நீர்சார் சூழல் மண்டலம்
நீர்சார் சூழல் மண்டலம் என்பது நீர்நிலைகளில் காணப்படும் சூழல் மண்டலங்கள் ஆகும். இதில் ஒன்றில் ஒன்றும், தம்முடைய சூழலிலும் தங்கியிருக்கும் பல்வேறு உயிரினங்கள் நீர்சார் சூழல் மண்டலத்தில் வாழ்கின்றன.
நீர்சார் சூழல் மண்டலத்தின் வகைகள்
[தொகு]நீர்சார் சூழல் மண்டலங்களை இரண்டு பொதுவான பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை கடல்சார் சூழல் மண்டலம், நன்னீர்ச் சூழல் மண்டலம் என்பனவாகும்.
உவர்நீர்ச் சூழல் மண்டலம்
[தொகு]கடல்சார் சூழல் மண்டலம் புவி மேற்பரப்பின் 71% இல் பரந்துள்ளதுடன் உலகிலுள்ள நீரின் 97% அளவையும் தன்னுள் அடக்கியுள்ளது. உலகின் தேறிய முதன்மை உற்பத்தியின் 32% இங்கிருந்தே கிடைக்கிறது. கடல்சார் சூழல் மண்டலத்தில் கரைந்துள்ள சேர்வைகளினால், முக்கியமாக உப்பினால், இது நன்னீர் சூழல் மண்டலத்தில் இருந்து வேறுபடுகின்றது. கடல்நீரில் கரைந்துள்ள பொருட்களில் ஏறத்தாள 85% சோடியமும், குளோரீனும் ஆகும்.
நன்னீர்ச் சூழல் மண்டலம்
[தொகு]இது புவி மேற்பரப்பின் 0.8% அளவை மூடியுள்ளதுடன் உலக நீர் அளவின் 0.009% அளவையும் தன்னுள் அடக்குகிறது. நன்னீர்ச் சூழல் மண்டலம் உலகின் அறியப்பட்ட மீன் இனங்களில் 41% அளவைக் கொண்டுள்ளது.