உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு சின்னம்

சுருக்கம்சி விளையாட்டுகள்
SEA Games
முதல் நிகழ்வு1959 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்; பாங்காக், தாய்லாந்து
ஒவ்வொரு2 ஆண்டுகள்
காரணம்தென்கிழக்கு ஆசிய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான விளையாட்டு நிகழ்வு
தலைமையகம்பாங்காக், தாய்லாந்து
தலைவர்சாரூக் அரிச்சகரன்
இணையதளம்SEAGFOffice.org

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள், (மலாய்: Sukan Asia Tenggara; ஆங்கிலம்: Southeast Asian Games) என்பது தென்கிழக்கு ஆசியாவின் தற்போதைய 11 நாடுகளை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு நிகழ்வு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

இந்தத் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளைச் சுருக்கமாக ‘சி’ விளையாட்டுகள் (SEA Games) என்று அழைக்கிறார்கள்.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் நிகழ்வு, தென்கிழக்கு ஆசிய விளையாட்டு சம்மேளனத்தின் (Southeast Asian Games Federation) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதே வேளையில் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் (IOC - International Olympic Committee) மற்றும் ஆசிய ஒலிம்பிக் மன்றம் (Olympic Council of Asia - OCA) ஆகியவற்றின் மேற்பார்வையிலும் உள்ளது.

ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் ஐந்து துணைப் பிராந்திய விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் விளங்குகிறது. மற்றவை:

வரலாறு

[தொகு]

இந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டி தொடங்கிய காலத்தில தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் (South East Asian Peninsular Games) அல்லது சியாப் விளையாட்டுகள் (SEAP Games) எனும் பெயரில் தொடங்கப்பட்டன.

1958 மே 22-ஆம் தேதி, ஜப்பான், தோக்கியோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு விளையாட்டு அமைப்பை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டனர்.

தொடக்கக் கால உறுப்பிய நாடுகள்

[தொகு]

பர்மா (இப்போது மியான்மர்), கம்பூசியா (இப்போது கம்போடியா), லாவோஸ், மலாயா (இப்போது மலேசியா), தாய்லாந்து மற்றும் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) ஆகியவை உறுப்பிய நாடுகளாக இருந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டுகளை நடத்துவதற்கு 1959 ஜூன் மாதம் அந்த உறுப்பிய நாடுகள் ஒப்புக் கொண்டன.

முதல் சியாப் விளையாட்டுப் போட்டி

[தொகு]

ஆறு நாடுகளைச் சேர்ந்த 527-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்; விளையாட்டு அதிகாரிகளுடன் முதல் சியாப் விளையாட்டுப் போட்டி 1959 டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரையில் பாங்காக் நகரில் நடைபெற்றது.

பர்மா (இப்போது மியான்மர்), லாவோஸ், மலாயா, சிங்கப்பூர், தெற்கு வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.

1975-ஆம் ஆண்டு 8-ஆவது சியாப் விளையாட்டுப் போட்டிகளில், புரூணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ப்பதற்கு சியாப் கூட்டமைப்பு பரிசீலித்தது.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு

[தொகு]

அந்த நாடுகள் முறைப்படி 1977-ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டன. அதே ஆண்டு சியாப் கூட்டமைப்பு தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுவே தற்சமயம் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன.

2003-ஆம் ஆண்டு ஹனோய் - ஹோ சி மின் நகரில் நடைபெற்ற 22-ஆவது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது கிழக்கு திமோர், அனுமதிக்கப்பட்டது.

தேசிய ஒலிம்பிக் குழுக்கள்

[தொகு]
தேசிய ஒலிம்பிக் குழுக்கள் அறிமுகம் தேசிய ஒலிம்பிக் குறியீடு இதர குறியீடுகள்
 புரூணை 1977 BRU BRN
 கம்போடியா 1961 CAM KHM (1972–1976, ISO)
 இந்தோனேசியா 1977 INA IHO (1952), IDN (FIFA, ISO)
 லாவோஸ் 1959 LAO
 மலேசியா 1959 MAS MAL (1952 − 1988), MYS
 மியான்மர் 1959 MYA BIR (1948 – 1988), MMR (ISO)
 பிலிப்பீன்சு 1977 PHI PHL (ISO)
 சிங்கப்பூர் 1959 SGP SIN (1959 – 2016)
 தாய்லாந்து 1959 THA
 கிழக்குத் திமோர் 2003 TLS
 வியட்நாம் 1959 VIE VET (1964), VNM (1968–1976)

தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்

[தொகு]
ஆண்டு விளையாட்டு பொறுப்பு நாடு
(நகரம்)
1959 I தாய்லாந்து பாங்காக்
1961 II மியான்மர் யங்கோன்
1963 ரத்து செய்யப்பட்டது கம்போடியா புனோம் பென்
1965 III மலேசியா கோலாலம்பூர்
1967 IV தாய்லாந்து பாங்காக்
1969 V மியான்மர் யங்கோன்
1971 VI மலேசியா கோலாலம்பூர்
1973 VII சிங்கப்பூர் சிங்கப்பூர்
1975 VIII தாய்லாந்து பாங்காக்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்

