ஜுனைத் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுனைத் கான்
Junaid Khan
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது ஜுனைத் கான்
பந்துவீச்சு நடைஇடக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 208)செப்டம்பர் 1 2011 எ. சிம்பாப்வே
கடைசித் தேர்வுசனவரி 20 2014 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 181)ஏப்ரல் 23 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபமார்ச் 8 2014 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்83
இ20ப அறிமுகம் (தொப்பி 40)ஏப்ரல் 21 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20பமார்ச் 21 2014 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008/09அபொட்டபாத் பால்கன்சு
2011- 2014லங்காசயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு 1நா முத பஅ
ஆட்டங்கள் 16 46 61 84
ஓட்டங்கள் 98 50 676 235
மட்டையாட்ட சராசரி 7.00 5.55 11.26 9.40
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 17 25 71 32
வீசிய பந்துகள் 3,538 2,165 12,476 3,982
வீழ்த்தல்கள் 56 74 273 129
பந்துவீச்சு சராசரி 29.07 24.37 22.67 25.86
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 0 19 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 3 n/a
சிறந்த பந்துவீச்சு 5/38 4/12 7/46 4/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 5/– 10/– 8/–
மூலம்: ESPN Crickinfo, மே 11 2014

ஜுனைத் கான் (Junaid Khan;உருது: جنید خان பிறப்பு: 24 டிசம்பர் 1989) பாக்கித்தானியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரரும், இடக்கை விரைவுப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1] பாகித்தானிய வீரர் சொகைல் தன்வீர் காயமடைந்ததைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பையில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.[2] இத்தொடரில் அவர் விளையாடவில்லை. 2011 ஏப்ரலில் இவர் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு சூன் மாதத்தில் லங்காசயர் நகரத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.சுவாபி பகுதியில் இருந்து பாக்கித்தான் அணிக்கு முதலில் தேர்வானவர் எனும் பெருமை பெற்றார்.[3] இதன்பின் இவரது உறவினர் யாசிர் ஷாவும் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார்.[4][5]

ஜுனைத் கான் 2007 சனவரி 24 இல் முதல்-தரப் போட்டியில் தனது 17வது அகவையில் அபொட்டாபாத் அணிக்காக விளையாடினார்.[6] 2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்ற போது ஜுனைத் கான் பாக்கித்தான் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 ஏப்ரல் 23 இல் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். .[7]

சர்வதேச போட்டிகள்[தொகு]

பாகித்தானிய வீரர் சொகைல் தன்வீர் காயமடைந்ததைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பையில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.[2] இத்தொடரில் அவர் விளையாடவில்லை.[8]

பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டி கொண்ட தொடரில் பாக்கித்தான ணியின் 15 பேர்கொண்ட அணியில் இடம்பிடித்தார். ஏப்ரல் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அரிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[9]

பின் இரண்டு நாட்கள் கழித்து முகம்மது சல்மான் மற்றும் ஹம்மத் அசாம் ஆகியோருடன் இணைந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் வகாப் ரியாசுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 10 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[10] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 3-2 எனும் கணக்கில் வென்றது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜுனைத் கான் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இவர் நான்காவது இடம் பிடித்தார். மார்லன் சாமுவேல்சின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[11]

மே மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவானது. இந்தத் தொடரின் 15 பேர்கொண்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினை வென்றார்.[12] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதிலதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானியப் பந்டுவீச்சாளர்களில் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 6 இலக்குகளை 10.83 எனும் சராசரியில் வீழ்த்தினார்.[13][14]

பின் பாக்கித்தானிய அணி இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மூன்று தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியது. இதன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மட்டையாட்டத்திற்கு சாதகமாக இருந்தபோதிலும் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[15] பின் இரண்டாவது தேர்வுப் போட்டி சமனில் முடிந்தது.இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.

சான்றுகள்[தொகு]

  1. Pak bowler Junaid's action questionable: Basit Ali Retrieved 18 February 2011
  2. 2.0 2.1 Sohail Tanvir out of the World Cup, ESPNcricinfo, 9 February 2011, பார்க்கப்பட்ட நாள் 2011-04-25
  3. "Pak bowler Junaid's action questionable: Basit Ali – Rediff.com Cricket". Rediff.com. 2011-02-16. பார்க்கப்பட்ட நாள் 2016-06-02.
  4. "How Fawad Ahmed's cousin stitched up Australia". Smh.com.au. 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-06-02.
  5. Family, friends back Fawad Ahmed to bamboozle England at Ashes பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் என்டிடிவி 3 July 2013; retrieved 3 October 2015.
  6. f49863 Multan v Abbottabad: Quaid-e-Azam Trophy Silver League 2006/07, CricketArchive, பார்க்கப்பட்ட நாள் 2011-06-07
  7. ODI no. 3152 Pakistan in West Indies ODI Series – 1st ODI: West Indies v Pakistan, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2011-04-25
  8. Sohail Tanvir out of the World Cup, ESPNcricinfo, 9 February 2011, பார்க்கப்பட்ட நாள் 25 April 2011
  9. T20I no. 199 Pakistan in West Indies T20I Match: West Indies v Pakistan, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 25 April 2011
  10. ODI no. 3152 Pakistan in West Indies ODI Series – 1st ODI: West Indies v Pakistan, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 1 June 2016
  11. Records/Pakistan in West Indies ODI Series, 2011/Most wickets, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 12 July 2011
  12. Junaid Khan stars in easy Pakistan win, ESPNCricinfo, 1 June 2016, பார்க்கப்பட்ட நாள் 3 June 2011
  13. Records/Pakistan in Ireland ODI Series, 2011/Most wickets, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 1 June 2016
  14. Siggins, Ger (31 May 2011), What lies ahead for Ireland?, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 1 June 2016
  15. Purohit, Abhishek (18 October 2011), Junaid's five-for caps Pakistan's day, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 1 June 2016

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுனைத்_கான்&oldid=3316028" இலிருந்து மீள்விக்கப்பட்டது