முதன்மை உற்பத்தி
Jump to navigation
Jump to search

உலக கடல் மற்றும் நில ஒளித்தன்னூட்ட வாழ்விகள், செப்டெம்பர் 1997 தொடக்கம் ஆகஸ்ட் 2000 வரை. தன்னூட்ட வாழ்விகளின் மதிப்பீடு என்ற வகையில் இது எதிர்பார்க்கக்கூடிய முதன்மை உற்பத்தியின் ஒரு குறியீடு மட்டுமே. சரியான மதிப்பீடு அல்ல. SeaWiFS திட்டம், நாசா/Goddard Space Flight Center மற்றும் ORBIMAGE.
முதன்மை உற்பத்தி அல்லது முதல்நிலை உற்பத்தி என்பது வளிமண்டலத்தில் உள்ள அல்லது நீரில் உள்ள காபனீரொட்சைட்டில் இருந்து ஒளித்தொகுப்பு மூலம் கரிமச் சேர்வைகளை உருவாக்குவது ஆகும். இதில் மிகச் சிறிய அளவில் வேதித்தொகுப்பின் பங்கும் உள்ளது. உலகில் வாழும் எல்லா உயிர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ முதன்மை உற்பத்தியில் தங்கியுள்ளன. முதன்மை உற்பத்தியில் ஈடுபடும் உயிரினங்கள் தம்மூட்ட வாழ்விகள் எனப்படுகின்றன. இவை உணவுச் சங்கிலியில் அடியில் உள்ளன. நிலச் சூழ்நிலைமண்டலத்தில் முதன்மை உற்பத்தியில் ஈடுபடும் உயிரினங்கள் தாவரங்கள் ஆகும். நீர்ச் சூழல்மண்டலங்களில் அல்காக்கள் இவ்வேலையைச் செய்கின்றன.