பந்தோய்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தோய்பி
இலைரெம்பி, உமாங் லாய்-இல் ஒருவர்
பந்தோய்பி தேவி தன் வெள்ளைக் குதிரையின் மீது ஏறிச் செல்கிறாள்
அதிபதிநாகரிகம், தைரியம், கருவுறுதல், பன்றி, காதல், வெற்றி, போர் மற்றும் ஞானத்தின் தெய்வம்
வேறு பெயர்கள்
 • அயாங் லெய்மா
 • கொய்ரெல் லெய்மா
 • கொய்ரெல் லெய்மா
 • நாங்க்போக் லெய்மா
வகைமைதி பண்பாடு (மணிப்புரி கலாச்சாரம்), சனமாகிசம்
ஆயுதம்ஈட்டி , வாள்
சமயம்மணிப்பூர் இராச்சியம் (பண்டைய மணிப்பூர்)[1]
விழாக்கள்

பந்தோய்பி ( Panthoibi ) நாகரீகம், தைரியம், கருவுறுதல், கைவினைப்பொருட்கள், காதல், வெற்றி, போர் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்டைய காங்கிலிபாக்கின் ( முந்தைய மணிப்பூர் இராச்சியம்) புராணங்கள் மற்றும் மதத்தில் காணப்படும் ஒரு தெய்வம். நோங்போக் நிங்தௌ கடவுளின் துணைவியான இவள் இலீமரேல் சிதாபியின் தெய்வீக அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் நோங்தாங் லீமா தேவியின் வடிவமாகவும் அடையாளம் காணப்படுகிறாள். மணிப்பூர், அசாம், திரிபுரா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள மெய்தே மக்களால் இவள் முக்கியமாக வணங்கப்படுகிறாள்.

பந்தோய்பி, எமோய்னு, புயோபி போன்ற பிற மைதி தெய்வங்களின் ஆளுமை, மைதி பெண்களின் தைரியம், சுதந்திரம், நீதி மற்றும் சமூக மரியாதை ஆகியவற்றை சித்தரிக்கிறது. [2]

வரலாறு[தொகு]

அசாமின் கொண்டாடப்பட்ட பந்தோய்பி இரட்பா திருவிழாவின் போது பாந்தோய்பியின் சிலை

பந்தோய்பி தெய்வத்தின் வழிபாடு காபா வம்சத்தின் சகாப்தத்தில் தொடங்கியது. [3] [4] [5]

கி.பி 1100 இல், இலொயும்பா சின்யென், செய்சனம் குலத்தின் தேவி பந்தோய்பிக்கு செய்த சேவையைப் பற்றி குறிப்பிடுகிறார். உரை அவளை மிகவும் போற்றப்படும் மைதி தெய்வம் என்று குறிப்பிடுகிறது.

17 ஆம் நூற்றாண்டில், பந்தோய்பி புலி மீது சவாரி செய்யும் ஒரு போர் தெய்வமாக தோன்றினாள். 1686 ஆம் ஆண்டு பாந்தோய்பி கோயில் கட்டியதற்குச் செய்தோல் கும்பபாவின் பதிவும் [6] 1699 ஆண்டில் சிலையை உருவாக்கிய பதிவும் காணப்படுகிறாது .

18 ஆம் நூற்றாண்டில், மணிப்பூரில் வைணவத்தின் எழுச்சி காரணமாக பந்தோய்பி வழிபாட்டில் சரிவு ஏற்பட்டது. இந்து மன்னர் கரீப் நிவாஜ் பம்ஹெய்பா (1709-1748) கோவில்களை இடித்து சிலைகளை உடைத்தார். மேலும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து, பந்தோய்பி இந்து தெய்வமான துர்க்கையின் வெளிப்பாடாகவோ அல்லது அவரது அவதாரமாகவோ அல்லது அவரது வெளிப்பாடாகவோ கருதப்பட்டார். [7] [8] [9] [10] [11] பாந்தோய்பியின் அடையாளம் x துர்க்கையின் வடிவமாகவே மாற்றப்பட்டது. செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐந்து நாட்கள் இவள் வழிடபட்டாள். [12]

1700 முதல் நவீன சகாப்தம் வரும் வரை பந்தோய்பிக்கு கோயில்கள் எதுவும் கட்டப்படவில்லை. [6] [13] 1960 களில் இருந்து, துர்கை வழிபாட்டிற்கு பதிலாக பாந்தோய்பி வழிபாடு அதிகரித்துள்ளது. [14]

பந்தோய்பி வழிபாடு முக்கியமாக மைதி இனத்தைச் சேர்ந்த எய்சனிச குடும்பத்தால் வழிபடப்படுகிறது. எனவே, இவள் எய்சனம் லைரெம்பி என்றும் அழைக்கப்படுகிறார். [15]

மற்ற தெய்வங்களுடன் தொடர்பு[தொகு]

பந்தோய்பி

பந்தோய்பி தேவி லீமாரல் சிதாபியின் தெய்வீக அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறாள். [16] [17] இவள் நோங்தாங் லீமா தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். [18] [19] இவளுக்கு புயோபி (தானியங்களின் தெய்வம்) உட்பட பல வடிவங்கள் உள்ளன. [20] தேவி கோரேபி சாம்புபி ( கோரிமா என்றும் அழைழைக்கப்படும்) பந்தோய்பியின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். [21]

சான்றுகள்[தொகு]

