உள்ளடக்கத்துக்குச் செல்

உண்மைநிலை நிகழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்மைநிலை நிகழ்ச்சி அல்லது யதார்த்த நிகழ்ச்சி (Reality) என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு வகையாகும். இது முன்கூட்டியே படமாக்கப்படாத நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை ஆவணப்படுத்துகிறது, இது பெரும்பாலும் தொழில்முறை நடிகர்களைக் காட்டிலும் அறியப்படாத நபர்களைக் கொண்டுள்ளது.

யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1990 களின் முற்பகுதியில் "ரியல் வேர்ல்ட்" மற்றும் 2000 களின் முற்பகுதியில் சர்வைவர், ஐடல்ஸ் மற்றும் பிக் பிரதர் போன்ற நிகழ்ச்சிகள் உலகளாவிய வெற்றிகளுடன் முக்கியத்துவம் பெற்றது, இவை பல நாடுகளிலும் மறு செய்யப்பட்டு ஒளிபரப்பானது.[1] யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் பங்குபெற விரும்புவோர் நேரடியாக அல்லது காணொளி மூலம் தேர்வாகப்படுகின்றார்கள். போட்டியாளர்கள் போட்டி அடிப்படையிலாக படிப்படியாக நீக்குவதைக் கொண்டிருக்கின்றனர், அவை நீதிபதிகள் குழு அல்லது நிகழ்ச்சியின் பார்வையாளர்களாகவும் இருக்கலாம்.

ஆவணப்படங்கள், தொலைக்காட்சி செய்திகள், விளையாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி, பேச்சு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் பொதுவாக யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வகைப்படுத்தப்படுவதில்லை.

தமிழ் தொலைக்காட்சியில் யதார்த்த நிகழ்ச்சிகள் 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள், ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரகமாலிகா, விஜய் தொலைக்காட்சியின் எயார்டல் சூப்பர் சிங்கர்[2] போன்ற பல பாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. அதே தருணம் தமிழ் தொலைக்காட்சித்துறை நடனந்திருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா, சூப்பர் டான்சர், போன்ற பல நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பிறகு அமெரிக்கா மற்றும் பிற நாட்டு யதார்த்த நிகழ்ச்சிகள் போன்று பிக் பாஸ் தமிழ், எங்க வீட்டு மாப்பிள்ளை, வில்லா டு வில்லேஜ், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, டான்ஸ் விஸ் டான்ஸ், சோப்பனா சுந்தரி, யார் அந்த ஸ்டார் 2020 போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hill, Annette (2005). Reality TV: Audiences and Popular Factual Television. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-26152-4.
  2. "The Hindu - A musical search". தி இந்து. 2008-06-30 இம் மூலத்தில் இருந்து 2008-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080704012230/http://www.hindu.com/mp/2008/06/30/stories/2008063050980100.htm. பார்த்த நாள்: 13 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மைநிலை_நிகழ்ச்சி&oldid=3315148" இலிருந்து மீள்விக்கப்பட்டது