லீமரேல் சிதாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீமரேல் சிதாபி
இமுங் இலாய்கள்-இல் ஒருவர்
ஒரு கைச்சித்திரம் உச்சக் கடவுளான சலைலென் (சலைலெல்) லீமரேல்(லீமலேல்) தெய்வத்தின் உருவாக்கத்தை சித்தரிக்கிறது
அதிபதிபுவி, இயற்கை மற்றும் வீட்டின் கடவுள்
வேறு பெயர்கள்
  • மலெம் லீமா
  • லீமரேன் சிதாபி
வகைமெய்டேய் இனம்
இடம்சனமாஹி கச்சின்[1]
துணைசலைலென்
குழந்தைகள்சனமாஹி மற்றும் பகங்பா
சமயம்பண்டைய மணிப்பூர்
விழாக்கள்இலாய் அரோபா

லீமரேல் அல்லது லீமலெல் மெய்டேய் புராணங்களில் மற்றும் பண்டைய காங்க்லீபாக் ( பழங்கால மணிப்பூர் ) மதத்தில் உள்ள ஒரு தெய்வம். மெய்டேய் இனத்தின் மிக உயர்ந்த பெண் தெய்வம் இவராவார். இவர் பூமி, இயற்கை மற்றும் குடும்பத்தின் தெய்வம். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தாயாக போற்றப்படுகிறார். [2] [3] [4] [5] [6] 

விளக்கத்துடன் கூடிய சின்னம்

சொற்பிறப்பியல்[தொகு]

Meitei வார்த்தையான "லீமரேல்" என்பது " ராணி " அல்லது " தேவதை " என்று பொருள்படும். "லீமரேல்" என்ற சொல்லை லீ , மா மற்றும் ரேல் (அல்லது ரேன்) ஆகிய அசைகளாகப் பிரிக்கலாம். "லீ" என்றால் நிலம் அல்லது பூமி . "மா" என்றால் அம்மா . "ரெல்" (அல்லது ரென்) என்றால் சிறந்தது . மெய்டேய் வார்த்தையான "சிதாபி" சி, தா மற்றும் பி என பிரிக்கலாம். "சி" என்றால் இறப்பது, "தா" என்பது எதிர்மறையான பொருளைக் குறிக்கிறது. "பி" என்பது பெண் பாலினத்தைக் குறிக்கிறது. [7] [8]

விளக்கம்[தொகு]

லீமரேல் நித்திய தாய் தெய்வமாகக் கருதப்படுகிறது. பண்டைய காலங்களில், ஆளும் அரச தம்பதிகள் லாப்லென் கா (மத்திய அறை) இல் அமர்ந்தனர். அவர்கள் லீமரேல் தெய்வத்தின் புனித இடத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். ஆண்களும் பெண்களும் லீமரலின் கருப்பையிலிருந்து தோன்றியதாக நம்பப்பட்டது. பாரம்பரிய மெய்டேய் நம்பிக்கைகளில் ஒரு வீடு தாய்க் கடவுளின் குறியீடாக உள்ளது. [9]

புராணம்[தொகு]

லீமரேல் சிதாபி

மிக உயர்ந்த படைப்பாளியான அட்டிங்காக் (சலைலெல் என்றழைக்கப்படுபவர்) தனது இரண்டு மகன்களான சனாமாஹி மற்றும் பகாங்பா ஆகியோரை உலகம் முழுவதும் பந்தயத்தில் ஓடச் சொன்னார். வெற்றி பெற்றவர் உலகின் அதிபதியாக நியமிக்கப்படுவார். சனாமாஹி தனது இளைய சகோதரன் பகாங்பாவை விட வலிமையானவன். அவன் தன் பயணத்தைத் தொடங்கினான். பகாங்பா தனது தாயார் லீமாரல் சிதாபியிடம் அழுதான். பிரபஞ்சத்தின் சிம்மாசனத்தின் பின்னால் உள்ள ரகசியத்தை அவர் அவனிடம் சொன்னார். பரம சிம்மாசனத்தைச் சுற்றி வருவது பிரபஞ்சத்தைச் சுற்றி வருவதற்குச் சமம் என்பது இரகசியம். எனவே, பகாங்பா தனது தந்தையான பரமாத்மாவைச் சுற்றி வந்தான். இதனால், அவன் பந்தயத்தில் வென்று பிரபஞ்சத்தின் அதிபதியானார். சனாமாஹி வீடு திரும்பியபோது, தனது இளைய சகோதரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்கு கோபம் வந்தது. அவன் பகங்பாவை தாக்கினான். பக்காங்பா ஓடிவிட்டான். அவன் ஏழு லைரெம்பிஸ் (வான தெய்வீக கன்னிகள்) மத்தியில் தன்னை மறைத்துக்கொண்டான். [10] [11] முழுமுதற் தெய்வம் தலையிட்டார். அவர் சனமாஹியை அமைதி நிலைக்குக் கொண்டு வந்தார். சனமஹியை மனித இனத்தின் அரசனாக ஆக்கினான். அதே நேரத்தில், லீமரேல் சிதாபி தேவி சனாமாஹியோடு சேர்ந்து மற்றொரு இமுங் லாய் (வீட்டு தெய்வம்) ஆனார்.

