வோக்கோசு
வோக்கோசு | |
---|---|
![]() | |
Parsley leaves and flowers | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | தாவரம்
|
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. crispum
|
இருசொற் பெயரீடு | |
Petroselinum crispum Mill., Johann Mihály Fuss | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
வோக்கோசு (Parsley) (Petroselinum crispum, பெட்ரோசெலியம் கிறிஸ்பம் ) பச்சைநிற இருபருவத் தாவரம் ஆகும். இது சீன வோக்கோசு அல்லது சிலாண்ட்ரோ எனவும் அழைக்கப்படும். இது பெரும்பாலும் மசாலாப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மத்திய கிழக்கு, ஐரோப்பிய, அமெரிக்க சமையல்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது. வோக்கோசானது அதன் இலைக்காகவும், மென்மையான நறுமணத்திற்காகவும் உட்கொள்ளப் படுகிறது. கொத்தமல்லியை, தமிழ்நாட்டு சமையல்களில் பயன்படுத்துவது போன்றே பயன்படுத்துகின்றனர்.
வகைகள்
[தொகு]வோக்கோசானது 22 முதல் 30 வரையிலான பாகை செல்சியஸில் மிகச் சிறப்பாக வளரும். வோக்கோசின் இரு வடிவச் செடிகளாக உள்ளன. வோக்கோசுக்கானத் தயாரிப்புக் குறியீடு 4899 ஆகும்.[1]
- சுருள் இலை (பெ. கிறிஸ்பம் ) : சுருண்ட இலை வோக்கோசு பெரும்பாலும் அழகுபடுத்தப் படுகிறது. சுருண்ட இலை வோக்கோசின் பயன்பாட்டைச் சிலர் விரும்பக்கூடும். ஏனெனில் இதை தட்டை இலை வோக்கோசில் நச்சுத்தன்மை (எமுலொக்கு அல்லது செர்வில்லுடன்) உள்ளதா எண்ணுகின்றனர்.
- மற்றொன்று இத்தாலியன் அல்லது தட்டை இலை (பெ. நீபோலிடானம் ) ஆகும். இது தோற்றத்தில் பாசினிப்பு (parsnip) போல இருந்தாலும் இதன் சுவை முற்றிலும் வேறுபட்டது. அம்பெல்லிஃபர் குடும்ப செடிகளில், வோக்கோசின் மிகவும் நெருக்கமான தொடர்புள்ள செடிகள் பாசினிப்புகள் ஆகும்.
- வேர் வோக்கோசு
வோக்கோசின் இன்னொரு வகையாக வேர்க் காய்கறியாக ஹம்பர்க் வேர் வோக்கோசுடன் (பெட்ரோசெலியம் கிறிஸ்பம் வகை. ட்யூப்ரோசம் ) வளர்க்கப்படுகிறது. இந்த வகை வோக்கோசானது, இலைகளுக்காக வளர்க்கப்படும் வோக்கோசைவிட அதிக தடிப்பான வேர்களை உருவாக்கும். பிரிட்டன், அமெரிக்காவில் வேர் வோக்கோசு குறைந்தளவே பயனாகிறது. மத்திய, கிழக்கு ஐரோப்பிய சமையலில் இது மிகவும் பொதுவானது, நீரில் வேகவைத்த சாறுகள், உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
காட்சியகம்
[தொகு]-
வோக்கோசுப் புதர்
-
வேர் வோக்கோசு
-
சுருண்ட வோக்கோசு
-
தட்டையான வோக்கோசு மலர்
-
தட்டையான வோக்கோசு வெள்ளை மலர்
சாகுபடி
[தொகு]உணவாற்றல் | 151 கிசூ (36 கலோரி) |
---|---|
6.3 g | |
சீனி | 0.9 g |
நார்ப்பொருள் | 3.3 g |
0.8 g | |
3.0 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (9%) 0.1 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (17%) 0.2 மிகி |
நியாசின் (B3) | (9%) 1.3 மிகி |
(8%) 0.4 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (8%) 0.1 மிகி |
இலைக்காடி (B9) | (38%) 152 மைகி |
