உள்ளடக்கத்துக்குச் செல்

தடகளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடகளப் போட்டிகள் என்பது விளையாட்டின் வகைகளில், ஓடுதல், குதித்தல் மற்றும் வீசுதல் ஆகியவற்றின் திறன்களில் நிறுவப்பட்ட போட்டிகளை உள்ளடக்கியது ஆகும்.[1] விளையாட்டு நடைபெறும் இடம், ஓடும் பாதை மற்றும் வீசுவதற்கான புல் களம் மற்றும் சில குதித்தல் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது. தடகளம் என்பது தனித்திறன் விளையாட்டுப் போட்டி என்ற குடையின் வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் சாலை ஓட்டம், நாடுகளுக்கிடையிலான ஓட்டம் மற்றும் பந்தய நடைப்பயிற்சி ஆகியவை அடங்கும். குறுவிரையோட்டம், நடுத்தர மற்றும் நீண்ட தூர நிகழ்வுகள், பந்தய நடைப்பயிற்சி மற்றும் தடைகளை உள்ளடக்கிய ஓட்டப் பந்தய நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறைந்த நேரத்தில் முடிக்கும் விளையாட்டு வீரரால் வெல்லப்படுகின்றன. குதித்தல் மற்றும் வீசுதல் நிகழ்வுகள் மிகப் பெரிய தூரம் அல்லது உயரத்தை அடைபவர்களால் வெல்லப்படுகின்றன. வழக்கமான குதித்தல் நிகழ்வுகளில் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் தண்டூண்றித் தாண்டுதல் ஆகியவை அடங்கும். மிகவும் பொதுவான வீசுதல் நிகழ்வுகள் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் மற்றும் சுத்தி எறிதல் ஆகியவை ஆகும். ஐந்து நிகழ்வுகளைக் கொண்ட ஐவகைப் போட்டி, ஏழு நிகழ்வுகளைக் கொண்ட எழுவகைப் போட்டி மற்றும் பத்து நிகழ்வுகளைக் பத்துவகைப் போட்டி போன்ற "ஒருங்கிணைந்த நிகழ்வுகள்" அல்லது "பல் நிகழ்வுகள்" உள்ளன. இவற்றில், தடகள மற்றும் கள நிகழ்வுகளின் கலவையில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். பெரும்பாலான தட மற்றும் கள நிகழ்வுகள் தனிப்பட்ட பங்கேற்பாளரின் வெற்றியையோ, தோல்வியையோ முடிவாகத் தருவதாகும். மிக முக்கியமான அணி நிகழ்வுகள் தொடர் ஓட்டப் பந்தயங்கள், அவை பொதுவாக நான்கு பேரைக் கொண்ட அணிகளைக் கொண்டிருக்கும். நிகழ்வுகள் ஏறத்தாழ ஆண்களுக்குத் தனியானதாகவும், பெண்களுக்குத் தனியானதாகவும் பிரித்து நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் பொதுவாக ஒரே விளையாட்டுத் திடலிலேயே நடத்தப்படுகின்றன. ஒரு பந்தயத்தில் ஒரே நேரத்தில் ஓட அதிகமான நபர்கள் இருந்தால், பங்கேற்பாளர்களின் களத்தை குறைக்க தொடக்க நிலைத் தேர்வு போட்டிகள் நடத்தப்படும்.

தடகளப் போட்டிகள் என்பது பழமையான விளையாட்டுகளில் ஒன்றாகும். பண்டைய காலங்களில், கிரேக்க நாட்டில் பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போல இது திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான கூடல்களுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவும் இருந்தது. தற்காலத்தில், உலகின் மிகவும் பெருமைக்குரிய இரண்டு தடகளப் போட்டிகளானவ ஒலிம்பிக் போட்டிகளில் நடக்கும் தனித்திறன் போட்டிகளும் உலக தடகள வாயைாளர் போட்டிகளும் ஆகும். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கமானது சர்வதேச விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.

குறிப்பிட்ட நிகழ்வுகளில், தடகளத்தில் உலக சாதனைகளின் பதிவுகள் மற்றும் தடகளத்தில் தேசிய சாதனைகளின் பதிவுகள் அந்தந்த மட்டங்களில் தொடங்கி தனிப்பட்ட நபரது அடைவுகள் வரை பராமரிக்கப்படுகின்றன. இருப்பினும், விளையாட்டு வீரர்கள் நிகழ்வின் விதிகள் அல்லது விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டால், அவர்கள் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு அவர்களின் சாதனைகளும் அழிக்கப்படும்.

வட அமெரிக்காவில், தடகளம் என்பது பின்வரும் இதர தனித்திறன் போட்டிகளான நாடுகளுக்கிடையேயான ஓட்டம், மாரத்தான் மற்றும் சாலை ஓட்டம் போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tom Jordan. "Track and Field". scholastic.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.Tom Jordan. "Track and Field". scholastic.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  2. Rosenbaum, Mike. Introductions to Track and Field Events பரணிடப்பட்டது 2015-05-29 at the வந்தவழி இயந்திரம். About. Retrieved on 2014-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடகளம்&oldid=3637218" இலிருந்து மீள்விக்கப்பட்டது