சில புனைவுகளின்படி, தெய்வம் இமா லீமரென் (தாய் லீமரேல்) சந்தையை கவனித்துக்கொள்கிறார். அவர் அவ்வாறு செய்வதன் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருகிறார். இந்த பாரம்பரியம் இன்னும் பெண்களால் பராமரிக்கப்படுகிறது. பெண்கள் "இமா"வின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார்கள். [12]

குழந்தை உலகில், படைப்பாளி கடவுள் அட்டிங்கோக் மாரு சிதாபா தேவி லீமரேல் சிதாபியிடம் லீமரேலிடமிருந்தே மற்றொரு தெய்வத்தை உருவாக்கும்படி கேட்டார். புதிய தெய்வத்தை உருவாக்கிய பிறகு, அவருக்கு எமோய்னு ( இமோய்னு) என்று பெயரிடப்பட்டது. அவர் மனிதகுலத்தின் காவல் தெய்வமாக பூமிக்கு அனுப்பப்பட்டார். [13]

உரைகள்[தொகு]

பல பழங்கால நூல்கள் ( புயாக்கள் ) லீமரேல் தெய்வத்தைப் பற்றி எழுதியுள்ளன. அவற்றுள் சில, லீமரேன் நயோம், லீமாரென் லாங்கோன், லீமாரன் மிங்கீ, லீமாரன் ஷெக்னிங் லாசட் , லீமாரென் உங்கோயிரோன் ஆகியவையாகும். [14]

வழிபாடு[தொகு]

லீமரேல் சிதாபி

லீமரேல் சிதாபி மற்றும் அவரது மகன் சனாமாஹி ஆகியோர் ஒவ்வொரு மெய்டேயின் முதல் அறையில் வணங்கப்படுகிறார்கள். காலை பொழுதில் கோரூ அங்கன்பாவை(சூரிய வெளிச்சம்) லீமரேல் தேவி விரும்பவில்லை.. எனவே, முக்கியமாக லோய் சாதியினரின் வீடுகள்தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அவள் தண்ணீரிலும் வாழ்கிறாள். எனவே, அவள் ஒரு இசைபூவில் (ஒரு மண் குடம் அல்லது தண்ணீர் கொண்ட டெரகோட்டா பானை) வழிபடப்படுகிறாள். இரண்டு தெய்வங்களின் இருப்பிடத்தை குறிக்கும் வகையில் படங்கள் எதுவும் வைக்கப்படுவதில்லை. [15]

ஒரு வீட்டின் மூத்த பெண் தேவியின் புனித மண் பானையில் இளநீரை நிரப்புகிறாள். அவள் புனித நீராடிய பிறகு இதைச் செய்கிறாள். புதிய பூக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் அரிசி, தேவிக்கு அர்ப்பணிப்பதற்காக வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்க பிரார்த்தனைகளும் நடைபெறும். [16] [17]

மைபாக்கள் லீமரென் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைப் பாடுவதன் மூலம் சடங்குகளைச் செய்கிறார்கள். இது பொதுவாக வீட்டிற்குள் செய்யப்படுகிறது. தண்ணீர், அரிசி மற்றும் பூக்கள் முக்கியமாக வைக்கப்படுகின்றன.

ஷாயோன் (அவதாரங்கள்)[தொகு]

லீமரேல் சிதாபி

லீமரேல் சிதாபி பல்வேறு வடிவங்களில் பல்வேறு பண்புகளைக் கொண்ட பல்வேறு அவதாரங்களுக்காக அறியப்படுகிறார்.

பின்வருபவை அவருடைய அவதாரங்கள்:

தெய்வீக வடிவங்கள் விளக்கம்
சாங் நிங் லீமா வான இராச்சியத்தின் இளவரசர் கோரிபாபாவின் தெய்வம் மற்றும் துணைவி.
இமோய்னு செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் தெய்வம்.
இரீமா நீர் மற்றும் நீர்நிலைகளின் தெய்வம்.
ஹிகுபி யாய்குபி ரத்தினங்கள் மற்றும் செல்வத்தின் தெய்வம்.
இங்கலீமா மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் தெய்வம்.
நோங்தாங் லீமா இடி மற்றும் மழையின் தெய்வம்.
பந்தோய்பி தைரியம், போர் மற்றும் ஏக்கத்தின் தெய்வம் .
பௌ-ஒய்பி நெல், செழிப்பு மற்றும் அறுவடையின் தெய்வம்.
பித்தாய் கோங்டைபி அனைவருக்கும் தாய் தெய்வம்.
சில்லீமா வேலை மற்றும் தொழில்களின் தெய்வம்.
தும்லீமா உப்பு மற்றும் ஊட்டச்சத்துக்களின் தெய்வம்.

