்தின் படிமம் இணைத்தது நன்றாக உள்ளது. எனினும் எனக்கு ஒரு விருப்பம். தொடருந்தின் முடிவில் அல்லது தொடக்கத்தில் ஒரு பெட்டியில் அந்த வண்டியின் பெயர், எண் விவரங்களுடன் இருக்கும் ஒரு பலகை பொருத்தப்பட்டிருக்கும். அப்பகுதி படிமத்தில் இருக்குமாறு படமெடுத்து இணைத்தால் மேலும் பொருத்தமாக இருக்கும். முடிந்தால் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:16, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம்! தங்களின் விருப்பம் நாளை 08/10/2013 அன்று நிறைவு பெறும் --யோகிசிவம் (பேச்சு) 16:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 17:19, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் - பக்கம்

மேற்குறிப்பிட்ட பக்கம் சிறப்பாக வருகின்றது. மெருகூட்டவும். --பரிதிமதி (பேச்சு) 18:29, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yokishivam&oldid=1517682" இலிருந்து மீள்விக்கப்பட்டது