யாசிர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாசிர் ஷா (Yasir Shah (பஷ்தூ: یاسر شاه; பிறப்பு: மே 2, 1986) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 100 இலக்குகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார்.[1] இடது கை கழல்திருப்பப் பந்துவீச்சாளரான இவர் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். நவீன துடுப்பாட்டத்தில் உள்ள சிறந்த கழல் திருப்பப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் இவர் என ஷேன் வோர்ன் தெரிவித்தார்.[2] 1986 ஆம் ஆண்டில் கைபர் பக்துன்குவாவில் பிறந்தார்.[3]

2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4] பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது . இந்தத் தொடரில் இலக்கினை வீழ்த்திய போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விரைவாக 50 இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.

ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[5][6]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

ஷா 2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 14 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்கினை வீழ்த்தினார்.[7]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2014 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். சயீத் அஜ்மல் பந்துவீச்சில் முறையானதாக இல்லை என அவர் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. எனவே அவருக்குப் பதிலாக ஷாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 7 இலக்குகளைக் கைப்பற்றினார். ஸ்டீவ் சிமித்தின் இலக்கினை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில்; 91 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 356 ஓட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரின் முடிவில் 207 ஓட்டங்களுக்கு 12 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.

சூன் 2015 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இலக்கினை வீழ்த்தியதன் மூலம் 50 இலக்குகளைக் கைப்பற்றினார். இது இவரின் ஒன்பதாவது போட்டியாகும். இதன் மூலம் விரைவாக 50 இலக்குகளை வீழ்த்திய முதல் பாக்கித்தானிய வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஐந்தாவது கழல் திருப்பப் பந்துவீச்சாளர் னும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக வக்கார் யூனிசு, முகமது ஆசிப், சபிர் அகமது ஆகியோர் பத்துப் போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.[8]

சான்றுகள்[தொகு]

  1. http://stats.espncricinfo.com/ci/content/records/283530.html
  2. https://www.cricket.com.au/news/warne-lavishes-praise-on-yasir/2015-10-29
  3. "Yasir Shah". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 14 September 2011.
  4. "Australia tour of United Arab Emirates, 1st Test: Australia v Pakistan at Dubai (DSC), Oct 22–26, 2014". ESPN Cricinfo. பார்த்த நாள் 22 October 2014.
  5. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 August 2018.
  6. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்த்த நாள் 6 August 2018.
  7. Pakistan vs Zimbabwe ODI no. 3194 Cricinfo 14 September 2011. Retrieved 14 September 2011
  8. "Yasir Shah breaks another record". The News Tribe. பார்த்த நாள் 26 June 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: யாசிர் ஷா

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசிர்_ஷா&oldid=2765894" இருந்து மீள்விக்கப்பட்டது