உள்ளடக்கத்துக்குச் செல்

கடலை மிட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலை மிட்டாய்
Chikki
கடலை மிட்டாய்
வகைநொறுக்குத் தீனி
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம்
முக்கிய சேர்பொருட்கள்நிலக்கடலை, வெல்லம்
கடலை மிட்டாய்

கடலை மிட்டாய் (Chikki) என்பது உடைத்த நிலக்கடலை, கருப்பட்டி அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய ஒரு தின்பண்டம்.[1] வட இந்தியப் பகுதிகளில் சிக்கி என்ற பெயரில் இந்த இனிப்பு வெவ்வேறு மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. இதைப்போன்ற தின்பண்டம் தென் அமெரிக்க நாடுகளிலும் உண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயர் பெற்றது.[2] கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.[3]

தேவையானப் பொருட்கள்

[தொகு]
கடலைமிட்டாய் கலவை

கடலைமிட்டாய் ஒரு சிலப் பொருட்களை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது. முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் எள் முதலியவற்றை தனித்தனியாக பயன்படுத்திச் சிறப்பான வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. வெல்லம் வழக்கமான இனிப்புப் பொருள் என்றாலும், சர்க்கரை சில சமயங்களில் அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற தெற்காசியாவில் மிகவும் பிரபலமான இனிப்புப் பொருளாகும். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், பெரும்பாலும் கடலை அதிக அளவில் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில், சதுர மற்றும் வட்ட வடிவங்களிலும் கடலைமிட்டாய் கிடைக்கின்றன.

தயாரிப்பு

[தொகு]

உடைத்த நிலக்கடலையைக் கருப்பட்டிபாகில் இட்டு தேங்காய்த் துருவல் கலந்து செய்யப்படுடுகிறது. கருப்பட்டி மிகுதியாகக் கிடைக்காத பகுதிகளில் வெல்லமிட்டும் செய்யப்படுகிறது. கட்டம் கட்டமாய் வார்த்தும் உருண்டைகளாகப் பிடித்தும் விற்கின்றனர். சிலர் மனம் கூட்டும் பொருட்டு ஏலக்காயும் சேர்க்கின்றனர்.

புனே அருகிலுள்ள உலோனாவாலா என்ற சுற்றுலா பகுதியில் இவ்வினிப்பு பெயர் பெற்றது. அதிகளவிலான கடலை மிட்டாய்கள் மும்பை பகுதிகளில் உற்பத்தியாகின்றன.[4]

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Chitrodia, Rucha Biju. "A low-cal twist to sweet sensations". THE TIMES OF INDIA. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "கோவில்பட்டி கடலை மிட்டாய்". Archived from the original on 2014-05-28. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
  3. கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது
  4. https://www.indianhealthyrecipes.com/chikki-recipe/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலை_மிட்டாய்&oldid=3850521" இலிருந்து மீள்விக்கப்பட்டது