இலக்குக் கவனிப்பாளர்
இலக்குக் கவனிப்பாளர் (wicket keeper) என்பவர் துடுப்பாட்டத்தில் மட்டையாடுபவருக்கு அருகில் உள்ள இலக்குக்குப் பின்னால் நின்றுகொண்டு களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்ட வீரர் ஆவார். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்பு மட்டை அணியவும் அனுமதிக்கப்படும்.[1]
இது ஒரு சிறப்பான களத்தடுப்புப் பணியாகும். சில நேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.[1].
நோக்கங்கள்
[தொகு]மட்டையாளரைக் கடந்து செல்லும் பந்துகளைத் தடுத்து நிறுத்துவதே கவனிப்பாளரின் முக்கிய செயல்பாடு ஆகும். ஆனால் அவர் மட்டையாளரை பல்வேறு வழிகளில் வீழ்த்தவும் முயற்சிக்க முடியும்:
- கவனிப்பாளரால் நிகழ்த்தப்படும் மிகவும் பொதுவான ஆட்டமிழப்பு, மட்டையாளரின் மட்டை விளிம்பில் பட்டு வரும் ஒரு பந்தைப் பிடிப்பதாகும். இது விளிம்பில் படுதல் (Edged) என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அதிக உயரத்தில் எழும்பிய பந்தைப் பிடிக்கவும் கவனிப்பாளர் உதவுகிறார். மற்ற களத்தடுப்பு வீரர்களை விட இலக்குக் கவனிப்பாளரால் அதிக பிடிகள் எடுக்கப்படுகின்றன.
- ஒருவேளை வீச்சுக்குப் பிறகு மட்டையாளர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் நிலையில் வீசப்பட்ட பந்து கவனிப்பாளரிடம் சென்றால், அவர் அந்த பந்தால் இலக்கைத் தாக்கி அதன் மேலிருக்கும் இணைப்பான்களை விழச்செய்து அந்த மட்டையாளரை வீழ்த்தலாம். இது இலக்கு வீழ்த்தல் எனப்படுகிறது.
- களத்தில் அடிக்கப்பட்ட பந்தை ஒரு களத்தடுப்பு வீரர் பிடித்து இலக்கின் அருகில் நிற்கும் கவனிப்பாளரிடம் விரைவாக வீசினால் அவர் அதைப் பிடித்து மட்டையாளரை ஓட்ட வீழ்த்தல் செய்ய முயற்சிப்பார்.
முன்னணி பன்னாட்டுத் துடுப்பாட்ட இலக்குக் கவனிப்பாளர்கள்
[தொகு]- தடித்த எழுத்துக்கள் தற்போது விளையாடும் வீரரைக் குறிக்கிறது
- போட்டிகள் என்பது வீரர் பங்கேற்ற அனைத்து போட்டிகளையும் உள்ளடக்கியது ஆகும்.
- சில வீரர்கள் களத்தடுப்பு வீரராக விளையாடிய போட்டிகளில் எடுத்த பிடிகளும் மொத்த வீழ்த்தல்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்வு
[தொகு]தேர்வுப் போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி 10 இலக்குக் கவனிப்பாளர்கள் விவரம் பின்வருமாறு.[2]
வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி தேர்வு இலக்குக் கவனிப்பாளர்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
தரம் | பெயர் | நாடு | போ. | பிடி. | இவீ | மொவீ |
1 | மார்க் பவுச்சர் | தென்னாப்பிரிக்கா | 147 | 532 | 23 | 555 |
2 | ஆடம் கில்கிறிஸ்ட் | ஆத்திரேலியா | 96 | 379 | 37 | 416 |
3 | இயான் என்லி | ஆத்திரேலியா | 119 | 366 | 29 | 395 |
4 | ரோட் மார்ஷ் | ஆத்திரேலியா | 96 | 343 | 12 | 355 |
5 | மகேந்திரசிங் தோனி | இந்தியா | 90 | 256 | 38 | 294 |
6 | பிராட் ஹாடின் | ஆத்திரேலியா | 66 | 262 | 8 | 270 |
ஜெஃப் டுஜன் | மேற்கிந்தியத் தீவுகள் | 81 | 265 | 5 | 270 | |
8 | அலன் நொட் | இங்கிலாந்து | 95 | 250 | 19 | 269 |
9 | மாட் பிரியர் | இங்கிலாந்து | 79 | 243 | 13 | 256 |
