வெண்ணிலா கபடி குழு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்ணிலா கபடி குழு
இயக்கம்செல்வ சேகரன்
தயாரிப்புபூங்காவனம்
ஆனந்த்
திரைக்கதைசெல்வ சேகரன்
இசைவி. செல்வகணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஇ.கிருஷ்ணசாமி
படத்தொகுப்புஅஜய்
கலையகம்சாய் அர்புதம் சினிமாஸ்
வெளியீடுசூலை 12, 2019 (2019-07-12)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

வெண்ணிலா கபடி குழு 2 என்பது 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுசீந்திரன் கதையை செல்வ சேகரன் திரைகதை எழுதி இயக்கயிருந்தார். இத்திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் அர்த்தனா பினு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வி. செல்வகனேஷ் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

கதை[தொகு]

கதையின் நாயகனான சரவணன் (விக்ரந்த்) ஆடியோ கேசட்டுகளை விற்பனை செய்கிறார். அவரது தந்தை சாமி (பசுபதி) தொழில் ரீதியாக ஒரு பேருந்து ஓட்டுனராக உள்ளார். ஆனாலும் கபடியில் ஈடுபாடுள்ளவர். எங்கு கபடி போட்டி நடந்தாலும் அங்கு செல்வார். கபடி ஈடுபாட்டால் ஓட்டுனர் தொழில் பாதிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதனால் சரவணனுக்கு தந்தையை பிடிக்காமல் போகிறது. கடிந்து கொள்கிறார். மலர் எனும் கல்லூரிப் பெண்ணை சரவணன் காதல் செய்கிறார். இந்நிலையில் தந்தை விரும்பும் கபடி விளையாட்டையும், தந்தையின் திறனையும் அறிகிறார். சரவணனும் கபடி வீரராக மாறுகிறார்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

திரைப்படத்திற்கு வி. செல்வகணேஷ் இசையமைந்திருத்தார்.

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "கபடி கபடி"  சங்கர் மகாதேவன் 4:11
2. "ஒரசாத டி"  கார்த்திக், ஸ்வேதா மோகன் 4:41
3. "ஒத்த பார்வையில்"  ஹரிச்சரன் 3:52
4. "திருவிழா"  அனிருத் ரவிச்சந்திரன் 4:16

தயாரிப்பு[தொகு]

2009 இல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு கதையை சுசீந்திரன் எழுதியிருந்தார். பசுபதி அவர்களை தந்தையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிலா_கபடி_குழு_2&oldid=3841058" இலிருந்து மீள்விக்கப்பட்டது