இடி
Jump to navigation
Jump to search
.
![]() |
|
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
இடி ( ஒலிப்பு) (Thunder) என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும். ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300000 கிலோமீட்டர்; ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் என்பதே இதன் காரணம் ஆகும்.
காரணம்[தொகு]
இடி உண்டாக அறிவியல் பூர்வமான காரணங்கள் பலவாறாக உள்ளன. அவற்றுள் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாடில் முதல்முறையாக ஓர் கருதுகோளை முன்வைத்தார்.