மட்பாண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் பெங்களூரில் வேலைசெய்யும் குயவர் ஒருவர்

மட்பாண்டம் என்பது களிமண் வகைகளை கொண்டு மனிதர்கள் தஙகள் தேவவைகளுக்கு பயன் படுத்தும் பொருட்களின் வகை ஆகும்

சூளையிலிட்டுச் சுடப்படாத மட்பாண்டங்கள் உலர்வதற்காக வைக்கப்பட்டுள்ளன.
பானை செய்தல்
preparation of pots in srikakulam town

மட்பாண்டம் என்பது பொதுவாக மண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும். மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இத் தொழில் தமிழில் குயத் தொழில் என்றும், மட்பாண்டம் செய்பவர்கள் "குயவர்" என்றும் அழைக்கப்படுகின்றனர்.

நீருடன் சேர்த்துக் குழைக்கப்பட்ட களி மண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் களிமண் இடத்துக்கு இடம் வேறுபாடாக அமைவதால், அவ்விடங்களில் செய்யப்படும் மட்பாண்டங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவையாக அமைகின்றன. சில குறிப்பிட்ட தேவைகளுக்காகக் களி மண்ணுடன் வேறுசில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்பாண்டம்&oldid=2352452" இருந்து மீள்விக்கப்பட்டது