1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
நடத்தும் நகரம் | கோலாலம்பூர், மலேசியா | ||
---|---|---|---|
பங்கேற்கும் நாடுகள் | 7 | ||
துவக்க விழா | 14 டிசம்பர் 1965 | ||
நிறைவு விழா | 21 டிசம்பர் 1965 | ||
அலுவல்முறை துவக்கம் | இஸ்மாயில் நசிருதீன் யாங் டி பெர்துவான் அகோங் of மலேசியா | ||
Ceremony venue | மெர்டேகா அரங்கம், கோலாலம்பூர், மலேசியா | ||
|
1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1965; ஆங்கிலம்: 1965 Southeast Asian Peninsular Games) என்பது 3-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.[1]
சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் மூன்றாவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.
இந்த மூன்றாவது விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வு, மலேசியா கோலாலம்பூர் மாநகரில் 1965 டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 1965 டிசம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்தப் போட்டொயில் 14 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றன.
இந்த மூன்றாவது விளையாட்டு போட்டி, 1965-ஆம் ஆன்டில், லாவோஸ் நாட்டினால் நடத்தப்பட இருந்தது. நிதிச் சிக்கல்களினால் நடத்த இயலவில்லை. அதன் பின்னர் அந்தப் பொறுப்பை மலேசியா ஏற்றுக் கொண்டது.
கோலாலம்பூர், மெர்டேகா அரங்கத்தில் (Stadium Merdeka); மலேசியாவின் மாமன்னர் இஸ்மாயில் நசிருதீன் (Ismail Nasiruddin), இந்த விளையாட்டு நிகழ்வை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் தாய்லாந்து; அதைத் தொடர்ந்து மலேசியா; சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன.[1]
விளையாட்டுகள்
[தொகு]பங்கேற்பு நாடுகள்
[தொகு]- மியான்மர் (135)
- கம்போடியா (40)
- லாவோஸ் (20)
- மலேசியா (புரவலர்) (189)
- சிங்கப்பூர் (114)
- தெற்கு வியட்நாம் (121)
- தாய்லாந்து (186)
விளையாட்டு
[தொகு]- நீச்சல்
- தடகளம்
- இறகுப்பந்தாட்டம்
- கூடைப்பந்து
- குத்துச்சண்டை
- ஜுடோ
- குறி பார்த்துச் சுடுதல்
- சேப்பாக் தக்ராவ்
- மிதிவண்டி ஓட்டப்பந்தயம்
- கால்பந்து
- மேசைப்பந்தாட்டம்
- டென்னிசு
- கைப்பந்தாட்டம்
- பாரம் தூக்குதல்
பதக்க அட்டவணை
[தொகு]போட்டி நடத்திய நாடு (மலேசியா)
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | தாய்லாந்து | 38 | 33 | 35 | 106 |
2 | மலேசியா | 33 | 36 | 29 | 98 |
3 | சிங்கப்பூர் | 26 | 23 | 27 | 76 |
4 | கம்போடியா | 15 | 19 | 17 | 51 |
5 | மியான்மர் | 18 | 14 | 16 | 48 |
6 | வியட்நாம் | 5 | 7 | 7 | 19 |
7 | லாவோஸ் | 0 | 0 | 2 | 2 |
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 "OCA » Kuala Lumpur 1965 - The 3rd Southeast Asian Peninsular Games were held in Kuala Lumpur, Malaysia from 14 September - 21 September 1965". ocasia.org. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.