லேவியர்
விவிலியத்தின் |
பழைய ஏற்பாட்டு நூல்கள் |
---|
கிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல் |
லேவியர் (லேவியராகமம்) (Leviticus) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) மூன்றாவது நூலாக இடம்பெறுவதாகும்.[1][2][3]
நூல் பெயர்
[தொகு]இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Wayiq'ra" அதாவது "அவர் அழைத்தார்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "Levitikos" (Λευιτικός = லேவியர் தொடர்பானவை) என்பதாகும்.
மையப் பொருள்
[தொகு]பழங்கால இசுரயேலர்தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
'உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!' என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
லேவியர்
[தொகு]நூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் | 1:1 - 7:33 | 153 - 162 |
2. ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின்
திருநிலைப்பாட்டிற்கான நெறிமுறைகள் |
8:1 - 10:20 | 162 - 166 |
3. குருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய
சட்டங்கள் |
11:1 - 15:33 | 166 - 175 |
4. பாவக்கழுவாய் நாள் | 16:1-34 | 175 - 177 |
5. தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான
சட்டங்கள் |
17:1 - 27:34 | 177 - 195 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Third Book of Moses, Called Leviticus". The Bible: Authorized King James Version. Oxford Biblical Studies Online, Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Leviticus". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 16. (1911). Cambridge University Press.
- ↑ Hezekiah ben Manoah (Chizkuni), closing notes to Leviticus