1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
நடத்தும் நகரம்பாங்காக், தாய்லாந்து
பங்கேற்கும் நாடுகள்6
துவக்க விழா9 டிசம்பர் 1967
நிறைவு விழா16 டிசம்பர் 1967
அலுவல்முறை துவக்கம்பூமிபோல் அதுல்யதேஜ்
தாய்லாந்து மாமன்னர்
Ceremony venueசுபச்சலசாய் அரங்கம், பாங்காக், தாய்லாந்து
1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் 1969 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்  >

1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1967; ஆங்கிலம்: 1967 Southeast Asian Peninsular Games) என்பது 4-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.

சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் நான்காவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.

தாய்லாந்து, பாங்காக் நகரில் 1967 டிசம்பர் 9 முதல் டிசம்பர் 16, 16 விளையாட்டுகளுடன் நடைபெற்றது. இந்தப் போட்டிகளைத் தாய்லாந்து நடத்துவது, இதுவே இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 1959-ஆம் ஆண்டில் தொடக்க ஆட்டங்களை முதல் முறையாக நடத்தியது.

சுபச்சலசாய் அரங்கத்தில் (Suphachalasai Stadium) தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (Bhumibol Adulyadej) விளையாட்டுகளைத் திறந்து வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் தாய்லாந்து; சிங்கப்பூர்; மலேசியா ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன.

விளையாட்டுகள்[தொகு]

பங்கேற்பு நாடுகள்[தொகு]

விளையாட்டு[தொகு]

பதக்க அட்டவணை[தொகு]

      போட்டி நடத்திய நாடு (தாய்லாந்து)

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  தாய்லாந்து 77 48 47 172
2  சிங்கப்பூர் 28 31 28 87
3  மலேசியா 23 29 43 95
4  மியான்மர் 11 26 32 69
5  வியட்நாம் 6 10 17 33
6  லாவோஸ் 0 0 3 3

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
பாங்காக்

4-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் (1967)
பின்னர்
1969 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்