உணவுச் சங்கிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவீடன் நாட்டு ஏரி ஒன்றில் அறியப்பட்ட ஒரு உணவுச் சங்கிலி

உணவுச் சங்கிலி என்பது, ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. தாவரங்கள் அவற்றின் உயிரணுக்களில் இருக்கும் பச்சையத்தின் உதவியால், ஒளித்தொகுப்பு என்னும் செயல்முறை மூலம் காற்றில் உள்ள கார்பனீரொக்சைட்டை எடுத்துக் கொண்டு நிலத்திலிருந்து தண்ணிரையும், சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயரிக்கின்றன. அதனால் இவை முதன்மை உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தோ அல்லது வேறு வழியில் உணவைப் பெறும் உயிரினங்கள் நுகர்வோர் ஆகின்றன.

நுகர்வோர்கள் உணவை எடுத்துக் கொள்ளும் முறையில் மூன்றுவகையாக பிரிக்கலாம். அவை:

  • தாவரத்தால் தயாரிக்கப்பட்ட உணவை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உயிரினங்கள் - தாவரவுண்ணிகள்
  • விலங்குகளின் மாமிசத்தை மட்டும் உணவாக் உட்கொள்ளும் உயிரினங்கள் - விலங்குண்ணிகள்
  • தாவரத்தையும் விலங்கையும் அதாவது இரண்டையும் உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள் - அனைத்துண்ணிகள்

இவ்வாறு தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவானது அல்லது ஆற்றலானது ஒரு மட்டத்திலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வதே உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது. உணவுச் சங்கிலியானது ஒரு நேர்கோட்டில் இருக்கும் உணவுத் தொடர்பைக் குறிக்கும். இவ்வாறான வபல்வேறு உணவுச் சங்கிலிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகளை உள்ளடக்கியதே உணவு வலை (en:Food Web) எனப்படும்.

ஒரு உணவு வலையைக் காட்டும் வரைபடம்

எ.கா: புல்--->மான்--->சிங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுச்_சங்கிலி&oldid=2368138" இருந்து மீள்விக்கப்பட்டது