உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்வந்த் அசோக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்வந்த் அசோக்குமார்
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வந்த்
பணிகுழந்தை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போது வரை

அஸ்வந்த் அசோக்குமார் (Ashwanth Ashokkumar) ஓர் இந்தியக் குழந்தை நடிகராவார். இவர் தமிழ் மொழிப் படங்களில் பணிபுரிகிறார். 2016ஆம் ஆண்டில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டத்தை வென்றார். சூப்பர் டீலக்ஸ் (2019) படத்தில் ராசுகுட்டி என்ற பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார்.

தொழில்[தொகு]

2016 ஆம் ஆண்டில், லிஷா என்பவருடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளின் நடிப்புத் திறன்களை சோதிக்கும் "ஜூனியர் சூப்பர் ஸ்டார்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டத்தையும் வென்றார். பின்னர், லிஷாவும் இவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரான மெல்லத் திறந்தது கதவு என்ற நாடகத்தில் நடித்தனர். அதே ஆண்டில் "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் தனது வாய்ப்பை பெறுவதற்கு முன்பு "ஐரா" (2019) என்ற படத்தில் நடித்தார்.[1] [2] [3] [4] சூப்பர் டீலக்ஸில், இவர், ஷில்பா என்ற பெண்ணாக மாறிய தனது தந்தை மாணிக்கத்தின் (விஜய் சேதுபதி ) மீது அக்கறை கொண்ட ராசுகுட்டி என்ற குழந்தையாக நடித்தார்.[5] [6] [7] ஜூனியர் சூப்பர் ஸ்டாரில் இவரது நடிப்பை தயாரிப்பாளர்கள் பார்த்த பிறகு இவருக்கு இந்த வேடத்தை வழங்கினார்.[1] 2017இல் வெளிவந்த மெர்சல் (2017) படத்தில் நடிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை இழந்தார்.[8] காட் ஃபாதர் (2020) படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு முன்பு தம்பி (2019) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[9] [10] [11] 2020 ஆம் ஆண்டில், ஒண்டிபுலி என்ற தலைப்பில் குழந்தைகள் வலைத் தொடரை இயக்கியுள்ளார். தொடர்களை எழுதுவதோடு கூடுதலாக அத்தியாயங்களின் போது இவர் பின்னணிக் குரலும் கொடுத்தார்.[12] தனுஷுடன் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். பாலாஜி சக்திவேலுடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.[3] [2] [1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Ramanujam, Srinivasa; S, Srivatsan (3 April 2019). "Loved 'Super Deluxe'? Meet the film's unsung heroes". The Hindu.
 2. 2.0 2.1 "Super Deluxe breakout star joins Dhanush - Karthik Subbaraj project". The New Indian Express.
 3. 3.0 3.1 "Master Ashwanth Ashokkumar joins Dhanush on D 40 sets. See pic - Times of India". The Times of India.
 4. "விஜய்சேதுபதி குரலில் மிமிக்ரி செய்து வாழ்த்து சொன்ன சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி; வைரல் வீடியோ [Super Deluxe Rasukutty Mimics Vijay Sethupathi's voice and thanks him; Viral video]". Indian Express. 17 January 2020.
 5. "Super Deluxe Review {4/5}: There is ambition, genius, and also a beating heart". The Times of India.
 6. "100 Greatest Performances of the Decade". Film Companion. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
 7. "Rasukutty on eat, sleep and repeat mode during quarantine - Times of India". The Times of India.
 8. "Little star Ashwanth's video about Coronavirus goes viral - Times of India". The Times of India.
 9. "VIDEO: Ashwanth dancing for a popular song of MGR goes viral - Times of India". The Times of India.
 10. "Karthi impressed with master Ashwanth's performance in 'Thambi' - Times of India". The Times of India.
 11. "God Father movie review: Engaging, even if inconsistent, battle of the dads". The New Indian Express.
 12. "Ashwanth directs a short film - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வந்த்_அசோக்குமார்&oldid=3532350" இலிருந்து மீள்விக்கப்பட்டது