உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரி புரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி புரூக்
2022இல் யார்க்சயர் அணிக்காக நூறு ஓட்டங்கள் அடித்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் புரூக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆரி செரிங்டன் புரூக்
பிறப்பு22 பெப்ரவரி 1999 (1999-02-22) (அகவை 25)
ஏடேல், மேற்கு யார்க்சயர், இங்கிலாந்து
உயரம்183 cm (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவிரைவு வீச்சு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 707)8 செப்டம்பர் 2022 எ. South Africa
கடைசித் தேர்வு17 திசம்பர் 2022 எ. Pakistan
இ20ப அறிமுகம் (தொப்பி 92)26 சனவரி 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப13 நவம்பர் 2022 எ. Pakistan
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–தற்போது வரையார்க்சயர் (squad no. 88)
2021–தற்போது வரைநார்தன் சூப்பர்சார்ஜஸ்
2021/22ஓபர்டு அரிகேன்சு
2022லாகூர் கலாந்தர்சு
2023சன்ரைசர்ஸ் ஐதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ப இ20 முதது ப அது
ஆட்டங்கள் 4 20 60 15
ஓட்டங்கள் 480 372 3,547 343
மட்டையாட்ட சராசரி 80.00 26.57 38.98 31.18
100கள்/50கள் 3/1 0/1 10/18 1/1
அதியுயர் ஓட்டம் 153 81* 194 103
வீசிய பந்துகள் 993 18
வீழ்த்தல்கள் 8 0
பந்துவீச்சு சராசரி 55.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 10/– 46/– 4/–
மூலம்: Cricinfo, 15 திசம்பர் 2022 2022

ஆரி செரிங்டன் புரூக் அல்லது ஹாரி செரிங்டன் புரூக் (Harry Cherrington Brook பிறப்பு: பிப்ரவரி 22, 1999) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்,இங்கிலாந்துக்காக சர்வதேசப் போட்டிகளிலும், யார்க்சயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடுகிறார்.[1][2] வலது கை மட்டையாளரான, இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். சனவரி 2022இல் இங்கிலாந்துக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார் [3] .

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

புரூக் கீக்லியில் பிறந்தார், ஆனால் வார்ஃபெடேலில் உள்ள பர்லியில் வளர்ந்தார் .இவரது குடும்பத்தினர் சங்கத் துடுப்பாட்டப் போட்டிகளில் தீவிரமாக இருந்தனர்.[4]

மேற்கு யாக்சயரில் உள்ள இல்க்லியில் உள்ள பள்ளியில் கல்வி பயின்றார். 14ஆம் வயதில், கும்ப்ரியாவில் உள்ள உறைவிடப் பள்ளியான செட்பெர்க் பள்ளியில் பயில உதவித்தொகை பெற்றார்.[2][5][6] முன்னாள் தொழில்முறை துடுப்பாட்ட வீரரும், செட்பெர்க் பள்ளித் துடுப்பாட்டப் பயிற்சியாளருமான மார்ட்டின் இசுபெய்டு தனது பள்ளி நாட்களில் புரூக்கின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் அலெக்ஸ் மேசன் கிரிக்கெட்டர் இதழில் தெரிவித்தார்.[7]

துடுப்பாட்ட வாழ்க்கை

[தொகு]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

புரூக் சூன் 26, 2016இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஹெடிங்லே துடுப்பாட்டத் திடலில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் யார்க்சயர் அணிக்காக அறிமுகமானார்.[2][5][6][8]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

ஆகஸ்ட் 2017இல் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியின் தலைவராக புரூக் இருந்தார்.

டிசம்பர் 2017இல், புரூக் 2018ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார் .[9] இங்கிலாந்தின் இரண்டாவது குழுப் போட்டியில், வங்காளதேசத்திற்கு எதிராக, ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்தார், அலெஸ்டர் குக்கிற்குப் பிறகு U19 உலகக் கிண்ணத்தில் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது இங்கிலாந்துத் தலைவர் ஆனார்.[10] 239 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் குவித்தவர் ஆனார்.[11] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை புரூக்கை அணியின் வளர்ந்து வரும் வீரராக அறிவித்தது.[12]

சான்றுகள்

[தொகு]
  1. "Harry's time will surely come again". 3 October 2020.
  2. 2.0 2.1 2.2 "Harry Brook". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 3 July 2017.
  3. "Harry Brook profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-10.
  4. https://cricketyorkshire.com/harry-brook/
  5. 5.0 5.1 Playfair Cricket Annual (70th edition). Headline. 2013.
  6. 6.0 6.1 "Harry Brook first-class debut for Yorkshire". Sedbergh School. 28 June 2016. Archived from the original on 27 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Brook No Argument". 28 செப்டம்பர் 2018. Archived from the original on 2024-05-21. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. Birkinshaw, Alan (29 June 2017). "Burley's Harry Brook makes his Yorkshire debut". Wharfedale Observer. பார்க்கப்பட்ட நாள் 3 July 2017.
  9. "Brook tasked with World Cup mood swing". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2017.
  10. "Brook century studs comprehensive England win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2018.
  11. "ICC Under-19 World Cup, 2017/18 - England Under-19s: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 February 2018.
  12. "U19CWC Report Card: England". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரி_புரூக்&oldid=4110627" இலிருந்து மீள்விக்கப்பட்டது