திருவிழாக்கள்[தொகு]

தேவி லீமரேல் சிதாபி மற்றும் அவரது மகன் சனாமாஹி முக்கியமாக பல மத நிகழ்வுகளில் வழிபடப்படுகிறார்கள். அவற்றுள் சில சஜிபு சிரோபா மற்றும் சரோய்-கங்பா .செய்ரோபா என்பது மெய்டேய் புத்தாண்டு (மணிப்பூரி புத்தாண்டு) திருவிழா ஆகும். சரோய்-கங்பா என்பது தீய ஆவிகளை மகிழ்விக்கும் ஒரு மத நிகழ்வாகும். [18] [19] [20] [21]

  • மெரா சௌரெல் ஹௌபா திருவிழாவில், கடவுள் லைநிங்தௌ சனமாஹி மற்றும் தெய்வம்லீமரெல் சிதாபிக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி புகழ்பெற்ற சனாமாஹி கோவிலில் வழிபடப்படுகிறது. [22]
  • சஜிபு சேய்ரோபாவின் மெய்டேய் திருவிழாவில், லீமரேல் சிதாபி தெய்வம் பக்தர்களால் சமைக்கப்படாத அரிசியைக் கொடுத்து வழிபடப்படுகிறது. [23]

சின்னம்[தொகு]

மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் வழிபடப்படுவதைத் தவிர, லீமரேல் சிதாபி தேவி, வங்காளதேசம் மற்றும் மியான்மரில் வழிபடப்படுகிறாள். மியான்மரில், இமா லீமரேல் சிதாபியின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான யே கி பாக் கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு மெய்டேய் மக்கள் அவரை வழிபடுகின்றனர். [24] [25]

கலைகளில்[தொகு]

பேனா (இசைக்கருவி) தேவி லீமரேலுடன் தொடர்புடைய பல்வேறு இசை தாளங்களை நிகழ்த்தப் பயன்படுகிறது.

பேனாவின் (இசைக்கருவி ) ஒன்பது வகையான இசை தாளங்களில் ( சீசாக் கள்) லீமாரல் ஷீசாக் ஒன்றாகும். மெய்டேய் பாரம்பரியத்தின் (மணிப்பூரி கலாச்சாரம்) இந்த பாடும் பாணி இலாய் ஹரோபா திருவிழாவின் போது பாடப்படுகிறது. [26] [27]

காங்லேய் சிம்மாசனத்தின் கதைகள் நாவலில், லீமரேல் சிதாபி தெய்வம் நோங்டா நோங்கல் லெம்பி என்று வழங்கப்படுகிறார்.

புவியியலில்[தொகு]

