யாசுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாசுது
یزد
நகரம்
Jameh Mosque Yazd.jpg
Zoroastrian Fire Temple (8906007289).jpg
نمایی از حوض باغ دولت آباد.jpg
میدان ساعت1.jpg
Masjedjameayazd.jpg
Malekzadeh House (Yazd Art House) 02.jpg
Tomb of Seyed Roknildin -Negin Mohamadi Fard.jpg
Top to bottom, left to right: Jame Mosque Rotunda, Zoroastrian Fire Temple, Dowlatabad Garden, Markar Squire, Jame Yazd Mosque, Tomb of Seyyed Ruknaldin, Malekzadeh House.
அலுவல் சின்னம் யாசுது
சின்னம்
யாசுது is located in ஈரான்
யாசுது
யாசுது
ஆள்கூறுகள்: 31°53′50″N 54°22′4″E / 31.89722°N 54.36778°E / 31.89722; 54.36778ஆள்கூறுகள்: 31°53′50″N 54°22′4″E / 31.89722°N 54.36778°E / 31.89722; 54.36778
Country ஈரான்
Provinceயாசுது
CountyYazd
BakhshCentral
அரசு
 • List of mayors of Yazd|MayorMehdi Jamalinejad[1]
 • City Council ChairmanGholam Ali Sefid
ஏற்றம்1,216 m (3,990 ft)
மக்கள்தொகை (2016 ஆண்டின் மக்கள்தொகை)
 • நகர்ப்புறம்529,673 [2]
இனங்கள்Yazdi (en)
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
தொலைபேசி குறியீடு035
ClimateBWh
இணையதளம்yazd.ir
அலுவல் பெயர்Historic City of Yazd
வகைCultural
வரன்முறைiii, v
தெரியப்பட்டது2017 (41st session)
உசாவு எண்1544
State PartyIran
RegionAsia and the Pacific

யாசுது என்ற ஈரானின் நகரமானது, ([jæzd] (About this soundகேட்க)), முன்னர் யெஸ்டு என்றும் அழைக்கப்பட்டது. [3] [4] ஈரானின் யாசுது மாகாணத்தின் தலைநகரமாக இந்நகரம் உள்ளது. இந்நகரமானாது, எஸ்பஹானின் தென்கிழக்கில் 270 km (170 mi) தொலைவில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகையானது 529,673 ஆக இருந்தது. தற்போது ஈரானின் 15 வது பெரிய நகரமாக, இந்நகரம் திகழ்கிறது. 2017 ஆம் ஆண்டு முதல், வரலாற்று நகரமான யாஸ்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக, இந்நகரை அறிவித்துள்ளது.[5]

சிறப்புகள்[தொகு]

இந்நகரின் பாலைவன சூழலுடன், பல தலைமுறைகளின் சுவடுகள் இருப்பதால், யாசுதுக்கு என தனித்துவமான பாரசீக கட்டிடக்கலை எழில் உள்ளது . இதற்கு " விண்ட்காட்சர்ஸ் நகரம்" ( شهر بادگیرها ஷாஹர்-இ பட்கிர்ஹா ). இதன் சிறப்புத்தன்மைகளை, பல கட்டிடங்களிலிருந்து, நன்றாக அதன் அறியப்படுகிறது ஜோரோஸ்ட்டிரிய தீ கோவில்களில், அப் அன்பர்சு கோட்டைகள்(AB anbars), நிலத்தடி வழித்தடங்கள்(qanats), குளிர்விப்பான்கள்(yakhchals), பாரசீக கைவினைப்பொருட்களான,கைகளால் தைக்கப்பெற்ற இறைவனுக்கானத் துணி (termeh), பட்டு நெசவு, பாரசீக பருத்தி மிட்டாய் போன்றவைகளாகும். தனிநபரின் மிக உயர்ந்த மிதி வண்டிகளின் பயன்பாடு, இந்த ஈரானின் நகரில் தான் அதிகம் என்பதால், இந்த நகரத்தினை 'மிதிவண்டி நகரம்' என்றும் அழைக்கப்பர். கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பு கொள்வதில், மிதிவண்டிக் கலாச்சாரம், இந்நகரில் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.[6]

பொருளாதாரம்[தொகு]

இந்நகரத்தின் பட்டுத்துணிகளும், பிற தரைவிரிப்புகளும், பல்லாண்டுகளாகத் தரத்திற்கு எப்போதும் பெயர் பெற்று திகழ்கின்றன. யாசுது நகரமானது, இன்று ஈரானின் ஜவுளித் தொழில்துறை நடுவங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது. இங்கு கணிசமான மட்பாண்டங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தொழில் மற்றும் தனித்துவமான மிட்டாய் தொழில்கள், நகை தொழில்கள் உள்ளன. மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், விவசாயம், பால், உலோக வேலைகள், இயந்திர உற்பத்தி உள்ளிட்ட பிற தொழில்களிலும் பணியாற்றுகின்றனர். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையில், ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. முக்கியமாக கேபிள்கள் எனப்படும் முறுக்குவடம் உற்பத்தித் தொழில்களும், இணைப்பிகள் உருவாக்கலும் சிறப்பாக நடைபெற, அதற்குரிய முதன்மை பொருட்களை உற்பத்தி செய்யப் படுகின்றன. தற்போது யாசுத்தில், ஈரானின் மிகப்பெரிய ஃபைபர் ஒளியியல் உற்பத்தியாளரின் கட்டகம் அமைந்து உள்ளது.

