இளக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது உலோகங்களை உருக்கிப் பிரிக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள். உலோகக்கனிமங்களைவெட்டி எடுக்கும்போது அவற்றுடன் தேவையற்ற பாறைப் பொருள்கள் கலந்திருக்கும். இத்தாது உப்புகள், கனிமச் செறிவூட்டலுக்குப் பின்னரும் மிகுந்திருக்கும். எனவே இத்தாது உப்புகளைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. உலோகவியலில் இத்தகைய தாது உப்புகளைப் பிரித்தெடுப்பதற்காக இளக்கி பயன்படுத்தப்படுகிறது. இளக்கியைத் தாதுக்களுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அது படி எச்சத்துடன் சேர்ந்து கழிவுப் பொருளாக மாறுகிறது. உருகிய நிலையில் இருக்கும் இக்கழிவுப் பொருள்கள் மிகுதியன வெப்ப நிலையில் உருகிய உலோகத்துடன் கலக்காமல் தனியே பிரிந்து மேலே மிதக்கும். பின்னர் இவை உலையிலிருந்து வெளியேற்றப்படும். எவ்வகையான கழிவுப் பொருள்களை நீக்க வேண்டுமோ அவற்றைப் பொறுத்து இளக்கியும் வேருபடும்.[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளக்கி&oldid=2350028" இருந்து மீள்விக்கப்பட்டது