லீமரேல் மலை மணிப்பூரில் உள்ள ஒரு மலையாகும். லோக்டாக் ஏரியின் 360 கோணப் பார்வைக்காக மலையேற்றம் செல்பவர்கள் இங்கு செல்கின்றனர். [28]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gitam, Kanishq (2022-01-12) (in en). Asatoma Sadgamaya A path for one. Blue Rose Publishers. பக். 207. https://books.google.com/books?id=V7NYEAAAQBAJ&q=corner+of+the+room+I+was+in+was+called+Sanamahi+Kachin%2C+which+was+dedicated+to+Leimarel+Sidabi+and+Phungga%2C+deities+of+Sanamahism&pg=PA207. 
  2. Meitei, Sanjenbam Yaiphaba (2020-11-25). The Cultural Heritage of Manipur. https://books.google.com/books?id=c276DwAAQBAJ&q=Leimarel+is+the+universal+mother&pg=PT221. 
  3. Karna, Mahendra Narain (1998). Social Movements in North-East India. https://books.google.com/books?id=-3FJEfU3swcC&q=Leimarel+Universal+Mother+&pg=PA200. 
  4. Devi, Dr Yumlembam Gopi. Glimpses of Manipuri Culture. https://books.google.com/books?id=gxqeDwAAQBAJ&dq=leimaren&pg=PA23. 
  5. "Trade resumption at Khwairamband unlikely right after May 3 Ima Market No 1 to be fitted with CCTV cameras".
  6. "April 27, 2020 – Manipur News".
  7. "Learners' Manipuri-English dictionary_Leimaren". uchicago.edu. 2006.
  8. "Learners' Manipuri-English dictionary_Leimaren Sidabi". uchicago.edu. 2006.
  9. (in en) Folklore, Public Sphere, and Civil Society. பக். 70. https://books.google.com/books?id=Xsrgg1Mel8UC&q=++laplen+ka+central+room+faced+spot+Leimarel+eternal+Mother+whose+womb+men+women+originate+Meitei+cosmic+belief+represents+Mother+&pg=PA70. 
  10. name="archive.org"> A Critical Study Of The Religious Philosophy. https://archive.org/details/in.ernet.dli.2015.461915/page/n71/mode/2up?q=Leimarel+Leimalel. 
  11. The Lois of Manipur: Andro, Khurkhul, Phayeng and Sekmai. https://books.google.com/books?id=tIBymmBWqgsC&dq=leimaren+sidabi&pg=PA47. 
  12. (in en) Women's Role in the 20th Century Manipur: A Historical Study. பக். 32. https://books.google.com/books?id=sIEOy8SRLv8C&q=According+to+legends+%E2%80%9C+Ima+Leimaren+%E2%80%9D+took+charge+of+the+market+to+bring+peace+and+harmony+.+Women+maintain+the+tradition+as+they+are+considered+the+descendents+of+%27+Ima&pg=PA32. 
  13. "Emoinu".
  14. (in en) The Cultural Heritage of Manipur. பக். 137. https://books.google.com/books?id=c276DwAAQBAJ&q=Leimaren+Naoyom%2C+Leimaren+Langon%2C+Leimaren+Mingkhei%2C+Leimaren+Shekning+Lasat%2C+Leimaren+Ungoiron+and+many+others.+There+are+also+other+books+on+many+subjects.+&pg=PT137. 
  15. (in en) Encyclopaedia of North-East India. பக். 247. https://books.google.com/books?id=XScmdGvMf7IC&dq=leimaren&pg=PA247. 
  16. (in en) Glimpses of Manipuri Culture. பக். 16. https://books.google.com/books?id=gxqeDwAAQBAJ&dq=leimaren&pg=PA16. 
  17. (in en) Glimpses of Manipuri Culture. பக். 32. https://books.google.com/books?id=gxqeDwAAQBAJ&dq=leimaren&pg=PA32. 
  18. Devi, Lairenlakpam Bino (2002). The Lois of Manipur: Andro, Khurkhul, Phayeng and Sekmai. https://books.google.com/books?id=tIBymmBWqgsC&dq=leimaren+sidabi&pg=PA49. 
  19. Devi, Dr Yumlembam Gopi. Glimpses of Manipuri Culture. https://books.google.com/books?id=gxqeDwAAQBAJ&dq=leimaren&pg=PA68. 
  20. Bareh, Hamlet (2001). Encyclopaedia of North-East India. https://books.google.com/books?id=XScmdGvMf7IC&dq=leimaren&pg=PA183. 
  21. A Critical Study Of The Religious Philosophy. August 1991. https://archive.org/details/in.ernet.dli.2015.461915/page/n117/mode/2up?q=Leimarel+Leimalel. 
  22. "People celebrates Mera Chaoren Houba". 21 September 2017. http://www.pothashang.in/2017/09/21/people-celebrates-mera-chaoren-houba/. 
  23. "Wakching Nongma Panba Cheiraoba : Offering uncooked food items to Ema Leimarel Sidabi at Awang Sekmai :: 10 January 2016 ~ Pictures from Manipur".
  24. "Myanmar Meetei mou at Ema Leimarel Sidabi temple at Ye Ki Bauk village Myanmar 20170220".
  25. "'Ema Leimarel Sidabi' at 'ye ki bauk' earlier known as Meetei khul, Amarapur District, Myanmar :: December 2016 ~ Pictures from Manipur".
  26. The Sound of Pena in Manipur. https://books.google.com/books?id=j7E2EAAAQBAJ&dq=leimarel&pg=PA34. 
  27. Orality: the Quest for Meanings. https://books.google.com/books?id=3rJ3DQAAQBAJ&dq=leimarel&pg=PT169. 
  28. Singh, Arambam Sanatomba (2021-06-18) (in en). Ecotourism Development Ventures in Manipur: Green Skill Development and Livelihood Mission. Walnut Publication. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-91145-59-0. https://books.google.com/books?id=7YQ8EAAAQBAJ&q=trekking+in+the+evening+to+nearby+Leimarel+Hilltop+and+Chaoba+Ching+for+panaromic+viewing+of+360+degree+of+Loktak+Lake&pg=PA87. 

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீமரேல்_சிதாபி&oldid=3910111" இலிருந்து மீள்விக்கப்பட்டது