யுனேசுவரன் ராமராஜ்
யுனேசுவரன் ராமராஜ் YB Yuneswaran Ramaraj | |
---|---|
ஜொகூர் சிகாமட் மக்களவை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 நவம்பர் 2022 | |
பெரும்பான்மை | 5,669 (மலேசியத் தேர்தல் 2022) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Yuneswaran Ramaraj 1987 ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா |
அரசியல் கட்சி | பி.கே.ஆர் (PKR) |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் (PH) (2022-இல் இருந்து) |
முன்னாள் கல்லூரி |
|
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
யுனேசுவரன் ராமராஜ் எனும் ஆர். யுனேசுவரன் (ஆங்கிலம்; மலாய்: Yuneswaran Ramaraj எனும் R. Yuneswaran; சீனம்: 尤内斯瓦兰•拉马拉吉); என்பவர் 2022 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் ஜொகூர் சிகாமட் மக்களவை தொகுதியின் (Segamat Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார்.[1]
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆங்கிலியா ரசுகின் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்; இவர் சிலாங்கூர், சுங்கை பெசார் நகரில் உள்ள சின் மின் சீனப் பள்ளியில் (SRJK (C) Sin Min Sg Besar) சீனமொழி படித்தவர்; மேலும் சீனமொழியில் சரளமாக பேசக்கூடியவர்.[2]
பொது
[தொகு]சிகாமட் மக்களவை தொகுதியில் 47.7% மலாய் மக்களும்; 42.7% சீனர் மக்களும்; ஆக மொத்தம் 90.4% உள்ளனர். இந்தியர்கள் 9.2% மிகக் குறைந்த அளவில் உள்ளனர். இருப்பினும் 35 வயது நிரம்பிய ஒரு தமிழ் இளைஞர், அரசியல் பெரும்புள்ளிகளுடன் மோதி வெற்றி பெற்றது ஒரு தேர்தல் சாதனையாகக் கருதப் படுகிறது.
யுனேசுவரன் ராமராஜ், மலேசியாவின் முக்கிய மொழிகளான மலாய் மொழி; ஆங்கில மொழி; சீன மொழி; தமிழ் மொழி ஆகிய மொழிகளில் மிகச் சரளமாகப் பேசக் கூடியவர்.[3] இவர் 2022 நவம்பர் 19-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற போது, திருக்குறள் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் முன்னிலையில் யுனேசுவரன் ராமராஜ், மூன்று மொழிகளில் பிரசாரம் செய்த காணொலி யூடியூப் ஊடகத்தில் பதிவாகி உள்ளது.
சிகாமட் மக்களவை தொகுதி
[தொகு]சிகாமட் மக்களவை தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. பின்னர் 1974-ஆம் ஆண்டில் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து சிகாமட் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சிகாமட் மக்களவை தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சிகாமட் மக்களவை தொகுதியில் ஆர். யுனேசுவரன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
பாக்காத்தான் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட யுனேசுவரனுக்கு 23,437 வாக்குகள் கிடைத்தன. பாரிசான் கூட்டணியின் மஇகா சார்பில் போட்டியிட்ட மஇகாவின் தேசியப் பொருளாளர் டான் ஸ்ரீ ராமசாமி முத்துசாமி (Ramasamy Muthusamy) அவர்களுக்கு 17,768 வாக்குகள் கிடைத்தன.
ஆண்டு | தொகுதி | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
வாக்குகள் % | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2022 | P140 சிகாமட் | யுனேசுவரன் ராமராஜ் (Yuneswaran Ramaraj) (பி.கே.ஆர்) |
23,437 | 46.27% | ராமசாமி முத்துசாமி (Ramasamy Muthusamy) (மஇகா) |
17,768 | 35.08% | 50,652 | 5,669 | 73.03% | ||
பூபாலன் பொன்னுசாமி (Poobalan Ponusamy) (பெர்சத்து) |
8,385 | 16.55% | ||||||||||
சையது அயிரோல் (Syed Hairoul Faizey) (பெஜுவாங்) |
1,062 | 2.10% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yuneswaran Ramaraj". China Press (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
- ↑ "Nurul Isa: All PKR candidates have signed an agreement and are not allowed to switch to other political parties after being elected". Oriental Net Malaysia Oriental Daily. 2022-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
- ↑ "PKR Indian Candidate fluent in Chinese to canvass votes thanks to Guan Gong China Press". China Press (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.