கல்லீரல்நோய் மூளைக்கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு
கல்லீரல் மூளைக்கோளாறின்போது காணப்படும் அல்சுமைர் இரண்டாம்வகை நரம்பு நார்த்திசுக்களின் நுண்வரைவி.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல், hepatology, infectious diseases, அவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10K72.
ஐ.சி.டி.-9572.2
மெரிசின்பிளசு000302
ஈமெடிசின்med/3185 article/182208
ம.பா.தD006501

கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ஈரல் ஆழ்துயில் அல்லது கோமா எப்பாடிகம் என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம். [1]

கல்லீரலினால் வழமையாக நீக்கப்படும் நச்சுப்பொருட்கள் அதன் செயலிழப்பால் குருதியோட்டத்தில் அதிகரிப்பதனால் இந்த நிலைமை ஏற்படுகிறது. கல்லீரலின் செயல்பாட்டுக் குறைவும் இந்நிலைக்கான மாற்றுக் காரணங்கள் இல்லாத நிலையும் கொண்டு இந்த நோய் அறுதியிடப்படுகிறது. குருதிச் சோதனைகளில் அம்மோனியா கூடுதளளவில் காணப்படுவதும் அறுதியிடலுக்குத் துணை புரிகிறது. கூடவே நிகழும் ஏதேனும் நோய்த்தொற்று அல்லது மலச்சிக்கல் மூலம் இந்தத் தாக்குதல்கள் தூண்டப்படுகின்றன. [1][2]

இந்த நோய் நிலைமை சிகிட்சை மூலம் மீளக்கூடியது. குடலில் நச்சுப்பொருட்கள் உற்பத்தியாகாது தடுப்பதன் மூலம் சிகிட்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக லாக்டோலோசு என்ற மலமிளக்கிகளைக் கொண்டோ அல்லது உள்வாங்காத நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்டோ இவ்வாறு தடுக்கப்படுகிறது. இதைத் தவிர, அடிப்படையான காரணங்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமும் நோய் அறிகுறிகளைக் குறைக்க உதவும். கடிய கல்லீரல் செயலிழப்பு போன்ற சில நேரங்களில் கல்லீரல் நோய் மூளைக்கோளாறு தோன்றுதல் மாற்றுக் கல்லீரல் சிகிட்சைக்கான தேவையை அறிவிப்பதாக அமையும்.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Cash WJ, McConville P, McDermott E, McCormick PA, Callender ME, McDougall NI (January 2010). "Current concepts in the assessment and treatment of hepatic encephalopathy". QJM 103 (1): 9–16. doi:10.1093/qjmed/hcp152. பப்மெட்:19903725. https://archive.org/details/sim_qjm_2010-01_103_1/page/9.  Full text available here (free registration required).
  2. Chung RT, Podolsky DK (2005). "Cirrhosis and its complications". In Kasper DL, Braunwald E, Fauci AS; et al. (eds.). Harrison's Principles of Internal Medicine (16th ed.). New York, NY: McGraw-Hill. pp. 1858–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-071-39140-1. {{cite book}}: Explicit use of et al. in: |editor= (help)CS1 maint: multiple names: editors list (link)
  3. Polson J, Lee WM (May 2005). "AASLD position paper: the management of acute liver failure". Hepatology 41 (5): 1179–97. doi:10.1002/hep.20703. பப்மெட்:15841455. http://www3.interscience.wiley.com/cgi-bin/fulltext/110472818/HTMLSTART. பார்த்த நாள்: 2011-07-24.