உயிர்ச்சத்து சி | (160%) 133.0 மிகி |
உயிர்ச்சத்து கே | (1562%) 1640.0 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (14%) 138.0 மிகி |
இரும்பு | (48%) 6.2 மிகி |
மக்னீசியம் | (14%) 50.0 மிகி |
பாசுபரசு | (8%) 58.0 மிகி |
பொட்டாசியம் | (12%) 554 மிகி |
துத்தநாகம் | (12%) 1.1 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
வோக்கோசு பயிரிடுதல் சற்று கடினமானது.[2] ஏனெனில், முளைத்தல் சீரற்றது. அதற்கு 3 முதல் 6 வாரங்கள் தேவைப்படலாம்.[2] வோக்கோசின் சிக்கலுக்குரிய முளைத்தலிற்கு விதையுறையிலுள்ள புரனோகுமாரின்கள் காரணமாக இருக்கக்கூடும். விதைப்பதற்கு முன்னர் வோக்கோசு விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்தலானது முளைக்கும் காலத்தைக் குறைக்கும்.[2] வோக்கோசு ஆழமான பூச்சாடிகளில் நன்கு வளரும். இது நீளமான ஆணிவேரைப் பெற்றுள்ளது. உள்ளரங்குகளில் வளர்ந்துள்ள வோக்கோசுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணிநேர சூரிய ஒளி அவசியமாகத் தேவைப்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- மத்திய, கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும், பல உணவுவகைகளுக்கு, மேலே நறுக்கப்பட்ட வோக்கோசு இலைகள் தூவி பரிமாறப்படும். சமைக்காத வோக்கோசு பெரும்பாலும், உணவு அலங்காரத்துக்குப் பயன்படும். பச்சை வோக்கோசின், புத்தம்புதிய நறுமணமானது உருளைக்கிழங்கு உணவுகளுடன் பிரெஞ்சுப் பொரியல்கள், வேகவைத்து வெண்ணெய் தடவிய உருளைக்கிழங்குகள், கூழாக்கிய உருளைக்கிழங்கு, அரிசி உணவுகளுடன், மீன், பொறித்த கோழி, ஆட்டுக்குட்டி, வாத்து, மாட்டிறைச்சி, காய்கறி அவியல்களுடன்[3]
- தெற்கு, மத்திய ஐரோப்பாவில், வோக்கோசு என்பது நறுமணமூட்டப் பயன்படும். புத்தம்புதுச் செடிகள், பூங்கொத்துக் கட்டு விற்பனையில் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக நறுக்கப்பட்ட பச்சை வோக்கோசு, கோழியிறைச்சி ரசம், பிற ரசங்கள், பச்சைக் காய்கறிக்கலவைகளில் பயனாகிறது. பல மேற்கு ஆசிய காய்கறிக் கலவைகளில், வோக்கோசு ஒரு முக்கிய உள்ளடக்கமாக இருக்கும்.
தோழமைத் தாவரம்
[தொகு]வோக்கோசானது தோட்டங்களில் ஒரு தோழமைத் தாவரமாகப் பரவலாகப் பயன்படும். இது தோட்டங்களுக்கு வரும் குளவிகள், வேட்டையாடும் ஈக்கள் உள்ளடங்கலான வேட்டையாடும் பூச்சிகளைக் கவரும் இயல்புடையதாக உள்ளது. இதனால் அருகிலுள்ள தாவரங்களை அவற்றிலிருந்து பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக தக்காளி கொம்புப்புழுக்களைக் கொல்கின்ற குளவிகள், வோக்கோசிலிருந்து வரும் தேனையும் உண்பதால், அவை குறிப்பாக தக்காளித் தாவரங்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளவையாகத் திகழ்கின்றன. வோக்கோசு, இரு பருவத்தாவரமாக இருப்பதால், அதன் இரண்டாவது ஆண்டுவரை பூக்காது. இதன் முதலாவது ஆண்டிலும் கூட தக்காளித் தாவரத்தின் வலிமையான வாசனையை முழுவதுமாகத் தழுவிநிற்க உதவுவதில் நற்பெயர் பெறுகிறது. ஆகவே பூச்சிகளின் ஈர்ப்பைக் குறைக்கிறது.