காலநிலை[தொகு]

யாசுத்தில் வெப்பமான பாலைவன காலநிலை உள்ளது. (கோப்பன் காலநிலை வகைப்பாடு BWh). ஈரானின் மிக வறண்ட முக்கிய நகரமாக, இது உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 49 மில்லிமீட்டர் (1.9 அங்குலம்)மழையே, 23 நாட்களுக்கு மழைப்பொழிவு மட்டுமே நிகழ்கிறது. இதன் கோடைக் கால வெப்பநிலை 40 ° செல்சியசு (104 °F)க்கு மேல் இருக்கும். இந்நகரம், ஈரப்பதம் இல்லாமல் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். இரவில் கூட, கோடையில் வெப்பநிலை மிகவும் வசதியின்மையாக ஏற்படுத்தும். குளிர்காலத்தில், நாட்கள் லேசாகவும், வெயிலாகவும் இருக்கும். ஆனால், காலையில் மெல்லிய காற்றும், குறைந்த மேகமூட்டமும், குளிர்ந்த வெப்பநிலையை ஏற்படுத்துகின்றன. அவை சில நேரங்களில் 0 °C (32 °F) க்குக் கீழே இருக்கும் என வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மிகவும் வெப்பமான கோடைகாலத்தை சமாளிக்க, இந்நகரில் இருக்கும் பல பழைய கட்டிடங்கள், அற்புதமான காற்று கோபுரங்களையும், பெரிய நிலத்தடி பகுதிகளையும் கொண்டுள்ளன. இந்நகருக்கு அருகிலுள்ள மலைகளில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து, பெறப்பட்ட பனியை சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட, சிறப்பான கட்டிட அமைப்பு நுட்பங்கள் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட முற்றிலும் அடோப்பிலிருந்து கட்டப்பட்ட, மிகப்பெரிய நகரங்களில் யாசுத்து நகரும் ஒன்றாகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், யாசுது
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 27.0
(80.6)
28.0
(82.4)
32.0
(89.6)
37.0
(98.6)
41.0
(105.8)
44.0
(111.2)
45.0
(113)
45.6
(114.1)
42.0
(107.6)
36.0
(96.8)
30.0
(86)
27.4
(81.3)
45.6
(114.1)
உயர் சராசரி °C (°F) 12.9
(55.2)
15.9
(60.6)
20.6
(69.1)
26.0
(78.8)
32.2
(90)
37.2
(99)
39.6
(103.3)
38.1
(100.6)
34.0
(93.2)
27.6
(81.7)
19.3
(66.7)
14.0
(57.2)
26.45
(79.61)
தினசரி சராசரி °C (°F) 6.3
(43.3)
9.0
(48.2)
13.8
(56.8)
18.7
(65.7)
24.5
(76.1)
29.4
(84.9)
31.7
(89.1)
29.9
(85.8)
25.4
(77.7)
19.3
(66.7)
11.7
(53.1)
6.9
(44.4)
18.88
(65.99)
தாழ் சராசரி °C (°F) −0.3
(31.5)
2.2
(36)
7.0
(44.6)
11.5
(52.7)
16.8
(62.2)
21.7
(71.1)
23.8
(74.8)
21.8
(71.2)
16.9
(62.4)
11.0
(51.8)
4.2
(39.6)
−0.1
(31.8)
11.38
(52.48)
பதியப்பட்ட தாழ் °C (°F) −14.0
(7)
−10.0
(14)
−7.0
(19)
0.0
(32)
5.6
(42.1)
11.0
(51.8)
16.0
(60.8)
12.0
(53.6)
2.0
(35.6)
−3.0
(27)
−10.0
(14)
−16.0
(3)
−16
(3)
பொழிவு mm (inches) 7.0
(0.276)
0.8
(0.031)
11.0
(0.433)
21.9
(0.862)
0.6
(0.024)
2.0
(0.079)
0.0
(0)
0.0
(0)
3.0
(0.118)
0.0
(0)
2.0
(0.079)
0.0
(0)
48.3
(1.902)
ஈரப்பதம் 53 46 37 33 25 18 17 18 19 27 38 47 31.5
சராசரி பொழிவு நாட்கள் 1 3 2 11 1 1 1 0 1 0 2 0 23
சூரியஒளி நேரம் 181.6 203.0 207.5 230.9 293.9 334.1 340.7 335.0 313.1 278.1 217.8 193.4 3,129.1
Source #1: Climate-Data.org
Source #2: NOAA (extremes, sun, humidity, 1961–1990)[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "شهـردار يــزد" [Mayor] (பெர்ஷியன்). Municipality of Yazd. 19 நவம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://www.amar.org.ir/english
  3. EB (1888).
  4. EB (1911).
  5. "Historical City of Yazd Inscribed as World Heritage Site". 9 July 2017. 1 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Bicycle history in Yazd". 11 February 2009. 23 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Yazd Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. December 29, 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுது&oldid=3569224" இருந்து மீள்விக்கப்பட்டது