[தொகு]
ஆண்டு விளையாட்டு பொறுப்பு நாடு
(நகரம்)
1977 IX மலேசியா கோலாலம்பூர்
1979 X இந்தோனேசியா ஜகார்த்தா
1981 XI பிலிப்பீன்சு மணிலா
1983 XII சிங்கப்பூர் சிங்கப்பூர்
1985 XIII தாய்லாந்து பாங்காக்
1987 XIV இந்தோனேசியா ஜகார்த்தா
1989 XV மலேசியா கோலாலம்பூர்
1991 XVI பிலிப்பீன்சு மணிலா
1993 XVII சிங்கப்பூர் சிங்கப்பூர்
1995 XVIII தாய்லாந்து சியாங் மாய் நகரம்2
1997 XIX இந்தோனேசியா ஜகார்த்தா
1999 XX புரூணை பண்டார் ஸ்ரீ பகவான்
2001 XXI மலேசியா கோலாலம்பூர்
2003 XXII வியட்நாம் ஹனோய் - ஹோ சி மின் நகரம்3
2005 XXIII பிலிப்பீன்சு மணிலா
2007 XXIV தாய்லாந்து நாகோன் ரட்சசிமா5
2009 XXV லாவோஸ் வியஞ்சான்
2011 XXVI இந்தோனேசியா ஜகார்த்தா - பலெம்பாங்6
2013 XXVII மியான்மர் நைப்பியிதோ
2015 XXVIII சிங்கப்பூர் சிங்கப்பூர்[2]
2017 XXIX மலேசியா கோலாலம்பூர்
2019 XXX பிலிப்பீன்சு டாவோ நகரம்
  • 1 பிலிப்பைன்ஸ்; இந்தோனேசியா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் மறுபெயரிடப்பட்டது.
  • 2 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் வரலாற்றில் ஒரு தலைநகரம் அல்லாத நகரத்தில் விளையாட்டுகளை நடத்துவது இதுவே முதல் முறை.
  • 3 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளின் வரலாற்றில் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரம் ஆகிய இரண்டு நகரங்களில் விளையாட்டு அரங்குகள் அமைவது இதுவே முதல் முறை.
  • 4 பிலிப்பைன்ஸ் நாட்டின் பல நகரங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன
  • 5 சோன்புரி மற்றும் பாங்காக் நகரங்கள் 24-ஆவது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் அடங்கும்.
  • 6 பலெம்பாங் விளையாட்டுகளின் முதன்மையாளர்; ஜகார்த்தா இணையாளர்.

பதக்க அட்டவணை

[தொகு]

ஆசிய ஒலிம்பிக் மன்றம் மற்றும் முந்தைய தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் பதக்க அட்டவணைகளை வைத்து இருந்த பிற காப்பகத் தளங்களின் தரவுகளைச் சமநிலைப் படுத்திய பிறகு இந்த அட்டவணை சரி செய்யப்பட்டது. மேற்கூறிய தளங்களில் இருந்து சில தகவல்கள் விடுபட்டு உள்ளன அல்லது புதுப்பிக்கப் படவில்லை.[3][4][5][6][7][8]


தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் பதக்க அட்டவணை[1]
நிலைதேசிய ஒலிம்பிக் குழுக்கள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 தாய்லாந்து (THA)1885193019435758
2 இந்தோனேசியா (INA)1824170317805307
3 மலேசியா (MAS)[2]1303127316854261
4 பிலிப்பீன்சு (PHI)1067119314773737
5 சிங்கப்பூர் (SGP)947100213633312
6 வியட்நாம் (VIE)[3]9289679912886
7 மியான்மர் (MYA)[4]5647419922297
8 கம்போடியா (CAM)[5]69115258442
9 லாவோஸ் (LAO)6993319481
10 புரூணை (BRU)1455163232
11 கிழக்குத் திமோர் (TLS)362635
மொத்தம் (11 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்க்கள்)867390781099728748

  • ^[1] - 2017 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளின் போது ஊக்கமருந்து வழக்குகள் காரணமாகச் சில பதக்கங்களின் எண்ணிக்கை, இந்தப் பதக்க அட்டவணையில் சேர்க்கப்படவில்லை
  • ^[2] – 1961 வரை மலாயா எனும் பெயரில் போட்டியிடப்பட்டது.
  • ^[3] – வியட்நாம் குடியரசு ஜூலை 1976-இல் கலைக்கப்பட்டது. வடக்கு வியட்நாம்; தென் வியட்நாமுடன் இணைந்தது. எனவே, இந்த நாட்டிற்கான பதக்கங்களின் எண்ணிக்கை 1975 வரை காட்டப்படுகிறது. தெற்கு வியட்நாம் வென்ற பதக்கங்கள் ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டு உள்ளன.
  • ^[4] – 1987 வரை பர்மா எனும் பெயரில் போட்டியிட்டது.
  • ^[5] – கம்பூச்சியா மற்றும் கெமர் குடியரசு எனும் பெயரில் போட்டியிட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Games page of the website of the Olympic Council of Asia; retrieved 2010-07-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
  3. Medal Tally
  4. "SEAP Games Federation". Archived from the original on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
  5. Medal Tally 1959-1995
  6. History of the SEA Games
  7. SEA Games previous medal table
  8. SEA Games members