10 | அலெக் ஸ்டுவார்ட் | இங்கிலாந்து | 133 | 227 | 14 | 241 |
13 ஆகத்து 2018 நிலவரப்படி |
ஒநாப
[தொகு]ஒநாப போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி 10 இலக்குக் கவனிப்பாளர்கள் விவரம் பின்வருமாறு .[3]
வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி ஒநாப இலக்குக் கவனிப்பாளர்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
தரம் | பெயர் | நாடு | போ. | பிடி. | இவீ | மொவீ |
1 | குமார் சங்கக்கார | இலங்கை | 404 | 383 | 99 | 482 |
2 | ஆடம் கில்கிறிஸ்ட் | ஆத்திரேலியா | 287 | 417 | 55 | 472 |
3 | மகேந்திரசிங் தோனி | இந்தியா | 341 | 321 | 123 | 444 |
4 | மார்க் பவுச்சர் | தென்னாப்பிரிக்கா | 295 | 402 | 22 | 424 |
5 | மொயீன் கான் | பாக்கித்தான் | 219 | 214 | 73 | 287 |
6 | பிரண்டன் மெக்கல்லம் | நியூசிலாந்து | 260 | 227 | 15 | 242 |
7 | இயன் ஹென்லி | ஆத்திரேலியா | 168 | 194 | 39 | 233 |
8 | ரஷீத் லதிஃப் | பாக்கித்தான் | 166 | 182 | 38 | 220 |
9 | முஷ்பிகுர் ரகீம் | வங்காளதேசம் | 205 | 169 | 42 | 211 |
10 | ருமேஸ் களுவித்தாரன | இலங்கை | 189 | 131 | 75 | 206 |
23 செப்டம்பர் 2019 நிலவரப்படி |
இ20ப
[தொகு]இ20ப போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி இலக்குக் கவனிப்பாளர்கள் பின்வருமாறு.[4]
வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி இ20ப இலக்குக் கவனிப்பாளர்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
தரம் | பெயர் | நாடு | போ. | பிடி. | இவீ | மொவீ |
1 | மகேந்திரசிங் தோனி | இந்தியா | 98 | 57 | 34 | 91 |
2 | காம்ரான் அக்மல் | பாக்கித்தான் | 58 | 28 | 32 | 60 |
3 | தினேசு ராம்தின் | மேற்கிந்தியத் தீவுகள் | 68 | 38 | 20 | 58 |
4 | முஷ்பிகுர் ரகீம் | வங்காளதேசம் | 81 | 30 | 28 | 58 |
5 | முகம்மது சாஹ்ஷாட் | ஆப்கானித்தான் | 65 | 26 | 28 | 54 |
6 | குவின்டன் டி கொக் | தென்னாப்பிரிக்கா | 38 | 36 | 10 | 46 |
7 | குமார் சங்கக்கார | இலங்கை | 56 | 25 | 20 | 45 |
8 | சப்ராஸ் அகமது | பாக்கித்தான் | 55 | 34 | 10 | 44 |
9 | பிரண்டன் மெக்கல்லம் | நியூசிலாந்து | 71 | 24 | 8 | 32 |
10 | லூக் ரோஞ்சி | நியூசிலாந்து | 33 | 24 | 6 | 30 |
23 செப்டம்பர் 2019 நிலவரப்படி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Law 40 The Wicket Keeper". Lords Home of Cricket இம் மூலத்தில் இருந்து 2010-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100221064529/http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-40-the-wicket-keeper,66,AR.html.
- ↑ "Wicketkeeping Records most Test Match dismissals in a career". Cricinfo. http://stats.cricinfo.com/ci/content/records/283791.html.
- ↑ "Wicketkeeping Records most ODI dismissals in a career". Cricinfo. http://stats.cricinfo.com/ci/content/records/283792.html.
- ↑ "Wicketkeeping Records most T20I Match dismissals in a career". Cricinfo. http://stats.cricinfo.com/ci/content/records/283793.html.