 1. Singh, T. S. P. (2018-05-31) (in en). Apology. Partridge Publishing. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5437-0188-3. https://books.google.com/books?id=kMNiDwAAQBAJ&q=mythical+god+and+goddess+Nongpok+Ningthou+and+Panthoibi+of+Kangleipak&pg=PT7. 
 2. Kipgen, Tingneichong G. (2010) (in en). Women's Role in the 20th Century Manipur: A Historical Study. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-803-1. https://books.google.com/books?id=sIEOy8SRLv8C&q=panthoibi+shows+that+Meitei+women+are+bold+%2C+courageous+%2C+independent+and+enjoy+their+due+rights+and+have+an+honourable+place+in+the+society+&pg=PA24. 
 3. Devi, Nunglekpam Premi (2018-04-14) (in en). A Glimpse of Manipuri Literary Works. FSP Media Publications. பக். 29. https://books.google.com/books?id=kqJVDwAAQBAJ&dq=nongpok+ningthou&pg=PT29. 
 4. Devi, Dr Yumlembam Gopi (in en). Glimpses of Manipuri Culture. பக். 119. https://books.google.com/books?id=gxqeDwAAQBAJ&dq=nongpok+ningthou&pg=PA119. 
 5. Singh, Ch Manihar (1996) (in en). A History of Manipuri Literature. Sahitya Akademi. பக். 13. https://books.google.com/books?id=yiBkAAAAMAAJ&q=panthoibi. 
 6. 6.0 6.1 Devi, Nunglekpam Premi (2018-04-14) (in en). A Glimpse of Manipuri Literary Works. FSP Media Publications. பக். 29. https://books.google.com/books?id=kqJVDwAAQBAJ&dq=nongpok+ningthou&pg=PT29. Devi, Nunglekpam Premi (2018-04-14).
 7. Dalal, Roshen (2014-04-18) (in en). Hinduism: An Alphabetical Guide. Penguin UK. பக். 802. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8475-277-9. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&q=Eighteenth+century+onwards+indigenous+deities+Hindu+counterparts+Panthoibi%2C+god+of+prosperity+and+war%2C+was+equated+with+DURGA.&pg=PT802. 
 8. Ubhaykar, Rajat (2019-10-22) (in en). Truck de India!: A Hitchhiker's guide to Hindustan. Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-86797-65-0. https://books.google.com/books?id=2EGxDwAAQBAJ&q=Panthoibi+is+a+goddess+worshipped+by+the+Meiteis+of+Manipur%2C+who+has+now+been+Sanskritized+as+a+manifestation+of+Durga+and+is+worshipped+every+Navratri+like+in+the+rest+of+India.&pg=PT178. 
 9. Mee, Erin B. (2011-06-16) (in en). Antigone on the Contemporary World Stage. Oxford University Press. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-161811-6. https://books.google.com/books?id=mgFREAAAQBAJ&q=Meitei+gods+were+aligned+with+comparable+Hindu+gods+and+renamed%3A+for+example%2C++Panthoibi+became+Durga%2C&pg=PA111. 
 10. Ethnicity and Social Change: An Anthology of Essays - Page 43 - Gangmumei Kabui · 2002
 11. The Land of Seven Sisters - Page 34 - J. P. Saikia · Directorate of Information and Public Relations, Assam, 1976
 12. Noni, Arambam (2015-10-16) (in en). Colonialism and Resistance: Society and State in Manipur. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-27066-9. https://books.google.com/books?id=OzjbCgAAQBAJ&dq=panthoibi&pg=PA235. 
 13. History and Archaeology: Prof.
 14. Noni, Arambam (2015-10-16) (in en). Colonialism and Resistance: Society and State in Manipur. Routledge. https://books.google.com/books?id=OzjbCgAAQBAJ&dq=panthoibi&pg=PA235. Noni, Arambam; Sanatomba, Kangujam (2015-10-16).
 15. Archaeology in Manipur - Page 85 - L. Kunjeswori Devi · Rajesh Publications, 2003
 16. Chanted Narratives: The Living "katha-vachana" Tradition - Page 250 - Molly Kaushal, Indira Gandhi National Centre for the Arts · 2001
 17. Kaushal, Molly; Arts, Indira Gandhi National Centre for the (2001).
 18. Manipur, a Tourist Paradise - Page 82 - E. Ishwarjit Singh · 2005
 19. Celebration of Life: Indian Folk Dances - Page 129 - Jiwan Pani, India.
 20. Phuritshabam, Chaoba; Ningombam, Shreema; Haripriya, Soibam (2015-07-06) (in en). Tattooed with Taboos: An Anthology of Poetry by Three Women from Northeast India. Partridge Publishing. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4828-4851-9. https://books.google.com/books?id=dF0oCgAAQBAJ&q=Panthoibi%3A+a+legendary+who+has+many+metamorphosis%2C+like+Phouibi+goddess+grain&pg=PT43. 
 21. Shekhawat, Seema; Re, Emanuela C. Del (2017-12-18) (in en). Women and Borders: Refugees, Migrants and Communities. Bloomsbury Publishing. பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-83860-987-0. https://books.google.com/books?id=RBiWDwAAQBAJ&q=Haoreibi+regarded+as+an+incarnation+of+Panthoibi%2C+the+goddess+of+death%2C+and+as+a+bringer+of+fertility&pg=PA227. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பந்தோய்பி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தோய்பி&oldid=3911272" இலிருந்து மீள்விக்கப்பட்டது