உடல்நலம்
[தொகு]மருத்துவப் பயன்கள்
[தொகு]- இதன் துளிர் இலைகள், மலக்குடல் கழுவியாகப் பயன்படுத்தக்கூடும். உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, சீன, செருமன் செடி நிபுணர்கள் வோக்கோசைப் பரிந்துரைக்கின்றனர். சிறுநீர்ப்பைக்கு வலுச்சேர்க்க இதை ஒரு சத்துமருந்தாக, செரோக்கியர் பயன்படுத்தினர். இது பெரும்பாலும் எமனகோக்குவாகவும் பயன்படும்.[4]
- சிறுநீரகத்தில் Na+/K+-ATPase ஏற்றத்தைத் தடுப்பதன்மூலம், வோக்கோசானது சிறுநீர்ப் பெருக்கத்தை அதிகரிப்பதாகத் தோன்றுகிறது. இதனால் பொட்டாசியம் மீள அகத்துறிஞ்சலை அதிகரிக்கின்ற வேளையில், சோடியம், நீர் வெளியேற்றத்தையும் அதிகப்படுத்துகிறது.
- வோக்கோசை தோலின்மீது பிழிந்து தேய்த்துவிடும்போது, கொசுக் கடிகளால் வரும் அரிப்புகள் குறையும்.
- வோக்கோசை மெல்லும்போது, அது கெட்ட சுவாசத்தை புதிதாக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இருந்தபோதிலும் சிலர் இதை ஒரு தொன்மம் எனக் குறிப்பிடுகின்றனர். [5]
உடல்நலக் கேடுகள்
[தொகு]- வோக்கோசுவை கர்ப்பமான பெண்கள் மருந்தாகவோ, குறை நிரப்பியாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய், வேர், இலை அல்லது விதையாக வோக்கோசுவை உள்ளெடுத்தால், அது கர்ப்பப்பையைத் தூண்டி, குறைப்பிரசவத்தை விளைவிக்கும்.[6]
- வோக்கோசுவில் உயர் (1.70% எடை, [1]) ஒக்சாலிக் அமிலம் உள்ளது. இது சிறுநீரகக் கற்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை உண்டாக்குவதில் ஈடுபடுகின்ற சேர்மம் ஆகும்.
- வோக்கோசு எண்ணெய், புரனோகுமாரின்கள், சோரலென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உச்ச அளவான ஒளியுணர்திறனுக்கு வழிவகுக்கும்.[7]
- வோக்கோசு விதைகள் உயர் அளவு எண்ணெய் கொண்டவையாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் திகழ்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parsley on plucodes.com". Archived from the original on 2009-08-21. Retrieved 16 மார்ச்சு 2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 ஜான் டபிள்யு. ஜெட். "தட் டெவிலிஷ் பார்ஸ்லே." பரணிடப்பட்டது 2007-06-26 at the வந்தவழி இயந்திரம் மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக விரிவாக்க சேவை. கடைசியாகப் பெறப்பட்டது ஏப்ரல் 26, 2007 ஆம் ஆண்டு அன்று.
- ↑ ஜூன் மேயர்ஸ் ஆதெண்டிக் ஹங்கேரியன் ஹெய்ர்லூன் ரெசிப்ஸ் குக்புக்
- ↑ "Schools Wikipedia: Parlsey". Archived from the original on 2010-03-29. Retrieved 16 மார்ச்சு 2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-12-19. Retrieved 16 மார்ச்சு 2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Parsley information on Drugs.com". Retrieved 16 மார்ச்சு 2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "ஹெல்த் இஃபெக்ட்ஸ்:புரனோகௌமாரின்ஸ், கெமிக்கல் போட்டோசென்சிட்டிவிட்டி & போட்டோடெர்மாடிடிஸ்" (PDF). Archived from the original (PDF) on 2010-07-06. Retrieved 16 மார்ச்சு 2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
மேலும் காண்க
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- ஹௌ டு குரோ பார்ஸ்லே பரணிடப்பட்டது 2009-06-18 at the வந்தவழி இயந்திரம் வோக்கோசைப் பயிரிடுதல், இனம்பெருக்குதல் மற்றும் வளர்ப்பு பற்றிய தகவல்கள்.