ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

د حامد کرزي نړيوال هوايي ډګر
میدان هوائی بین المللی حامدکرزی

Flightline at Kabul International Airport.jpeg
ஐஏடிஏ: KBLஐசிஏஓ: OAKB
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பயணிகள்/இராணுவம்
உரிமையாளர் ஆப்கானித்தான்
இயக்குனர்  நேட்டோ
சேவை புரிவது காபூல், ஆப்கானித்தான்
மையம் * அரியனா ஆப்கான் ஏர்லைன்ஸ்[1]
கட்டியது 1960
உயரம் AMSL 1,791 m / 5,876 ft
ஆள்கூறுகள் 34°33′57″N 069°12′47″E / 34.56583°N 69.21306°E / 34.56583; 69.21306ஆள்கூறுகள்: 34°33′57″N 069°12′47″E / 34.56583°N 69.21306°E / 34.56583; 69.21306
இணையத்தளம் hamidkarzaiairport.com (2020 archive)
நிலப்படம்
KBL/OAKB is located in ஆப்கானித்தான்
KBL/OAKB
KBL/OAKB
ஆப்கானித்தானில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
11/29 3,511 11,519 தார்/பைஞ்சுதை
ஆதாரம்:[3] AIP Afghanistan[4]

ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hamid Karzai International Airport) சுருக்கமாக:HKAIA[5] ஆப்கானித்தான் நாட்டின் தலைநகரமான காபூலுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[6] இது பன்னாட்டு பயணிகளுக்கான வானூர்தி நிலையமாகவும்; ஐக்கிய அமெரிக்க வான்படை, பிரித்தானிய வான்படை, ஜெர்மன் வான்படை மற்றும் கனடா வான்படைகளின் தளமாக செயல்படுகிறது. இதன் பழைய பெயர் காபூல் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் பெயரில், 2014-இல் காபூல் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பெயர் ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப்பெயரிடப்பட்டது.[7]தோகா ஒப்பந்தப்படி 31 ஆகஸ்டு 2021 வரை இந்த வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்கத் துருப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

16 ஆகஸ்டு 2021 அன்று தாலிபான்களிடம் காபூல் வீழ்ச்சி அடைந்த பின்னர், தோகா ஒப்பந்தப்படி 31 ஆகஸ்டு 2021 தேதிக்குள் ஆப்கானியர் அல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற தாலிபான்கள் கெடு விதித்திருந்தனர். ஒப்பந்தப்படி அமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 16 ஆகஸ்டு 2021 முதல் மேற்குலக நாடுகளின் மக்களையும், தூதரக ஊழியர்களையும், அவர்களுக்கு உதவிய ஆப்கானியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் மேற்குலகப் படைவீரர்கள் வெளியேறிக் கொண்டு வருகின்றனர். [8][9] [10][11][12]

குண்டு வெடிப்புகள்[தொகு]

26 ஆகஸ்டு 2021 அன்று ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் நுழைவாயில் அருகே மற்றும் அதற்கு மிக அண்மையில் அமைந்த ஒரு விடுதி அருகே தற்கொலைப்படையினர் நடத்திய குண்டுவெடிப்ப்பில் 13 அமெரிக்கத் துருப்புகள் உள்ளிட்ட 60 பொதுமக்கள் இறந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.[13] இந்த குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமிய அரசு, கொராசான் தீவிரவாதிகள் பெறுப்பேற்றனர்.[14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]