மிட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிட்டாய்
Candy in Damascus.jpg
சிரியாவின் டமாசுக்கசு நகரிலுள்ள ஒரு கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மிட்டாய் வகைகள்
மாற்றுப் பெயர்கள் இனிப்பு அல்லது லாலி
வகை இனிப்புத் தின்பண்டம்
முக்கிய சேர்பொருட்கள் இனிப்பு அல்லது தேன்
Cookbook: மிட்டாய்  Media: மிட்டாய்

மிட்டாய் என்பது சர்க்கரையை முதன்மை மூலப்பொருளாகக் கொண்ட இனிப்பு வகையாகும். இன்னட்டுகள் (Chocolates), மெல்லும் கோந்து (chewing gums) மற்றும் இனிப்பு மிட்டாய் போன்றவை இனிப்புத் தின்பண்டங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. காய்கறிகள்,பழங்கள் அல்லது கொட்டைகள் இனிப்பு அல்லது சர்க்கரை முலாம் பூசப்பட்டு இனிப்பூட்டப்பட்ட மிட்டாய்களாகவும் விற்கப்படுகின்றன.

பௌதீக ரீதியாக, சர்க்கரை அல்லது சர்க்கரை உபபொருட்கள் பயன்படுத்தும் குறிப்பிடத்தக்க அளவைப் பொருத்து மிட்டாய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கேக் அல்லது ரொட்டி போலல்லாமல், மிட்டாய்கள் வழக்கமாக சிறிய துண்டுகளாக தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் மக்கள் எவ்வாறு உணவாகக் கொள்கிறார்கள் அல்லது பாவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மிட்டாய்கான வரையறை அமைகிறது. பொதுவாக இனிப்புப் பண்டங்கள் உணவுக்குப்பின் வழங்கப்படும் பழவகை உணவில் (Desserts) சாதாரணமாக பரிமாறப்படுகிறது. ஆனால் மிட்டாய் சாப்பாட்டுக்கிடையில் நொறுக்குத் தின்பண்டமாக உண்ணப்படுகிறது [1].

வரையறை மற்றும் வகைப்பாடுகள்[தொகு]

வன் மிட்டாய் (hard candies), மென் மிட்டாய் (soft candies),கேரமல் (caramel),பஞ்சுப்பொதி மிட்டாய் (மார்சுமெல்லோ) (marshmallows) , டாபி (taffy) போன்ற இனிப்பு மிட்டாய்களின் முக்கிய மூலப்பொருள் சர்க்கரையாகும்.சர்க்கரை மிட்டாய்களில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்தும் அவற்றின் வேதிய அமைப்பைப் பொறுத்தும் வணிக ரீதியாக பல குழுக்களாக பிரிக்கப்படுகின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Richardson, Tim H. (2002). Sweets: A History of Candy. Bloomsbury USA. பக். 53–54. ISBN 1-58234-229-6. 
  2. McWilliams, Margaret (2007). Nutrition and Dietetics' 2007 Edition. Rex Bookstore, Inc.. பக். 177–184. ISBN 978-971-23-4738-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்டாய்&oldid=2456863" இருந்து மீள்விக்கப்பட்டது