சேர்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேர்வை என்ற பட்டம் கொண்ட ஜாதிகள் தமிழ்நாட்டில் அகமுடையார், தஞ்சைக்கள்ளர், தொட்டிய நாயக்கர், கோனார், நாடார், வலையர், வன்னியர், முத்தரையர்ஆகிய அனைவருக்கும் சேர்வை பட்டம் உண்டு. கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது. சேர்வை என்றால் அரசு சார்ந்த சேவையில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பணிக்குழுவினர் எனப்படும். அரசு சேவகம்(சேவை)என்பதே சேர்வையாக மருவியது. பொதுவாக மன்னராட்சிக் காலங்களில் கோயில் மற்றும் அரண்மனையில் படிக்காவல், மேல்காவல், பல்லக்கு தூக்குதல், பராமரித்தல், கணக்காயர், பண்டாரக்காவல், கோசாலைக் காவல் மற்றும் பராமரிப்புப்பணி, அக்கசாலைக் காவல் மற்றும் பராமரிப்பு ஆகிய வேலைகளை செய்த மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த சேவை செய்வோரும் ஒரே குழுவாக, அதாவது பல்லக்கு தூக்கும் சேர்வை, பண்டாரக் காவல் சேர்வை என்பது போல தனித்தனியே வழங்கப்பட்டுள்ளனர். மேலும், சேர்வைக்காரர்கள் என்பவர்கள் அந்தந்த சேவைக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். மன்னராட்சியில் கோவில், அரண்மனை இவற்றில் சேவை செய்தவர்களை அரசாங்கப்பணியாளர், அரச ஊழியம் செய்வோர் என்ற பொருளில் சேர்வை என்று அழைத்தனர்.

மேற்கோள்[தொகு]

  • தென் இந்திய குலங்கள்- [[1]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்வை&oldid=1905943" இருந்து மீள்விக்கப்பட்டது